ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

December 16, 2013

கால் வலி, மூல நோய் இவைகளை நீக்க முடியும் - ஆடு தின்னாப்பாளை, ஜவ்வரிசி

1. மூல நோய் குணமாக என்ன செய்ய வேண்டும்?
மூல நோய் உள்ளவர்களுக்கு அடிக்கடி கடு கடுவென்று இருக்கும். மூலக் கிருமிகள் அதிகமாகும் பொழுது அரிப்பாகும். அப்பொழுது குடல்கள் சுருங்கும். சுருங்கப்படும் பொழுது மலம் வருவது கஷ்டமாகும். மலம் வந்தவுடன், அந்த மூலத்தின் மேல் கீறினால் இரத்தம் வரும். இரத்த மூலம் என்று சொல்வார்கள்.

நீங்கள் ஒன்றும் பயப்பட வேண்டியது இல்லை. இந்த மூல நோய்களுக்கெல்லாம் இந்த ஜவ்வரிசிப் பாயாசமே உங்களுக்குப் பெரும் மருந்தாகும். மூல பவுத்திரமோ, மூல நோயோ மூல அணுக்களோ, மூல ஆணியோ இருந்தால் கூட கடுக்காய் தூளைச் சாப்பிட்டால் குறையும்.

மூல நோய் உள்ளவர்கள் மல்லாந்து படுத்து துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் பெறவேண்டும் என்று எண்ணுங்கள்.
துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியை
இழுத்து சுவாசித்து
அந்த மூச்சை சமமான நிலையில் விடுங்கள்.

பின் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் எங்கள் நரம்பு மண்டலங்களில் படரவேண்டும், எங்கள் உடல் முழுவதும் படரவேண்டும், எங்கள் குடல் முழுவதும் படரவேண்டும் என்ற இந்த உணர்வைச் செலுத்துங்கள். மூல நோய் குறையும்.
2. கால் வலியை நீக்க முடியும்
சிலருக்கு மூட்டுகளில் எலும்பு தேய்ந்து விட்டது என்பார்கள். கால்களில் ரொம்ப நாளாக வலிக்கின்றது என்பார்கள், சிலருக்குக் காலையில் எழுந்தவுடன் குதி கால்களில் நடக்க முடியாது.

இதற்கெல்லாம் ஆடு தின்னாப்பாளையை (ஆடு தீண்டாப்பாளை) அரைத்து இரவிலே காலிலே போட்டுவிடுங்கள். கால்களில் இருக்கும் விஷ நீர் எல்லாவற்றையும் எடுத்துவிடும். இதையெல்லாம் வாக்குடன் கொடுக்கின்றேன், புரிந்து கொள்ளுங்கள்.

யாம் சொன்ன இவை அனைத்தையும்
துருவ நட்சத்திரத்தை எண்ணி
அந்த நம்பிக்கையோடு செய்யவேண்டும்.
சாமி சொல்கிறார், இதையெல்லாம் செய்தால் சரியாகுமா?
அதெப்படி சரியாகும் என்ற மனது வந்துவிட்டால் என்னவாகும்?

கொஞ்சம் முயற்சி செய்யவேண்டும். இரண்டு நாளைக்குப் பார்ப்பார்கள். மூன்றாவது நாள் விட்டுவிடுவார்கள். ஏனென்றால், இந்த மனம்தான் எல்லாவற்றிற்கும் காரணம்.

ஆகவே. சரியாகப் போகும் (என்ற இந்த மனது) என்று மனதில் எண்ணினால் இதெல்லாம் சரியாகிவிடும். நீங்கள் செய்யுங்கள். செய்து கொண்டு வந்தால் எல்லாம் நல்லதாகும். எமது அருளாசிகள்,