ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

September 25, 2014

உங்களால் முடியும் - ஞானகுரு

உங்களால் முடியும்
யாம் (ஞானகுரு) உபதேசிக்கும் தத்துவங்களை அறிபவர்கள் 
ங்களால் இந்தத் தத்துவங்களைக் கடைப்பிடிக்க முடியுமா?
அதன் பலன்களைப் பெறமுடியுமா?
என்று தங்களுக்குள் தன்னம்பிக்கையின்றி கேள்வி கேட்டு சோர்வடைந்துவிட்டால் அதுவே உங்களுக்குத் தடைக்கல்லாகிவிடும்.

ஆனால், “பெறுவோம்…”, “முடியும்…”, என்று தன்னம்பிக்கையுடன் கடைப்பிடித்தால் அதன் பலன்கள் உங்களில் நிச்சயம் விளையும்.
சகஜ வாழ்க்கையிலிருந்தே மெய்ஞானம் பெறமுடியும்
ஒரு விஞ்ஞானி, தான் ஒரு புதிய பொருளைக் கண்டறியும் திட்டத்தோடு தனது எண்ணத்தையும் கவனத்தையும் முழுமையாகச் செலுத்தி புதிய பொருளைக் கண்டறிகின்றார்.

இதைப் போன்று, தமது சகஜ வாழ்க்கையில் தாம் மெய்ஞானத்தைப் பெறவேண்டும் எனும் நோக்கோடு மெய்ஞானிகள் காண்பித்த அருள்வழியில் செயல்படும் மனிதர்கள் தம்மில் மெய்யுணர்வைப் பெறுகிறார்கள்.
நீங்கள் மெய்ஞானி ஆகின்றீர்கள்
தொழில்நுட்பம் சம்பந்தமான பாடத்தைப் படிக்கும்பொழுது நீங்கள் என்ஜினியராக ஆகின்றீர்கள்.

விஞ்ஞானம் சம்பந்தமான பாடத்தைப் படிக்கும் பொழுது நீங்கள் ஒரு விஞ்ஞானியாக ஆகின்றீர்கள்.

மருத்துவத்தைப் படிக்கும்பொழுது நீங்கள் ஒரு டாக்டராக ஆகின்றீர்கள்.

இதே போன்று மெய்ஞானத்தின் உணர்வுகளை உங்களில் வளர்க்கும் பொழுது நீங்கள் மெய்ஞானிகளின் அருள்வட்டத்தில் மெய்ஞானியாக ஆகின்றீர்கள்.
குருவின் துணைகொண்டு மெய்யுணர்வை வளர்க்க முடியும்
மாணவர்கள் தங்களது ஆசிரியரின்பால் உணர்வினைச் செலுத்தி
தங்கள் பாடங்களில் தெளிவினைப் பெறவேண்டும்
என்று எண்ணி ஏங்கினால்
பாடம் சம்பந்தமாக பல விளக்கங்களைத் தங்களுள் பெறமுடியும்.

இதே போன்று, சிஷ்யர்கள் தங்கள் குருவின்பால் உணர்வினைச் செலுத்தி குருவின் அருள்துணை கொண்டு மெய்யுணர்வின் தன்மையைத் தங்களுள் வளர்க்க முடியும்.