ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

September 24, 2014

தீமைகளை நீக்க நாம் பழகிக் கொள்வோம் - 1

நோய்களை நீக்கும் ஆற்றல்
புலி கருடன் போன்ற பல்வேறு உயிரினங்களுடைய உணர்வின் அணுக்களை இணைத்து விளைந்த தாவர இனங்களைக் கண்டுணர்ந்து, அத்தாவர இனங்களிலிருந்து நோய்களைப் போக்கும் விஷத்தன்மைகளை நீக்கும் மருந்துகளை உருவாக்கி
மனித இனத்தின் நல்வாழ்வுக்கு வழிவகை செய்த
மெய்ஞானிகளின் அருளாற்றலை நாம் பெற்றால்
நம்முள் உள்ள விஷத்தன்மைகள் நீங்கி
ஒளியின் உணர்வை நம்முள் பெறமுடியும்.
வேதனைகளை நீக்கும் மெய்ஞானிகளின் அருள் உணர்வுகள்
சலிப்பான உணர்வை நாம் நுகரும்பொழுது
நம்முள் உப்புச்சத்தை உருவாக்கும் அணுக்கள் உருவாகின்றன.

மற்றும் இதன் தொடர் கொண்டு அசுத்த வாய்வுகள் உருவாகி, நரம்பு மண்டலங்களில் தங்கி “பளீர், பளீர்” என்று வலி எடுக்கும்.

ஆகவே, மெய்ஞானிகளின் அருள் உணர்வை நம்முள் இணைத்து சலிப்பின் உணர்வை நம்மிடமிருந்து நீக்கும் நிலை பெறவேண்டும்.
விஷத்தன்மைகளை அகற்றும் மகரிஷிகளின் அருள் உணர்வுகள்
கருடனின் நிழல் தன் மீது விழுந்தாலே
சில வகை விஷம் கொண்ட பாம்புகள் இறந்துவிடும்.

அதைப் போன்று மகரிஷிகளின் அருள் உணர்வு எனும் நிழல் நம்மீது விழுந்தாலே நம்மிடம் அறியாது சேர்ந்த விஷத்தன்மைகள் அகன்று ஓடிவிடும்.
விஷத்தை வென்றது துருவ நட்சத்திரம்
ரோஜாவும் மல்லிகையும் மணம் பரப்புவதற்கு
விஷத்தின் இயக்கமும் காரணம்.
ஆனால், துருவ நட்சத்திரம் விஷத்தை வென்ற நிலை.

அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி உணர்வுகளை நம்முள் சேர்க்கும் பொழுது நம்மிடமிருந்து வெளிப்படும் மணம் அனைத்து விஷங்களையும் தீமைகளையும் வெல்லக்கூடியதாக இருக்கும்.