ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

December 3, 2013

யாம் செய்யும் ஜெபமும், தியானமும் - ஞானகுரு

1. சிரமம் வரும் நேரத்தில் எதை தியானிக்கின்றோம்? எதை ஜெபம் செய்கின்றோம்?
நாம் ஏதாவது ஒன்று என்றால் என்ன செய்கின்றோம்? ஒருவர் நம்மைத் திட்டிவிட்டால்,
என்னைத் திட்டுகிறானே,
இப்படித் திட்டுகிறானே என்று அவர்களையே தியானிக்கின்றோம்.

இப்பொழுது நாம் குழந்தை மேல் பிரியமாக இருக்கிறோம். அவன் சரியாகப் படிக்கவில்லை.
அவனுக்கு படிப்பு வரவில்லையே
படிப்பு வரவில்லையே என்று தியானிக்கின்றோம்.

தொழிலில் கொஞ்சம் நஷ்டமாகிப் போனால், எதைச் செய்தாலும்,
எனக்கு வியாபாரம் இப்படி நஷ்டமாகிறது,
நஷ்டமாகிறது, நஷ்டமாகிறது என்று தியானிக்கிறோம்.

நிச்சயம் அதைத்தான் தியானிக்கிறோம். நல்லதை நாம் தியானிப்பதில்லை. இதைப் போல் ஒவ்வொன்றாக நாம் என்ன செய்கிறோம்?

ஒரு சிரமம் வந்துவிட்டால் அதைக் கண்டிப்பாக நாம் தியானிக்கின்றோம். அதைத் தியானித்தோடு மட்டுமல்லாமல் ஜெபம் பண்ணிவிடுகின்றோம்.

தியானிப்பது என்றால், அடிக்கடி மனதிலே நினைப்பது “தியானம்”. அந்தக் காரியத்தைச் செய்தேன், இப்படி ஆகின்றது என்று வெளியிலே (மற்றவர்களிடம்) சொல்வதுஜெபம்”.

பையன் படித்துக் கொண்டிருந்தான் சரியாகப் படிக்க மாட்டேன் என்கிறான், இப்படிப் பண்ணுகிறான் என்று சொல்வது ஜெபம். அப்புறம் இங்கே ஆள் இல்லாத பொழுது தியானம். எதையுமே சிந்திக்க விடாது.
சிவனே என்று நான் இருக்கிறேன்.
அவன் இந்த மாதிரி இருக்கின்றானே. என்று
எடுத்துக் கொண்டேயிருப்பார்கள்.
2. யாம் செய்யும் ஜெபமும், தியானமும் -ஞானகுரு
இப்பொழுது யாம் ஜெபம் (உபதேசம்) பண்ணுகின்றோம். இரவிலே தியானம் இருக்கின்றோம். இரவு முழுவதும் மகரிஷிகளின் அருள் ஒளியை தியானம் பண்ணுகின்றோம்.

இப்பொழுது எல்லோருக்கும் என்ன செய்கிறேன்? எல்லா மகரிஷிகளின் அருள் சக்திகள் உங்களுக்குக் கிடைக்கவேண்டும் என்று சொல்லிவிட்டு உங்கள் உயிரைக் கடவுளாக நினைக்கின்றேன்.

இந்த உயர்ந்த ஒளிகள் உங்களுக்குக் கிடைக்க வேண்டும் என்று இந்த உணர்வை நான் ஜெபம் பண்ணுகின்றேன்.

இப்படி ஜெபம் (உபதேசம்) பண்ணும் பொழுது இந்த மனம் உங்களுக்குள் மகிழ்ச்சியாகிறது. நீங்கள் சுவாசிப்பது உங்கள் உயிரான ஈசனுக்குள் போய் இது சேர்கின்றது. அந்த அருள் சக்திகள் உங்களுக்குள் வளரத் தொடங்குகின்றது.

உங்கள் உடலுக்குள் இருக்கக்கூடிய பல கோடி சக்திகளுக்கு, யாம் பேசுவது அனைத்தும் ஆராதனையாக போய்ச் சேர்கின்றது. ஆக, நீங்கள் கேட்கும் பொழுது உங்களுக்கு மகிழ்ச்சியாகின்றது.