ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

September 15, 2014

குருநாதர் கொடுத்தது "கோடி கோடி - தேடித் தேடி - நாடி நாடி" - உன்னை நாடி வருகின்றது என்பார்

நீ (சாமிகள்) வேதனையை அறிகின்றாய்”, அதே போல நான் (குருதேவர்) கொடுக்கும் அடியின் தன்மை உனக்கு எப்படி வருகின்றது”.

இப்பொழுது பாசத்தால் அடிக்கும்போது நண்பன் மேல் வெறுப்பு வருவதில்லை. நீங்கள் தமாஷாக அடித்துப் பாருங்கள், கோபம் வருகிறதா என்று பார்க்கலாம், 

அதே சமயத்தில் தமாஷாக அடித்துக் கொண்டிருக்கும்போது, ஒரு சொல்லை மட்டும் இலேசாக குறையாகச் சொல்லி அதற்கப்புறம் அடித்துப் பாருங்கள், இந்த உணர்வுகள் மாறும்.

ஆகவே, குரு எனக்குக் காட்டும் நிலைகள் கொண்டு அவர் என்னை அடிக்கப்படும்பொழுது, அந்த உணர்வின் தன்மைஎது?”,
அடித்தவுடன் சிரிப்பார்
சிரித்தவுடன் பார்த்தால் அது தெரியும்.
            
உனக்குள் எத்தனை கோடி உணர்வுகள் சேர்த்து,  நான் அடிக்கும் அதாவது  அடிக்கும் உணர்வுக்குள்இருப்பதை, 
என் (குருதேவர்) அடிக்குள் கலந்திருந்த நினைவும்,
அந்த நினைவால் கலந்த உணர்வும்,  
உன்னுடன் எப்படி அது சேர்ந்து,
அண்டத்தை அறிகின்றாய் என்று நீ பார் 
என்று குரு காட்டுகின்றார்.
ஆக நீ அதை (அண்டத்தை) அறிந்துவிடு, “ஒரு மனிதனின் உணர்வுக்குள் நீ சொல்லைப் பாய்ச்சிவிடு, அங்கே கிளரும் உணர்வின் தன்மை நுகர்ந்தறி,

அப்படி நுகர்ந்தறிந்தால், அவனுள் விளைந்த உணர்வின் தன்மை உன்னை இயக்கும், ஆனால், அவனை மாற்ற முடியாது. 

ஒரு செடியின் நிலைகள் காரத்தின் தன்மை கொண்டதோ, கசப்பின் தன்மை கொண்டதோ, அதன் நிலை மாறாது. அதைப்போல அவரின் உணர்வின் தன்மை மாறாது,

ஆனால் மாறாத நிலைகள் கொண்டு, நீ நல்ல சொல்லாகச் சொன்னாலும் அவருக்கு எதிர்மறைதான் ஆகும். ஆனால் இதை எவ்வாறு மாற்றுவது? என்று குருநாதர் என்னிடம் கேட்கிறார்.

இப்படித்தான் இதைப்போன்று கேள்விகள் கேட்டு பின் விளக்கங்கள் கொடுத்து, “விண்ணின் ஆற்றலின் சக்தி உன்னில் எவ்வாறு இயக்குகிறது என்றும், இது கோடி உணர்வுகள் சேர்த்து உணர்வின் நிலைகள், அவர் (குருநாதர்) சொல்வார்,

கோடி கோடி, கோடி கோடி, கோடி கோடி,
என்ற நிலையில்
தேடித் தேடி, தேடித் தேடி இதை நான் பெற்றேன்

கோடி கோடிஎன்ற நிலைகளில்,
தேடித் தேடி தேடிச் சென்று பெற்றேன்”,

ஆக உன்னை  “நாடி நாடி நாடி வருகின்றது
ஆனால்,  நீ தேடித் தேடிஅதைப் பெறவேண்டும்  என்று
இப்படிச் சொல்வார்.  

அவருடைய சொல்லுக்குள் பார்த்தோமென்றால், இப்படி என்னை அடித்தவுடன், “உன்னை தேடித் தேடி வருகின்றது, நீ நாடி நாடி அதைப் பெறுகின்றாய்என்று இப்படிச் சொல்வார்.

ஏனென்றால், இதெல்லாம்  குருநாதருடைய சொல்லுக்குள் சூட்சமம். ஆக, இது அனைத்தும் சூட்சமம்தான். 

ஆக இந்த பொருள் காணும் தன்மை, இந்த கோடி என்ற நிலைகள் எவ்வாறு இது இயக்குகின்றது என்ற நிலையைத்தான், இந்த கோடியின் நிலைகளை  நீங்கள் பல கோடி உணர்வின் நிலைகளை உங்களுக்குள் அறியும் தன்மையாக  குரு கொடுத்ததை உங்களுக்கும் கொடுக்கின்றேன். 

ஆக அவர் பெற்ற அந்த மெய் உணர்வைக் கவரும் ஆற்றலும், அவர் (குருநாதர்) பிறவா நிலைகள் பெற்ற நிலையில், நாமும் பிறவா நிலைகள் அடையும் மார்க்கமும் இதிலே அடங்கியுள்ளது.
விண்ணுலக ஆற்றலையும், இந்த நிலை, இதுதான் கோடி கோடிஎன்று சொல்லும்பொழுது, “இந்தக் கோடியைச் சாப்பிட்டால், நீ எதை எதையெல்லாம் போய் சாப்பிடலாம் போய் சாப்பிடறா.., பாருடா..,என்று குருநாதர் சொல்வார்.

அதனால்தான் இப்பொழுது உங்களுக்கு, எது எது எதை எதை விழுங்குகிறது? என்ற நிலையை அதாவது,
உங்கள் வாழ்க்கையில் வந்த தீமைகளை, 
அந்தத் தீமையை எடுத்து,
அதை ஞானியர்களுடைய உணர்வுகளுடன் கலந்தவுடன்
அது விழுங்கி அந்தத் தீமைகளை அடக்குகின்றது.

அதை அடக்கிய நிலைகள் கொண்டு உணவாக, ஆக உணவு தேவைதான், ஆனால் இதனுடைய தன்மை அதற்குத் தேவை. 

ஒரு மரம், கட்டை எரிகிறதென்றால் பல உணர்வுகள் சேர்த்து, எண்ணெய்ப்பசை இருந்தால்தான் எரியும். எண்ணெய்ப்பசை இல்லையென்றால் கருகிவிடும்.

இதைபோலத்தான் எதனின் உணர்வின் தன்மை எதுவாக இருப்பினும், ஒரு குழம்பிற்குள் சுவை தேவை என்றால், காரம் தேவை. அந்தக் காரத்தை எவ்வளவு சேர்க்கின்றோமோ அதற்குத் தக்கவாறுதான் அந்த உணர்ச்சிகள் உந்தும்.

ஆகவே, இதைப்போல நாம் எத்தகைய தீய குணம் இருப்பினும், அருள்ஞானிகளின் உணர்வை நமக்குள் சேர்த்து இதை விழுங்கிடல் வேண்டும்.

ஞானிகளின் உணர்வை நாம் விழுங்கினால்,
தீமைகளை இது விழுங்கும். 
எனவே, மகரிஷிகளின் உணர்வுகளை நமக்குள் அதிகமாகச் சேர்க்க வேண்டும்.

ஞானம் அறிய வேண்டும் என்றால், இப்பொழுது உங்களுக்குள் கேட்டறிந்த உணர்வுகள், உங்களுக்குள் எத்தனை கோடி குணங்கள் இருப்பினும், அவை அனைத்திலும், எண்ணத்தால் மகரிஷிகளின் அருள் உணர்வுகளைக் கலந்து. அவ்வாறு கலக்கும்பொழுது, இது உங்களுக்குள் பால்வெளி மண்டலமாக துகள்களாக இது சேர்கின்றது.

இவ்வாறு சேர்த்துகொண்ட இந்தத் துகள்கள் இந்த உணர்வுகள் நுகர நுகர எண்ணங்களாக விரிவடைகின்றது.

எண்ணங்களின் தன்மை விரிவடையப்படும்பொழுது, இங்கே பொருள் கண்டுணர்ந்து செயல்படும் திறன் ஏற்படுகின்றது.  அந்தத் திறன் இல்லையென்றால், நாம் செயலாக்கமுடியாது.

அந்தத் திறன் நீங்கள் அனைவரும் பெறவேண்டும் என்பதற்குத்தான், இந்த உணர்வைப் பதிவு செய்வதும், அந்த உணர்வின் துணைகொண்டு, தீமைகளை அகற்றும் வல்லமை நீங்கள் பெற வேண்டும் என்றும், அதே சமயத்தில்
அருள் ஞானிகளின் உணர்வை அடிக்கடி எண்ணும்பொழுது,
நுகர வேண்டுமென்பதற்கும்தான் இதை உபதேசிப்பது.