ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

June 24, 2013

சந்தர்ப்பம் நம் நல்ல குணத்தை எப்படி மாற்றுகின்றது? - தன்னை அறிதல்

1. நம் உமிழ்நீரைப் பற்றிய உண்மைகள்
நம் மனித வாழ்க்கையில், குழந்தையிலிருந்து பெரியவராக வளர்கின்ற வரையிலும், எந்தெந்த சந்தர்ப்பத்தில் யார் யாருடன் கலந்து அந்த சந்தர்ப்பத்தை நாம் பயன்படுத்திக் கொள்கின்றோமோ, அந்த மூச்சின் உணர்வலைகள், நம் உடலில் சேர்க்கப்படுகின்றன.

அதற்குத்தக்கவாறு நம் உடலில் அந்த அணுக்கள் வளர்ச்சி பெற்று, ஞானமும், செயல்படும் தன்மையும் வளர்ச்சி பெறுகின்றது. ஆனால், அதே சமயம், எடுத்துக் கொண்ட குணங்களுக்கு எதிர்மாறாக, சலிப்போ, சஞ்சலமோ, கோபமோ, பயமோ, அவசரமோ, ஆத்திரமோ, இதைப் போன்ற உணர்வுகளைச் சுவாசிக்க நேரும் பொழுது,
இந்த உணர்வுகளும் உமிழ் நீராகச் சுரக்கப்பட்டு,
உடல்களில் ஆற்றல் பெறுகின்றது.
அவ்வாறு அவை சேர்க்கப்படும் பொழுது,
உடலில் நோய்களாக வளர்கின்றது.

ஆக, எந்த வகையில் எந்த ரூபத்தில் அவர் எடுத்துக் கொண்ட உணர்வு எதுவோ, அதுதான் அவருடைய ஞானம்.

நாம் மகிழ்ச்சியாக இருக்கும் பொழுது, ஒருவர் தவறு செய்கின்றார் என்ற உணர்வை எடுத்துக் கொள்ளும் பொழுது, அந்தத் தவறான உணர்வுகள் நமக்குள் வேதனையை ஊட்டுகின்றது.

அப்படி வேதனையாகும் பொழுது, அது எதிர் நிலையான நிலைகள். நம் புலனறிவு இழுத்து, அதை நாம் சுவாசிக்கும் பொழுது
உயிரிலே பட்டு, அந்த உணர்வுகள்
நாம் எண்ணிய நல்ல குணங்களுடன் மோதி மறைகிறது.
ஆகவே, அந்த விஷத்தின் தன்மை நம் நல்ல குணத்தைச் சோர்வடையச் செய்கின்றது.
2. நாம் சுவாசிக்கும் உணர்வுகள் நம் உடல் முழுவதும் சுழல்கின்றது
நம் உடலுக்குள் பதிகின்ற அணுக்களின் வேட்கையில்
எந்த குணத்தின் தன்மை ஈர்க்கப்பட்டதோ,
நாம் புலனறிவால் பார்க்கப்படும் பொழுது,
அந்த குணத்தின் தன்மையை உடலுக்குள் வடித்து வைக்கின்றது.

பிறர் செய்யும் தவறை, அந்த குணத்துடன் நாம் கண்ணாலே பார்க்கும் பொழுது, உணர்வுகள் உந்தப்பட்டு, நாம் சுவாசிக்கும் அந்த உணர்வலைகள் நம் உடல் முழுவதும் சுற்றும்.

அப்பொழுது நாம் சுவாசிக்கும் பொழுது, அந்த அணுக்களிலே
காந்த அணு உணர்ச்சி கவரப்பட்டு
அது கவர்ந்த நிலைகள்தான் நாம் சுவாசித்து, நம் உயிரிலே பட்டு,
நம் காந்த அலைகளை இயங்கச் செய்து,
அந்த உணர்வின் ஆற்றலை நம் உடலுக்குள்
அதே உணர்ச்சியைத் தூண்டச் செய்கிறது.

அப்படித் தூண்டும் நிலைகள் உயிருக்குள் பட்டவுடனே, அந்த உணர்வின் நிலைகள் அமிலங்களாகச் சுரக்கின்றது. அப்பொழுது, வாய் மட்டுமல்ல, இது சுழன்று வரும் ஒவ்வொரு தசைகளிலும், அந்த உணர்வின் தன்மையை அது உமிழ்நீராக வடித்துக் கொள்ளும்.
3, நம் நல்ல குணங்கள் எப்படி மாறுபடுகின்றது?
அப்படி அந்த உணர்வின் தன்மையை நமக்குள் எடுத்தவுடனே, நம் உடலை உருவாக்கிய நல்ல அணுக்களுக்கு இது விஷமாகும் ஏனென்றால், மற்றவர் செய்யும் வேதனை உணர்வகளை அது கவர்ந்துள்ளது.

அப்பொழுது, நாம் நல்லதைச் செய்ய வேண்டும் என்ற எண்ணங்கள் கொண்டு செயல்படும் தன்மையில், அடுத்து நாம் நல்ல குணத்தை எண்ணினாலே, நமக்கு பலவீனமான நடுக்கம் வரும்.

இம்மாதிரி, நாம் எதிர்பார்க்காத கடினமான நிலைகளில், அசம்பாவிதமாக எதிர்பாராத விபத்துக்கள் கூட ஏற்படும்.

இந்த உணர்வைக் கூட்டிக் கொண்டால், அதே சமயம்,
நாம் எந்த குணத்தின் அடிப்படையில்
எதை ஆதாரமாகக் கொண்டு நாம் சுவாசித்து,
அந்த உணர்வின் அலைகளை நமக்குள் கலந்திருக்கின்றோமோ,
அந்த அணுவின் தன்மையை நம் உடலுக்குள்
இதயம் பாகம் சென்றவுடனே  
அது துடிப்பின் தன்மையை ஏற்படுத்திவிடுகின்றது.

பூமியில் எப்படி முதலில் காளான்களாகத் தோன்றி, பின் மாறுவிதமான செடி கொடிகளாகத் தோன்றுகின்றதோ, இதைப் போல நாம் எடுத்துக் கொண்ட சுவாசத்தின் தன்மையுடனே சென்றாலும்,
அந்த வேதனையான உணர்வுகள்
நம் நல்ல குணத்துடன் கலந்து, இரண்டும் சேர்ந்து,

இந்த அணுவின் மாற்றம் ஏற்படுகின்றது.
இதையெல்லாம் நாம் தெளிவாகத் தெரிந்து கொள்ள வேண்டும்.