போகமாமகரிஷி தனது குருவின் ஆற்றலால் கற்றுணர்ந்த, அந்த உணர்வின் தன்மை தான் “காளிங்கநாதன்” என்பது.
அது விஷமான
ஒரு ஆற்றல் மிக்க சக்தி.
அதாவது காளிங்கன், விஷம்
என்ற நிலைகள் கொண்டு, அதன் சுருதியின் தன்மை எவ்வாறு இயங்குகின்றது? என்ற தன்மையில், போகருடைய
குருநாதர் அவருக்கு உணர்த்திய அளவுக்கு காளிங்கநாதர்,
அதாவது, சூரியனுக்கு ஆதிசேஷன் என்ற விஷத்தைப் போல,
பூமிக்கு வாசுகி என்ற விஷத்தின் சக்தியின் நிலையில்
தான்,
பூமி சுழல்கின்றது.
அதைப்போல, அதாவது சுவாசிக்கும்
அந்த உணர்வின் தன்மை, நாம் சுவாசிக்கும் ஒவ்வொரு அணுக்களுக்குள்ளிருக்கும் அந்த உணர்வின் தன்மை, விஷத்தின் தன்மைதான்
காளிங்கர்.
தனக்குள் எடுத்துக்கொண்டு சுவாசித்து, ஒரு அணுவுக்குள் இருக்கும் விஷத்தின் தன்மை, நாம்
சுவாசிக்கும்போது, ஆலிங்கனம் என்பது ஒவ்வொரு
உணர்வுக்குள்ளும் கலந்து கொண்டது.
நாம் சுவாசிக்கும் உணர்வின் தன்மையே, அது காளிங்கம். அது தனக்குள் சேர்த்து, ஆலிங்கனம்
ஆகி, அந்த உணர்வின் இயக்கத்தின் தன்மைதான், காளிங்கநாதன்.
“காளிங்கநாதர்” -- உணர்வின் தன்மை கொண்டு,
“நாதத்தின் தன்மை” கொண்டு இயக்குகிறது.
அதாவது விஷத்தின் ஆற்றலின் தன்மை இயங்குகின்ற
நிலையில். அதை குருவாகப் பின்பற்றி, உலகின்
இயக்கத்தின் எண்ண அலைகளை, எவ்வாறு சுவாசிக்கின்றன என்ற
நிலையை, அன்று போகமாமகரிஷி உனர்ந்தார்.
ஆகவே, அந்த விஷத்தின் ஆற்றல்,
எதன் எதனில் அது கலக்கப்படுகின்றதோ,
விஷம் தனக்குள் அடங்கி,
அது ஆற்றல் மிக்கதாகச் செயல்படுகின்றது.
சூரியன் தனக்குள் எடுத்துக்கொண்ட உணர்வின் ஆற்றல்
கொண்டு, அது தன்
நிலைக்குள் அது மாற்றி, உலகை
சிருஷ்டிக்கும் தன்மைக்கு அது எடுத்துக் கொள்ளும் உணர்வுகள் செயல்படுகின்றது.
அதைப்போன்றே,
நமக்குள்
இருக்கக்கூடிய உயிரான
நிலைகள் கொண்டு,
நாம் எதன் எதன்
அளவில் சுவாசிக்கின்றோமோ,
அந்த உணர்வின்
தன்மையை
சம
பங்கு ஈடு செயல்படுத்தும்போது,
உலகின் சத்தாலே
நமக்குள் படைக்கும் தன்மை ஈடு கொண்டு வரமுடியும்
என்று உணர்ந்தார், போகர்.