ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

June 12, 2013

பழனிமலை முருகன் சிலை

1. ஆறாவது அறிவை, சிலையாக உருவாக்கினார் போகர்
இந்தப் பிரபஞ்சம் எப்படி உருவாகியது என்றும், இந்தப் பிரபஞ்சத்தில் மனிதன் எவ்வாறு உருவானான்? என்ற பேருண்மைகளையும், போகமாமகரிஷி கண்டறிந்தார்.

சூரியனிலிருந்து விளைந்து, பின் அதனில் முதிர்ந்த பாதரசங்கள் வெளிப்பட்டு, விண்ணின் செயலில் அந்தப் பாதரசங்கள் தமக்குள் கலந்து ஈர்த்துக் கொண்டு விளைந்த கூறின் நிலைகள் நட்சத்திரங்களாக விளைந்து, ஒரு சூரியக் குடும்பமாக, ஒரு பிரபஞ்சமாக விளைந்து, அதற்குள் நமது பூமியையும் உருப்பெறச் செய்தது.
 
இந்தப் பிரபஞ்சத்திற்குள் விளைந்த அனைத்துச் சக்தியும், நமது பூமிக்குள் அது உயிரணுக்களின் ஆற்றலை வளர்த்து, அது மனிதனுடைய ஆறாவது அறிவினுடைய ஆற்றலைப் பெற்று,
இன்று சூரியன் எவ்வாறு பிரகாசிக்கின்றதோ, அதைப் போன்று
மனிதன் தன் உடலமைப்பின்
இந்த ஆறாவது அறிவின் தன்மை கொண்டு,
எதையுமே உணர்ந்து, கண்டுணர்ந்து அறிந்து செயல்படும்
ஆற்றல் பெற்றான்.

இப்பொழுது, ஒரு பொருளை நாம் வெளிச்சத்தில் பார்க்கும் பொழுதுதான் தெரிகின்றது. அதைப் போல,
ஒரு உணர்வுக்குள் மறைந்திருக்கக்கூடிய
உணர்வின் ஆற்றலை அறிந்துணர்ந்து
அதற்குத் தக்கவாறு செயல்படும்,
எதையுமே உருவாக்கும் ஆற்றல்மிக்க நிலையின் தன்மையை
போகமாமகரிஷி வழியமைத்து,
அதை இந்த மனித உடலுக்கொப்ப அமைத்து,
சூரியனை மையமாக வைத்து
ஒரு சிலையை உருவாக்கினார்.
2. இருபத்தியேழு நட்சத்திரங்களின் ஆற்றலை சிலைக்குள் அமைத்தார்
இன்று விண்ணிலே மற்ற கோள்கள் சென்றாலும், சூரியனின் அரவணைப்பிலே கோள்கள் ஒரு சீராகச் சுழ்ல்கின்றது. ஒரே சீராகச் சுழன்றாலும், காலத்தாலே மற்ற சூரியக் குடும்பத்திலிருந்து வரக்கூடிய விஷத்தின் தன்மையை இந்தக் கதிரியக்கச் சக்திகள் தாக்கி, அதனுடைய நிலைகள் பூராவையும் சிதறச் செய்து, இந்தப் பிரபஞ்சத்திற்குள் வராது தடுக்கும்.

அதாவது, சூரியக்குடும்பத்திற்குப் பாதுகாப்பு இந்த 27 நட்சத்திரங்கள்தான். அதைப் போன்றுதான், போகர் இந்த ஒவ்வொரு நட்சத்திரத்தின் தன்மைகளுடைய நிலைகளை, முருகனுடைய சிலைக்குள் “27 நட்சத்திரத்தின் ஆற்றலுடைய சில தாவர இனச் சத்தையும், சில நட்சத்திரங்களின் நிலைகளையும்” அமைத்து வைத்தார்.

ஆகவே சமத்துவமான நிலையில், இன்று விஞ்ஞானிகள் எப்படி கதிரியக்கத்தைத் தனக்குள் அடக்கி, அதன் வழியில் இயந்திரங்களை இயக்கி, மற்ற நிலைகளைச் செய்ய உபயோகப்படுத்துகின்றனரோ, அதைப் போன்று முருகன் சிலையை வடிவமைத்தார்.
3. வியாழன் கோள் நம் பிரபஞ்சத்திற்கு மிகவும் முக்கியமானது (“குரு”)
வியாழன்கோள் மற்ற நட்சத்திரங்களிலிருந்து வரக்கூடிய கதிரியக்கச் சக்தியையும், மற்றவையும் தனக்குள் ஜீரணித்து, அந்தக் கதிரியக்கத்தையே அடக்கக்கூடிய தன்மையைப் பெற்றது.

ஒரு நட்சத்திரத்தில் கதிரியக்கம் இருக்கிறதென்றால், அதே கதிரியக்கத்தைத் தனக்குள் எடுத்து, சூரியனுடைய ஆற்றலை எடுத்து, அந்தக் கதிரியக்கச் சக்தியையே அடக்கக்கூடிய சக்தியாக, வியாழன் கோளிலிருந்து வெளிப்படும்.

ஆகையால்தான், இந்தப் பிரபஞ்சத்திலிருக்கக்கூடிய விஷத்தின் தன்மைகள் மற்ற நட்சத்திரங்களிலிருந்து வெளிப்பட்டாலும், இந்த வியாழன்கோள் வெளிப்படுத்தும் சக்தி” அதை அடக்கி, இந்தப் பிரபஞ்சத்திற்குள் நல்ல மாற்றம் ஏற்படக் காரணமாகின்றது.

இவையெல்லாம் மெய்ஞானிகள் காட்டியது. இதை விஞ்ஞானத்தால் கண்டு கொள்ள வேண்டுமென்றால் வெகுகாலமாகும்.
4. முருகன் சிலையிலிருந்து வெளிப்படும் மூச்சலை
ஆனால், மெய்ஞானிகள் அதைத் தெளிவாகக் காட்டியுள்ளார்கள். அதைத்தான் நாம் இன்று பார்க்கும் முருகன் சிலைக்குள் பார்க்கலாம்.

அந்தச் சிலையின் மேல் நீரை விட்டவுடன்,
அந்த இருட்டறைக்குள் வைக்கப்படும் பொழுது ஏற்படும்
பூமியின் வெப்பத்தால்,
மலையின் வெப்பத்தை அது எடுக்கும் பொழுது,
ஒரு சொட்டு நீர் பட்டால்,
அதற்குள்ளிருந்து வரும் மூச்சலைகள்
நாம் எந்த ஏக்கத்துடன் செல்கின்றோமோ,
நாம் அதைச் சுவாசித்தவுடன்

நமக்குள் இருக்கக்கூடிய பல விஷத்தன்மைகளை மாய்க்கக் கூடிய சக்தியை அது பெறுகின்றது.