1. நம் ஆன்மா
அவன் உடலுக்குள் போகும்
இன்றைய மனித
வாழ்க்கையில் வேகமும் துடிப்பும் கொண்ட நிலையில், “எனக்கு இவன் கெடுதல் செய்தான், பாவி”
என்று நாம் ஒருவன் மேல் எண்ணத்தைச் செலுத்தியிருந்தால் அந்த மனிதனுக்குள் அந்த உணர்வின்
தன்மை அங்கே பெருகி இருக்கும்.
நாம் இறந்தவுடன்
அவனும் எண்ணுவான். “தொலைந்தான்..,
எனக்கு சதா தொல்லை கொடுத்துக் கொண்டிருந்தவன் தொலைந்தான்!” என்று எண்ணினால் போதும்.
அந்த உணர்வின்
தன்மை இதிலே கலந்த பிற்பாடு,
நம் உயிராத்மா
அவன் உடலுக்குள் தான் போகும்.
அங்கே போயாகிவிட்டது
என்றால், நாம் எதையெல்லாம் வெளியிலிருந்து இந்த உணர்வைச் சொன்னேனோ, என்னென்ன எல்லாம்
நான் பேசினேனோ, அதேல்லாம் அவனின் உடலுக்குள் போய் அந்த உணர்வுகளை நாம் எண்ணிய எண்ணங்களை
எல்லாம் அங்கே பேசும் பொழுது,
நான் பேசுவது
மாதிரியே அவன் பேசுவான்.
அதைப் பேசப்படப்
போகும் பொழுது என்னவாகும்?
மற்றவர்களுக்கு வித்தியாசமாகத் தெரியும்.
முன்பு பேசிய
நிலைகளும் தன்னைச் சார்ந்தவர்களிடத்தில் இவன் வேடிக்கையான எண்ணங்கள் பேசும் பொழுது,
இவன் தன் வாழ்க்கைக்கு எதிரியாக்கிக் கொள்கிறான். அப்பொழுது எல்லாக் காரியத்தையும் தடைப்படுத்தும்.
உடலுடன் இருக்கும்
பொழுது அவன் செயலை நான் தடைப்படுத்த வேண்டும் என்று எண்ணினேன். அதே மாதிரி அங்கே பேயாகிவிட்டால், அது எல்லோரிடமும்
எதிரியாக்கும் உணர்வைத் தோற்றுவித்துவிடும்.
2. சிந்தனை இழந்து கடைசியில் மிருகத்தின் வாசனைதான்
வரும்
அப்பொழுது நாம்
(நம் ஆன்மா) அங்கே போனவுடனே. அங்கேயும் நாம் எடுத்துக் கொண்ட உணர்வுகள் வாழ்க்கையிலே
நலியப்படும் பொழுது வேதனை என்ற உணர்வுகள் அங்கே வந்துவிடும். நாம் செய்யக்கூடிய காரியங்கள்
அங்கே தடைப்படும் பொழுது, வேதனையாகின்றது.
வேதனை என்பது
விஷம். இந்த விஷமான உணர்வுகளைச் சுவாசித்தவுடனே இந்த உணர்வின் தன்மைகள் அங்கே பல நோய்களும்
பற்பல நிலைகள் ஏற்படுத்தப்பட்டு சிந்தனையற்ற நிலைகள் அங்கே வருகின்றது.
சிந்தனையற்ற
அணுவின் தன்மை
அங்கே செல்கள்
விளையப்படும் பொழுது
அந்த உடலில்
எடுத்துக்கொண்ட அந்த விஷமான சத்துகள்
அந்த உடலிலிருந்த
அந்த உயிராத்மாவிற்கும்
நாம் போயிருந்தோமே
அந்த உயிராத்மாவிற்கும் போய்ச் சேர்ந்துவிடுகின்றது.
அப்பொழுது அந்த விஷத்தின் தன்மையால் எண்ணங்கள் நினைவிழந்து
மிருகத்தினுடைய வாசனை போல் வந்துவிடும்.
எந்த அசுரத்தன்மையினுடைய
தன்மை வருகின்றதோ மனிதனுடைய எண்ணத்தை சிந்தனை செய்யக்கூடிய எண்ணங்களையெல்லாம் வீழ்த்திவிடுகின்றது.