ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

December 29, 2013

கோபம் நமக்கு எதனால் வருகின்றது? அதைக் கட்டுப்படுத்தும் வழி

1. இல்லாததைச் சொல்கிறார்கள் என்று உணர்ச்சிவசப்படுகின்றோம்
கோபம் வரும் நிலைகளில், அந்தக் காரமான உணர்வுகள்  நமக்குள்  அதைத் தூண்டச் செய்து,  அந்த காரமான நிலைகளில் நாம் பேசி,  பிறிதொன்றைத் தாக்கச் செய்யும். ஏனென்றால்,   அதை ஜீரணிக்கக்கூடிய சக்தி நம்மிடத்திலே இல்லை.

ஆக,  மெய்ஞானிகள் விண்ணின் அந்த ஆற்றல் மிக்க சக்தியைத் தனக்குள் எடுத்துக்கொண்டதனால், அவர்களுடைய புலனறிவுகளில் எது சிக்கினாலும், அவர்களுடைய உணர்ச்சிகளைத் தூண்டுவதில்லை. 

ஆனால், எத்தகைய குணங்கள் கொண்டு பிறர் செய்தாலும், அந்த உணர்ச்சிகள் தூண்டாவண்ணம் அவர்களுக்குள் வந்தவுடன் அடங்கி, அவர்களது ஆற்றல் மிக்க சக்திகள் இவருடைய பார்வையில் பட்டவுடன், அவர்களுக்குள் இருக்கக்கூடிய கெட்ட குணங்கள் அப்படியே அடங்கிவிடும்.

இப்பொழுது நாம் நல்லவர்களாக இருக்கிறோமென்றால், ஒருவர் சிறு குற்றமான செயலைச் செய்கிறார், நம்மீது ஒரு பழிச்சொல்லைச் சொல்கிறார்,  அந்தச் சொல் வெறும் வார்த்தைதான்.  
அதை நமக்குச் சொன்னவுடன், அந்த உணர்ச்சிகள் தூண்டப்பட்டு
நமக்குள் அடக்கமுடியவில்லை.
இவ்வாறு சொல்கிறானே! என்று பதட்டமும்,
பயங்கரமான விளைவுகளும் ஏற்பட்டுவிடும்.

ஏனென்றால் அவர் செய்த உணர்வுகள் நமக்குள் இயக்கி, தவறு செய்யும் நிலைகளுக்கு எங்கிருந்து அந்தத் தவறு வந்ததோ, அவர்களை அழிப்பதற்கு வருகின்றது.

இல்லாததைச் சொல்கிறான் என்ற உணர்ச்சியின் வேகம் தூண்டுகின்றது.

ஆனால் அதே சமயம் இந்த உணர்ச்சியுடன் சேர்ந்து உமிழ்நீராககச் சுரந்து நம் ஆகாரத்துடன் கலந்து விடுகின்றது. இப்படி ஆகாரத்துடன் கலந்தவுடன், அது நம் உடலில் சாப்பிட்டவுடன் சத்தான ஆகாரத்தை ஜீரணிக்கக்கூடிய சக்தியிழந்து, அதனுடைய செயல்களைச் செயலாக்கத் தொடங்கிவிடுகின்றது. அது இரத்தமாக மாறி, நம் தசைகளாக மாறிவிடுகின்றது.
2. நம்மையறியாமல் கோபப்படும் நிலைகளிலிருந்து விடுபட என்ன செய்யவேண்டும்?
உதாரணமாக, இப்பொழுது ஒருவர் தவறு செய்திருக்கிறார், கோபமான  உணர்வை நம் புலனறிவு இழுத்திருக்கின்றது. அப்பொழுது அந்த கோபத்தை நினைவுபடுத்தி கண்ணிலே பட்டவுடன், நாம் இங்கே பார்த்தவுடன்,
அடுத்து ஒருவர் சந்தோஷமாகச் சொன்னால்,
இந்தப் புலனறிவு அவரைப் பார்க்கும்போது,
அவர் சொல்வதைச் சரியாகக் கிரகித்து இழுக்காது. 

ந்தக் கோபத்தின் மேல், இந்த உணர்வின் நினைவலைகள் பட்டு, நாம் செயல்படுத்தும்போது அந்த நினைவலைகள், கண்ணிலே பாய்ந்துகொண்டிருக்கும்.

நம் முன்னால் ஏதாவது சொல்லிக் கொண்டிருந்தால், இந்த உணர்வுகளை அது கிரகிக்கக்கூடிய சக்தி இருக்காது.  மிகவும் கஷ்டமாகத் தெரியும். ஆக, நம் கண்ணின் புலனறிவு அதன் வழிக்குத் தக்கவாறுதான் அதை ஈர்ப்பது.

பாலிலே, சர்க்கரையைக் கலந்து குடிக்கப்படும்போது, எப்படியோ, நாம் நல்லதைப் பெற வேண்டும் என்று ஏங்கிக் கொண்டிருந்தாலும், இதைப்போல கசப்பான உணர்வுகளையும், மற்றவைகளையும் கலந்து நாம் சுவாசிக்கும்போது, நம் உயிருக்குள் பட்டு, இந்தச் சுவையின் தன்மைகள் மாறிவிடுகின்றது.

ஆக இரண்டு எண்ணங்களை நாம் சுவாசிக்கும்போது, அதன் உணர்வுகள் இரண்டுக்கும் மாறுபட்ட நிலைகள் சிதறுண்டு, நம் நினைவலைகளை இயக்கச் செய்கின்றது. இப்படித்தான், நம் உடலின் உறுப்பின் நிலைகளும், மற்ற நிலைகளும் இயங்குகின்றது.
3. கோபத்தைக் கட்டுப்படுத்தும் வழி
இதை நாம் கட்டுப்படுத்துவதற்குத்தான்,   மெய்ஞானியின் அருள் சக்தியை உங்களுக்குள் பதியச் செய்கின்றோம்.  மகரிஷிகளின் அருள்சக்தி நாம் பெற வேண்டும் என்று அதற்குள் நினைவைச் செலுத்திப் பழகிக்கொண்டால், அப்பொழுது  உடனடியாகக் காற்றிலிருந்து, இந்த ஞானியருடைய அருள் சக்தியை நாம் பெற முடிகின்றது.  அவ்வாறு சுவாசித்து, நம் உடலில் வரக்கூடிய துன்பங்களைப் போக்க இது உதவும்.

இதற்கு நமக்கு ஆற்றல் தேவை. அதற்குத்தான் நாள் முழுவதும் உழைத்தாலும், நாம் ஒவ்வொரு நாளும் ஒரு பத்து நிமிடம் அந்த சக்தியைப் பெருக்கவேண்டும்.

ஏனென்றால் ஞானியருடைய, மகரிஷிகளுடைய அருள்சக்தியை உங்களுக்குள் பதியச் செய்திருக்கின்றோம். ஒரு பத்து நிமிடமாவது, அந்த ஞானியருடைய அருள் சக்தியை எடுத்து, மாற்றிப் பழகிக்கொள்ள வேண்டும்.

அப்படி பழகிக் கொண்டால், நம் வாழ்க்கையில் எப்பொழுது எங்கே, எத்தகைய நம் எண்ணங்களைத் தடுமாறச் செய்யக்கூடிய நிலைகள் வந்தாலும், அப்பொழுது நாம் ‘’ஓம் ஈஸ்வரா’’ என்று உயிரை எண்ணி, ‘’ஆத்மசுத்தி’’ செய்து நம் உடலுக்குள் நினைவைச் செலுத்தும்போது, நம்மையறியாமல் ஆத்திரப்படக்கூடிய நிலைகளிலிருந்து, பயப்படும் நிலைகளிலிருந்து, விடுபடுகின்றோம். நாம் சிந்தனை குறைந்திருக்கக்கூடிய நிலைகளிலிருந்து விடுபடுகின்றோம்.

நம் உடலில் வியாதிகள் இருந்தாலும், அந்த வேதனையான எண்ணங்கள், நமக்கு பல முறைகளில் பல தீமைகளை உருவாக்குகின்றது. ஆக, வேதனை என்பது விஷம். இதைப்போன்று நம்மையறியாது பல நிலைகள் உருப்பெற்றுவிடுகின்றன.

இதையெல்லாம் மாய்க்கவல்ல சக்தி அந்த சப்தரிஷிகளுக்கு உண்டு. “சப்தரிஷிகள் தங்களுக்குள் விளையை வைத்ததை நாம் பெறுவதுதான் இந்த ஆத்மசுத்தி.