ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

June 2, 2013

அகத்தியர் தனக்குள் ஒளிக்கற்றைகளை எப்படி உருவாக்கினார்?

அகஸ்தியர் மின்னலைப் பார்க்கப்படும்பொழுது, ஒன்றுடன் ஒன்று உராய்கின்றது. அகஸ்தியர் கண்டுணர்ந்த உணர்வுகள், அவருக்குள் ஒளிக்கற்றைகளாக மாறுகின்றது. இருண்ட நிலையில் இருந்து பொருள் தெரிகின்றது.

27 நட்சத்திரங்களிலிருந்து வெளிப்படும் நிலைகள் ஒன்றுக்கொன்று எதிர் நிலையானது. அவைகள் தூசிகளாக வரும்பொழுது, ஒன்றுடன் ஒன்று மோதிவிட்டால், மின்னல்களாக மாறுகின்றது. அவைகளுடைய ஒளிக்கற்றைகள் பலவற்றிலும் பரவுகின்றது. மற்ற பொருளுடன் சேர்த்து, ஒரு இயக்கச் சக்தியாக மாற்றுகின்றது.

எந்தப் பொருளிலும்,  27  நட்சத்திரங்களின் சத்து ஏதாவது ஒன்று இல்லையென்றால், அது வளராது.  27  நட்சத்திரங்களில் வந்த தூசிகள் தான் பல பல நிலைகள் கொண்டு, தூசிகளின் நிலைகள் கூட்டியும், குறைத்தும் வந்தால், (27  நட்சத்திரங்களின் கலர்கள் வேறு),
எதனதன் கலவை வருகின்றதோ அதற்குத்தக்க
உணர்வுகளும், மாற்றங்களும், குணங்களும் மாறுகின்றது.
கோள்களின் நிலைகளும் இவ்வாறே மாறுகின்றது.
இந்த இயற்கையின் நிலையை உணர்ந்தவர் அகஸ்தியர்.
ஆக, அணுவின் இயக்கத்தை அறிந்தவர் அகஸ்தியர்.

மின்னல் கதிர்கள் எவ்வளவு தூரம் எட்டுகின்றதோ, அவ்வளவு தூரம் அகஸ்தியரின் நினைவாற்றல் படர்கின்றது.

மின்னல் வரும் பொழுது, நம் பிரபஞ்சத்தைத் தாண்டிக் கூட இந்த ஒளிக்கற்றைகள் செல்கின்றது. ஒளிக்கற்றைகளாகச் செல்லும் உணர்வின் நிலைகளைக் கவரும் ஆற்றல் நம் பூமிக்கு வருகின்றது, பிரபஞ்சத்திற்கு வருகிறது என்பதை உணர்ந்தார் அகஸ்தியர்.

அவரில் விளைந்த உணர்வை,
இந்தப் பூமியில் பரவியிருப்பதை
நாம் நுகரப்படும் பொழுது அதையறிந்து,
அவர் கண்டுணர்ந்த உணர்வின் தன்மையை நாம் பெறமுடியும்.


இதன் உணர்வின் தன்மைகளை சொல்லாக வெளிப்படுத்தி உங்களுக்குள் பதிவாக்குகின்றோம். பதிவாக்கியதை மீண்டும் நீங்கள் நினைவு கொண்டால், அந்த உணர்வின் சத்தை நீங்கள் பெற்று, உங்களையறியாது வரும் நஞ்சினை வெல்ல முடியும், உணர்வை ஒளியாக மாற்ற முடியும். எமது அருளாசிகள்.