ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

June 26, 2013

மனிதன் - தெய்வமாக ஆகும் நிலை பெறச் செய்வதற்கே ஆலயம்

1. மக்களை ஒன்றுபட்டு வாழச் செய்யும் இடம்தான் கோவில்
மனிதனுக்குள், மனிதனை உருவாக்கிய நல்ல குணங்களைத்தான் கோவில்களாக உருவாக்கினார்கள் ஞானிகள்.

அந்த ஞானிகள் பாதையில் செயல்படுபவர்கள் யாரும் இல்லை.
தனக்குச் சொத்து வேண்டும்,
சுகம் வேண்டும் என்பதற்காக,
சாபமிடும் ஆலயங்களாக மாற்றிவிட்டார்கள்.

நாம் தெளிந்து வாழவும், நம்மை அறியாது இயக்கும் இருளில் இருந்து மீளவும், தனக்குள் இருக்கும் பகைமை உணர்வை மாற்றி, ஒன்றுபட்டு வாழச் செய்யும் இடம்தான், ஆலயம்.

ஆக, இந்த உண்மையின் தன்மையை மக்களுக்கு எடுத்துச் சொல்ல வேண்டும். இதைச் சொன்னால், இவர் கடவுளே இல்லை என்று சொல்கிறார் என்று சொல்வார்கள்.

னால், இவர்கள் காசைக் கொடுத்து, தேங்காய் பழத்தை உடைத்து, ஐயர் மந்திரம் சொல்லி கொண்டு வந்தபின், அந்த தெய்வம் கப்பாற்றும் என்ற நிலைகளில் தான் வருவார்கள்.

ர் இறந்தபின், எந்தெந்த மந்திரத்திற்கு எதை எதை அபிஷேகம், ஆராதனை செய்தார்களோ, அந்த உணர்வின் தன்மையில் மந்திரத்தை ஜெபிக்கும்போது, இவது ஆன்மாவை இன்னொருவர் கைவல்யம் ஆக்கும் நிலைக்குத் தான் வருகின்றது.

ண்மையின் உணர்வின் தன்மையை அறிந்து, நமக்குள் ந்த தெய்வீக உணர்வை எடுத்து, இந்த ஆலயம் வருவோர் அனைவரும் நலம் பெறவேண்டும் என்று எடுக்க வேண்டும்.

கோவிலின் உண்மையின் உணர்வை உணரும் நிலை மக்களுக்கு வர வேண்டும் என்பதற்குத்தான், அன்று கோவிலை மதித்து நடக்க வேண்டும் என்றனர் ஞானிகள்.
    
மனிதனுக்கு இந்த உடலே கோவிலாகின்றது, மனிதனான பின் தீமையை அகற்றும் உணர்வு பெற்ற நல்ல எண்ணங்கள் நமக்குள் இருக்கின்றது. ஆக அதுவே நமக்குள் தெய்வமாக இருக்கின்றது. அந்த தெய்வமான நிலையைக் காப்பதற்காகத்தான், உருவம் அமைத்தனர் ஞானிகள்.

ஆக, நல்ல குங்களை எண்ணி உயிரிலே சேர்த்து,
உணர்வின் நிலையை உடலிலே பெறச்செய்து,
நம்மை உருவாக்கிய நல்ல குங்களை
எப்படிக் காக்க வேண்டும் என்பதற்குத்தான்,
இந்த ஆலயம் என்பதை தெளிவாக உணர்துகின்றனர் ஞானிகள்.
2. மனிதன் - தெய்வமாக ஆகும் நிலை பெறச் செய்வதற்கே ஆலயம்
இன்றைக்கு ஆலயங்களை நாம் மதிக்கின்றோமா? கோவிலுக்கு போய் தேங்காய் பழத்தை உடைத்து, ஒவ்வொரு கோவிலிலும் கிரிவம் வந்து, அங்கே தேங்காய்களை உடைத்து, வாழைப் பழத்தை உறித்துச் சாப்பிட்டு, தோலை அங்கேயே போட்டு, செரட்டையும் போட்டு விட்டு, அபிஷேகம் செய்தேன், சாப்பிட்டேன் என்று வருகின்றார்கள்.

ஆலயத்தை நாம் மதிக்க வேண்டும். ஆலயப் பண்புகளை நாம் மதித்து நடத்தல் வேண்டும். ஏனென்றால்,
நம்மைத் திருந்தி வாழச் செய்வது
ந்தக் கோவில்.

நமக்குள் ஆசையின் தன்மைகள் அதிகமாக வளரும் போது, ஆசையை நிராசையாக மாற்ற வேண்டும். ஒவ்வொருரும் நலமாக இருக்க வேண்டும் என்ற இந்த ஆசையைத்தான் கூட்ட வேண்டும்.

நீங்கள் நலமாக இருக்க வேண்டும் என்ற உணர்வைச் சொல்ல வைக்கும் இடம்தான் கோவில். ங்கு வருவோர் அனைவரும்
இந்தத் தெய்வீகப்ண்பு பெறவேண்டும்,
தெய்வீக நிலையாக இருக்க வேண்டும்,
அவர்கள் குடும்பமெல்லாம் இந்த நிலை பெறவேண்டும்,
என் குடும்பமெல்லாம் நன்றாக இருக்க வேண்டும்,
அவர்கள் தொழில் வளம் பெறவேண்டும் என்று
எல்லோரையும் எண்ண வைக்கும் தெய்வீகப்ண்புகளை வளர்ப்பது ஆலம்.

அதை நாம் யாராவது மதிக்கின்றோமோ? இல்லை. இதை யாம் இப்படிச் சொன்னால், உடனே இவர் சாமியே இல்லை என்று சொல்கிறார் என்பார்கள். இங்கு நாங்கள் இப்படித்தான் வங்குகிறோம் என்பார்கள்.
3. அனைவரையும் காக்கும் உணர்ச்சிகளை ஊட்ட வேண்டும்
லயப்ண்களை நாம் மதித்து நடத்தல் வேண்டும். ஆகவே, நீங்கள் ஆலயத்திற்குச் சென்றால் எப்படி வணங்க வேண்டும்? ஆலயத்தை எப்படிக் காக்க வேண்டும்? என்ற உணர்வினை உபதேசிக்கிறோம்.

ஒவ்வொருவரையும் காக்கும் உணர்ச்சிகளை ஊட்டி,
உணர்வின் தன்மை நிறைவாக்கி,
அவர்கள் பகைமை உணர்வுகளை மக்கச் செய்து,
அன்பு கொண்டு அரவணைக்கும் நிலைகளை வளர்க்க வேண்டும்.

உங்களுக்குள் விளைந்த இந்த உணர்வின் தன்மைகளை, நீங்கள் எல்லோரும் ஆலயங்களில் சொல்லப்படும் போது, உங்கள் உடலில் விளைந்து, அதன் வழி மற்றவர்களையும் வாழச் செய்ய வண்டும்.

ஏனென்றால், இன்றைய உலகில் எங்கு பார்த்தாலும் தீவிரவாதம் என்ற நிலைகள் அதிகமாக இருக்கின்றது. தீவிரவாதம் செய்வோரும் ஆலயத்தில் வணங்குகின்றனர்.

நான் செய்வது எனக்கு நியாயமாக இருக்கிறது என்றும், இவன் அநியாய கொள்ளைக்காரனாக இருக்கிறான், ஆகையால், நான் அவனைக் கொலை செய்யவேண்டும் என்று தெய்வத்திடம் வேண்டிவிட்டு, அவனைக் கொலை செய்கின்றார்கள்.

ஆகவே,துதான் கலி என்ற நிலைகளில் மற்றதை ஒன்றாக்கி, தனக்குள் தீமையின் தன்மையை உருவாக்கி, விஷதின் தன்மை பெருகும் போது. இதே உணர்வின் தன்மை. ஒருவரை ஒருவர் கொல்லும் போது,. விஞ்ஞான அறிவால் இந்த மனிதனைப் போல் உருவாக்குவதும், இந்த மனிதனின் தன்மையை மாற்றியமைப்பதும் கலி.

கலியின் உணர்வு அதிகமாகும் போது, கடைசியில் மனிதரின் உடலில் விஷத்தின் தன்மையாகி, பரிணாம வளர்ச்சியில் மீண்டும் தேய் பிறைக்குத்தான் செல்கின்றனர்.
4. ஒளியின் சரீரம் பெறுவதுதான் “கல்கி”
ஆனால், இந்தக் கலியில் இருந்து விடுபடும் நாம் இந்த துருவ நட்சத்திரத்தின் உணர்வைப் பெருக்கினோம் என்றால்,. இதிலிருந்து விடுபட்டு கல்கி என்ற நிலையை அடைகின்றோம்.

உணர்வின் தன்மை ஒளியாக மாற்ற வேண்டும்.
கல்கி என்பது, இருளைப் போக்கும்,
உணர்வை அறிவாக இயக்கும்,
ஒளியின் சரீரமாக நிலைத்து நிற்கும்.துதான் கல்கி.

ஒரு உயிரணு தோன்றினாலே கல்கி, அந்த உணர்வின் தன்மை அணுக்கள் ஒன்றாக எடுத்து, ஒன்றின் வலிமை பெருகும் போது, கல்கி முழுமை அடைகின்றது. அந்தக் கல்கி தான் துருவ நட்சத்திரம். அந்த வழியில் சென்றவர்கள் தான் மகரிஷிகள்.

அவர்கள் ஆறாவது அறிவை, ஏழாவது நிலையாக்கி, சப்தரிஷி மண்டலம் என்ற நிலையில் அடைந்ததை, கடவுளின் அவதாரத்தில் கடைசி நிலையைக் கல்கி என்று தெளிவாகக் கூறியுள்ளார்கள்.

இன்று கல்கி என்று வேஷத்தைப் போட்டு, மந்திரவாதியைக் கொண்டு. கல்கி இன்று பூமிக்கு இறங்கி வந்திருக்கிறான் என்று, மந்திர ஒலி கொண்டு பேயாட்டம் ஆடச் செய்யும் நிலைதான் கல்கி என்கிறார்கள்.

ஆகவே, அவரவர் நிலைகளில் அவர்களை ஆட்டிப் படைக்கும் இச்சைகளில் தான் செயல்படுகின்றனர். மனிதனுடைய ஒவ்வொரு உயிரும் கடவுள் என்ற நிலையை மறக்கும்படி செய்கின்றார்கள்..

நம் உயிரே கடவுள். எண்ணிய நிலையில் நம்மை இயக்குகின்றான், நாம் நுகர்ந்த உணர்வை உருவாக்குகின்றான் ஈசன். என்ற உணர்வின் தன்மையில்,
நம் உடலே சிவமாகின்றது.
இந்த உடலான சிவத்திற்குள் பல சக்திகள் இருக்கிறது.
இன்று மனிதான பின் உணரும் பக்குவம் பெற்றது என்று,
தீமையென்ற நிலைகளை விரட்டி,.
நல்ல தெய்வீகப் பண்புகளை நம் உடலில் உருவாக்க வேண்டும்.

இதை உணர்த்துவதற்காகத்ன் ராமாயாணம், மகாபாரதம், கந்த புராணம், சிவ புராணம் என்று அனைத்தையும் கொடுத்துள்ளார்கள் ஞானிகள். இதை நாம் பேணிக் காக்க வேண்டுமா இல்லையா? அதற்குத் தான் இப்போது உபதேசித்தது.