ஒவ்வொரு மனித உடலிலிருந்து வெளிப்படும் உணர்வுகளை,
சூரியன் காந்தப் புலனறிவு கவர்ந்து அலைகளாகப் பரவுவதை, நமது உயிர் கண்ணின் கருவிழி
கொண்டு கவர்ந்து, நம் உடலில் பதிவாக்குகின்றது.
அதே சமயம் கருவிழியுடன் இணைந்த காந்தப்புலனோ, அதனை
நமது ஆன்மாவாக மாற்றுகின்றது. முன் அழுத்தம் வேறு. இப்படி ஆன்மாவாக மாற்றும் பொழுது,
இதன் தொடர்வரிசையாக நமக்குள் அந்த காந்தப் புலனறிவு கவர்ந்தபின், உயிரினில் மோதி, அந்த
உணர்வு எதுவோ அதன் வழி நம்மை இயக்குகின்றது.
நமது உடலிலுள்ள
எல்லா குணங்களுக்கும், உயிர் மின்சாரம்
(CURRENT). போன்றது. உணர்வின் அணுக்கள் இந்த உடலில், தன் இனமல்லாது மற்றது புகும் பொழுது, இந்த உணர்வலைகள் எதிர்
நிலையாகின்றது (எர்த் – EARTH),
அப்படி எதிர் நிலையாகும் பொழுது,
நமக்குள் இயக்கத்தின் நிலைகள் தடுமாற்றமும்,
பதட்டமும் கொண்டு பயமாகும் உணர்வுகள் வருகின்றது.
இவையெல்லாம் இயற்கையின் நியதிகள்.
சூரியனின் இயக்கம் எவ்வாறிருக்கின்றதோ, இதைப் போன்றுதான்
உயிரின் இயக்கமும்.
உணர்வால்
அறிகின்றோம்.
உணர்ச்சியால்
இயங்குகின்றது.
மீண்டும்
அதன் உணர்வினை
நாம் எண்ணும்
பொழுது எண்ணமாகின்றது.
அந்த எண்ணத்தின் தன்மையை நுகரப்படும் பொழுது,
அது உணர்வாக மாறுகின்றது.
அந்த உணர்ச்சியின் தன்மை இயக்குகின்றது.
ஆகவே, உணர்வும் எண்ணங்களும் எவ்வாறு இயங்குகின்றதென்ற
நிலையைத்தான், இவைகளுக்குக் காரணப்பெயர்களை வைத்தார்கள் மகா ஞானிகள்.
அதாவது இயக்கச் சக்தியின் பேருண்மையின் நிலைகளை
நாம் அறிந்து கொள்வதற்காக, அவைகளுக்கு
தெய்வத்தின் பெயர்களை வைத்து, நம்மைத்
தெளிவாக்கினார்கள் ஞானிகள்.