ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

December 14, 2013

சளி மற்றும் மூக்கில் நீர் வருவதைத் தடுக்கும் முறை (குழந்தைகளுக்கு)

1. குழந்தைகளுக்கு வரும் நோய்களை நீக்கும் வழி
குழந்தைகளுக்கு சரியாக ஜீரணமாகவில்லை. சாப்பிட முடியவில்லை என்று சொன்னால், உருண்டையாக தலையணையை வைத்துக் கொள்ளுங்கள், அதிலே வில் மாதிரி (படத்தில் காட்டியபடி) படுக்க வையுங்கள்.

கொஞ்ச நேரம் நீங்கள் ஓம் ஈஸ்வரா என்று எண்ணி, அந்தக் குழந்தைக்கு நல்ல ஜீரண சக்தி ஆக வேண்டும். ஜீரண உறுப்புக்கள் எல்லாம் சீராக வேண்டும் என்று அந்தக் குழந்தையை அப்படியே அந்த மூச்சை எடுக்கச் சொல்லுங்கள்.

சில குழந்தைகள் சளித் தொல்லையால் அடிக்கடி அவஸ்தைப்படும். அதே மாதிரி வில் மாதிரிப் படுத்து அதே மாதிரி செய்யச் சொல்லுங்கள். சளித் தொல்லை நீங்கும்.

இதே மாதிரி தபோவனத்தில் உருவான நொச்சி இலையும் கொஞ்சம் மஞ்சளும் போட்டு வீட்டில் அந்தப் புகையைப் போட்டுவிடுங்கள். இதை நுகரப்படும் பொழுது, குழந்தைகள் உடலில் சளியை உருவாக்கும் அணுக்களின் தன்மை பலவீனம் ஆகும். சளி உற்பத்தி ஆகாது.
2. மூக்கில் நீர் வருவதைத் தடுக்கும் முறை
சில நேரங்களில் சிலர் பேசிக் கொண்டே இருப்பார்கள். மூக்கில் இருந்து தண்ணீராக வர ஆரம்பித்துவிடும். டாக்டரிடம் போனால் அலர்ஜி, அது இது என்று கடைசியில் ஆபரேஷன் செய்ய வேண்டும் என்பார்கள்.

மூக்கில் நீர் வரும் பொழுது நொச்சி இலையும், சிறிது மஞ்சள் தூளையும் போட்டு, யாம் கொடுத்த விபூதியையும் போட்டு புகையைப் போட்டுவிடுங்கள்.

பின் வானை நோக்கி துருவ நட்சத்திரத்தை எண்ணி, அதிலிருந்து வெளிப்படும் உணர்வுகள் எங்கள் உடல் முழுவதும் படரவேண்டும் என்று எண்ணுங்கள்.

ஆக, அந்த துருவ நட்சத்திரத்தை எண்ணி சிறிது நேரம் அந்த சுவாசத்தை எடுங்கள். அப்பொழுது, இந்தத் தீமைகளை நீக்கும் ஆற்றல் நீங்கள் பெறுகின்றீர்கள். எமது அருளாசிகள்