ஒவ்வொரு அணுவின் தன்மையும் புழுவிலிருந்து மனிதனாக
வரும் வரையிலும்,
மற்ற அணுக்களுடன் மோதி மோதி,
தனக்குள் சுவாசித்து, சுவாசித்து,
தன்னைத்
தற்காத்துக்கொள்ளும் தன்மையை,
தன் உடலுக்குள் கூட்டிக் கொண்டபின் தான்
பரிணாம வளர்ச்சியில் நாம் மனிதனாக வந்திருக்கின்றோம்.
ஆனால், மனிதனாக உருமாறி அவ்வளவு பெரிய ஆற்றல் பெற்றாலும்,
மனிதருக்குள் மற்றவர்கள்படும் துயரமான நிலைகளையும், வேதனையான உணர்வுகளையும் சுவாசிக்கும்
பொழுது, இந்த அணுவுக்குள் கலந்தவுடனே அனைத்துச் சக்தியும் விஷத்துக்குள் அடிமைப்பட்டுவிடுகின்றது.
நாம் நல்ல எண்ணத்தையே எண்ண முடியாத நிலையில் கொண்டு,
அதனால் கலக்கமான உணர்வுகள் கொண்டு, சிந்திக்கும் திறன் இல்லாது, போய்விடுகின்றது.
விஷம் எப்படி ஒருவனை அழிக்கும் ஆற்றல் கொண்டுள்ளதோ,
அதைப் போல, எண்ணத்தின் நிலைகள் எதை எடுத்துக் கொண்டாலும், சிந்திக்கும் பொழுது, ஒருவனை
அழிக்கும் நிலை நமக்குள் தோன்றிவிடுகின்றது.
இவ்வாறு வளர்ந்து வந்த இந்த உண்மையின் நிலைகளைத்தான்,
அன்று போகமாமகரிஷி தனது குருவின் ஆற்றலால் கற்றுணர்ந்த அந்த உணர்வின் தன்மை, அதுதான் காளிங்கநாதர் என்பது. அது விஷமான ஒரு ஆற்றல்மிக்க சக்தி.
அதாவது, “காளிங்கண் – விஷம்” என்ற நிலையில்
அதன் சுருதியின் தன்மை எவ்வாறு இயக்குகின்றது?
என்ற உண்மையின் தன்மையை
போகருடைய குருநாதர் அவருக்கு உணர்த்துகின்றார்.
காளிங்கநாதர், அதாவது சூரியனுக்கு “ஆதிசேஷன்” என்ற விஷத்தைப் போல, பூமிக்கு “வாசுகி” என்ற விஷத்தின் சக்தியின்
நிலையில்தான் பூமி சுழல்கின்றது.
அந்த விஷத்தின் ஆற்றல் எதெனெதன் நிலையில், எது
கலக்கப்படுகின்றதோ அப்பொழுது, விஷம் தனக்குள் அடங்கி, அது தனக்குள் ஆற்றல்மிக்கதாகச்
செயல்படுகின்றது.
சூரியன் தனக்குள் எடுத்துக் கொண்ட உணர்வின் ஆற்றல்
கொண்டு,. அது தன் நிலைக்குள் மாற்றி உலகை சிருஷ்டிக்கக்கூடிய தன்மைக்கு அது எடுத்துக்
கொள்ளும் உணர்வுகள் செயல்படுகின்றது. அதைப் போன்றே,
நமக்குள் இருக்கக்கூடிய
உயிரான நிலைகள் கொண்டு,
நாம் எதனெதன் அளவில்
சுவாசிக்கும்
உணர்வின் தன்மையை
சமபங்கு
ஈடு செயல்படுத்தும் பொழுது,
உலகின் சத்தாலே, நமக்குள் படைக்கும் தன்மை ஈடு
கொண்டு வர முடியும் என்ற நமது நிலையை, அந்த போகமாமகரிஷி தெளிவாகக் கண்டுணர்ந்தார்.