பிறரை வேதனைப்படுத்திய
நிலைகளின் விளைவுகள்
நாம் அறிந்தோ அறியாமலோ பிறரை
வேதனைப்படுத்திய நிலைகள், தீயவினைகளாக நம்முள் சேர்க்கின்றன.
அவ்வாறு நமக்குள் சேர்த்துக்கொண்ட நிலைகள் நம்முள் இருந்துகொண்டு குறிப்பிட்ட
காலம் வந்ததும் அது நம்முள்ளிலிருந்தும் நோய்களாக அல்லது துன்பம் தரும் நிலையாக வெளிப்படுகின்றது.
இதுபோன்ற நிலைகளிலிருந்து மனிதர் தம்மை மீட்டுக்கொள்ள வேண்டும். மனிதர் தமது
ஆறாவது அறிவின் துணை கொண்டு துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியினை நமக்குள் சேர்த்து,
தம்முள் அறியாது வந்து சேரும் அழுக்குகளை நீக்க வேண்டும்.
கடவுள் என்று
ஒருவன் இல்லை
கடவுள் என்று தனி ஒருவன் இல்லை. கடவுளென்ற
நிலையோ, கோவிலில் நம்மைக் காக்கின்ற தெய்வம் என்ற நிலையோ இல்லை.
நம் உயிர் தான் கடவுள். நாம் நுகர்ந்து இயக்கும் தன்மை நம் உடலுக்குள் நின்று
இயக்கும் உணர்வுகள் அனைத்தும் கடவுள். நம்முள் நின்று எதன் உணர்வை இயக்குகின்றதோ அதுவே
கடவுள்.
நம் உயிர் நம்மை இயக்கினாலும்
நாம் எண்ணியதைத்தான்
இயக்கும்.
எந்த உணர்வின் தன்மையை இயக்குகின்றோமோ அந்த உணர்வின் செயலாக நம்மை இயக்கும்
ஈசனாக இருந்து இயக்குவதும் உருவாக்குவதும் உயிரே.
இந்த உடலுக்குள் அனைத்தையும் ஆள்வதும் ஆண்டவனாக இருப்பதும் நம் உயிரே.
எண்ணியதை இறையாக்கி, இறையின் உணர்வாக செயலாக்குவதால் நம் உயிரே அந்த உணர்வின்
செயலாக இயக்குவதும் நாம் எண்ணியது எதுவோ அது தெய்வமாக இருந்து செயல்படுகின்றது.
நாம் தெய்வமாக
ஆகவேண்டும் – ஞானிகள் காட்டியது
ஞானிகள் காட்டிய முறைப்படி யாருமே தெய்வத்தை வணங்குவதில்லை.
அந்த தெய்வ குணத்தைப் பெறவேண்டும்
தெய்வமாக ஆகவேண்டும் என்று யாருமே எண்ணுவதில்லை.
இனியாவது கோவிலுக்குச் சென்று நீங்கள் ஞானிகள் காட்டிய அருள் வழியில் தியானியுங்கள்.
தெய்வ சக்தி பெறவேண்டும் என்று அந்த தெய்வ
குணத்தை உங்களுக்குள் வளர்த்துக் கொள்ளுங்கள்.
தூங்காமல்
தூங்கும் நிலை
இரவு படுக்கைக்குச் செல்லும் பொழுதெல்லாம் அந்த துருவ நட்சத்திரத்தையும், சப்தரிஷி
மண்டல்த்தையும் எண்ணி அந்த அருள்சக்திகளை நுகர்ந்து அதை உயிருடன் இணைத்து உடல் முழுக்கச்
செலுத்த வேண்டும்.
இதுதான் தூங்காமல் தூங்குவது. ஆக, ஒளி சரீரம் பெறவேண்டும் என்று உயிருடன் ஒன்றும் பொழுது தூங்காமல்தான் தூங்குகின்றோம்.