ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

June 14, 2013

நாம் எதன் வழிகொண்டு விண் செல்ல முடியும்?

பழனி மலைமேல் இருக்கக்கூடிய தூபஸ்தூபி முன் நின்றபின், வானை நோக்கி, அதற்கு நேராக சன்னதி தெரிகிறதென்றால், அதை எண்ணி நாம் மேலே பார்த்தவுடன் அந்த தெய்வ குணத்தைப் பெற வேண்டும். இதை அருளிய அந்த மகரிஷிகளின் அருள்சக்தியை நாங்கள் பெறவேண்டும் என்று விண்ணை நோக்கி ஏங்கவேண்டும்.

யார் இதை நமக்கு உணர்த்தினாரோ,
அங்கு எந்த உணர்வு கொண்டு நாம் வந்தோமோ,
அந்த உணர்வுடன் சுழன்று வந்து,
அந்தச் சன்னதிக்கு முன் நின்று,
அந்தச் சிலையைப் பார்த்து,
இதையெல்லாம் அருளிய அந்த மகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெறவேண்டும் என்று விண்ணை நோக்கிப் பார்த்து ஏங்கி தியானிக்க வேண்டும்.

அதே சமயம் ஒரு உயிரான்மா, மனித உடலிலிருந்து சென்ற பின், இதே முறைப்படி எண்ணும் பொழுது, அந்த உயிரான்மாவை, மகரிஷிகளின் உணர்வின் ஒளிகள் கொண்டு, சப்தரிஷி மண்டலத்துடன் இணையச் செய்ய முடியும். அங்கே இணைந்து இந்த உயிரான்மா சுழலும் போது, அது வளர்ச்சி பெறுகின்றது. ஓளிச்சரீரம் பெறுகின்றது.

அதைப்போல இந்த மனித வாழ்க்கையிலிருந்து,
தனக்கொத்த நிலைகள் கொண்டு,
அந்த எண்ணத்தில் ஒருவர் அது உந்தும் பொழுதுதான்,
இந்த உணர்வின் ஆற்றல் கொண்டு,
ஆத்மா “விண் செல்ல முடியும்”.

அதற்குத்தான், அந்த மெய்ஞானிகளும், மகரிஷிகளும், அவர்கள் அவ்வளவு பாடுபட்டாலும், அவ்வளவு பெரிய சக்தி பெற்றாலும், சாதாரண மனிதனைத் தேடி வருகின்றார்கள்.

ஒரு விஷம் கொண்ட மனிதன், அவன் அறியாத மூடனாக இருந்தாலும், மூட நம்பிக்கை கொண்டு தவறான செய்கை செய்பவனாக இருந்தாலும்,
அவனிடத்தில் நல்ல நிலைகள் வளரவேண்டும்,
அவன் துன்பம் நீங்க வேண்டும்,
அந்த எண்ணத்தால் அவன், இதை நினைக்க வேண்டும்
(விண் செலுத்தும் நிலையை).
இவன் நினைத்த நினைவு கொண்டு
விண்ணிலே அனுப்ப வேண்டும் என்ற
இந்தத் தத்துவத்தைத்தான்,
அன்று மெய்ஞானி அதைச்செய்து வைத்துள்ளான்.