ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

December 14, 2013

உடல் உறுப்புகள் சீராக இயங்க, சீராக இயக்க என்ன செய்ய வேண்டும்?

1. உங்கள் உணர்வே டாக்டர் ஆகும்
சிறிது நேரம் சுவற்றில் கையை வைத்துக் கொண்டு அந்த துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் நாங்கள் பெறவேண்டும், எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும் என்று எண்ணி, எங்கள் உடலில் உள்ள நஞ்சின் தன்மைகள் (நோயை உருவாக்கும் உணர்வுகள்) நீங்க வேண்டும் என்று ஏங்கி இருந்தால், அது அனைத்தும் நீங்கிவிடும் (இறங்கிவிடும்).
உங்கள் உணர்வே டாக்டர் ஆகும்.
நீங்கள் டாக்டரிடம் போகவேண்டியதில்லை.
கூடுமான வரைக்கும் சில சிரமங்களை மாற்றி அமைக்க முடியும். ஒவ்வொரு நாளும் இதைச் செய்து வரலாம். உங்கள் உடல் ஆரோக்கியமாக இருக்கும்.
2. உங்கள் உடல் உறுப்புகள் சீராக இயங்க, சீராக இயக்க என்ன செய்ய வேண்டும்?
கண் பார்வை மங்கினால், உட்கார்ந்து காலை நீட்டிக் குனிந்து (படத்தில் காட்டியபடி) காலில் பெருவிரலைத் தொடவும். மூன்று முறையாவது செய்யவும். குனிந்து இருக்கும் பொழுது, துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெறவேண்டும் என்று ஏங்குங்கள்.
அந்த நினைவு முழுவதையும் கண்ணிலே நினைவுக்குக் கொண்டு வாருங்கள். துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி எங்கள் உடல் முழுவதும் படரவேண்டும், எங்கள் உடலில் உள்ள ஜீவான்மா, ஜீவ அணுக்கள் பெறவேண்டும் என்று சுவாசத்தை மெதுவாக உள்ளே இழுக்கவும்.

அந்த துருவ நட்சத்திரத்தை எண்ணி சிறிது நேரம் மூச்சை அடக்கி, பின் மூச்சை விடவும்.

இதனால் சிறு மூளை பாகங்களுக்குள் உள்ள
நுண்ணிய நரம்புகளுக்குள்ளும்,
இரத்த நாளங்களுக்குள்ளும்
துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பாயும்.

இப்படிச் செய்து வரும் பொழுது உங்கள் உடல் உறுப்புகள் சீராக இயங்க, சீராக இயக்க உதவும்.