ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

September 6, 2014

சேர்த்துக் கொண்ட வினைகளுக்கு நாயகன் "விநாயகன்"

பல கோடிச் சரீரங்களில் வலுவான நிலைகளை நுகர்ந்து யானையாக உருவாக்குகின்றது உயிர்.

யானையாக ஆனபின் ஞானங்கள் அதற்குள் தோன்றி
எண்ண வலுப் பெறவேண்டும் என்ற உணர்வுகள் தோன்றி
உடல் சிறுத்து பன்றியாக உருவாகி,
நல் உணர்வுகளைப் பன்றியின் உடலில் நுகர்ந்த பின்
மனிதனாக உருவாக்குகின்றது இந்த உயிர்.

உயிர் தான் சேர்த்துக் கொண்ட வினைகளுக்கு நாயகனாக இந்த மனித உடலைத் தந்தது என்பதை நாமெல்லாம் புரிந்து கொள்ள கோவில்களில் விநாயகரைச் சிலையாக வைத்துக் காட்டினார்கள்.
உடல் வலு பெற்றது யானை.
எண்ண வலு பெற்றவன் மனிதன்.

வேதனை என்ற உணர்வை நுகரும்போது உடல் நலிவடைகின்றது. அப்பொழுது, நம் உடலை உருவாக்கிய உயிரான ஈசனுக்குத் துரோகம் செய்கின்றோம். மனிதனாக உருவாக்கிய ஈசனை மதிக்கவில்லை என்று அர்த்தம்.

நுகர்ந்த வேதனையின் உணர்வுகள் நம் உடலில் எல்லா அணுக்களிலும் படர்கின்றது.

துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் எங்கள் உடல் முழுவதும் படரவேண்டும் ஜீவாத்மா ஜீவ அணுக்கள் பெறவேண்டும் என்று கண்ணின் நினைவை உயிருடன் ஒன்றி, உயிர் வழியாகச் சுவாசித்து உடல் முழுவதும் பரவச் செய்து சுத்தப்படுத்திக் கொள்ள வேண்டும்.

மனிதனானபின் எதையும் உருவாக்கி
இருளை நீக்கி ஒளி என்ற உருவை உருவாக்குபவன் மனிதன்.

ஆகவே, நம் பயணத்தின் பாதையை அழியா ஒளிச்சரீரம் நோக்கிச் செலுத்துவோம்.