ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

June 7, 2013

விஷத்திற்குள் நல்ல உணர்வின் சத்தைத் தனக்குள் மாற்றி, வளர்த்துக் கொண்டார் போகர்

1. அணுவுக்குள் இருக்கும் விஷத்தின் ஆற்றல்
அகஸ்திய மாமகரிஷி உணர்த்திய அருள் வழிப்படி, அவர் வெளியிட்ட உண்மையின் தன்மைதான்
பேரண்டத்தில் ஒவ்வொரு அணுவும்
விஷத்தின் தன்மையைப் பெற்ற நிலை என்பது.

அதைப் போல, காளிங்கநாதனை போகர் குருவாக ஏற்றுக் கொண்டார் என்று எல்லோரும் சொல்வார்கள். இவர்கள் இரண்டு பேரும் சீனாவில் வளர்ந்தவர்கள். சீனாவிலிருந்துதான் இந்தியாவுக்கு வந்ததாகக் கூறுவார்கள். இதுவல்ல உண்மை.

பூமிக்குப் பாதுகாப்பு  - இதை அன்று ஓங்காரக் காளி என்று பெயர் வைத்தார்கள். இன்று விஞ்ஞானிகள் ஓசான் திரை என்று பெயர் வைத்திருக்கின்றார்கள்.

ஏனென்றால், பூமிக்குள் மற்ற தீய விஷ அலைகள் வராதபடி காத்து,
ஒரு பாதுகாப்பான நிலை என்று,
இதைத்தான் காளிங்கராயன் என்று போகர் சொன்னார்.
அதனைக் குருவாக ஏற்றுக் கொண்டார்.

விஷத்தின் ஆற்றல் என்பது, இந்த விஷம் எதையுமே தனக்குள் மற்றொன்றைக் கவர்ந்து கொள்ளும். அந்த ஒளியின் தன்மையாக மாறி, அது மற்றொன்றை உருவாக்கக்கூடிய நிலைகளாக வந்தது.

அதைப் போன்றுதான், உயிரணுவாகத் தோன்றி, விஷத்தன்மை கொண்டுதான் ஒரு உயிரணுவின் தோற்றம் அது தவிர, உடலில் எல்லா அணுக்களின் நிலையும் விஷமாக மாறி, அது ஒவ்வொன்றும் மாறி, தனக்குள் தற்காத்துக் கொள்ளும். தனக்கு ஆகாரமாக,
மற்ற விஷத்தன்மையற்ற பொருள்களை,
தனது எண்ணத்தின் நிலைகளைச் சுவாசித்து
இந்த உணர்வின் தன்மை தனக்குள் எடுத்து
அதற்குத்தக்கவாறு பரிணாம வளர்ச்சியில்
உடலின் அமைப்புகள் மாறி, மாறி
நாம் விஷத்தின் தன்மைகள் நீங்கி
மனிதனாகத் தோன்றும் நிலையைப் பெற்றோம்.
2. விஷத்திற்குள் நல்ல உணர்வின் சத்தைத் தனக்குள் மாற்றி, வளர்த்துக் கொண்டார் போகர்
இப்பொழுது, நாம் என்ன செய்கின்றோம்? நாம் சாப்பிடும் ஆகாரம் அனைத்திலேயும் விஷங்கள் உண்டு. இருந்தாலும், நமது உடல் அதைப் பரிசுத்தப்படுத்தி, “விஷத்தை மலங்களாக மாற்றிவிட்டு”, நமது உடலை நல்லதாக மாற்றிக் கொள்கிறது என்ற உண்மையை போகர் தன்னைத்தானே அறிந்துணர்ந்தார்.

ஒரு மனிதனுடைய உயிர் எப்படி புழுலிருந்து, மிருகத்திலிருந்து தோன்றி, மனிதனாக ஆகி, இது எவ்வளவு பெரிய ஆற்றல் பெற்றது என்பதை அறிந்தார் போகர்.

அதே சமயத்தில் மனிதனானபின், அவர்கள் சந்தர்ப்பத்தால் எடுக்கும் கடும் கோபமோ, ஆத்திரமோ, அவருடைய பரிணாம வளர்ச்சியில் அவர்கள் எடுத்துக் கொண்ட மூச்சுகளுக்குத் தக்கவாறு, அந்த உடலில் எத்தனையோ பிணிகள் கூடி, அந்த உணர்வின் தன்மை அந்த உயிர் இருக்கின்ற வரையில், அவர்கள் எடுத்துக் கொள்ளும் அலைகள் அங்கே விளைகின்றது.

மீண்டும் மனிதனின் நிலைகளில் இருந்து உருமாறி மாற்று நிலைகளுக்கு எங்கே போகின்றார்கள்? என்ற பேருண்மையையும் அறிகின்றார் போகர்.

அதை அறிந்தபின், இந்த மெய் உணர்வின் தன்மையை, ஒவ்வொரு தாவர இனச்சத்துக்குள் இருக்கக் கூடிய விஷத்தின் தன்மையை, தனக்குப் பாதுகாப்பாக ஏற்றுக் கொண்டு,
அந்த விஷத்திற்குள் உள்ள
நல்ல உணர்வின் சத்தைத் தனக்குள் மாற்றி,
அதைத் தனக்குள் வளர்த்துக் கொண்டார்.
போகமாமகரிஷி.