ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

December 13, 2013

நம் உடலில் உள்ள நரம்புகளை சீராக இயக்க வைக்கும் "பயிற்சி...!"

 1. உடலில் உள்ள நரம்புகளை சீராக இயக்க வைக்கும் பயிற்சி
சிலருக்குக் கழுத்துப் பிடித்துவிட்டது என்பார்கள். அதே போல எலும்பு தேய்ந்துவிட்டது என்று டாக்டர் சொல்கிறார் என்பார்கள். நரம்பு மண்டலத்தில் வலுத்தன்மை இல்லாததினால் இந்த அழுத்தம் நமக்குள் அதிகமாக வருகின்றது.

சுண்ணாம்புச் சத்து குறைவு அல்லது நரம்பு மண்டலங்களில் வீரியத் தன்மை குறைந்திருந்தால் மேற்படி நேருகின்றது. இதை நீக்க வேண்டுமென்றால், நின்று கொண்டு கால்களை நேராக நீட்டிக் கொண்டு காதுகளுக்கு அருகில் இரண்டு கைகளையும் நேராக உயர்த்துங்கள்.

பிறகு மெதுவாக எவ்வளவு தூரம் உங்களால் வளைய முடியுமோ, அவ்வளவு வளைந்து படத்தில் காட்டியபடி பெருவிரலைத் தொடவேண்டும்.
வளைந்து முடிந்து நிமிர்ந்தவுடன், “ஓம் ஈஸ்வரா குருதேவா” என்ற உணர்வினை எடுத்து எங்கள் உடலில் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் படரவேண்டும் என்ற நினைவினைச் செலுத்தி மூச்சினை எடுங்கள்.

இப்படி ஒரு ஐந்து அல்லது ஆறு தடவை மெதுவாகச் செய்யுங்கள். இப்படிச் செய்யும் பொழுது, உங்கள் சிறு மூளையிலிருந்து பெருவிரல் வரை உள்ள நரம்புகளை அந்த அருள் சக்தி இயக்கும்

முதுகுத் தண்டிலோ அல்லது மற்ற நிலைகளிலோ அழுத்தம் வரப்படும் பொழுது நீங்கள் இதே மாதிரி எடுத்து மாற்றி அமைத்துக் கொள்ளுங்கள். இதெல்லாம் சுலபமான பயிற்சி.

யாம் கொடுக்கும் வாக்குகளை நீங்கள் சீராகப் பயன்படுத்தினால் உங்கள் உடலில் உள்ள சலிப்பு எல்லாம் நீங்கிவிடும். சில பேர் வேதனைப்பட்டு சலிப்பு ஏற்பட்டு, கோபப்பட்டு இந்த உணர்வுகளைப் பார்த்தபின், அந்த உணர்ச்சிகள் கண்களின் கருவிழிகளால் படமாக்கிய உணர்வுகளில் இதனுடன் ஒட்டியிருக்கும் நிலைகளில் பலவீனம் அடைகின்றது.

அப்படி பலவீனம் அடைந்தால் நாம் எதையும் சீக்கிரம் கிரகித்து இழுக்கும் சக்தி இங்கே குறையும். இதற்கும் முதலிலே குறிப்பிட்டபடி காலை நீட்டி, பெருவிரலைத் தொட்டு சிறிது நேரம் அந்த
துருவ நட்சத்திரத்தின் உணர்வுகள் பெறவேண்டும் என்று
மூச்சை விட்டு மூச்சை எடுங்கள்.
இந்த உணர்வுகள் உங்கள் உடலுக்குள் சிறு மூளையிலிருந்து எல்லா பாகங்களுக்கும் உணர்ச்சிகளைத் தூண்டும்.

கை, கால் குடைச்சல் வருகிறது என்று வைத்துக்கொள்வோம். அதற்கும் இதே பயிற்சியைச் செய்து கொள்ளலாம்.
2. இருதயத்தைச் சீராக இயக்கச் செய்ய முடியும்
சில நேரங்களில் உடலில் சில பாகங்களில் வாய்வு தன்மைகள் அடைத்திருந்தால் ஒருவிதமான வலி ஏற்படும். டாக்டரிடம் சென்றால் “மாரடைப்பு” என்று சொல்லிவிடுவார். இதற்கு மேலே கூறிய அதே பயிற்சியைச் செய்து, துருவ நட்சத்திரத்தை எண்ணி மூச்சை ஒரு ஐந்து முறை எடுத்து விடுங்கள்.

இதனுடைய தன்மைகள் வரப்படும் பொழுது, இருதய வால்வுகளினுடைய நிலைகள் இழுக்கப்படும்.

மறுபடியும் இதே மாதிரி கையைத் தூக்கிக் கொண்டு துருவ நட்சத்திரத்தை எண்ணி இருதயத்தில் உணர்வைச் செலுத்தப்படும் பொழுது இந்த உணர்வுகள் இருதயத்திலும், நுரையீரலிலும் ஓரளவுக்குப் பரவும். இதயம் அடைப்பபாகி, அந்த வலி ஆனதென்றால் இதே மாதிரி எண்ணிச் செய்யவேண்டும்.

சாதாரணமாகக் கையைத் தூக்குகிறேன் என்று நினைக்கின்றீர்கள். இவ்வாறு செய்வதால் இருதயத்தில் துருவ நட்சத்திரத்தின் உணர்வுகள் பதிவாகி இது உங்களைச் சீராக்க உதவும்.