ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

June 11, 2013

போகமாமகரிஷி பெற்ற "காயகல்ப சித்தி"

1. புவனேஸ்வரியைப் பூஜித்தார் போகர்
போகமாமகரிஷி அவர் மனிதனாக வாழ்ந்த காலத்தில், புவனேஸ்வரி என்ற சக்தியை பூஜித்தார் என்று நாம் சொன்னோம். புவனம் என்பது, இதற்குள் ஏற்படுத்தப்பட்ட அனைத்துச் சக்திகளும், தாவர இனம் முதல் உயிரணுக்கள் வரை அது ஒவ்வொன்றும் இந்தப் புவனத்துற்குள் உருப்பெறச் செய்கின்றது. இந்தச் சக்திகளைத்தான் அவர் வணங்கினார்.

நமது பூமிக்குள் இருக்கும் அனைத்து சக்திகளும் நமக்குள் உண்டு.
ஒவ்வொரு உணர்வுகளையும், அதாவது
தாவர இனங்களிலும் மற்ற அனைத்து இனங்களிலும் உள்ள
சக்தியின் நிலைகளைத் தான் நுகர்ந்து,
அந்த உணர்வின் ஆற்றலை அறிந்துணர்ந்து,
அதைத் தன் உடலிலே சேர்த்துச் செயல்பட்டவர்தான் போகர்.

எதையுமே, நாம் ஒரு பொருளைப் பார்த்தவுடன் ஆசைப்படுகின்றோம். இதைப் போலவே, ஒவ்வொரு சக்தியின் நிலையையும் அவர் அறியவேண்டும் என்ற ஆற்றல் கொண்டு அறிந்துணர்ந்தார் போகர்.
2. பூமிக்குள் உருவாகும் உலோகம், தாவர இனங்களின் நிலைகள்
ஒவ்வொரு உலோகத்திற்கும் ஒவ்வொரு ஆற்றல் இருக்கிறது. பல தாவர இனச் சக்தியின் தன்மையை ஒன்று சேர்த்து, அந்தச் சத்துக்குள் ஒன்று சேர்த்து இணைக்கப்படும் பொழுதுதான், ஒரு செல்லின் சக்தி. அதைப் போலவே, தாவர இனச் சத்துக்குள் பல சத்துக்களாகச் சேர்க்கப்படும் பொழுது, உலோகமாக மாறுகின்றது.

அந்த உலோகங்களிலிருந்து வெளிப்படும், பூமியிலிருந்து வெளிப்பட்டு ஆவியாக வரும் பொழுது, சூரியனின் காந்தசக்தி தனக்குள் ஈர்த்து, பூமியிலே பல உணர்வலைகளாக அது மிதந்து கொண்டு பூமியின் ஈர்ப்புக்குள் தனக்குள் மோதி, பல உலோகங்களாக அது விளைகின்றது.

பூமிக்குள் இருக்கக்கூடிய வெப்பத்தினால் வெளிப்படும் வெப்ப காந்தங்கள், அந்தச் சத்தினைக் கவர்ந்து (பல வகை மண், உலோகங்கள், தாவர இனங்களின் சத்துகள்) அலை அலையாக வெளிப்படுத்துகின்றது.

ஆக, இந்தக் காந்தத்திற்குள் இணைத்துக் கொண்ட பொருளுக்குள் அந்த ஒவ்வொரு சத்தின் தன்மையை எடுத்திருக்கின்றதல்லவா, அதற்கும் இதற்கும் எதிர் நிலையானவுடன் இரண்டும் ஐக்கியமானவுடன் அந்த உணர்வின் சத்துக்குள் இதற்குள் போராடும். இப்படி மாறி சில நிலைகள் ஆகி, அந்த அணுவின் தன்மை மணங்கள் மாறும்.
3. பல நூறு சத்துகள் சேர்ந்து, ஒரு அணுவாக ஆற்றல் பெறும் நிலை
இப்படி ஒரு அணு,
பல நூற்றுக்கணக்கான அணுக்களாக மாறி, மோதி,
அந்த அணுவின் வெப்பகாந்தங்கள் ஒரு அணுவாக மாறி,
பல உணர்வுகள்
ஒரு உணர்வுக்குள் சேர்க்கப்படும் பொழுது,
ஒரு அணுவாக மாறுகின்றது.

அவ்வாறு மாறிய அணுக்கள், பல உலோகங்கள், பல தாதுக்கள் இது ஒரு இனம். இதைப் போல, பூமியிலே தோன்றக்கூடிய ஒவ்வொரு நிலைகளும், மாறுபட்ட அணுக்களின் தோற்றங்கள் எடுத்து, இந்தப் பூமியின் ஈர்ப்புக்குள் காந்த அலைகளாக மாறுகின்றது. வெப்பகாந்த அணுக்களுடன் இவை உணர்வின் அலைகளாகச் சுழல்கின்றது.

நம் பூமி சுழற்சியின் ஈர்ப்பில், வட துருவம் வழியாக தான் செல்லும் பாதையிலே தன் அருகில் இருப்பதைத் தனக்குள் இழுத்து, தனக்குள் சுழலச் செய்வதும், சுழன்று வரப்படும் பொழுது, பல அலைகளாக வருவதும், வெப்பத்தின் தன்மையை நமது பூமி ஈர்த்து, அதன் நடுமையமான நிலைகளுக்கு வெப்பங்கள் செல்கின்றது.

அதிலிருந்து வெளிவரப்படும் பொழுது இந்த ஆவியின் சக்திகளை எடுத்துக் கொள்கின்றது. பல குணங்கள், பல சத்துக்கள், பல கலவைகளாக இப்படி மாற்றிக் கொண்டேயுள்ளது. இதையெல்லாம் போகர் கண்டுணர்ந்தார்.

உதாரணமாக, ஒரு திடப்பொருளை வேக வைக்கும் பொழுது, விஞ்ஞான அறிவு கொண்டு பல கலவைகள் கலக்கின்றோம். இப்பொழுது நாம் சர்க்கரையை இனிப்பான சத்தைத் தயாரிக்க, நாம் கரும்புச் சாறிலிருந்து எடுக்கின்றோம்.

அதிலே எத்தனையோ அழுக்குகள் இருந்தாலும், அதற்குள் பொட்டாசியத்தை இணைத்தவுடன், அதில் இருக்கக்கூடிய அழுக்குகள் பிரித்தெடுக்கப்படுகின்றது. அதாவது,
அதிலிருக்கும் ஒவ்வொரு அணுக்களின் தன்மை
ஒன்றுக்கொன்று எதிர் நிலையாகும் பொழுது
ஒன்றுடன் ஒன்று அது பிரிந்து
“மற்றதைச் சுத்தப்படுத்தி”,
எதிர் நிலையாகும் பொழுது,
“இந்த உணர்வின் சத்தைப் பிரித்து”
பல அணுக்களின் மாற்றங்கள் ஏற்படுகின்றது.
4. ஒவ்வொரு அணுவிற்குள் இருக்கும் ஆற்றலைத் தனக்குள் சேர்த்து, காயகல்பமாக்கினார் போகமாமகரிஷி
இவ்வாறு, இந்த அணுக்களின் மாற்றங்கள் ஏற்பட்டதை எவ்வாறு இருக்கின்றது என்பதை போகமாமகரிஷி ஒவ்வொன்றையும் அந்தச் சக்தியைத் தனக்குள் ஈர்த்துச் சுவாசித்தார்.

அதையே தன் ஜெபமாக வைத்து, இந்த உணர்வின் ஆற்றலைத் தனக்குள் கண்டறிந்து, அது எவ்வாறெல்லாம் உருவானது? அந்த உணர்வின் ஆற்றல் எவ்வாறானது? என்பதைத் தனக்குள் சுவாசித்து, தன் உணர்வின் அணுக்களுக்குள் ஒவ்வொன்றையும் தனக்குள் ஆற்றல் மிக்கதாக மாற்றி காயகல்ப சித்தியாக்கினார்.

அதாவது, தன் உடலுக்குள் அத்தனை நிலையும், இந்த உடல் அழியா வண்ணமும் ஓரளவிற்கு உடலுக்குள் இருக்கக்கூடிய உணர்வின் ஆற்றலை, தன் நிலைகள் கொண்டு தான் கூட்டிலிருந்து பல பாகங்களுக்கும் சென்று, பல நிலைகளும் செய்தார்.
                        
சூரியனின் காந்த அலைகள், மற்ற கோள்களுடன் தொடர்பு கொண்டு, தன் அலைகளுடைய நிலையை எவ்வளவு விசாலமாக இருந்தாலும் (சூரியன்) பெறுகின்றது.

அதைப் போன்றுதான் போகமாமகரிஷி, பல காந்த ஈர்ப்புகள், தன் உடலின் தன்மை கொண்டு காயகல்பசித்தி பெற்று,
தன் உணர்வின் அலைகளை
படிப்படியாக காற்றிலே கலக்கச் செய்து,
இந்த உடலிலே இருந்தாலும்
பல நிலைகளுக்குக் கவர்ந்து சென்று,
தன் ஈர்ப்பின் தன்மையை
இந்த உலகம் முழுவதற்கும் சுழலும் நிலையை உருவாக்கினார்.