ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

December 9, 2013

நமது நாளைய சரீரம் - அது ஓளி சரீரமாகத்தான் இருக்க வேண்டும்

1. மனித சிந்தனையை நாம் இழந்தால் அடுத்து மிருக உடல்தான் நாம் பெறுவோம்
தேள் கொட்டிவிட்டால் என்ன செய்கிறது?
ஒரு நிமிடம் எதுவும் எண்ணம் வராது.
அந்தக் கொட்டிய கடுகடுப்பில்தான் இருக்கும்.
மனிதனுடைய சிந்தனைகள் எதுவும் வராது.

இதைப் போலத்தான் எந்த குணத்தின் தன்மை நாம் எந்த ஆசையில் இருந்தோமோ ஒரு வேலை செய்து கொண்டிருந்தோம்., அது தடைப்பட்டுப் போய்விட்டது செய்ய முடியவில்லையே, என்ற இந்த உணர்வு இருக்கும்.

நாளைக்கு ஏதாவது ஒன்று இந்த மாதிரி ஆகிவிட்டால் என்ன ஆகுமோ? என்ற இந்த உணர்வைக் கலந்துவிட்டால் அதே நிலையை ஏற்படுத்திவிடும். ஏனென்றால், அந்த விஷத்தின் உணர்வு கலந்துவிட்டால் அதே நிலைகள் ஏற்பட்டுவிடும்.

ஆனால், ஏற்படுத்தி முலாம் பூசியபின் அதே உணர்வின் சத்தைத்தான் இழுக்கும்.
நீங்கள் அதைத் துடைக்கவில்லை என்றால்
அதுதான் விளையும்.

ஏனென்றால், ஒரு மரத்தின் சத்துக்குள் நாம் எந்த உணர்வின் சத்தைக் கலக்கின்றோமோ அந்த சத்தின் தன்மை கலந்தபின், காற்றிலிருந்து தன் நிலையை எடுத்துக் கொள்ளும். இதே மாதிரி,
நாம் சுவாசித்த உணர்வின் தன்மை
நம் அணுக்களுக்குள் சென்றுவிட்டாலோ
தன் உணர்வின் தன்மை எடுத்தேதான் தீரும்.

ஆக, இவ்வாறு விளைந்தபின் அந்த உணர்வின் தன்மை கொண்டு மனிதனுடைய சிந்தனையற்ற நிலையைக் கொண்டு சிந்தனையற்ற உணர்வை அது ஊட்டிவிடும். ஆனால், சிந்தனையில்லாத உணர்வில் வரப்படும் பொழுது நாம் என்ன செய்யப்போகின்றோம்?

இப்பொழுது திடீரென்று ஞாபகம் வரவில்லையென்றால்
ஒன்றுமே செய்ய முடியாது. சிந்திக்க முடியாது.
அப்பொழுது அந்த உணர்வின் தன்மைக்குத் தக்கவாறு மணம் வந்துவிடும்.

அந்த மணத்தைக் கொண்டு இந்த உடலைவிட்டு உயிராத்மா போனாலோ, எந்த உடலோ அதற்குத்தகுந்த மாதிரி இது பெறும். இன்றைக்கு மனித உடலில் இருக்கும். விஷமான பிறகு, அந்த உடலை விட்டுவந்து
உயிராத்மா என்ன செய்யும்?
ஆடோ, மாடோ அதற்குள்தான் போகும்.
2. அருள் உணர்வுகளை நமக்குள் விளைய வைத்தால் ஒளி உடல் பெறலாம்
இன்றைய விஞ்ஞானிகள் தாவர இனங்களில் எத்தனையோ வகைகளை மாற்றியிருக்கின்றார்கள். இதைப் போல மனித உணர்வுக்குள் ஒரு உணர்வின் தன்மை எடுக்கப்படும் பொழுது, நம் உணர்வுக்குள் இருக்கக்கூடிய
அணு செல்களினுடைய தன்மைகள்
நாம் எதை எதையெல்லாம் சுவாசிக்கின்றோமோ,
அந்த உணர்வுகள் நமக்குள் இருக்கக்கூடிய
நல்ல உணர்வுடன் அது கலக்கப்பட்டு
நம் உணர்வினுடைய நிலைகள் அது மாற்றமடைகின்றது.

அதாவது, உணர்வினுடைய நிலைகளை அது மாற்றிக் கொண்டேயிருக்கும். அவ்வாறு மாற்றிக் கொண்டே வந்தால் அந்த அணு திசுக்கள் அது விளையப்படும் பொழுது, அது அணு சிசுவாக மாறும்.

எப்படி மாங்காயிலிருந்து பூவாகி, பிஞ்சாகி, அது காயாவது போல நம் உடலுடன் இந்த அணுக்கள் இருக்கப்படும் பொழுது அதனுடைய தசைகள் நம் உடலுடன் ஒட்டியிருக்கும். ஆனால், அந்த அணு திசுக்களினுடைய தன்மைகள் விளைந்தபின் அணு சிசுவாக மாறுகின்றது

ஏனென்றால், ஒவ்வொன்றும் விளைய விளைய
உயிருடன் அந்த காந்த அலைகள்
ஒன்று சேர்ந்து கொள்ளும்.

அந்தக் காந்தம் எல்லாமே நாம் விளைய வைத்த சக்தியும் அந்த உயிருடன் சேர்த்து உயிராத்மாவாகச் சேர்க்கப்படும் பொழுது, அணு சிசுவாக மாறுகின்றது.

அதாவது இப்பொழுது எந்தெந்த குணத்தின் தன்மையை எடுத்து விளைய வைத்தோமோ,
இந்த வித்துக்கள்
உயிராத்மாவில் சேர்க்கப்படும் பொழுது
அந்த உயிராத்மா அதற்குத்தக்கவாறு அடுத்த சரீரத்தை உருவாக்கும்.

இதையெல்லாம் நாம் தெளிவாகத் தெரிந்து கொள்ள வேண்டும்..

நேற்றைய செயலால் இன்று நாம் மனிதனாக வந்திருக்கின்றோம்.

இன்றைய செயலாக மகரிஷிகளின் உணர்வுகளை நாம் நுகர்ந்து, நமக்குள் விளைய வைத்தால் நாளைய சரீரம் அது நிச்சயம் ஒளி சரீரம்தான். எமது அருளாசிகள்.