ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

December 27, 2013

சொந்த பந்தங்களுக்குள் ஒற்றுமை ஏற்பட அன்றைய ஞானிகள் உருவாக்கிய நிலை

1. சொந்த பந்தங்களுக்குள் ஒற்றுமை ஏற்பட அன்றைய ஞானிகள் உருவாக்கிய நிலை
சூரிய குடும்பத்துக்குள் ஏதாவது ஒரு சமயம் அது மாறுபட்டு விட்டால், அந்தப் பிரபஞ்சமே செயல் இழந்துவிடும். இதைப்போல நாம் ஒரு குல வழியில் வந்தவர்கள்தான், பந்துக்கள்.

அந்த பந்துக்கள் என்ற நிலையில் பாசத்தை வளர்ப்பதற்குத்தான். கல்யாணங்களிலும், விசேஷ காலங்களிலும் மனம் மகிழச் செய்வதும், ஒருவருக்கொருவர் உதவி செய்வதும், ஒருவருக்கொருவர் சந்திக்கச் செய்வதும். ஏற்பட்டது.

அதேசமயம் திருமணக் காலங்களில், ஒருவர் ஏழ்மையாக இருந்தால் அவரால் செயல்படுத்த முடியாது என்பதற்காக, அன்று ஞானிகள் காட்டிய அருள் வழியில், விசேஷ காலங்களில் ஆளுக்குக் கொஞ்சம், அவரவர்கள் இந்தப் பொருட்களை வாங்கிக் கொடுத்தால், அந்த சமயத்தில் அவர்களுக்கு விசேஷக் காரியம் சிரமம் இல்லாதபடி நடக்கும்.

ஆனால், இன்று காரியங்கள் நடக்கின்றன என்றால் கௌரவத்திற்காக வேண்டியும், “இவர் என்ன செய்தார்?, அவர்கள் என்ன செய்தார்கள்?” என்று பொறாமைகளை வளர்க்கும் நிலைதான், இன்று இருக்கின்றது.

அன்று ஒன்று சேர்த்த நிலைகளில், பந்துக்கள் வாழ வேண்டும் என்பதற்காக, திருமணமோ அல்லது மற்ற வைபவங்களோ அது நடத்தப்படும் போது, இதைப்போல மனம் உவந்து "அவர்கள் உயர்ந்த நிலைகள் பெற வேண்டும்" என்று ஒருவருக்கொருவர் பொருள் உதவி செய்யப்போகும்போது, அவர்களுக்குள் ஒற்றுமை ஏற்பட்டது.

அதைப்போல ஒரு குடும்பத்தில் சிறுகுறைகள் ஏற்பட்டால், சில அலுவல் ஏற்பட்டால், எல்லோரும் ஒன்று சேர்ந்து அவர்களுக்கு உபகாரம் செய்வதற்கும், நோய்வாய்ப்பட்டாலோ அதற்காக அந்த பந்தத்தின் தன்மைகொண்டு, அவர்கள் வீட்டிலே ஒருவருக்கொருவர் ஒத்துழைப்பு செய்வதற்கும், மனம் உவந்து போவதற்காக, இப்படியெல்லாம் ஒற்றுமையைச் செய்து வைத்தார்கள். அது ஒரு பிரபஞ்சம்.

நம் சூரியக் குடும்பம் எவ்வாறு ஒரு பிரபஞ்சம் ஆகின்றதோ, இதைப்போல நம் மூதாதையர்கள் அதன் வழிகளிலே நாம் இணையப்படும் போது, பிரபஞ்ச இயக்கத்துக்குள் அது வருகின்றது.
2. கௌரவத்திற்காக இன்று பகைமையை வளர்க்கும் நிலை வந்துவிட்டது
இதைப்போல அன்று செய்துகொண்ட நிலைகள், காலத்தால் எங்கோ சென்றுவிட்டது. இன்று சிந்திக்கக்கூட நேரம் இல்லை. ஏதாவது விசேஷங்கள் நடந்தால்,
என்னை மதிக்கவில்லை, .
எப்படி நடத்துகின்றான் பார்க்கிறேன்என்று
எவ்வளவு தொல்லைகள் கொடுக்க முடியுமோ, அவ்வளவையும் கொடுப்பார்கள்.

இப்பொழுது, ஒரு குடும்பத்தில் ஒரு பெண் இருக்கின்றது. அதற்குத் திருமண ஏற்பாடுகள் ஆகின்றது என்றால், அதே போல் திருமணம் ஆகாத ஒருவர், அவருக்குக் கல்யாணம் நடக்கவில்லை என்றால், “அந்தப் பெண் மோசம்என்று ஊர் எல்லாம் சொல்லுவதும், தம்பட்டம் அடிப்பதும், அந்தக் குடும்பத்திற்கு எவ்வளவு துன்பம் கொடுக்க முடியுமோ, அந்த அளவுக்குக் கொடுப்பார்.

அந்த அளவுக்கு, நம்முடைய உணர்வின் நிலைகள் தீய விளைவுகளாக மாறிவிட்டது. நம்மையறியாமலேயே, அந்தச் செயல்களை செயல்படுத்தச் செய்கின்றது.
3. அறியாது வரும் பகைமையை உடனுக்குடன் மாற்ற சதுர்த்தி செய்யவேண்டும்
இதைப்போன்ற நிலைகளை மாற்றுவதற்குத்தான், ஞானிகள் காட்டிய அருள்நெறிப்படி மாதத்திற்கு ஒருநாள் சதுர்த்தி என்று வைத்துள்ளார்கள்.


நமக்குள் பகைமை இருந்தாலோ, வெறுப்பு இருந்தாலோ, நாம் அமர்ந்திருந்து நாம் ஒவ்வொருவரும் அந்தப் பகைமையை நீக்க, மாதத்தில் ஒரு நாள் அந்த சதுர்த்தியன்று அந்த சப்தரிஷி மண்டலங்களை எண்ணி நம் மூதாதையர்களை எண்ணி அவர்கள் மெய்யொளி பெற வேண்டும் என்று எண்ணி, நாம் சக்தி பெற வேண்டும் என்று எண்ணி ஏங்கி தியானிக்க வேண்டும்.

அப்படி தியானித்துவிட்டு, நாங்கள் பார்ப்பதெல்லாம் நலம் பெற வேண்டும்’ என்றும், ங்கள் சொல்லுக்குள் இனிமை பெற வேண்டும் என்று எண்ண வேண்டும்.
அடுத்து, உங்களுக்குள் யாரெல்லாம் வெறுப்படைந்தனரோ,
ங்கள் பார்வை அவரை நலமாக்க வேண்டும்,
ங்கள் சொல் அவரை இனிமையாக்க வேண்டும்,
ங்களைப் பார்க்கும்போது அவருக்கு நல்ல மனம் வர வேண்டும்,
அவர்கள் குடும்பத்தில் நல்ல மகிழ்ச்சி பெற வேண்டும்,
மகிழ்ச்சியாக அவர்கள் வாழ வேண்டும்,
அவர்கள் இல்லத்தில் மகரிஷிகளின் அருள் ஒளி படர வேண்டும்,
அவர்களை அறியாத இருள் நீங்க வேண்டும்,
அவர்கள் மெய் பொருள் காண வேண்டும் என்று, இதையெல்லாம்
அந்த சதுர்த்தியன்று நாம் எண்ண வேண்டும்.

சதுர்த்தியன்று, இவ்வாறு நாம் எண்ணினால், நமக்குள் ருக்கும் பகைமை நீங்குகின்றது. கீதையிலே சொன்னது போல, “நீ எதை எண்ணுகின்றாயோ, அதுவாகின்றாய்” நம் உணர்வின் சக்தி, நமக்குள் வளர்கின்றது.

எல்லோரும் நலம் பெறும் எண்ணத்தை, பந்துக்களிடம் இருக்கக்கூடிய பாசத்தை வளர்த்துக் கொள்ள முடிகிறது. இதைப்போல, சதுர்த்தியன்று நமது பந்துக்களும் எண்ணினால், நம்மையறியாது வந்த தீய விளைவின் நிலைகளை, எல்லோராலும் மாற்றிக் கொள்ள முடிகின்றது.

இதற்குத்தான் களி மண்ணால் விநாயகரைச் செய்து, கடலிலே கரைக்கும் நிலையாகக் காட்டினார்கள். 

அதாவது, நம்மை அறியாமல் சேரும் பகைமை உணர்வுகளை நம் ஈர்ப்பிலிருந்து (ஆன்மாவிலிருந்து) விலக்கும் பொழுது, சூரியனின் காந்தப்புலனறிவுகள் அதைக் கவர்ந்து கடலுக்கடியில் கொண்டு போய் அமிழ்த்திவிடும்.
ஆக, நம் ஆன்மா சுத்தமடையும். இந்தக் காற்று மண்டலம் தூய்மை அடையும். அனைவரும் ஒன்றி வாழும் நிலைகள் ஏற்படும். 

அந்த உணர்வுகளை மனிதன் இன்று ஆறாவது அறிவு கொண்டு, சப்தரிஷி, அதாவது சொல்லால், செயலால், அந்த மெய் ஒளியைத் தனக்குள் சிருஷ்டித்து, இருள் சூழ்ந்த நிலைகள், இந்த பூமியின் பிடிப்பில் இருந்து தப்பித்துக் கொள்வதற்கு, இத்தகைய நிலைகளை அன்று மெய்ஞானியர்கள் செய்தார்கள்