ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

June 7, 2013

துருவ நட்சத்திரத்தின் பேரொளி போகருடைய சுவாசத்தில் எப்படி ஈர்க்கப்பட்டது?

விஷத்தின் தன்மை கொண்டு, விஷத்தால் தீண்டப்பட்டு ஒரு குடும்பம் மாய்ந்திட, அதிலே அந்தக் குடும்பத்திலிருந்து பிறந்த அந்தச் சிசுதான் “போகன்”.

விஷத்தால் தீண்டப்பட்டபின், தன் தாய் தந்தையை எண்ணி, தன் குடும்பத்திலிருந்த வறுமையின் எல்லை கடந்த நிலை வரும் பொழுது, அனாதையாகத் திரிகின்றார் போகர்.

அவருடைய எண்ணத்தை வலுக்கூட்டும் நிலையில், தன்னைத் தற்காத்துக் கொள்ளும் உணர்வுடன், ஏக்க உணர்வுடன் இளம் பருவத்தில் திரிந்து கொண்டிருக்கும் இந்த நிலையில்தான், அந்தக் குடும்பத்தினுடைய நிலைகள்
எந்த விஷத்தால் தீண்டப்பட்டதோ,
அதிலிருந்து அவர் எண்ணத்தை வலுக்கூட்டி,
ஞானத்தைப் பெறும் நிலையாக,
வானை நோக்கி எண்ண வைத்தது.

இவர் அப்படி எண்ணியதற்குக் காரணமே, அன்றைய கால நிலையில் அனைத்துமே சூரியன்தான் உலகுக்கே வழிகாட்டி, அதன் பின் தான் மற்றவர்கள் அறியும் தன்மை வருகின்றது.

அவ்வாறு, அந்த போகனான அந்தக் குழந்தையே, போகர் என்று பின்னால் பெயர் பெற்றது. ஆனால், குழந்தைப் பருவத்திலே ஏக்கத்தின் நிலை கொண்டு சுழன்று வரும் பொழுது, அவர் வானை நோக்கி சூரியனையே எண்ணி, ஏங்கி, தன் குடும்பம் வறுமையிலிருந்து மீள்வதற்காக ஏங்கிக் கொண்டிருந்தார்.

அதுசமயம், ஆனால், குழந்தைப் பருவமாக இருந்ததனாலே அவர் அறியாது ஏக்கத்தின் உணர்வுக்குள் சிக்கப்பட்டு தமக்குள் காந்தச் சக்திகள் கூடியது.

அவர் தாய் தந்தையின் எண்ணத்தை வலுக்கூட்டி ஏங்கிக் கொண்டிருக்கும் பொழுது,
கதிரவனை அன்று வணங்கிய வழிப்படி,
அவர் விண்ணை நோக்கி ஏகி,
அந்த அருள் அலைகளை சூரியனையே இறைவனாகக் கருதி ஏங்கி,
தன் தாய் தந்தையின் ஏக்கத்துடன் ஏங்கித் திரிந்த
அந்த உடலுக்குள் சிக்கப்பட்டதுதான்,
துருவ நட்சத்திரத்திலிருந்து வெளிப்படுத்தப்பட்ட,
அந்த உணர்வின் ஆற்றல்.

அதை இவர் சுவாசிக்க, இந்தச் சுவாசத்தின் தன்மை அவருக்குள் பிரம்மம் ஆகின்றது ஆக, அந்தக் காளிங்கராயன் இவருக்கு பிரம்மமாகக் கொடுத்ததாகக் கருதுவார்கள்.

ஏனென்றால், தாய் தந்தையின் இந்த நிலைகளிலே
விஷம் தீண்டி, தாய் விஷத்தாலே மடிய,
“அதனின் வலுக்கொண்டு” அதனில் ஏங்கி,
இந்த உணர்வின் ஆற்றலை
தனக்குள் எண்ணி ஏங்கி,
விண்ணை நோக்குகின்றார் போகர்.

அவ்வாறு ஏங்கிய நிலைகள் கொண்டுதான், இத்தகைய ஏக்கத்தாலே சுவாசிக்கப்படும் பொழுது துருவ நட்சத்திரத்திலிருந்து வெளிப்படுத்தப்பட்ட அந்தப் பேரொளி இவர் சுவாசத்திலே ஈர்க்கப்பட்டது.


ஈர்க்கப்பட்டபின், அந்த மாமகரிஷிகளின் வானஇயல் தத்துவத்தை எப்படி உணர்ந்தார்களோ, அந்த உணர்வின் ஆற்றல் போகருக்குள் இது பிரம்மமாகின்றது. உருப்பெறுகின்றது.