குரு என்பது எது?
குரு என்பது
நாம் எதை ஆழமாகப் பதியச் செய்கின்றோமோ,
அதை நாம் மீண்டும் எண்ணும் பொழுது
எந்த எண்ணத்தை எண்ணுகின்றோமோ
அந்த எண்ணத்தின் உணர்வலைகள்
குருவாக நின்று நமக்குள் செயல்படுத்துகின்றது.
ஆறாவது அறிவு – தகப்பன் சாமி
ஆறாவது அறிவின் தன்மையான முருகனை தகப்பன்சாமி என்பார்கள். அதாவது, முருகன் தன்
தந்தையான சிவனுக்கே பிரணவ மந்திரத்தை உபதேசித்தார் என்று புராணங்கள் கூறுகின்றன. சிவம் என்பது உடல்.
உதாரணமாக, ஆறாவது அறிவின் தன்மை கொண்டு
நாம் தீமையை நீக்கும் ஒரு உணர்வை நுகரும்போது
நுகர்ந்த உணர்வு உயிரில் மோதி
உடலுக்குள் இயக்கமாகின்றது. பிரணவமாகின்றது.
இதனின் இயக்கத்தையே சிவனுக்கு முருகன் பிரணவ மந்திரத்தை உபதேசித்ததாக சாஸ்திரங்கள்
கூறுகின்றன.
நாம் எடுக்க வேண்டிய அக்னி சட்டி
மாரியம்மன் கோவிலில் இருப்பது நெருப்பு, அக்னி சட்டி. நெருப்பைக் கொண்டுதான்
நாம் இயற்கையில் விளைந்த தாவர இனங்களில் உள்ள விஷமான நிலைகளை மாற்றிவிட்டு நல்லதாக
ஆக்குகின்றோம்.
இதைப் போலத்தான், ஞானிகள் தம் வாழ்க்கையில் எடுத்துக் கொண்ட மிகமிக சக்தி வாய்ந்த உணர்வைக் கொண்டு தம் உடலில்
வந்த வேதனை என்ற நஞ்சினை நீக்கி உயர்நிலை பெற்றார்கள். அவர்கள் வெளியிட்ட மூச்சலைகள் அக்னி குண்டம்.
அந்த நெருப்பை நாம் நுகர வேண்டும்.
நுகர்ந்து அந்நிலை பெற நாம் தியானிப்போம்.
துருவ நட்சத்திரத்தை நுகர்ந்து நறுமணமாக்கவேண்டும்
காய்கறிகளையும், மற்றும் பல பொருள்களையும் ஒரு பாத்திரத்தில் போட்டு குழம்பு
வைப்பதற்காக அடுப்பில் வைக்கப்படும்போது,
அதில் போடப்பட்ட பொருள்கள்
தங்கள் மணத்தை இழந்து
குழம்பாக புதுமணத்துடன் வெளிப்படுகின்றது.
இதைப் போன்று, தீமை ஒன்றினை நாம் கண் கொண்டு உற்றுப் பார்த்து தீய உணர்வை நாம்
நுகர நேரும் சந்தர்ப்பத்தில்,
துருவ நட்சத்திரத்தை
எண்ணி
தம்முள் பேரருள் பேரொளியின் உணர்வை இணைத்தால்
நம்முள் தீய உணர்வுகள் ஒடுங்கி
அருளுணர்வின் மணமாக நம்மிடமிருந்து வெளிப்படும்.