ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

June 9, 2013

எந்த விஷமான சக்தியும், தன்னை ஒன்றும் பாதிக்காத நிலையைச் செயல்படுத்தினார் போகர்.

சூரியன் எவ்வாறு விஷத்தைத் தனக்குள் அடக்கி, நல்லதாகச் செயல்பட்டதோ, அதுதான் காளிங்கநாதன். அதாவது  
இன்று, சூரியனுக்கு ஆதிசேஷனைப் போன்று,
பூமியின் சுழற்சி வட்டத்திற்குள் சுழலும்போது,
அதாவது, பாற்கடலில் மேரு என்ற மலையை மத்தாக வைத்து
வாசுகி என்ற பாம்பைக் கயிறாக வைத்து, கடைந்தார்கள்
என்று சொன்னார்கள் அல்லவா! 

இதைப் போன்றுதான் போக மாமகரிஷி இந்த இயற்கையின் தன்மையை, ஒரு அணுவுக்குள்  இருக்கக்கூடிய விஷத்தின் தன்மை, அது ஒவ்வொன்றையும் மாற்றி, தனக்குள் எப்படி எடுக்கின்றது என்ற நிலையை உணர்ந்து கொண்டார்.

காளிங்கநாதர், அதாவது காளிங்கம் என்றால்ஒவ்வொரு உணர்வின் தன்மையைதன் உணர்வில் சேர்த்து,
தனது  உணர்வாக இழுத்து,
தன் நிலைகளுக்கு ஆக்கும் நிலை.
அதுதான் விஷத்தின் ஆற்றல். 

ஆக அவ்வாறு, இந்த மனித உடலுக்குள்
எத்தகைய விஷத்தின் தன்மை தனக்குள் சேர்த்துக்கொண்டதோ,
தாவர இனத்தின் தன்மை தனக்குள் சேர்த்துக் கொண்டாலும்,
அந்தச் சூரியன் எப்படி விஷத்தைச் சேர்த்து,
சேர்த்த உணர்வின் ஆற்றல் கொண்டு சுழற்சியாகி
தான் எடுத்துக்கொண்ட வெப்ப அலைகள் கொண்டு,
உணர்வின் நிலைகள் கொண்டு,
ஒவ்வொரு அணுக்களாக, உயிராக மாற்றுகின்றது

இதைப்போல, போகன் தனக்குள், அந்த உணர்வின் அணுக்களின் தன்மையைதனக்குள் விஷத்தின் தன்மை கொண்டு, தனக்குள் கவர்ந்து அதை அடக்கினான்.


எந்த விஷமான சக்தியும், அவனை ஒன்றும் பாதிக்காத நிலையைச் செயல்படுத்தினான்.