ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

June 21, 2013

இன்று சூறாவளி (TORNADO) ஏன் அதிகமாக ஏற்படுகின்றது?

1. அணுக்கதிரியக்கம் என்றால் என்ன?
விஞ்ஞானத்தில், எவ்வளவு பெரிய ஆற்றல் பெற்றாலும், ஒரு மனிதன் பல பாகங்களுக்கும் சென்று, மனிதன் துன்பப்படுவதிலிருந்து விடுபடச் செய்கின்றனர். நாம் இப்பொழுது அந்த நல்லதைச் செய்கின்றோம்.

விஞ்ஞானக் கருவிகள் கொண்டு, விஞ்ஞானி உயர் அழுத்தத்தைக் கொடுக்கப்படும் பொழுது ஆவியாக மாற்றலாம்.
இன்று அணுவின் தன்மை கொண்டு,
விஷத்தின் தன்மை கொண்டு
பல அணுக்கள் மறைந்திருப்பதை
ஒன்று சேர்த்துக் குவித்து,
அதே அலையை நாம் இன்று
“அணுக்கதிரியக்கம்” என்று சொல்கிறோம்.

ஆனால், ஒவ்வொரு செடிகளுக்குள்ளும் இந்தக் கதிரியக்கங்கள் உண்டு. ஆக, இதைப் போல ஒரு சந்தர்ப்பம், சில இடங்களில் இந்தக் கதிரியக்கச் சக்திகள் படர்ந்திருப்பதை, அந்த அணுவுக்குள் இருப்பதைப் பிரித்து எடுத்தான்.

அதை ஒன்று சேர்த்து, நீருக்குள் இருக்கும் அணுக்களுக்குள்ளும் இதை அடக்கி வைத்தான். மீண்டும் பூமியில் இருக்கக்கூடிய வெப்ப காந்த அணுக்களுக்களுடன் வெடிக்கச் செய்யும் பொழுது, ஒவ்வொரு அணுவுக்குள்ளும் இது ஊடுருவி, (எப்பொருளுக்குள்ளும்)
அணுக்களில் இரண்டாவது தரம் மோதும் பொழுது
அதைப் பூராவும் ஆவியாக மாற்றிக் கொண்டு வருகிறார்கள்.
2. கதிரியக்கத்தால் ஏற்படும் கதிர் வீச்சின் கசிவின் விளைவு - சூறாவளி (TORNADO)
இரும்பு எவ்வளவு உறுதியானது? அந்த இரும்பு உருவாவதற்கு இந்தக் கதிரியக்கச் சக்திதான் முக்கிய காரணம். நட்சத்திரங்களிலிருந்து வருவது..

இரும்பை நெருப்பில் போட்டால்,
எத்தனை டிகிரி ஆனாலும் உருகாது.
அந்தக் கதிரியக்கச் சக்தியில் வெப்பமாகும் பொழுதுதான் இது உருகக் காரணமாகின்றது.

அந்தக் கதிரியக்கச் சக்தியிலிருந்து மாறுவது இல்லை. ஆனால், அதே சமயம் இந்த அணுக்கதிரியக்கம் குவித்த நிலை கொண்டு இதில் மோதினால், இது அப்படியே ஆவியாக மாறிவிடும்.

இதைப் போன்ற நிலைகள்தான், புயலாக மாறி (TORNADO)
இங்கே இருக்கக்கூடிய இடமே தெரியாத நிலையில்
ஒவ்வொரு பொருளின் நிலையை மாய்த்து,
அது பெரும் புயலாக மாறி (TORNADO),

அணுவின் சக்திகள் இன்றைக்கு நடக்கக்கூடிய (கதிர் வீச்சின் கசிவின் நிலைகள், பூமிக்குள் சென்றதின்) வீரியமடைந்த நிலைகள்.