குறை கூறும் உணர்வுகளை நாம் வளர்க்கக் கூடாது
யார் யார் குறை சொல்லும் உணர்வுகளை எடுத்துள்ளார்களோ
குறை கூறிய உணர்வுகள் அவ்வுடலிலேயே விளைந்து,
அந்த உயிரான்மா உடலைவிட்டுப் பிரிந்தபின்
யார் மீது குறை கூறியதோ
அவ்வுடலுக்குள் சென்றுவிடும்.
பின் மனிதனாகப் பிறக்கச் செய்யும் நிலையை இழக்கச் செய்து, கீழான பிறவிகளுக்கு
அழைத்துச் சென்று அந்த உடலாக மாற்றிவிடும் உயிர்.
ஆக, மீண்டும் இந்த மனித உடல் கிடைக்கும் வரை எத்தனையோ கொடுமையான வேதனைகளை அனுபவிக்க
நேரும். குருநாதர் இதை நேரடியாகவே
எமக்கு உணர்த்துகின்றார்.
மகிழ்ச்சியைக் காண நாம் என்ன செய்யவேண்டும்?
ஒவ்வொரு நிமிடமும் அனைத்து
மக்களும் மகிழ்ந்திருக்க வேண்டும் என்ற எண்ணத்தைச் செலுத்துங்கள்.
உங்களுக்குள் அந்த மகிழ்ச்சியைக் காணமுடியும்.
யார் கடும் சொல்லைச் சொன்னாலும்,
“உன்னையறியாத நிலையிலிருந்து தப்புவாய்”
என்று இதைச் சொல்லுங்கள்.
நீ அனுபவித்தே தீருவாய் என்கிற பொழுது இரண்டு பேரும் கெடும் நிலை வரும். மனிதருடைய
நிலைகளுக்குள் அத்தனை நிலைகள் உண்டு.
விண்ணுலகம் செல்லும் வித்தையைக் கற்க வேண்டும்
ஒரு சமயம் காசி கங்கைக் கரையில் இராமகிருஷ்ண பரமகம்சர் இருக்கும்போது ஒருவர்
“நான் நீரின் மேல் நடந்து காட்டுவேன்”
என்று சொன்னார்.
அதற்கு பரமகம்சர், நீரின் மேல் செல்வதற்கும் ஆற்றைக் கடப்பதற்கும் எத்தனையோ
படகுகள் இருக்கின்றன. இதற்காக வேண்டி சக்திகளைப் பெற்று நீரில் நடந்து செல்வதால் உனக்கு
என்ன நற்பயன் விளையப் போகிறது?
இவ்வளவு பெரிய வித்தையும் நீரைக் கடப்பதற்கா? என்று கேள்வி கேட்டார்.
பின், உலக வாழ்க்கையில் நஞ்சினை வென்று
புவியின் ஈர்ப்பினைக் கடந்து,
“நீ விண்ணுலகம்
செல்லும் வித்தைகளைக் கற்றுக் கொண்டாயா? என்று கேட்டார் பரமகம்சர்.
இது பற்றிய பரமகம்சரின் உணர்வுகள் எந்தப் பத்திரிக்கையிலும் வரவில்லை.