துருவ மகரிஷிகளின் அருள் சக்தியினை எண்ணி நாம் யார் யாரையெல்லாம் பார்த்தோமோ,
யார் யார் கஷ்டப்படுகிறார்களோ அவர்கள் அனைவரும் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி
பெறவேண்டும்.
அவர்கள் குடும்பங்களில் மகரிஷிகளின் அருள் சக்தி படரவேண்டும், அவர்களுடைய குடும்பங்கள்
நலம் பெறவேண்டும் என்றும், யார் நோய்வாய்ப்பட்டிருக்கிறார்களோ அவர்கள் துருவ நட்சத்திரத்தின்
பேரருள் பேரொளி பெறவேண்டும்.
அவர்கள் நோய்களிலிருந்து விடுபட்டு அவர்களுக்குள் ஆனந்த உணர்வுகள் விளைய வேண்டும்.
அவர்கள் உடல் நலம் பெறவேண்டும் என்றும், அவர்களுடய குடும்பங்களில் மலரைப் போன்ற மணமும்,
மகிழ்ந்து வாழும் சக்தியும் பெறவேண்டும் என்றும் தியானித்து, தீமையின் உணர்வுகள் நம்முள் உட்புகாதபடி விரதம் இருக்க வேண்டும்.
இதற்குப் பெயர்தான் விரதம் என்பது. நாம் பார்த்தவர்கள், நாம் பார்ப்பவர்கள அனைவரும்
நன்றாக இருக்க வேண்டும் என்று விரதம் இருக்க வேண்டும்.
நன்மைகள் பல செய்யத் துணிவோம்.