ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

June 19, 2013

ஆலயங்களில், நாம் சாமி சிலையைப் பார்க்கும் பொழுது என்ன நடக்கின்றது....? - மிகவும் முக்கியமானது...!

1. பெரும்பகுதியானவர்கள் தெய்வங்களை எப்படி வணங்கிக் கொண்டிருக்கின்றார்கள்?
இன்று நாம் புறநிலைகளில் பார்க்கும் போதெல்லாம், ஆன்மீக நெறிகளில் எடுத்துக்கொண்டாலும், ஐயப்ப பக்தர்கள் ஒருவிதம் முருக பக்தர்கள் ஒருவிதம். இதுவெல்லாம், அவர்கள் வணங்கும் தெய்வம் அவர்களைக் காப்பாற்றும் என்றுதான் எண்ணுகின்றார்கள்.

அப்புறம் குருவாயூரப்பன். இப்பொழுது காணாததற்கு மூகாம்பிகை வேறு. எங்கே கூட்டங்கள் சென்று, எதன் நிலை தெரிகிறதோ அங்கே போனால், அந்தத் தெய்வம் செய்யும் என்ற நிலைகளில் தான் நமக்குள் அதிகமாக புற உலகிலிருந்து காண்கின்றோம்.

அதிலே என்னென்ன தெய்வங்களை வணங்குகின்றோமோ, அந்த தெய்வம் நமக்கு நன்மை செய்யும் என்ற நம்பிக்கையில்தான் இயங்குகிறார்கள். ஐயப்பனை வணங்குபவர்களுக்கும், அவர் நமக்கு சொத்தைக் கொடுப்பார் சுகம் கொடுப்பார். தொழிலைக் கொடுப்பார் என்ற ஆசைதான்.

அங்கே வெங்கடாசலபதியை வணங்கினோம் என்றால், அவருக்கு இங்கிருந்தே ஐந்து ரூபாய் காணிக்கை போட்டுவிட்டால் போதும். அதேபோல, ஐயப்பன் கோவில் போகிறவர் மூலம் ஐயப்பனுக்குக் காணிக்கை போட்டாகிவிட்டது. முருகன் கோவிலுக்குப் போவோர் மூலம், முருகன் கோயிலுக்கும் காணிக்கை கொடுத்தாகிவிட்டது என்று, போக முடியாதவர்கள் இங்கிருந்தே காணிக்கை செலுத்துகிறார்கள். அவர்களிடம் சொல்லி பிரசாதம் வாங்கி வரச்சொல்லுவது.

எந்தச் சாமியைக் கும்பிடப் போனாலும், எந்தச் சாமியைக் கும்பிட்டாலும் நாம் இன்றைய வாழ்க்கையில் பெருமாளைக் கும்பிட்டால் நிறைய சொத்து தருவார். சிவனைக் கும்பிட்டால் நம்மை சைபர் ஆக்குவான். இப்படி இந்த எண்ணங்களில் தான் செயல்படுகிறார்கள்.

சிவன் கோவிலுக்கு அதிகம் போகிறார்கள் என்றால், சிவ சிவா என்று சொல்லிக் கொண்டே இருப்பது, உங்களை சுத்தமாகவே ஒன்றும் இல்லாதவனாக ஆக்கிவிடுவான். சுத்தமாகச் சாம்பலாக்கி விடுவான் என்று சொல்கின்றார்கள்.

இவர்கள் எந்தெந்த தெய்வங்களை வணங்குகிறார்களோ, அந்த தெய்வ நம்பிக்கைதான் அதிகமாக இருக்கிறது.

இதேமாதிரி குல தெய்வங்களை எடுத்துக்கொண்டால், அந்தந்த குலதெய்வங்களுக்கு ஆடோ, கோழியோ, மாடோ, பன்றியோ கொடுக்கின்றார்கள்.

ஏனென்றால் அந்தக் குலதெய்வத்தைக் காப்பாற்றும் சாமிக்காக, நாம் இப்படி உயிர் பலிகளைக் கொடுத்து அந்தத் தெய்வத்தின் அருளைப் பெற வேண்டும் என்று சொல்லி, இப்படித்தான் பெரும் பகுதியானவர்கள் செய்கிறார்கள்.

இன்று இந்து மதம் என்று சொல்லப்படும்போது, இதில் இத்தனை விதமான நிலைகளும் இருக்கிறது.  இதில், கோவிலில் போய் அர்ச்சனை செய்தால், கஷ்டங்களையெல்லாம் சொல்லி டிக்கட் வாங்கி அர்ச்சனை செய்தார் என்றால் சாமி நமக்குச் செய்கிறது.

எந்தெந்த தெய்வங்களுக்கு, எதை எதைச் செய்ய வேண்டுமோ அதையெல்லாம் அர்ச்சனை செய்கிறார்கள். அதிகமாகக் கடையில் சம்பாத்தியம் வேண்டும் என்றால், யாகங்களை வளர்த்துச் சில நிலைகள் செய்கிறார்கள்.

அப்படி யாகங்கள் வளர்த்தாகிவிட்டது என்றால், ஒரு பத்து நூறு பேருக்குச் சோறு போட வேண்டும் என்று சொல்லி, இந்த மாதிரி
தர்மங்கள் செய்தோம் என்றால்,
சாமி செய்யும் என்றுதான்,
இப்பொழுது நாம் எல்லாரும் அந்த நம்பிக்கையில் தான் வளர்ந்து கொண்டு இருக்கின்றோம்.

அதிலே எல்லோரும் எல்லா தெய்வங்களையும் வணங்கினாலும் கூட கடைசியில் தீண்டப்படாதவர்கள் என்று ஒதுக்கப்பட்டவர் கோவிலுக்கு வந்தால், சாமி கும்பிட, ஒரு காலத்தில் ஒதுக்கி வைத்திருந்தார்கள்.

இப்பொழுது நாம் எல்லோரும் சமமாகப் போகிறோம். வருகிறோம். எல்லாம் இருக்கிறோம். அரச காலங்களில் பிரித்தாண்ட நிலைகளில், இது இவ்வாறு பிரிக்கப்பட்டு விட்டது. இனங்களாகப் பிரிக்கப்பட்டு விட்டது.
2. நம் உயிர், கண் இவைகளின் இயக்கத்தைப் பற்றி ஞானிகள் சொன்ன நிலைகள்
நம் உடலுக்குள் இருக்கும் இந்த உயிரின் இயக்கமும்நம் கண் என்ன என்ன செய்கிறது என்ற நிலையையும் பற்றி  ஞானிகள் கொடுத்த நிலைகளைப் பார்ப்போம்  

நம் கண்ணால் கவரப்பட்டதை நம் உயிர் என்ன செய்கிறது என்றால், அது '' என்று ஜீவ அணுவாக மாற்றி, நம் உடலை இயக்குகிறது.
நமது கண்களைக் கண்ணணாக வைத்து,
கண்களின் பதிவாக்கும் சக்திக்கு
ருக்மணி என்று பெயர் வைக்கிறார்கள். 
ஈர்க்கும் சக்திக்கு, அது ஈர்த்துத் தனக்குள் சொல்கிறது.
அதைச் சத்தியபாமா என்று மெய்ஞானிகள் பெயர் வைக்கிறார்கள்.

கண்ணால் பார்க்கப்பட்டு,
உயிரான ஈசனால் உருவாக்கப்பட்டு,
நாம் எந்தெந்த குணங்களைச் சேர்க்கின்றோமோ
அதுவெல்லாம் நம் உடலில் வினை ஆகிறது.

வினை என்பது ஒரு வித்து. ஒரு செடி, கொடி, மரத்தில் விளைவதை வித்து என்கிறோம். உயிரினங்களில் விளையும் எண்ணங்கள் அனைத்துமே வினை, அதாவது வித்துக்கு வினை என்று பெயர் வைக்கிறார்கள்.
3. ஆடு எப்படி நரி/புலியாக மாறுகின்றது?
ஆடு நரியைப் பார்க்கிறது. நரி இதைக் கொன்று சாப்பிட எண்ணுகிறது. அப்படி நரி அந்த எண்ணத்தை எண்ணும்பொழுது, நரியின் வலு ஆட்டின் உடலில் வலுப்பெறுகிறது.

அந்த வித்து உருவாகும் பொழுது, ஆடு என்ன செய்கிறது? நரியையே எண்ணிக் கொண்டு உள்ளது. நரி அந்த ஆட்டைச் சாப்பிடும் உணர்வு முழுவதும் இதற்குள் வந்து, பயத்தின் நிலைகளில் நரியின் உணர்வைத் தனக்குள் அதிகமாகச் சேர்த்து விடுகிறது.

அந்த வினைப்படி இதில் அதிகமாகப் போய்விட்டது என்றால், ஆட்டின் உயிர்  நரி உடலில் புகுந்து விடுகிறது. அதே சமயத்தில், ஒரு புலி பார்க்கிறது. அது சாப்பிட எண்ண ஆரம்பித்து விடுகிறது. என்றால், புலியின் உணர்வு இந்த உடலில் பட்டதும், புலியின் உணர்வு வினை ஆகிறது.

வினைக்கு நாயகனாக, அந்தப் புலியின் செயல் எல்லாம் அடிக்கடி காண்பிக்க ஆரம்பிக்கிறது.
அந்தப் புலியையே அந்த ஆடு அதிகமாக எண்ணியது என்றால்,
புலியின் உணர்வு ஆட்டின் உடலில் அதிகமாகும் பொழுது
வினைக்கு நாயகனாக, அந்த உணர்வுகள் இயக்கப் படுகின்றது.

இந்த ஆடு இறந்தபின், அந்த புலி அதைத் தின்றாலும் சரி, தின்னா விட்டாலும் சரி, புலியின் உணர்வு அதிகமாகிவிட்டது என்றால், அந்தப்  புலியின் உடலுக்குள் போகிறது.

ஆடு புலியை நினைக்கும் பொழுது, புலியின் உணர்வு அதிகமாகும் பொழுது, அந்த வினைக்கு நாயகனாக இயக்கி, இந்த ஆடு புலியாகப் பிறக்கின்றது.

ஆடு நரியைப் பார்த்தது என்றால், அதே நிலை ஆகின்றது. ஒரு நாய் ஆட்டைக் கடித்துச் சாப்பிட்டது என்றால், நாயின் நினைவு அதிகமாகும் பொழுது ஆடு நாயாகப் பிறக்கின்றது.
4. தியானம் என்றால் என்ன?
அதற்குப் பெயர் என்ன? என்று சொன்னால்,  சதா நரியிடமிருந்து தப்பிக்க எண்ணும் பொழுது, அதுவும் ஒரு தியானம்தான். அது அதிகமாகிப் போய்விட்டது என்றால், அந்தத் தியானத்தின்படி ஆடு நரியாக மாறுகின்றது. அதுதான் மூஷிக வாகனா..

நரியிடமிருந்து ஆடு தப்பிக்க எண்ணியது. சுவாசிக்கிறது,  அந்த உணர்வு தப்பிக்க வேண்டும் என்று வரும்பொழுது தப்பி ஓடுகிறது. அதுதான் மூஷிக வாகனா என்று, அதனிடமிருந்து தப்பிக்க ஒடுகிறது.

அந்த நரியின் உணர்வுகள் ஆட்டின் உடலுக்குள் அதிகமாகச் சேர்க்கப்படும் பொழுது கணங்களுக்கு அதிபதி ஆகிறது. அதிபதி ஆனபின், என்ன செய்கிறது? இந்த உடலை விட்டுப் போனவுடன்
இந்த நரியின் உணர்வுகள்
இந்த ஆட்டின் உடலில் அதிகமானபின்
அதுதான் தியானம் என்பது.

தெரிந்து தியானிக்கவில்லை. அந்த அளவுக்கு அது வெளியில் வந்தவுடன் நரியின் உடலுக்குள் சென்று ஆடு நரியாகப் பிறக்கிறது. இதே மாதிரிதான் நாயின் நிலைகளை எடுத்து, அதன் வலுவாகிவிட்டது என்றால், அது நாயாகப் பிறக்கிறது.

ஆடு அதன் வாழ்க்கையில், எதன் எண்ணத்தை வலிமையாக எண்ணியதோ அதன்வழி அது அதில் போய்ச் சேர்ந்து, இப்படிப் பரிணாம வளர்ச்சி ஆகிறது. 

இதேமாதிரி ஆடு பெரியதாக இருக்கலாம்.அதற்கு நோய் வந்து, அது ஒரு பக்கத்தில் கொஞ்சம் உயிரோடு படுத்திருக்கிறது. இதை ஒரு கழுகு வந்து பார்க்கிறது.

ஆட்டினால் எழ முடியவில்லை. கழுகு இரண்டு கொத்து கொத்துகிறது. அதையே எண்ணி, எண்ணிப் பார்த்தது என்றால் ஆட்டின் உயிர் கழுகின் உடலுக்குள் செல்கிறது. இன்று ஆடாக உள்ளது நாளை பருந்தாகப் பிறக்கிறது.

அது அதையே எண்ணித் தியானிக்கும் போது, அதன் உணர்வு இதற்குள் ரூபமாகிறது. அந்த ரூபத்தின் தன்மை கொண்டு அதன் உடலுக்குள் செல்கிறது. ஆடு எதை எண்ணிச் சுவாசிக்கின்றதோ, அதன் எண்ணங்களில்
எதை எண்ணித் தப்பிக்க எண்ணுகின்றதோ,
அதன் உடலில் போய்ச் சேருகின்றது.
ஆடு நரியாகப் பிறக்கின்றது. அதன் எண்ணங்கள் எதுவோ,
அதுவும் தியானம்தான்.
5. ஆலயங்களில், நாம் சாமி சிலையைப் பார்க்கும் பொழுது என்ன நடக்கின்றது?
நாம் கோயிலில் போய், வெங்கடாசலபதியிடம் இந்தக் காணிக்கை போடுகிறேன் என்கிற போது, இந்தக் கண் அதைப் படம் எடுக்கிறது. அது சிலைதான். அந்தச் சிலையிலிருந்து வரக்கூடிய அலைகளும் நாம் எண்ணும் எண்ணங்களும் ஒன்றாகச் சேர்கிறது.

அதில் என்ன ரூபங்கள் போட்டு, அதை அலங்கரித்து வைத்திருக்கிறார்களோ, நம் கண் அப்படியே பதிவாக்குகிறது.

நாம் அதன் மேல் ஆசைப்பட்டு, இந்த வெங்கடாசலபதி நமக்குச் செய்வான். சொத்து கொடுப்பான். சுகம் கொடுப்பான்- என் நோயைத் தீர்ப்பான் என்று அவ்வாறு ஒவ்வொன்றுக்கும் காணிக்கை முடிந்து போட்டுவிடுகிறோம். இந்த எண்ணத்தை வளர்க்கிறோம்.

அந்தப் படத்தை எடுக்கும் பொழுது இந்த சூரியனின் காந்தப்புலன்கள் அதை அலைகளாக எடுக்கிறது. நாம் எந்த நிலைக்கு வந்தோமோ அதை அப்படியே பதிவாக்குகிறது.

சினிமாப் படங்களில் என்ன செய்கிறார்கள்? தனித்தனியாக எடுத்து, பிறகு ஓடும் பொழுது படமாகத் தெரிகிறது. நடப்பதுபோல் தெரிகிறது.

இதேபோல், நமக்குள் அந்தச் சிலையை அதிகமாக எண்ணி,
பார்த்துப் பதிவு செய்திருக்கின்றோம்.
நாம் அந்த நிலையை எடுத்திருக்கிறோம்.
அப்புறம் அதில் மந்திரங்களைச் சொல்லி, இன்ன இன்ன மந்திரங்கள் சொன்னால், அவன் இரக்கப்பட்டு ஓடிவந்து இதையெல்லாம் செய்வான் என்று நம்மிடம் சொல்வார்கள். அதைப் பதிவாக்கிவிடுகிறோம்.

இதைப் பதிவாக்கியபின், இன்ன இன்ன கஷ்டத்திற்கு இதை எல்லாம் செய்தால், உனக்கு நன்றாக இருக்கும். அவன் சுகத்தைக் கொடுப்பான் என்பார்கள்.
6. கடவுள் பக்தியாக வாழும் பொழுது, நம் செல்வத்தைத் திருடன் கொள்ளையடித்தால் என்ன ஆகும்?
இந்த உடலில் இருப்பது வரை, நீங்கள் என்னதான் செய்தாலும் சொத்து சுகம் வந்தாலும், அது மறைந்துவிடும். எல்லா சுகமும் ஆண்டவன் கொடுப்பான் என்றால், இடையில் ஒருவன் கொள்ளை அடித்துச் சென்றுவிட்டான் என்றால், என்னாகும்?

என் சொத்தெல்லாம் போய்விட்டது,. நான் என்ன செய்வேன்?” என்று வேதனை எடுத்துவிட்டால் இது அதிகமாகிவிடுகின்றது. அப்படி வேதனை அதிகமாகி விட்டால்,
அந்தக் கடவுள் கைவிட்டு,
இந்தக் கடவுள் வந்து விடுகிறார்.

நாம் வேதனை உணர்வு எடுத்துவிட்டோம் என்றால்- என்ன நினைப்போம்? “எப்படி எல்லாம் சம்பாதித்தேன், இப்படிக் கொள்ளை அடித்து விட்டானே என்று நான் நினைக்கிறேன்.

வெங்கடாசலபதியிடம் செல்கிறேன். இப்படிக் கொள்ளை அடித்துச் சென்றுவிட்டானே என்று,. இதே நிலையில் எண்ணி எண்ணி, எனக்கு நோயாகின்றது.  நான் இறந்துவிடுகிறேன் என்று வைத்துக் கொள்ளுங்கள்.

இது அலைகளாகப் படர்கிறது. இந்த  மனித ரூபத்திலிருந்து அழிந்து, மனித உடலில் சேர்ந்தபின், அந்த எண்ணமும் ரூபமும் சேர்ந்து, இப்படி வந்து விடுகிறது.
7. வேதனைப்பட்டு இறந்தபின், திருடன் உடலுக்குள் ஆன்மா போகும்
திருடியவன் யார் என்று தெரிந்தான் என்றால், அவன் ரூபத்தைப் பதிவாக்கி விடுகிறோம்.  “திருடிச் சென்று விட்டானே என்று எண்ணும் பொழுது,  எப்படி ஆடு,
புலியையும், நரியையும் எண்ணுகின்றதோ,
அவன் திருடிப்போய் விட்டான் என்றால்,
ஆன்மா திருடனின் உடலுக்குள் போகிறது.

அவன் என்ன வேதனைப்பட்டானோ அந்த வேதனை பதிவாகி விடுகிறது.வெங்கடாசலபதியே.., என்னை இப்படிச் செய்து விட்டானே என்று அந்தத் திருடனை எண்ணி இணைத்து விட்டால் போதும்
இது இரண்டும் அலைகளாக மாறும்.
எல்லாம் வெளியில் வரும்,
எல்லாம் நமக்குள் பதிவாகிவிடும்.
என்ன என்ன கலர் போட்டீர்களோ அதெல்லாம் வரும்.
எந்த எண்ணங்களில் எண்ணுகிறீர்களோ, அந்தக் கலர் ஓட்டம் ஓடும்.
சர்குலேசன் ஆகிக்கொண்டே இருக்கும்.

இந்த மாதிரி ரூபம் ஆகிவிட்டது என்றால், அந்தத் திருடனைக் கண்ணால் பார்த்து விட்டோம் என்றால், அவன் நினைவே அதிகமாக வரும். அவன் நினைவு வரப்போகும் போது, அவன் உடலுக்குள் தான் அந்த ஆன்மா போகும்.


அவனால் என்ன என்ன வேதனை ஆனதோ, அவன் திருடி வந்தால் அதை அவன் எண்ணுகிறான். அவன் திருடிச் சம்பாதித்தாலும் அவன் உடலுக்குள் போகும்.


இவன் பட்ட வேதனை எல்லாம் நோயாக, நரக வேதனையாகவே உருவாக்கும். திருடியவன் என்றும் உருப்பட்டதே இல்லை. இந்த ஆன்மா உள்ளே போய்விடும். அந்த வேதனையை,  அந்த உடலிலே ஊட்டும். மீண்டும் என்ன செய்யும்? அவனைக் கொல்லும்.
8. திருடனுக்கு, வெங்கடாசலபதி காட்சி கொடுப்பார்!
நான் வெங்கடாசலபதியைக் கும்பிடுகிறேன் என்றால், அதே ரூபம் வரும். அவன் திருடனாக இருப்பான். அதே சமயத்தில் நான் வெங்கடாசலபதியை பக்தியில் எண்ணி இருக்கிறேன்.

ஆனால் அவன் எண்ணவில்லை. இருந்தாலும், அந்த வெங்கடாசலபதியை எண்ணி, அந்த உணர்வின் அலைகள் வருகிறது. பார்த்தவுடன்,
இந்த வெங்கடசலபதியே வந்து காட்சி கொடுப்பார்.
யாருக்கு? -- “திருடனுக்கு”.

திருடனுக்குக் கூட வெங்கடசலபதி காட்சி கொடுக்கிறார். எப்படிக் கொடுக்கிறார்?  என் உடலில் வெங்கடாசலபதியைப் பார்த்த பட உணர்வு விளைகின்றது.. இந்த உணர்வு விளைந்த உடன் என்ன செய்கிறது?


பக்தி கொண்ட ஆன்மா - எப்படி ஆடு நரியைப் பார்க்கும்போது நரியின் உணர்வின் தன்மை பதிவானதோ அதேபோல் என் ஆசைக்கு நான் வளர்த்துக் கொள்கிறேன்.


அந்த வெங்கடாசலபதியைப் பதிவு செய்து கொள்கிறேன். அற்புதமாக இருக்கிறேன். இருந்தாலும், என்னிடம் உள்ளதைத் திருடிப்போய் விடுகிறான். நான் அவனைப் பார்த்துவிட்டேன் என்றால்,
இப்படித் திருடிவிட்டுப் போய்விட்டானே,  
வெங்கடாசலபதி..,”
என்று எண்ணும்பொழுது
இரண்டு உணர்வும் இணைகின்றது.

இரவில் பார்த்தால் கனவு வரும். திருடனுக்கு, வெங்கடசாலபதியும் தெரிவார்.  அந்தத் திருடனின் உணர்வை எண்ணிப் போகிறோம் அல்லவா! இந்த ஆன்மா அவனிடம் போனால், வெங்கடாசலபதி அவனுக்கு காட்சி கொடுப்பார்.

அவன் திருடினாலும், நான் வெங்கடாசலபதி மேல் பக்தியாக இருக்கிறேன். அதிலிருந்து,
அந்தத் திருடன் பக்தியாக வருவான்.
இந்த ஆன்மா திருடனுடைய உடலுக்குள் போனபின்,
அவன்  வெங்கடாசலபதி கோவிலுக்குப் போவான்.

அவன் (அந்த ஆன்மா) எங்கெல்லாம் சென்றதோ, அங்கே எல்லாம் திருடனும் செல்வான். இழுத்துக்கொண்டு போகும், எது? இந்த ஆன்மா அங்கு இழுத்துக்கொண்டு போகும். இருந்தாலும், நேற்றுவரை திருடினான். இன்று கோவிலுக்கெல்லாம் போவான். இந்த ஆவி அங்கெல்லாம் இழுத்துக்கொண்டு போகும்.

இந்த உடலுக்குள் இருந்து,  நாம் வளர்க்கும் கடவுள் இதுதான். நன்றாகத் தெளிவாகத் தெரிந்து கொள்ளுங்கள்.

இதே மாதிரி, நாம் பக்தி கொண்டு முருகனையோ, லட்சுமியையோ மற்றும் யாரை எண்ணினாலும் இதனுடன் இணைந்தே வரும். அப்புறம் அந்த ஆன்மா அந்த திருடிச் சென்றவன் மேலேயே வரும்.

அந்தத் திருடன் உடலிலே போனவுடன், அவனைப் பக்திமானாக ஆக்கிவிடும். அவன் ஏற்கனவே திருடனா இருந்தான்.
பார், கோவிலுக்குப் போகிறான்.
கோவிலுக்கே போகாதவன், கோவிலுக்குப் போகிறான்.
இந்தக் கோவிலில் கும்பிடுகிறான்,
அந்தக் கோவிலில் கும்பிடுகிறான்.
அதெல்லாம் பண்ணுகிறான் என்பார்கள்.

அந்த வெங்கடாஜலபதியிடம் போவதற்கும், பக்திகொண்டு நாமங்களைப் போடுவதற்கும் இவனை அறியாமலேயே போடவைக்கும். நிறையப் பேர் பார்க்கலாம்.

இந்த மாதிரிக் காட்சிகளில்,  
அந்த ஆவி அங்கு சென்றவுடன், இதெல்லாம் செய்வான்.
திருட்டுத்தனமும் செய்வான்
ஆக, இந்த உடலின் தன்மையை நோயாக்கிவிடும்.
9. கடைசியில் பாம்பாகத் தான் உடலை மாற்றிவிடும் உயிர்
பின், கடைசியில் அவன் உணர்வான். நான் திருட்டுத்தனம் பண்ணினேன். எனக்கு ஆண்டவன் நோயைக் கொடுத்து விட்டான். உடலுக்குள் நோய் வந்தாலும்,  இவன் புத்தி இந்த உடலை விட்டு இந்த ஆன்மா வெளியே வந்த பிற்பாடு, மீண்டும் இந்த நோயைத் தான் உருவாக்கும்.

வெங்கடாஜலபதி வந்து,
இவரைக் காப்பாற்றுவதற்குப் பதில்,
திருடனின் உடலுக்குள் போய் இந்த வேதனையை உருவாக்கி,
உடலுக்குள் இந்த விஷத்தைச் சாப்பிட்டு,
அந்த விஷத்தை வளரச் செய்து
உயிர் வெளியிலே போகும்.

உயிர் இந்த உடலை விட்டுச் செல்லும்போது, பாம்பு வகைகளில் ஆயிரத்தெட்டு வகையான பாம்பு வகைகள் உண்டு. அந்த விஷம் எந்த அளவுக்கு இருக்கிறதோ, நேராக வந்தால் மனித நினைவே வராது. பாம்பின் உடலாக மாற்றிவிடும் உயிர்.
10. இறக்கும் பொழுது யாரை அதிகமாக நினைக்கின்றோமோ, அங்கே தான் உயிர் அழைத்துச் செல்லும்
நீங்கள் பாலில் நல்ல பாதாம் கீரைப் போட்டு, கொஞ்சம் விஷத்தையும் போட்டுச் சாப்பிட்டால் எப்படி இருக்கும்? அதைச் சாப்பிட பிறகு, லட்டைச் சாப்பிடுங்கள். நல்ல துணியைப் போடுங்கள் என்றால், நீங்கள் போடுவீர்களா?”

இதுதான் உங்கள் பேரன் பிள்ளை, பேத்தி பிள்ளை,
உங்கள் அண்ணன், உங்கள் தம்பி என்றால் நீங்கள் கேட்பீர்களா
ஹு..ம்...ம்...ம்.. என்றுதான் இழுத்துக் கொண்டு கிடக்கும்.

பேரன் என்று சென்னாலோ, இதோ பாருங்கள் உங்கள் பேரன் வந்திருக்கிறான். உங்கள் பேத்தி வந்திருக்கிறாள், உங்கள் மகன் வந்திருக்கிறான், நீங்கள் சம்பாதித்துக் கொடுத்தவன் வந்திருக்கிறான்-

அவன் வந்து உங்களைக் காப்பாற்றுவானா? அது கூட வராது. அதற்குப்பின் சிறிது நேரத்தில் எல்லாம் அடங்கிவிடும்.  கண்ணைத் திருப்பிப் பார்க்க வேண்டியதுதான். காதைத் திருகிப் பார்க்க வேண்டியதுதான்.

அந்த மனிதரின் உணர்வுகள் அனைத்தும், கடைசி நிமிடத்தில் எல்லாம் போகும். இந்த விஷத்தின் தன்மை வெளியில் வந்தபின், அந்த உணர்வு பூராவும் விஷமாக மாறிவிடும்.

முதலில் எப்படி, ஆட்டின் உடலில்
புலியின் உணர்வெல்லாம் சேர்ந்ததோ
அந்தப் புலிக்குத் தக்கவாறு கொண்டு போகிறது

பரிணாம வளர்சியில்,  நாம் வேதனைப்பட்டு இந்த உணர்வின் தன்மை வளர்த்து, ந்த உடலுக்குள் போனதோ, யாரை நினைக்கின்றோமோ, அந்த உடலுக்குள் போகிறது. இதையெல்லாம் நாம் தெரிந்து கொள்ள வேண்டியது அவசியம்.