தொழில் செய்யும்போது, கொடுத்த கடன் வரவில்லையென்றால் கணவர் வேதனைப்பட ஆரம்பித்துவிடுவார்.
அப்பொழுது மனைவி என்ன செய்யவேண்டும்?
துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று தியானித்துவிட்டு,
கடன் வாங்கிச் சென்றவர் தெளிவான நிலையும் அவருக்கு வருமானம் வரக்கூடிய நிலையும் வரவேண்டும்.
கடனைத் திருப்பிக் கொடுக்கும் நிலைகள் பெறவேண்டும்
என்று மனைவி எண்ண வேண்டும்.
கடையில் நஷ்டம் வரும் நேரங்களில் கணவர் மகரிஷிகளின் அருள் சக்தி பெறவேண்டும்.
நல்ல பொருள்களைத் தேர்ந்தெடுக்கும் நிலைகள் பெறவேண்டும். வியாபாரம் செழிக்க வேண்டும்.
வாடிக்கையாளர்கள் நலம் பெறவேண்டும் என்று எண்ணினால் வியாபாரம் தெளிவடையும்.
பெண்களுக்கு அந்தச் சக்திகள் உண்டு, உணர்வின்
தன்மை உடலானாலும் உணர்வின் உணர்ச்சிகள் சக்தியாகின்றது. தான் எடுக்கும் உணர்வுகளில்
துருவ நட்சத்திரத்தின் உணர்வை எண்ணித் தன் கணவருக்குப் பாய்ச்சும்போது இரு மனமும் ஒன்றாகின்றது
இரு உயிரும் ஒன்றாகின்றது.
இந்தத் தியானத்திலிருப்பவர்கள் கணவருக்கு எந்தக் குறைகள் வந்தாலும் துருவ நட்சத்திரத்தை
எண்ண வேண்டும்.
தியானம் என்பது இதுதான். உட்கார்ந்து சதா எண்ணுவது தியானம் அல்ல. அந்த அருள் சக்தி பெறுவதும் அதை இயக்குவதும்தான்
தியானம்.
தியானவழி அன்பர்கள் தமக்குள் தீமை வராது தடுத்துப் பழகுவதுதான் தியானம். துருவ நட்சத்திரத்தின் உணர்வை நமக்குள்
எல்லா அணுக்களுக்குள்ளும் சேர்த்துவிட வேண்டும்.