நமது பூமியில் எத்தனையோ வகையான வித்துக்கள் உண்டு. எந்த வித்தை நிலத்தில் ஊன்றினாலும்,
புவியின் ஈர்பின் துணை கொண்டு எந்த மரத்தில் விளைந்ததோ அந்தத் தாய் மரத்தின் சத்தை
எடுத்து அதே செடியாகி மரமாகி அதே வித்தை மீண்டும் உருவாக்குகின்றது.
இதைப் போன்றுதான் மனிதனின் உடலில் எநந்தெந்த குணங்களின் தன்மை இருக்கின்றதோ
அது ஒரு வித்து என்று பொருள்.
கோபப்படுவோரைப் பார்த்து அது அணுவாக உருவாகிவிட்டால் அது வித்தாக எலும்புக்குள்
ஊழ்வினை என்ற வித்தாகப் பதிவாகிவிடுகின்றது.
ஆக, எந்தெந்த குணத்தின் உணர்வை நுகர்கின்றோமோ அந்த உணர்ச்சியாக நம்மை இக்குகின்றது.
நாளடைவில் அந்த குணத்தின் அணுவாக அது விளைந்துவிடுகின்றது.
அந்த அணுவாக உருவாகிவிட்டால்
அதன் இனத்தை அது உருவாக்கும் என்று பொருள்.
நாம் மகரிஷிகளின் அருள்சக்திகளை நுகர்ந்தோம் என்றால் அந்த உணர்ச்சிகள் நம்மை
இயக்கி, ஞான வித்துகளாகி அருள்ஞானம் நமக்குள் விளைந்து, நம்மைப் பிறவியில்லா நிலை அடையச்
செய்யும்.
ஆகவே, நாம் ஞானிகளின் அருள் உணர்வுகளை நம் உடலான இந்த
நிலத்தில் விளையச் செய்யவேண்டும்.