ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

June 27, 2013

மனிதனாக ஆனபின், மெய்ஞானிகள் செய்தது

1. பரிணாம வளர்ச்சியில், மனித உடலை நாம் எப்படிப் பெற்றோம்?
மனிதனுடைய ஆறாவது அறிவின் சிருஷ்டிக்கும் தன்மை பெற்றது. உலகிலே சூரியனுடைய நிலைகள் அது வீசும் சந்தர்ப்பத்தாலேதான், ஒரு பொருளுடன் ஒரு பொருள் மோதி, அது ஒரு பொருளை உருவாக்கும்.

எவ்வளவு பெரிய பிரபஞ்சமானாலும்,
சூரியனோ மற்ற கோள்களோ
பேரண்டத்தில் எத்தனை பெரிய
ஆற்றல்மிக்க சக்திகளாக இருந்தாலும்
அவை அனைத்தும் வெளிப்படுத்தும் நிலைகள்
அது ஒன்றுடன் ஒன்று மோதும் சந்தர்ப்பத்தில் அதில் எது கடினமோ அது மற்றதை விழுங்கி, அதற்குள் மாற்றமாகி, மாற்றத்தின் தன்மை வருகின்றது.
இன்று ஒரு எலி இருக்கின்றது என்று வைத்துக் கொள்வோம். அதைத் தாக்க, வலுகொண்ட நிலையில் பூனை தன் உணர்வின் நிலையைச் சுவாசித்து, எலியை அடித்து விழுங்குகின்றது. இதைப் போன்றதுதான் ஒரு அணுவின் தன்மையும்.

கசப்புத் தன்மை கொண்ட ஒரு ஆற்றல்மிக்க சக்தி பூமியில் படர்கின்றது. அதைப் போன்று,. ஒரு இனிப்பான சத்தின் தன்மைகள் ஒரு பக்கம் பரவி வருகின்றது என்று வைத்துக் கொள்வோம்.

இரண்டும் எதிர் கொண்டு மோதும் பொழுது, சக கசப்பின் அணுக்களின் தன்மை அதிகமாக இருந்தால், இந்தக் கூட்டத்திற்குள் மூழ்கியவுடன் இது மோதிய நிலைகள் கொண்டு, இதனுடைய நிலைகள் வலுப்பெற்று, இந்த இனிப்பின் சத்தை கசப்பு தனக்குள் கவர்ந்து கொள்ளும்.

ஆகவே, கசப்பிற்குள் இனிப்பு சிக்கி இந்த இனிப்பை இழுத்துக் கொண்ட ஒரு அணுவின் தன்மையும், அதற்குள் இருக்கக்கூடிய காந்தமும், அந்த இனிப்பை வளர்க்கக்கூடிய வெப்ப காந்தம் இந்த இரு நிலையும் இந்தக் கசப்பில் இருக்கக்கூடிய காந்தமும் சேர்க்கப்படும் பொழுது, இரண்டு காந்தங்களின் ஆற்றல் அதிகமாகின்றது.

அதே சமயம் வெப்பத்தின் தன்மை அதிகமாகின்றது, அதனுடைய உணர்வுகளில், கசப்பும் இனிப்பும் கலந்த நிலைகள் கொண்ட உணர்வுகள் மாற்றம் அடைகின்றது.

இதைப் போன்றுதான், நாம் புழுவிலிருந்து மனிதனாக வரும் வரையிலும், ஒவ்வொரு சரீரத்திலும் தன்னைத் தற்காத்துக் கொள்வதற்காக,
தற்காத்துக் கொள்ளும் உணர்வின் தன்மையை
எடுத்துக் கொண்ட, அந்த உணர்வின் தன்மையே
அணுக்களின் வளர்ச்சி.

அது ஆற்றல்மிக்கதாகத் தெளிவாகி,
அந்தந்த உடல்களில் விளைந்து
அந்த உடலை இயக்கும் பொழுது
உயிருடன் சேர்த்துக் கொண்டு
இந்த உணர்வின் தன்மை உயிராத்மாவாக வந்தது.
இதையெல்லாம் மெய்ஞானிகள் தெளிவாக உணர்த்தினார்கள்.

ஏனென்றால் விஷமான உடலாக இருந்தாலும், எடுத்துக் கொண்ட விஷத்தை நீக்கி, தன்னைத் தற்காத்துக் கொள்ளக்கூடிய உணர்வாக, அந்த உடலிலே விளைய வைத்து, தன் உயிரான்மாவாக வளர்த்து வந்தது.

அப்படி வளர்த்து வந்த அந்த அணுக்களுக்குத் தக்கவாறு, நம் உடலின் அமைப்புகள் மாறி மாறி, மனிதனாக மிகவும் ஆற்றல்மிக்க நிலைகள் நாம் பெற்றோம்.

ஆற்றல்மிக்க நிலையில், நாம் இப்பொழுது (வளர்ந்து வந்த அந்த ஒரு அணுவின் தன்மைதான்) நாம் எண்ணங்களாகப் பேசுகின்றோம். அது செயலுக்கு வருகின்றது.

அதாவது, நம் உடலில் பல கோடி செல்களின் தன்மையும், ஒரு செயலாக்கும் தன்மையாக உணர்வின் ஆற்றல் வரும் பொழுது சொல்லாகவும், செயலாகவும் வருகின்றது.
2. மனிதனாக உருவாகியபின், மெய்ஞானிகள் செய்தது
நாம் பெசும் இந்தச் சொல்லுக்குள், பல கோடி உணர்வின் ஆற்றல்மிக்க நிலைகள் நமக்குள் விளைந்து, செயலின் ஆக்கத்தையும், அதற்குத்தகுந்த உடலின் உருவ நிலைகளை நாம் பெற்றோம், என்ற இந்த உண்மையை அன்று மெய்ஞானிகள் கண்டுணர்ந்து, மனிதனானபின் ஆற்றல் மிக்க இந்த நிலையைக் கண்டு கொண்டான்.

அந்த உணர்வின் சக்தியின் தன்மையை,
அன்று ஞானிகள் தனக்குள் எடுத்துக் கொண்ட
ஆற்றல்மிக்க சக்தி கொண்டு,

மனிதனுக்குத் துன்பம் வரும் பொழுது, மனிதருடைய உடல்களிலே பாய்ச்சச் செய்து, அந்தத் துன்பத்தை நீக்கி, அங்கே அந்த மகிழ்ச்சியான எண்ணங்களைத் தோற்றுவிக்கச் செய்தார்கள்.