ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

December 11, 2013

நம் உடலில் உள்ள அணுக்களை ஆரோக்கியமாக வைக்கும் வழி

1. உடல் நலக்குறைவு ஏற்பட முக்கியமான காரணம் எது?
மனித வாழ்க்கையில் ஒவ்வொருவரும் சந்தர்ப்ப சூழ்நிலைகளால் வேதனை வெறுப்பு அவசரம், ஆத்திரம் போன்ற உணர்வுகளை நுகராமல் இருக்க முடியவில்லை.

நாம் நுகர்ந்த உணர்வுகளை நமது உயிர் இயக்கி நமது உடலாக மாற்றிவிடுகின்றது. இத்தகைய தீமையான உணர்வுகள்
நம் உடலை உருவாக்கிய
நல்ல உணர்வின் அணுக்களைக் கொன்று
அந்த அணுக்களின் மலங்களால் ஆன உறுப்புகளில்
பல நோய்களை விளையச் செய்கின்றது.

சில சமயம், அக்கம் பக்கம் உள்ளவர்களாலோ, நண்பர்களினாலோ சில வேண்டத்தகாத உணர்வுகளால் உந்தப்படுவோம். அவன் அப்படிச் செய்தான், இப்படிச் செய்தான் என்று எண்ணும் பொழுதெல்லாம் அந்த அணுக்கள் நமக்குள் அதிகமாகி நம் உடலில் உள்ள நல்ல அணுக்களுடன் போர் செய்யத் தொடங்கிவிடும்.

அதனால், நமக்குள் மனக்கலக்கம், மன நோய் போன்ற நிலை ஏற்படும். பின், உடல் நோய் அதிகரிக்கத் தொடங்கிவிடும். ஆக, நமக்குள் மனிதன் ஆறாவது நிலைக்கு எட்டாதபடி நாம் ஐந்தாவது அறிவிற்கே திருப்பிக் கொண்டு போகும். அப்பொழுது நாம் என்ன செய்யவேண்டும்?
2. நம் உடலில் உள்ள அணுக்களை ஆரோக்கியமாக வைக்கும் வழி
உடனே, ஓம் ஈஸ்வரா என்று உயிரின் பால் நினைவைச் செலுத்தி துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் எங்கள் உடல் முழுவதும் படரவேண்டும் என்று எண்ணி சுவாசியுங்கள்

கண்களை மூடி அதே மாதிரி துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் எங்கள் உடல் முழுவதும் படரவேண்டும் என்று எண்ணி சுவாசியுங்கள்.

அடுத்து, அந்த  வேண்டத்தகாத உணர்வுகள் எவரால் உந்தப்பட்டதோ அவரை எண்ணி, அவருக்குள் இருக்கும் அறியாத இருள் நீங்கி அவர் பொருள் அறிந்து செயல்படும் சக்தி பெறவேண்டும் என்று எண்ணுங்கள்.
இப்படிச் செய்யும் பொழுது
அவர் உணர்வுகள் நமக்குள் வராமல் தடுத்துக் கொள்ளலாம்.

அதை நமக்குள் மாற்றி, எப்படி செடிகளுக்கு உரம் கொடுக்கின்றோமோ இதைப் போல நம் உணர்வுகளை மாற்றி உள் செலுத்தினால் அந்த அணுக்களும் மாறிவிடும்.
3. நல் உணர்வின் அணுக்களைப் பெருக்கும் வழி
ஒவ்வொரு நிமிடமும் அதிர்ச்சியான செய்திகளையும், பிறர்படும் கஷ்டங்களையும், எத்தனையோ வேதனைகளையும் கேட்டறிகின்றோம். பத்திரிக்கை வேறு படிக்கின்றோம். அரசியலில் பற்று இருந்தால் வெறுப்படைகின்றோம். இப்படிச் செய்கின்றான், அப்படிச் செய்கின்றான் என்று இந்த உணர்வுகளை நாம் எடுக்கின்றோம்.

இதையெல்லாம் பேசி கலந்து உறவாடினாலும், அடுத்த நிமிடம் நம் நல்ல உணர்வுகள் மாறாதபடி அந்த துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் பெறவேண்டும் என்று ஏங்குங்கள்.

நாம் எதையெல்லாம் கேட்டோமோ, பார்த்தோமோ அவையெல்லாம் நலம் பெறவேண்டும்,
நாடு நலம் பெறவேண்டும்,
அனைவரும் ஒன்றுபட்டு வாழவேண்டும்,
தெளிந்த மனம் அனைவரும் பெறவேண்டும் என்று
இந்த உணர்வை நமக்குள் வளர்க்க வேண்டும்.

பிறருடைய உணர்வுகள் நமக்குள் வரும் பொழுது அந்த உணர்வுகள் நமக்குள் வளராது மாற்றியமைத்து, நல் உணர்வின் அணுக்களை நாம்  பெருக்கிக் கொள்ளவேண்டும்.

ஆக, இந்த எண்ணங்கள் நமக்குள் வளரும் பொழுது, பிறருடைய உணர்வுகள் சிறுத்துவிடுகின்றது. அது நமக்குள் அடங்கிவிடுகின்றது.

இப்படி நமது வாழ்க்கையையே
நாம் தியானமாக்கிப் பழகவேண்டும்.