நாம் தியானம் எடுத்து வரும்போது தொழிலில் நஷ்டம் என்ற வார்த்தையே வரக்கூடாது.
துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் எங்கள்
உடல் முழுவதும் படர்ந்து, எங்கள் இரத்த நாளங்களில் கலந்து எங்கள் உடலிலுள்ள
ஜீவான்மா ஜீவ அணுக்கள் அனைத்தும் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று எண்ணி தியானித்து விட்டு
கொஞ்ச நேரம் சிந்திக்க வேண்டும்.
அப்படி தியானித்துச் சிந்தித்தீர்கள் என்றால் “நஷ்டம் எதனால் ஏற்பட்டது” என்ற ஞானம் வரும். தொடர்ந்து தவறுகளை மாற்றியமைக்கக்கூடிய
ஞானமும் தொழிலில் வளர்ச்சி பெற்ச்செய்ய்க்கூடிய ஞானமும் வரும்.
ஆனால், தொழிலில் நஷ்டமாகிவிட்டது, நாளை என்ன செய்வது?
என்று என்ணி வேதனை
உணர்ச்சிகளுக்குப் பலத்தைக் கொடுத்தால் நமது சிந்தைனையின் தன்மையைக்
குறைத்துவிடும்.
தொழிலின் வகையில் நாம் வளர்ச்சியடைந்தாலும் கூட
தொழிலில் சிறிது நஷ்டம் ஏற்பட்டாலும் இதனின் உணர்வுகள் நம்மிடத்தில் வலுவாக
இயக்கிவிடும். ஆக, இதை மாற்றுவதற்கு ஒரே வழி ஆத்ம சுத்தி.
இருளான உணர்வுகளைத் தூக்கி எறிந்து விடவேண்டும்.
துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியை நாங்கள் பெற
அருள்வாய் ஈஸ்வரா என்று கண் வழி எண்ணத்தை செலுத்துகின்றோம்.
அது சமயம் நமது கண் துருவ நட்சத்திரத்தின் பேரருளை
பேரொளியின் உணர்வுகளை இழுத்து வருகின்ற நிலையில் அவ்வுணர்வுகளை
நமது மூக்கு
நுகர்ந்து
நமது உயிரில்
மோதச் செய்கின்றது.
இப்படிக் கண்களால் கவரப்பட்ட துருவ நட்சத்திரத்தின்
பேரருள் பேரொளியின் உணர்வுகள் நமது
உயிரில் இணைக்கப்பட்டவுடன் நம்முள் நல் உணர்வுகள் வலிமை பெற்று தீய உணர்வுகள்
வராமல் தடை செய்யப்படுகின்றது.
முதலில் நம்மிடத்தில் தீமைகள் வராது நிறுத்திப்
பழகவேண்டும். தீய உணர்வுகள் நம்மை இயக்கிவிடக்கூடாது.
துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி எங்கள் உடல்
முழுவதும் படரவேண்டும், எங்கள் இரத்த நாளங்களில் கலக்க வேண்டும் எங்கள் உடல்
உறுப்புகளை உருவாக்கிய அணுக்கள் அனைத்தும் பெறவேண்டும் என்று எண்ணி ஏங்கி தினமும்
தியானித்து வருதல் வேண்டும்.
தியானத்தின் மூலம் உடல் உறுப்புகளை உருவாக்கிய
அணுக்களில் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியின் உணர்வுகளைப் பெறவேண்டும்
என்ற தன்மையை ஒரு பழக்கமாகப் பழக்கி வைத்துவிடுகின்றோம்.
துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியின் தன்மை
நம்முள் வலிமையான பிற்பாடு தீமைகள் நம்முள் வருவதில்லை.
வேதனை வெறுப்பு போன்ற தீய உணர்வுகள் என்பது வாலி.
அவைகள் மிகவும் சக்தி வாய்ந்தவைகள். ஆனால், இத்தகைய தீய உணர்வுகள் அனைத்தையும்
வென்றது துருவ நட்சத்திரம்.
ஆக, தீமைகளை வென்ற துருவ நட்சத்திரத்தின் பேரருளை
பேரொளியை நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று எண்ணி
நமது கண் வழி கவர்ந்து
உயிரில்
மோதச் செய்யும் பொழுது இச்சா சக்தி.
உயிரில் மோதிய பின் நம்முள் உள்ள
தீமைகளை
நீக்கும் இயக்கமாகின்றது கிரியா
சக்தி.
அகஸ்தியர் தமது வாழ்க்கையில் தீமைகளை எப்படி
நீக்கினாரோ
அகஸ்தியரைப் போன்றே
நம்மை இயக்கும் ஞான சக்தி.
இதன் வழியில் செயல்பட்டு நம்மிடத்தில் தீமைகள் வராது தடுக்க
வேண்டும். இதை நம்முடைய பழக்கத்திற்குக் கொண்டுவந்துவிட்டால் நம்முடைய வாழ்க்கை சீராக
இருக்கும்.