1. எதையுமே
சிருஷ்டிக்கும் தன்மை மனிதனுக்கு உண்டு
நாம் ஒவ்வொரு சரீரத்திலும் நல்ல உணர்வுகளைச் சுவாசித்து,
தன்னை தற்காத்துக் கொள்வதற்காக எடுத்துக் கொண்ட அந்த உணர்வுகளே, நம்மை மனிதனாக உருவாக்கியது.
அதாவது, சிந்தித்துச் செயல்படும் ஆற்றலும், சிந்தித்துச்
செயல்படும் இந்த உணர்வின் எண்ணமும் அதற்குத்தக்க அங்கங்களும் அமைந்து,
அந்த உணர்வின் ஆற்றலால்,
எதையுமே
சிருஷ்டிக்கும் தன்மை கொண்ட
மனித உடலை
நாம் பெற்றுள்ளோம்
நாம் மனிதனானபின்,
பல எண்ணங்கள் கொண்டு எண்ணும் பொழுது,
சுவாசித்த உணர்வுகள் நமது உடலுக்குள்
ஒவ்வொரு உடலில் இருக்கும் பொழுதும்
எத்தனை கோடி சரீரங்கள் எடுத்தோமோ
எந்த குணங்கள் கொண்டு தன் நிலைகளைச் சேர்த்ததோ
அது சேர்த்துக் கொண்ட நிலைகளுக்கொப்ப உருவங்கள் மாறி
அதனுடைய குணங்களின் எண்ணங்களும்
ஆற்றல் மிக்கதாக அந்த உணர்வின் ஆற்றல் பெருகி வளர்கின்றது.
அப்படி வளர்ந்த நிலைகளுக்கொப்பத்தான், பரிணாம வளர்ச்சி
பெற்று உடலின் தன்மைகள் அமைந்தது. அதன் ஆற்றல் மிக்க செயல்கள் செயல்படும் எண்ணமும்,
அந்த உணர்வுக்கொப்ப உடலின் இயக்கமும், அந்த உடலின் எண்ணங்களை நமக்குள் எண்ணச் செய்தது.
2. பரிணாம
வளர்ச்சி பெற்று மனிதனாக வந்த நாம், இன்று என்ன செய்கின்றோம்?
அவ்வாறு வந்த அந்த உடலின் உறுப்புகளின் உணர்வின்
தன்மையை, மனிதனானபின் நாம் எல்லா நிலைகளிலும் சேர்த்துக் கொண்டாலும் வளர்ந்து கொண்டபின்,
நாம் எதையெல்லாம் நன்மை என்று எண்ணுகின்றோமோ, அந்த நல்லதை எண்ணி ஒருவர் தவறு செய்யும்
பொழுது, நாம் அதைப் பார்க்கின்றோம்.
எதையும் சிருஷ்டிக்கும் தன்மை கொண்ட மனித உடலை
நாம் பெற்றாலும், நம் இன்றைய வாழ்க்கையில் நாம் ஒவ்வொரு நிமிடமும் சலிப்பு, சங்கடம்,
சஞ்சலம், கோபம் குரோதம், அவசரம், ஆத்திரம், அந்த உணர்வின் நிலைகளைச் நம் எண்ணத்தால்
நமக்குள் சேர்த்துவிடுகின்றோம். இவை அனைத்துமே விஷமான உணர்வுகள்.
எல்லோரும் வீட்டில் நல்லதை நினைக்க வேண்டும் என்று
நினைப்போம். அப்படி இருக்க வேண்டும், இப்படி இருக்க வேண்டும் என்றெல்லாம் நினைப்போம்.
நமது பையனுக்குக்
கல்யாணம் ஆனபின், “பையன் இப்படியெல்லாம் செய்கின்றானே” என்ற வேதனையை
எடுத்துக் கொள்வோம்.
வேதனை என்பது விஷம். வேதனை என்ற சொல்லுக்குள் அனைத்துமே
விஷம். சமையல் செய்யும் பொழுது, பலகாரங்களை நல்ல முறையில் பக்குவமாகச் செய்துவிட்டு,
கடைசியில் உப்போ, காரமோ அதிகமாகிவிட்டால் என்னவாகும்? சுவை அனைத்தும் மாறிவிடும்.
பையன் செய்யும் தவறைப் பார்த்தபின்,
நாமும் அதைப் போன்ற நிலையை அடைகின்றோம்.
எல்லோரும் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்று
எண்ணுகின்றோம். ஆனால், ஒவ்வொரு நிமிடமும் குடும்பத்திலும், தொழில் செய்யும் இடத்திலும்,
கோபம், வெறுப்பு போன்ற உணர்வுகளை நாம் அதிகமாக நுகர வேண்டியிருக்கின்றது. அதன்வழியில், நம்முடைய உணர்வையே அது மாற்றி விடுகின்றது.
அதை மாற்ற வேண்டுமல்லவா? அதற்குத்தான் இதை உபதேசிக்கின்றோம்.