1.
ஒருவர்
நமக்கு
இடைஞ்சல்
செய்தால்,
நாம்
என்ன
செய்கின்றோம்?
சாதாரணமாக, ஒருவர் நமக்கு
இடைஞ்சல் செய்தால்,
அவருடைய
உணர்வுகள் நமக்குள் வந்துவிடுகின்றது.
அவர் செய்யும் இடைஞ்சல்களிலிருந்து
நம்மை மீட்டுக்கொள்ளும் நிலையாக
அவருக்கு
நாம் தொல்லைகள் செய்ய ஆரம்பிக்கிறோம்.
அவருக்கு நாம் தொல்லைகள் செய்யும்போது, “அவர் இனி நமது வழியில் வரமாட்டார், நமக்குத் தொல்லைகள்
தரமாட்டார்”, என்று எண்ணித்தான் செய்கின்றோம்.
ஆனால், இப்படி
மற்றவருக்கு தீமைகள் செய்து அவரைக் கெடுக்க வேண்டும் என்ற
உணர்வுகளை எடுக்கும் பொழுது, அதனின் உணர்ச்சிகள்
நம்மையும் கெடுக்கும் நிலைக்குப் போகின்றது.
ஆகவே, பிறரைக் கெடுக்கும்
நிலைக்குப் போகும் பொழுது, நம்மை நாம் கெடுத்துக் கொள்ளும் நிலைதான் வருகின்றதே தவிர, நம்மை நாம் காக்கும் நிலை இல்லை. இதுதான் ‘சிவதனுசு’.
ஆகவே, நாம் நுகர்ந்த
உணர்வுகள் நம்மைத் தாக்கும் நிலை வருகின்றது. நம்முள் இருள் சூழும் நிலையே வருகின்றது.
இதிலிருந்து நாம் மீள வேண்டுமல்லவா?
2. இராமன்
வாலியை மறைந்திருந்து ஏன் தாக்குகின்றான்?
இதற்குத்தான் அன்று சாஸ்திரங்கள் கூறியது, துருவ நட்சத்திரத்தின் அருள் உணர்வை நாம் எடுத்து, நமது உடலுக்குள் செலுத்தி, அதனின் உணர்ச்சிகளைத் தூண்டப்படும் பொழுது இது “விஷ்ணுதனுசு”.
உயிரால்
விஷ்ணுதனுசு என்ற உணர்வுகள் ஊட்டப்படும் பொழுது, இது விஷத்தின் தன்மையை முறிக்கின்றது.
இதை இராமாயணத்தில், “இராமன்
வாலியை மறைந்திருந்து தாக்கினான்” என்று உரைக்கப்பட்டிருக்கும். வாலி யார் என்றால், சூரியனின் பிள்ளை.
உதாராணமாக, நமக்கு
வியாபாரம் சரியாக நடைபெறவில்லை என்றால், நமக்குள்
வேதனையாகின்றது. வேதனை என்ற உணர்வுகள் நமக்குள் வந்தபின்
வாலியாகின்றது. வேதனை என்ற உணர்வுகள் நமக்குள் வந்தபின்
நாம் நம்மிடத்திலுள்ள நல்ல குணங்களைச் செயலாக்க
முடிகின்றதா? இல்லை.
ஒருவர், தான்
வேதனையின் உணர்வுகளை வெளிப்படுத்தும் பொழுது, அதனை
சூரியனின் காந்தப்புலனறிவுகள் கவர்ந்து வைத்துக் கொள்கின்றன. ஆகவேதான், வாலியை சூரியனின் பிள்ளை என்கிறோம்.
ஆகவே, அவருடைய
வேதனைப்படும் உணர்வுகளை, நாம் உற்றுப்பார்த்து
நுகரப்படும் பொழுது, அந்த வேதனையின் உணர்வுகள் நமக்குள்
வரும்போது, வாலியாகின்றது.
வேதனைப்படும் உணர்வுகள் நமக்குள் சென்று விட்டால், இரண்யன் ஆகின்றது. அது நம்மிடத்திலுள்ள நல்ல
குணங்களைக் கொல்கின்றது என்று காண்பிக்கின்றனர்.
இராமாயணத்தில், குகைக்குள் இருக்கும் வாலி வெளியே
வராதபடி, மேலே இருக்கும் பாறையைக் கீழே தள்ளி, மூடிவிடுகின்றனர். இப்பொழுது
வாலி வெளியில் வரமுடியவில்லை என்று எடுத்துரைக்கின்றனர்.
இதைப்போன்றுதான், நாம் என்ன
செய்ய வேண்டும், நாம் வேதனையின் உணர்வைப் பார்க்கும் பொழுது, “ஈஸ்வரா…” என்று உயிரை எண்ணி, நமது கண்ணின் நினைவைப் புருவ மத்தியில் செலுத்த வேண்டும்.
அப்படிச் செலுத்தி, துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும், நாங்கள் பெறவேண்டும் என்ற உணர்வின் தன்மையை
எடுத்து, அது எங்கள் உடல்
முழுவதும் படரவேண்டும், என்ற இவ்வுணர்வின் தன்மையை உடல்
முழுவதும் படரவிட வேண்டும்.
அப்படிப் படரவிடும் பொழுது, தீமை என்ற வாலியை இங்கே அடைத்து விடுகின்றோம். உள்புகாது தடுத்து விடுகிறோம் என்ற நிலையைத்தான் இராமாயண காவியத்தில் தெளிவுப்படுத்தினார்கள்.