குருநாதர்
எம்மைப் பார்த்து, “மின்னலைப் பார்”
என்று பல முறை கூறினார். ஆனால், யாம்
மறுத்துக் கொண்டே இருந்தோம்.
சந்தர்ப்பத்தால் ஒரு முறை, திடீரென்று எமக்கு முன்னால் மின்னல் ஒன்று
பாய்ந்தது.
“மின்னலைப் பார்த்தாயல்லவா, இதனால் உன் கண்
என்ன ஆனது?” என்று கேட்டார் குருநாதர்.
“இது போன்ற சில உணர்வுகளை நான் கொடுத்த சக்தியின் துணை கொண்டு உனக்குள் அடக்கி, வீரிய உணர்வு கொண்டு பாய்ச்சு” என்றார்.
மின்னல் கடலில் தாக்கப்பட்டு மணலாக மாறினலும், ஒரு மீன், மின்னலின்
உணர்வுகளால் தாக்கப்படும் பொழுது, அது “எலக்ட்ரிக் மீனாக” மாறுகின்றது.
அதனுடைய அறிவானது வெகுதூரத்தில் இருப்பதையும்
அறியக்கூடிய சக்தி பெறுகின்றது.
கடலில்
மின்னல் தாக்கப்படும் பொழுது, மின்னலானது ஒரு மீனைத் தாக்கினால் அந்த மீன் இறந்தாலும் மீண்டும்
அது உருப்பெற்று, புதுவிதமான மீனாக உருவாகி வெகு
தொலைவில் இருப்பதையும் அறிந்துணரக்கூடிய சக்தி பெறுகின்றது.
அப்படிப்பட்ட
வளர்ச்சியின் தன்மையில் “டால்பின்
மீன்” என்ற
நிலைகள் உருவானது. அதாவது ஞானத்தைக் கொண்டு வளர்க்கும் சக்தி, கடல் வாழ்
நிலைகளில்தான் உருவானது என்று குருநாதர் எமக்குத் தெளிவுபடுத்தினார்.
இது போன்று, ஒளிக்கற்றைகளை அகஸ்தியர் தாம் சுவாசித்து, தம்மில் உணர்வின் தன்மை வரப்படும் பொழுது, நமது
பிரபஞ்சத்தையும் நமது பிரபஞ்சம் பிற மண்டலங்களில் இருந்து தன்
உணவை எடுப்பதையும் முழுமையாக அறிந்துணர்ந்தார்.
நமது குருநாதர் அருள் துணை கொண்டு, அகஸ்தியர்
கண்டுணர்ந்த உணர்வுகளை நாமும் கவர்ந்து,
நம் உடலை உருவாக்கிய
அனைத்து அணுக்களுக்கும் உணவாகக் கொடுத்து
இந்தப் பிறவியில் அழியா ஒளிச்சரீரம் பெறமுடியும்.
அகஸ்தியர் கண்ட அகண்ட அண்டத்தின் பேருண்மைகளையும்
நாம் அனைவரும் அறியமுடியும்.
இதன்வழி பின்பற்றும் அனைவருக்கும் எமது அருளாசிகள்.