ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

June 26, 2013

போகர் தன் உயிராத்மாவை எவ்வாறு இயக்கினார்?

போகமாமகரிஷி, விஷத்தின் ஆற்றலை முறிக்கும் தன்மையைத் தனக்குள் கண்டறிந்து, தன் உணர்வின் தன்மையை, எட்டு திசைகளுக்கும் செலுத்தினார்.

இங்கே சூரியன் தன் உணர்வலைகளை, பிரபஞ்சம் முழுவதும் பாயச் செய்து தன் அலைகளை எப்படி எடுக்கின்றதோ, இதைப் போன்றுதான் போகர்,
தன் உணர்வின் தன்மையை
தன் உடலுக்குள் ஈர்க்கக் கூடிய அணுக்கள் அனைத்தையும்
தன் கவர்ச்சியின் நிலைகள் கொண்டு
தன் உயிருடன் தொடர்பு கொண்டு சுவாசித்து
இந்த உணர்வின் தன்மையை
தன் சுழற்சியில் இழுக்கச் செய்தார்.
இதுதான் காயகல்பசித்தி.

போகர் இவ்வாறு செய்து, இந்தப் பூமிக்குள் இருக்கும் எத்தகைய சக்தியையும் (புவனேஸ்வரி), இங்கே பூமிக்குள் தோன்றும் இந்த உணர்வின் சக்தி எங்கிருந்தாலும், கவர்ந்து இழுத்துக் கொண்டு வந்து அவர் சுவாசித்தார்,

அப்படி சுவாசித்த நிலைகள் கொண்டு,
தான் இருப்பிடமான இச்சரீரத்தில் இருந்தாலும்,
தன் எண்ணத்தை ஊடுருவச் செய்து,
எங்கிருந்து கொண்டு நுகர்ந்தாரோ
அந்த நுகர்ந்த சக்தி கொண்டு
தன் உணர்விலே படரச் செய்து,
அவ்வாறே உயிராத்மாவை இயக்கினார்.