ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

December 26, 2013

மாமிசத்தை ருசித்துச் சாப்பிட்டால் ஏற்படும் நிலைகள்

1. மாமிசத்தை  ருசித்துச் சாப்பிட்டால் ஏற்படும் நிலைகள்
மனிதர்கள் ஆட்டுக்கறியை ரசித்து, ருசித்துச் சாப்பிடுகிறார்கள். ஆனால், ஆட்டைக் கொன்றால், கொன்றவர் உடலுக்குள் ஆட்டின் உயிர் செல்கின்றது.

ஆட்டுக்கறியைத் தின்றவரின் உடலில் அந்த ருசி வருகின்றது.
ஆட்டுக்கறியைச் சாப்பிட்டுவிட்டு, ருசி கண்டு,
உடலில் விளைந்த அணுக்களின் இயக்கத்தால்,
நமது உயிர், உடலை விட்டுச்சென்றபின்,    
உயிர் நேராக, ஆட்டின் ஈர்ப்பிற்குள் சென்றுவிடும்.

மனிதராக உருவாக்கிய உயிரில், ஆட்டுக்கறியை ருசித்துப் பழக்கமான உணர்வுகள் சேர்ந்தபின், உயிர் ஆட்டிற்குள் சென்று சேரும். இன்று டாக்டர்கள் சிபாரிசு செய்கிறார்கள், “கறி சாப்பிடுங்கள் உடல் திடமாக இருக்கும் என்று.

ஆனால் விஷத்தின் தன்மை கொண்டு இன்று மனிதனாக உள்ளோம். நாளை ஆடாகப் பிறக்கத் தயாராகிறோம்.
2. என்னுடைய அனுபவம் - ஞானகுரு
யாம், எம்முடைய இளைய வயதில் வேட்டைக்குச் செல்வோம். வேட்டையில் ஒன்றும் கிடைக்கவில்லை என்றால், இரண்டு மூன்று நாள் அங்கேயே இருப்போம்.

கோழி, புறா போன்றவைகளை கையில் எடுத்துச் சென்றிருப்போம். கொண்டு போனவைகளை வேக வைத்துச் சாப்பிடுவோம். இல்லையெனில், பச்சைப் புறாவில் நிறையச் சத்து இருக்கிறது, என்று காட்டிற்குச் சென்று, பச்சைப் புறாவை அடித்து, அங்கேயே வேக வைத்துச் சாப்பிடுவோம். வீட்டிற்குக் கொண்டு வர மாட்டோம்.

பிற்காலத்தில், குருநாதர் இந்தச் சம்பவங்களை எடுத்துக்கூறி, “நீ இத்தனை பறவைகளைச் சாப்பிட்டிருக்கிறாய், இவைகள் மனிதனாகப் பிறக்கப்போகிறது”.

அது எத்தனை இம்சைப்பட்டு வந்துள்ளது? உன்னிடம் வந்து, நீ இறந்தபின், உன் சிநேகிதனிடம் சென்று, அவன் ஈர்ப்பிற்குள் போய் அவனின் உணர்வை எடுத்து, அதன் வழியில் மனிதனாகப் பிறக்கப்போகின்றது என்று கூறினார்.

நிறையச் சாப்பிடுஎன்று கூறினார் குருநாதர்.

சாமி, சாப்பிட்டால் இப்படி ஆகிவிடும் என்கிறீர்களேஎன்று குருநாதரிடம் யாம் கேட்டோம்.

தற்கு, “உனக்கு விருப்பமில்லை என்றால் கறி சாப்பிடாதேஎன்று கூறினார் குருநாதர்.

நீ கறி சாப்பிடுவதை நிறுத்த வேண்டும் என்று விரும்பினாலும், உடலில் உருவான அணுக்கள் கேட்கும். அப்பொழுது, அதனின் எண்ணத்தைத் தடுக்க வேண்டும்” என்றும் கூறினார்.
              
சாதாரண நிலையில் கறி சாப்பிடாமல் இருந்தாலும், கறியைப் பார்த்ததும், சாப்பிட வேண்டும் என்று ஏக்கமானால், அது ஒரு கிலோ கறியை சாப்பிட்டதற்குச் சமமாகும்என்று கூறினார்.

இப்படி குருநாதர் சொல்லும் பொழுதெல்லாம், “ஏன்தான், இவரிடம் சிக்கினோமோ?” என்று பயம் அதிகமாகிவிடும், ஆடாக, மாடாகப் பிறந்தால் என்ன செய்வது? என்ற பயம் எமக்குள் அதிகமாகும்.

பிறகு, குருநாதர் எம்மைப்பார்த்து
நீ விட வேண்டும் என்று விரும்பினாலும்,
உனக்கு கறி சாப்பிட ஆசை தோன்றுகிறது பார்,
இதனால் நீ 10 கிலோ கறி சாப்பிடுகிறாய்
என்று பயமுறுத்துவார்.

உதாரணமாக, உடலில் ஒரு நோயாகின்றது. நோயைத் தணிப்பதற்கான மருந்தைத் தயார் செய்வதற்கு, விஷத்தை எடுத்து இதற்கு சக்தி கொடுத்தவுடன், நமது உடலிலுள்ள நோயின் அணுக்களைக் கொல்கின்றது. மருந்தின் அணுக்கள் பெருகுகின்றது. நோயின் தன்மை தணிகின்றது.
3. அகஸ்தியர் உணர்வை எடுத்தால், தீமையை நம் உடல் ஏற்றுக் கொள்ளாது
விஷத்தை வென்றவர் அகஸ்தியர்.
அகஸ்தியரின் உணர்வை நமக்குள் எடுத்தால்,
நம்முள் உள்ள விஷங்களைக் கொஞ்சம்,
கொஞ்சமாக அடக்குகின்றது. அப்பொழுது,
நீ கறி சாப்பிட நினைத்தாலும், உடல் ஏற்றுக் கொள்ளாது என்று கூறினார், குருநாதர்.

யாம், யாரையும் கறி சாப்பிடவேண்டாம் என்று சொல்லவில்லை. சாப்பிட்டால் இப்படித்தான் ஆகும். இதுதான் இயற்கை நியதி.
இதனால், நாம் எப்படி இருக்க வேண்டும்?.
நீங்கள் தெரிந்து கொள்ளவேண்டும்.