ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

June 2, 2013

அகத்தியர் உயிரைப் பற்றி உணர்த்திய பேருண்மை

நமது உயிர், நாம் நுகரும் உணர்வுகள் அனைத்தையும், அணுவாக உருவாக்கும் கருவாக உருவாக்கி விடுகின்றது,  அதாவது சிரசின் பக்கம் இருக்கும்  உயிர் அது ஈஸ்வரலோகம்”. 

அந்த உருவாக்கிய உணர்வுகள் நமது இரத்தத்தில் கலக்கப்படும்போது இந்திரலோகமாக மாறிவிடுகின்றது.

கோழி, முட்டைகளை  அடைகாப்பது போன்று, என்னை இப்படிச் செய்தான், செய்தான்என்ற உணர்வுகளை நுகரும்பொழுது,  கருவின் தன்மை முழுமையடைந்து, அணுவின் தன்மை அடைந்து விடுகின்றது.  அந்த அணுவின் தன்மை அடைந்தபின், அது தன் உணவிற்காக ஏங்குகின்றது.

முட்டையிலிருந்து குஞ்சு வெளி வந்த பின், புற நிலைகளில் உள்ளதைத் தன் அக நிலைகளுக்கு எடுத்துக் கொள்வதைப் போன்று, 
இந்த அணுத் தன்மையை அடைந்த பின், 
உடலின் உறுப்புகளுடன் ஒன்றி, 
இரத்தத்தில் வரும் உணர்வினை
தன் உணவாக உட்கொள்ளும் நிலை வருகின்றது. 

ஆகவே, இந்த அணுவின் தன்மை தான்  பிரம்மலோகம் என்ற நிலையை அடைகின்றது. இந்த அணுக்கள், தன் இனத்தின் தன்மையைப் பெருக்கும் நிலையை பெறுகின்றது. 

ஒரு கோழி முட்டையிட்டு, அந்த முட்டையிலிருந்து வந்த குஞ்சு, இது பல முட்டையிட்டு பல குஞ்சுகளை வளர்ப்பது போன்று,  இந்த அணுக்கள் நமக்குள் பெருகுகின்றது.

ஒரு மான் புலியை பார்த்து, புலியின் மணத்தை நுகர்ந்த பின், மானின் உயிரான ஈஸ்வரலோகத்தில்அந்த புலியின் உணர்வைக் கருவாக உருவாக்கும்  அணுக்கள் பெருகி விடுகின்றது.

இதனால், மானின் சாந்த உணர்வின் அணுக்கள் மடிந்துவிடுகின்றது, அது நினைவை இழக்கச் செய்கின்றது. புலி, மானை அடித்து தன் உணவாக உட்கொண்டு விடுகின்றது. மானின் தசைகள் புலிக்கு இறையாகின்றது. 

புலியின் உணர்வை மானின் உயிரான ஈசன், இந்த உணர்வின் தன்மையை கருவாக மாற்றி, புலியின் உடலுக்குள் சென்று புலியின் ரூபம் பெறுகின்றது. இங்கே கடவுள் என்பது யார்?,  நமது உயிரே.

இப்படி, பல கோடிச் சரீரங்களில் மற்றொன்றிடமிருது தன்னைக் காத்துக் கொள்ளும் நிலையாக உணர்வைப் பெற்று, உருமாறி உருமாறி, இன்று நம்மை மனிதனாக உருவாக்கியது நமது உயிர் என்ற நிலையில் அகஸ்தியர், இதனின் உண்மையின் நிலைகளை வெளிப்படுத்தினார்.