ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

May 14, 2021

நாம் நுகர்ந்தது (சுவாசிப்பது) உடலில் கரு முட்டையாகி அணுவாக எப்படி உருவாகிறது…? அணுவான பின் உறுப்புகளில் ஏற்படும் மாற்றங்கள் என்ன…?

 

உதாரணமாக நாம் வேதனைப்படுகின்றோம் என்று வைத்துக் கொள்வோம். உயிரால் நுகரப்பட்டு அந்த உணர்வுகள் ஓ…ம் நமச்சிவாய.. ஓ…ம் நமச்சிவாய.. என்று நம் உடலாக (அணுக்களாக) உருவாகின்றது.

1.ஆனால் அந்த வேதனை என்ற உணர்வு அணுவாக (உடலாக) ஆவதற்கு முன்
2.வேதனையை நுகர்ந்த அடுத்த கணமே அதற்கு ஜீவன் கொடுக்காதபடி அணு உருவாகாதபடி தடுக்க வேண்டும்.

ஏனென்றால் வேதனைப்படுகிறார் என்று திரும்பத் திரும்ப எண்ணினால் அந்த உணர்வின் தன்மை இரத்தத்தில் கருவாகி விடுகின்றது.

அப்படிக் கருவாகி விட்டால் “ஒரு 48 நாட்கள்” ஆனால் நம் உடலில் இரத்தத்தில் சுற்றி வரும்போது வேதனை உருவாக்கும் அணுவாக உருவாகின்றது.

1.எந்த உறுப்பில் அது ஒட்டிக் கொள்கின்றதோ அங்கே அந்த அணு ஜீவன் பெற்ற நிலையில்
2.அதே இரத்தத்தின் வழியாகத்தான் தன் ஆகாரத்தை (வேதனையை) எடுக்கும்.

பூமியில் விளையும் ஒவ்வொரு தாவர இனச் சத்தையும் சூரியனின் காந்தப் புலனறிவு கவர்ந்து அலைகளாக மாற்றி வைத்திருக்கின்றது.

ஒரு செடியில் விளைந்த வித்தை மண்ணிலே ஊனறினோம் என்றால் காற்றுடன் காற்றாகக் கலந்து வரும் சூரியன் கவர்ந்து வைத்துள்ள தன் இனமான உணர்வினை அது பிரித்தெடுத்துத் தான் அந்தச் செடி மீண்டும் விளையும்.

இன்று டி.வி. ரேடியோக்களில் ஒளி ஒலி அலைகளாக எண்ணிலடங்காத ஒளிபரப்புகளைச் செய்கிறார்கள். வீட்டிலிருக்கும் சாதனத்தை வைத்து
1.அந்தந்த அலை வரிசைகளில் வருவதைத் திருப்பி நமக்கு வேண்டிய ஸ்டேஷனை வைத்தால்
2.அதை மட்டும் கவர்ந்து நாம் பார்க்கின்றோம் அல்லது கேட்கின்றோம்
3.மற்ற அலைகள் வந்தாலும் அதைக் கவர்வதில்லை.

இதைப் போன்று தான் எந்த உணர்வின் தன்மையை நாம் எண்ணுகின்றோமோ அந்த எண்ணத்தின் தன்மையைத் தனக்குள் எடுத்துக் கொள்கின்றது… அதை அந்த அணுக்கள் இழுத்தே கவர்கின்றது.

அதாவது…
1.எந்த எண்ணத்தை நாம் கவர்ந்தோமோ அந்த அணுவின் தன்மையாக
2.நமக்குள் ஒரு கரு முட்டையாக உருவாகின்றது.
3.இரத்தத்துடன் கலந்து சுழன்று வரும் பொழுது எந்த உறுப்பின் பாகத்தில் இது இணைந்து விடுகின்றதோ
4.அதனின் பருவமாகும் போது முட்டை வெடித்து அணுவாக மாறுகின்றது… கூட்டை விட்டு வெளியே வந்து விடுகின்றது.

உதாரணமாக நத்தை ஓட்டுடன் ஒட்டி இருந்து பாதுகாப்பாக இருப்பது போல
1.நாம் நுகர்ந்த உணர்வின் அணுக்கரு உடலின் உறுப்போடு ஒட்டி
2.எந்த உணர்வின் சத்தை அதை எடுத்ததோ இரத்தத்தில் வருவதை உறிஞ்சி
3.உணவாக எடுத்து வளர்ந்து தன் இனத்தைப் பெருக்கும்.

அந்த அணுவின் (வேதனை) மலம் தசையாகி உறுப்புகளில் சேர்க்கும் பொழுது ஏற்கனவே உருவான நல்ல அணுக்களால் உருவான உறுப்பைச் செயலிழக்கச் செய்யும்.

முதலில் உறுப்புகள் அழகாக இருக்கும். இந்த வேதனை என்ற உணர்வுகள் சேர்ந்து அதனின் அணு வெடித்து நுரையீரலிலோ அல்லது கல்லீரலிலோ இது போன்ற அணுக்கள் தேங்கி விட்டால் விஷத்தின் தன்மை பாய்ந்து விடும். பின் அந்த உறுப்புகளில் எல்லாம் வலி எடுக்க ஆரம்பிக்கும்.

இரத்தங்களை உடல் முழுவதும் பிரித்து அனுப்பும் இருதயத்தில் இது போன்ற வேதனை அணுக்கள் உருவானால் அது இரத்தம் போகும் பாதையே அடைத்துவிடும் (ஹார்ட் அட்டாக்).

நம் இதயத்தில் இயற்கையாகவே மூன்று பிரிவுகள் வழியாக இரத்தம் உடல் முழுவதும் செல்கிறது. மேலே சொன்ன வேதனையான அணுக்கள் இதயத்தில் உருவானால் அடைப்பாகி… இரண்டு பாதை வழியாகப் போகும். அதிலும் அடைப்பானால் ஒன்றின் வழியாகப் போகும்.

ஒன்றின் வழியாகப் போகும் போது திணறலாகும். அதுவும் அடைபட்டால் நின்றுவிடும்.

இது எல்லாம் நாம் சந்தர்ப்பத்தால் எடுக்கும் எண்ணங்கள் உணர்வுகளுக்குத் தக்க நம் உடலில் அணுக்கள் உருவாகி அதனால் ஏற்படும் விளைவுகள்.

இதை மாற்ற வேண்டும் என்றால்…
1.நம் குருநாதர் காட்டிய வழியில் அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வை எடுத்து
2.ஒவ்வொரு நிமிடமும் நம் ஆன்மாவைத் தூய்மைப்படுத்த வேண்டும்.
3.தீமையான அணுக்கள் உடலுக்குள் உருவாகாத வண்ணம் தடைப்படுத்தியே ஆக வேண்டும்.

சித்தர்களால் மறைக்கப்பட்டுள்ள உண்மைகள் பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது

பல கோடி உயிரணுக்கள் வந்து நம் உடலிலும் எண்ணத்திலும் கலக்கும் நிலையில் உள்ளதப்பா மனித உடல்.

1.பல கோடி அணுக்களின் ஈர்ப்பு நிலையில் இருந்து தப்பி
2.அழியாத செல்வமான நம் ஆத்ம ஜோதி நிலை கண்டிடத்தான்
3.இந்தத் தியான நிலை… சுவாச நிலை எல்லாமே…!

தியான நிலையில் உண்மை நிலையைப் புரிந்து ஒவ்வொருவரும் செயல்பட்டுப் பல கோடித் தீய உயிரணுக்களின் செயல்களுக்கு நாம் அடிமையாகாமல் அதிலிருந்தெல்லாம் நாம் தப்பி நம் சுவாச நிலையில் நம் எண்ணத்தில் அவ்வீசனின் சக்தியை ஊன்றச் செய்ய வேண்டுமப்பா…!

பல மகரிஷிகள் ஞானிகள் சித்தர்கள் எல்லாம் பெரும் ஞானப் பேராற்றல் நிலையை எய்தியது எப்படியப்பா..?
1.மற்ற அணுக்களின் சக்திகள்… உந்தல்கள்…!
2.தன் நிலைக்கு வந்து செயல்படாமல் மாற்றிக் கொண்டார்கள்.

அவர்கள் பல கோடி உண்மை இரகசியங்களை அறிந்து அன்றைய காலத்தில் அதை ஜாதக வடிவிலும்… கோவில்களிலும்… மருத்துவத்திலும்… பல உண்மை நிலைகளை எல்லாம் கண்டறிந்து பெரும் சூட்சமத்தில் இரகசியமாக வெளியிட்டார்கள். பல உண்மைகளை மறைத்தும் விட்டார்கள் அன்றையச் சித்தர்கள்…!

இந்நிலையில் பல உண்மைகளை அறிந்து தன் உயிராத்மாவை அழியாச் செல்வமாக்கி நான் என்றால் என்ன…? என்பதை அன்றே உணர்ந்தார்கள். பின் வரும் மக்களுக்காக எவ்வளவோ பெரும் நிலைகளை எல்லாம் கண்டுணர்ந்து
1.இன்றும் சூட்சம நிலையில் இருந்து கொண்டே
2.ஆண்டவன் ரூபத்தில் வந்து பல வழிகளில் உணர்த்துகிறார்கள்.

அழியாச் செல்வமான இந்த உயிராத்மாவை மனிதர்கள் எல்லோருமே என்ன…? என்று புரிந்து கொண்டு வாழ்ந்திட வேண்டுமப்பா…!

ஜெப நிலையில் அமர்வதையும்… தெய்வத்தை வணங்குவதையும்… பலர் பல நிலையில் பொருளுக்காக என்று செயல்படுத்தி உண்மை நிலையையே புரிந்து கொள்ளாமல் சிதறடித்து விட்டார்கள்.

நம் உயிராத்மாவை… உடலை விட்டுப் பிரிந்த பல ஆத்மா என்னும் அணுக்களின் நிலையில் இருந்து தப்பி ஒவ்வொருவரும் வாழ்ந்திட வேண்டும்… வாழ்ந்திட முடியும்…!

இந்த உடலில் இருந்தால்..
1.இனி எத்தனை காலங்கள் உடலுடன் வாழ முடியும்…! என்ற உண்மையைப் புரிந்து கொண்டு
2.தன் ஆத்மாவிற்குத்தான் அழியாச் செல்வத்தைச் சேமிக்க வேண்டும்.

இந்தச் சூரியனிலிருந்து நாம் பல கோடி நன்மைகளைப் பெற்று வருகின்றோம். சூரியன் எப்படிப் பல மண்டலங்களின் நிலை கொண்டு அச்சக்திகளைத் தன்னுள் ஈர்த்துப் பல நன்மைகளை அளிக்கின்றதோ அதே போல் அச்சக்தியின் அருள் பெற்ற நாம் எல்லோரும் சத்திய நிலையில் வாழ்ந்து சமுதாயத்தில் நல் நிலையில் வாழ்ந்திட வேண்டும்.

1.இந்தப் பிரபஞ்சத்தில் நாம் பிறருக்குச் சுமையாக வாழ்ந்திடாமல்
2.பிறரின் நன்மைக்காகப் பிறவி எடுத்த பயனைப் பெற்றிட வேண்டும்.

May 13, 2021

சர்க்கரைச் சத்து இரத்தக் கொதிப்பு உப்புச் சத்து மூச்சுத் திணறல் இது எல்லாமே ஒன்றுக்கொன்று தொடர்பு கொண்டது தான்...!

 

நாம் உணவாக உட்கொள்கிறோம் என்றால் அதில் உள்ள சத்துகள் எல்லாம் நம் உடலிலே முதலில் அமிலமாகத்தான் மாறும்.

விஷத்தன்மை கொண்ட நம் பித்த சுரபி...
1.அதனுடைய சுரப்புக்குத் தக்கவாறு சாப்பிடும் ஆகாரத்திற்குள் கலந்து
2.அந்த அமிலத்தன்மையை குளுக்கோஸாக மாற்றுகிறது.

குளுக்கோசாக மாற்றி வரப்படும் பொழுது இரத்தங்களிலே இருக்கக்கூடிய செல்கள்
1.இந்த உணர்வின் தன்மையைச் சுழலச் செய்து சுழலச் செய்து
2.அதைச் சிவப்பணுக்களாக மாற்றி விடுகின்றது.

அப்படி மாற்றும் தன்மை அங்கே இல்லை என்றால் விஷத்தின் தன்மையால் அந்தக் குளுக்கோஸ் சர்க்கரையாக மாற்றி விடுகின்றது. இப்படி அந்தக் குளுக்கோஸ் அதிகமானால் சர்க்கரைச் சத்து இரத்தத்திலே அதிகமாகிவிடும்.

காரணம்... அடிக்கடி வேதனையான உணர்வைச் சுவாசிக்கும் பொழுது அல்லது வேதனைப்படுவோரைப் பார்க்கும் பொழுது அல்லது வேதனையான உணர்வுகளை எடுக்கும் போது உடலில் விஷத் தன்மைகள் அதிகமாகிறது.

உதாரணமாக ஒருவர் செய்யும் தவறான செயலைப் பார்த்து நம்மால் அதைத் தாங்க முடியவில்லை என்றால் சோர்வான உணர்வைத்தான் நுகர்கின்றோம். அதை நுகரப்படும் பொழுது கோபமான உணர்வுகளைக் கலந்து நாம் சுவாசிக்க நேருகின்றது.

இது நமக்குள் கூடியபின் இந்த உணர்வு பிரிக்கப்பட்டு குளுக்கோஸை சிவப்பணுக்களாக மாற்றும் தன்மைக்கு மாறாக இதனுடைய உணர்வின் செல்கள் அழுத்த நிலைகள் கொண்டு இரத்தக் கொதிப்பு நோயாக மாறும்.

1.சர்க்கரைச் சத்து உள்ளவர்களுக்கு ரொம்பச் சீக்கிரம் இந்த இரத்தக் கொதிப்பும் வரும்.
2.காரணம் நுகர்ந்த உணர்வுக்கொப்ப (சோர்வு வேதனை கோபம்) அணுக்களின் தன்மை வீரியம் அடைகின்றது.

வைத்திய ரீதியில் எடுத்துக் கொண்டாலும் கூட இரத்தத்தைப் பரிசோதித்துத் தான் இரத்தக் கொதிப்பு இருக்கிறது... சர்க்கரைச் சத்து இருக்கின்றது என்பார்கள்.

அதே சமயத்தில் இந்த இரண்டும் மோதும் பொழுது சலிப்புத் தன்மை அடைந்து பிரிக்கப்படும் பொழுது... ஆஸ்த்மா போன்ற சளித் தன்மையும் அதிகமாகின்றது.

சர்க்கரை அதிகமாகும் போது சளி உருவாகி எல்லா இடத்திலும் அது உறைந்து அந்த அமிலங்கள் மாறுகின்றது. உடலுக்குள் ஒவ்வொன்றையும் இப்படி மாற்றுகின்றது.

பரிணாம வளர்ச்சியில் எத்தனையோ காலமாகப் பல சரீரங்கள் பெற்று இன்று மனிதனாக வளர்ந்து வந்திருந்தாலும்...
1.நாம் இன்று சந்திக்கும் சந்தர்ப்பங்கள் மூலம் உடலில் அணுத் தன்மைகள் மாறி
2.கடைசியில் வேதனை என்ற உணர்வே மிஞ்சுகின்றது...
3.மனிதனின் ரூபத்தையே மாற்றும் தன்மைக்கு வந்து விடுகின்றது.

ஆக அந்த வேதனை எதில் உருவாகிறது என்றால் சந்தர்ப்பத்தால் இணைத்த உணர்வு கொண்டு தான் நமக்குள் அது வருகின்றது.

ஆனால் அந்தச் சந்தர்ப்பத்தையே நல்லதாக மாற்றும் நிலைக்குத்தான் உபதேசங்கள் வாயிலாக அருள் ஞானத்தை உங்களுக்குள் வளர்க்கும் தன்மையாக இங்கே செயல்படுத்திக் கொண்டுள்ளோம் (ஞானகுரு).

உடலை விட்டுப் பிரிந்து செல்பவர்கள் கைலாசமோ வைகுண்டமோ சொர்க்கமோ அடைவதில்லை - ஈஸ்வரபட்டர்

 

மனிதர்கள் பிறந்து வளர்ந்து இந்த உலக வாழ்க்கையை விட்டு அந்தந்த உடலிலிருந்து ஆத்மா பிரிந்து சென்ற பிறகு
1.அந்த ஆத்மாக்கள் எந்த நிலையில் இருக்கின்றன…?
2.அவ்வாத்மாக்களின் நிலை என்ன..? என்ற உண்மை நிலையை
3.ஒவ்வொரு மனிதனும் தெரிந்து கொள்ள வேண்டும்…! என்பதன் பொருளில் தான்
4.ஆத்மாவிற்கு முதலிடம் தந்து சொல்லிக் கொண்டு வருகின்றேன்.

இந்த உடலை விட்டு ஆத்மா பிரிந்து சென்றவுடன் பரலோகத்திற்குச் செல்கிறது…! என்கிறார்கள். இப்பரந்த உலகிலே அந்த ஆத்மாக்கள் அபிலாஷையுடன் (ஆசாபாசத்துடன்) சென்றிருந்தால் பரந்த உலகில் சுற்றிக் கொண்டிருப்பதில்லை.

தன் ஆத்ம நிலை கொண்டு எந்த இடத்தில் அதன் ஆன்மா பிரிந்ததோ அந்த நிலையிலேயே
1.அந்த ஆத்மா பிரிந்து செல்வதற்கு முதலில் இருந்த உடல்
2.எந்த இடத்தில் எந்த நிலையில் வாழ்ந்ததோ அங்கேயே தான் சுற்றிக் கொண்டுள்ளது.

அதனுடைய ஆசைகளும் அதனுடைய எண்ணங்களும் செயல்படும் வரை அதற்குக் கால நிலைகள் இல்லை.
1.எவ்வளவு காலம் வேண்டுமாகிலும்
2.அதன் ஆசை முடியும் வரை
3.அங்கே தான் சுற்றிக் கொண்டு தான் இருக்கும்.

அந்த ஆத்மாவின் உருவம் என்பது அவ்வாத்ம ஜோதியின் நிலை அதாவது உருவமில்லாத அந்த உயிராத்மா எப்படி இருக்கும்…?

அது சிறிய அணுவாகத்தான் உள்ளது. அவ்வாத்மாவைச் சுற்றி அது வாழ்ந்த நாட்களில் அதன் சுவாச நிலையைக் கொண்டு அவை பேசிய பேச்சுக்களும் விட்ட சுவாச நிலையும் அதே நிலையில் தான் சுற்றிக் கொண்டேயுள்ளது.

இந்த உலகினிலே “பல கோடி ஆத்மாக்கள்” காற்றிலே பரந்து பரவியுள்ளன. ஒவ்வொரு ஆத்மாவும் ஒவ்வொரு நிலை கொண்டு சுற்றிக் கொண்டுள்ளது.

இன்றைய உலகில் வாழ்ந்திடும் மக்களில் நம் (உடலுடன் உள்ளவர்கள்) ஒவ்வொருவரின் சுவாச நிலை எப்படி உள்ளதோ அந்நிலைக்கு ஏற்ப
1.நாம் விடும் சுவாச நிலை கொண்டு
2.நாம் விடும் சுவாச நிலை என்று சொல்லும் பொழுது கோபம் மகிழ்ச்சி சாந்தம் இப்படிப் பல உணர்ச்சிகள் நமக்கு வரும் பொழுது
3.அத்தகைய உணர்ச்சிகளுக்கும் உடலை விட்டுப் பிரிந்த உயிராத்மாவின் ஆசைக்கும் ஒத்த நிலை வரும் பொழுது
4.மனிதர்கள் (நம்) உடலில் அந்த உயிராத்மாக்கள் புகுந்து தன் எண்ணத்தையும் தன் ஆசைகளையும் செயல்படுத்திக் கொள்கிறது.

ஆனால் அதே சமயம் உள்ளே புகும் உயிரான்மாக்கள் வெளியேறும் வழியே இல்லை. புகுந்த உடலை விட்டு எப்பொழுது அந்த உடலுக்குச் சொந்தமான உயிரான்மா பிரிகிறதோ அன்று தான் அந்த உடலில் உள்ள அனைத்து ஆன்மாக்களும் வெளியே வர முடியும்.

ஆகவே அந்த உயிரான்மாக்களின் செயல்களிலிருந்து தப்ப வேண்டும் என்றால்
1.தியான நிலை மிகவும் முக்கியமான ஒன்றப்பா…!
2.அதைத் தவிர வேறு வழி இல்லை.

கணவன் மனைவி அருள் ஒளியை இருவருக்குள்ளும் பெருக்க வேண்டியதன் முக்கியமான காரணம்

 

கணவன் மனைவி இணையாது... தனித்த நிலையில் தவத்தின் மூலம் ஆற்றல் மிக்க சக்திகளைப் பெற்றாலும் முனித் தன்மை என்பதே விஷத் தன்மை கொண்டது. ஒன்றை ஊடுருவிக் கொல்லும் சக்தி பெற்றது.

1.பெண் பால் என்ற நிலையில் இணைந்து வரப்படும் போது தான்
2.விஷத்தின் தன்மை ஒடுக்கி
3.ஒரு துடிப்பின் நிலையாக இயங்கி
4.அணுவின் சக்தி பெறக்கூடிய தகுதி பெறும்.

இதையெல்லாம் வாழ்க்கையில் சிந்தித்துப் பார்த்தால் தெரியும்.

ஏனென்றால் கணவன் மனைவி இரண்டு பேரும் அன்பாகப் பேசி... ஒரே எண்ணத்துடன் ஒரு வேலையைச் செய்ய வேண்டும் என்று எண்ணினால் எண்ணங்கள் கை கூடி அந்தக் காரியங்கள் சித்தியாகும்.

ஆனால் கணவன் ஒரு வேலையைச் செய்யப் போனால் இதை எதற்குச் செய்து கொண்டிருக்கிறார்...? என்று மனைவி இடைமறித்து அழுத்தமாகச் சொன்னால் போதும்.

அதற்கு அடுத்து கணவன் என்ன வேலை செய்தாலும் கூட இந்தக் குறை உணர்வுகளே அங்கே வளரும்.

ஆகவே குடும்பத்தில் வாழும் பெண்கள் சர்வ ஜாக்கிரதையாக ஒரு சொல்லைப் பயன்படுத்த வேண்டும்.
1.பெண்பால் என்ற உணர்வு எதனில் கலக்கின்றதோ அதனின் உணர்வின் கலவை கொண்டு
2.அடுத்து கருத்தன்மை பெறக்கூடிய தகுதி பெற்று விடுகின்றது. (ரொம்ப ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்).

இதைப் போன்ற நிலைகள் இந்த வாழ்க்கையில் நாம் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயங்கள் ஏராளம் உண்டு. ஏனென்றால்...
பல கோடி உணர்வுகள்
பல குடும்பங்களில்
பல நிலைகள்
பல வித்தியாசமான நிலைகள் உண்டு.

கணவன் நல்லவனாக இருக்கலாம். இருந்தாலும் சந்தர்ப்பத்தில் அறியாமையினால் ஒரு வேதனைப்படும் செயலைச் செயல்படுத்தும்போது சங்கடமான உணர்வுகளைக் குடும்பத்தில் உருவாக்குகின்றது.

வேதனை என்ற விஷத்தன்மை வரும் பொழுது மனைவியை நினைக்கும் போதெல்லாம் அடிக்கடி வெறுப்பின் தன்மையும் வேதனைப்படும் தன்மையும் கணவனுக்கு வரும்.

பின் அடுத்து மனைவி நல்லதைச் சொன்னாலும் கணவன் அதை ஏற்றுக் கொள்ளும் பண்பு வருவதில்லை. அதே சமயத்தில் மனைவிக்கும் இந்த விஷத்தின் தன்மை கூடுகின்றது,

இப்படி விளைந்த உணர்வு பரவியபின் அந்தத் தவறின் உணர்வு அங்கேயும் விளைகின்றது.
1.இருவருமே இதே உணர்வின் தன்மை வளர்க்கப்படும் பொழுது இருவருக்குமே நோய் வருகின்றது.
2.கை கால் குடைச்சல் மேல் வலி தலை வலி என்று வரிசைப்படுத்தி வரும்.

இருவரும் ஒன்று சேர்த்து ஒரு பொருளைப் பெற வேண்டும் என்று ஆசைப்பட்டு சரி... இதை வாங்கலாம்...! என்று எண்ணினாலும் வேதனை கலந்த உணர்வுடன் இருவருமே செல்லப்படும் பொழுது அந்தப் பொருளை வாங்கினாலும்... வாங்கிய பின் இரண்டு பேருக்கும் பகைமை வரும்.

1.அப்போது அந்தப் பொருளைப் பாதுகாக்கும் சக்தியை இருவருமே இழந்து விடுகின்றனர்.
2.இது எல்லாம் இயற்கையின் நியதிகளில் உணர்வுகளின் இயக்கம் தான்.

கணவன் மனைவி இருவருமே அருள் ஒளியைப் பெற்று அதைக் இருவருக்குள்ளும் கருவாக்கினால் மகிழ்ந்து வாழச் செய்யும். வெறுப்போ பகைமையோ வளராது... நோயாகவும் மாற்றாது.

அதற்காக வேண்டித் தான் அதிகாலை துருவ தியானத்தில் இருவருமே ஒன்று போல் எண்ணி அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி என் கணவருக்குக் கிடைக்க வேண்டும் என்று மனைவியும் என் மனைவிக்குக் கிடைக்க வேண்டும் என்று கணவனும் அவசியம் எண்ணித் தியானிக்க வேண்டும் என்று உங்களிடம் யாம் சொல்வது.

இந்தப் பழக்கத்திற்கு இருவருமே வந்து விட்டால் குடும்பத்தில் மன மகிழ்ச்சியும் செல்வமும் செல்வாக்கும் சொல்வாக்கும் தன்னாலே பெருகும்.

May 12, 2021

மிஷின் கண் (MACHINE GUN) போன்று ஆத்ம சுத்தி என்ற ஆயுதத்தை உங்களுக்குக் கொடுக்கிறோம்

 

ஒரு உணர்வின் தன்மை ஒரு அணுவின் தன்மை சேர்க்கப்படும் போது அது எந்தெந்த குணத்தின் தன்மை அதிகமாகச் சேர்க்கின்றதோ அது ஆற்றல் பெறுகின்றது.

இதைப் போன்றுதான் இயற்கையின் உண்மையினுடைய நிலைகள்.

நாம் மெய் உணர்வின் தன்மையை அறிந்துணர்ந்தபின் அந்த மகரிஷிகள் அருள் வழியைக் காட்டியபின் இந்த உடலில் இருக்கப்படும் பொழுதே யாம் சொல்லும் நிலைகளைக் கடைப்பிடிக்கக் கற்றுக் கொள்ளுங்கள்.

உங்கள் வாழ்க்கையில் எப்பொழுதெல்லாம் பிரச்சினைகளையும் சங்கடங்களையும் எதிர் கொள்கின்றீர்களோ அதையெல்லாம் உங்களுக்கு நன்மை பயக்கும் நேரமென்று எடுத்துக் கொள்ளுங்கள்.

எப்படி…?

என்னைத் திட்டிவிட்டானே… இரு நான் பார்க்கின்றேன்…!’ என்றால் அன்றைய நாள் துன்பத்தைக் கொடுக்கும் நாள்.

அவர்கள் சொன்னவுடன் அல்லது நம் பையனே அப்படிப் பேசி இருந்தாலும் கூட அந்த உணர்வுகள் ஆத்திர உணர்வுடன் வெளிப்படுத்தும் போது நமக்குக் கெட்ட நாள். நமக்குள் அந்த உணர்வின் தன்மையைக் கூட்டுகின்றது.

ஆகவே யாராவது திட்டினாலும், உணர்ச்சிவசப்பட்டு ஏசும் நிலை வந்தாலும்…
1.உடனே ‘’ஓ…ம் ஈஸ்வரா…’’ என்று உயிரை எண்ணுங்கள்
2.அந்த மகரிஷிகளின் அருள் ஒளி நாங்கள் பெற வேண்டும் என்று ஏங்குங்கள்
3.மகரிஷிகளின் அருள் சக்தி எங்கள் ஜீவாத்மா பெற வேண்டும் என்று உங்கள் உடலுக்குள் செலுத்துங்கள்.
4.அப்பொழுதே இது அடங்கும்.

ஒருவர் உணர்ச்சிவசப்பட்டுப் பேசி அந்த உணர்ச்சியைத் தூண்டும் நேரத்திலும் இந்த ஆத்ம சுத்தி என்ற ஆயுதத்தைக் கையில் எடுத்துக் கொண்டால் அவர்களால் சங்கடமாக ஏற்படுத்திய உணர்வுகள் நம்மை ஆட்டிப்படைக்காதபடி அதை அடக்க இந்த ஆயுதம் உதவும்.

அடுத்து… யார் நமக்கு தவறு செய்தார்களோ அவர்களை எண்ணி.
1.மகரிஷிகளின் அருளால் அவர்கள் நாளை செய்வதெல்லாம் நல்லதாக இருக்க வேண்டும் என்று ஆணையிடுங்கள்
2.அதே சமயத்தில் அவர்கள் தீமையான உணர்வுகள் உங்களுக்குள் வராது தடுக்கச் செய்யுங்கள்.

இதை நீங்கள் பயன்படுத்தி ஒவ்வொரு நிமிடமும் மகரிஷிகளின் அருள் ஒளிகளைச் சேர்க்கக் கற்றுக் கொள்ளுங்கள்.

மனித வாழ்க்கை அது எந்த நிமிடம் என்று சொல்ல முடியாது. நாம் இப்பொழுது எந்த நிலைகளில் இருந்தாலும் மனிதருடன் வாழப்படும் பொழுது குறைகளைக் காணாமல் இருக்க முடியாது. இன்றைய விஞ்ஞான உலகத்தில் பல பல குறைகளைக் கண்டு கொண்டு தான் இருக்கிறோம்.

ஆனால் ஒவ்வொரு நிமிடமும் நாம் ஆத்ம சுத்தி செய்வதன் மூலம் அந்த மகரிஷிகளின் அருள் ஒளியைச் சேர்த்து ஒவ்வொரு நிமிடமும் அந்த புனிதப் பயணமாக இந்த வாழ்க்கை இருக்க வேண்டும்.

உங்களிடம் யாம் (ஞானகுரு) எதற்காக இதைச் சொல்கிறோம்…?

நீங்களெல்லாம் மகிழ்ந்திருந்தால் தான்… மகிழ்ச்சியான சொல்களைச் சொன்னால்தான் எமக்கும் ஒரு மகிழ்ச்சி ஏற்படுகின்றது.

அதைப் போல நீங்கள் ஆத்ம சுத்தி செய்து கொண்டு
1.யாராவது துன்புற்று உங்களிடம் வந்தாலும் உடனே அவர்களுக்கு நன்றாகிப் போகும்…! என்று சொல்லுங்கள்.
2.அவர்களுக்கு உடல் நலமாகிவிடும்.
3.உடல் நலம் பெற்றேன் என்று அந்த மகிழ்ச்சியான எண்ணங்களைச் சொல்லும்போது
4.அந்த நல்ல உணர்வுகளை உங்களுக்குச் சொந்தமாக்குங்கள்.

நான் எப்படி உங்களுக்கு நல்லதாக வேண்டும் என்று எண்ணுகின்றேனோ அதைப் போன்று நீங்கள் ஒவ்வொருவரும் ஆத்ம சுத்தி செய்து கொண்டு அந்த எண்ணத்தைப் பரப்புங்கள்.

நம்முடைய மூச்சு பிறருடைய துன்பங்களைப் போக்க உதவ வேண்டும். துன்பமான உணர்வுகளைக் காதிலே கேட்டு நம் உடலுக்குள் நின்று அந்தத் துன்பங்கள் நம்மை ஆட்டிப் படைத்துவிடக் கூடாது.

பிற துன்ப அலைகள் எல்லாம் அது விஷம். அது ஊடுருவி நம்மைக் கெடுக்கத் துரித நிலைகளில் செயல்படும். அதை மாற்றுவதற்கு மெய் ஞானிகளின் அருள் ஒளி நமக்குள் இருந்தால்தான் மாற்ற முடியும்.

1.மெய் ஞானிகளின் அருள் ஒளி நெருப்பு.
2.அந்த நிலையின் தன்மையை நாம் பெற வேண்டும்.
3.ஆனால் இதற்குக் குருவின் துணை வேண்டும்.

குருவின் இணைப்பு கொண்டு அன்று மகரிஷிகள் எவ்வழிகளில் எடுத்தார்களோ…
1.அந்த உணர்வின் ஆற்றலின் நிலைகள் கொண்டு
2.அதைப் பின்பற்றி நடப்போரின் நிலைகள் கொண்டுதான் அந்த சக்தியைப் பெற்றிட முடியும்.

நீங்கள் ஒவ்வொருவரும் இந்த மனித வாழ்க்கையில் புனிதம் பெறுவதற்கு எடுத்துக் கொள்ளும் ஆத்ம சுத்தி செய்து பயிற்சி உங்களுக்கு வெற்றியைத் தரும்.

உங்கள் குடும்பத்தில் யாருக்கு எந்தச் சிக்கல் வந்தாலும் இதே மாதிரி ஆத்ம சுத்தி செய்து கொள்ளுங்கள், எல்லாமே நல்லதாக வேண்டுமென்று எண்ணுங்கள்.

1.இதைப் போன்று சிறிது நாளைக்கு முயற்சி எடுத்துப் பாருங்கள்.
2.இந்த உண்மை நிலைகளை நீங்கள் உங்கள் உடலுக்குள்ளும், உணர்வுக்குள்ளும் பார்க்கலாம்.

பிறந்த குழந்தையின் ஜென்ம நட்சத்திரத்தை ஜாதகக்காரர்களால் சொல்ல முடியாது - ஈஸ்வரபட்டர்

 

இந்த உலகம் தோன்றிய நாள் முதல் இன்றைய நாள் வரை பல உண்மைகளை அறிந்து கொள்ள நாம் எல்லோருமே ஆர்வம் கொண்டுள்ளோம்.

1.பிற்கால வாழ்க்கையை எண்ணி
2.இனி நடக்கப் போகும் நிலை என்ன…? என்பதை அறிய எல்லோரும் விரும்புகின்றோம்.

இருந்தாலும் நம்முள் உள்ள பரமாத்மாவை மறந்து விட்டு “பரலோகத்திலுள்ள பரமாத்மா…!” என்று வேண்டி ஜாதகங்கள்… ஏட்டுச் சுவடிகள்.. என்று இப்படிப் பல வழிகளில் ஆரூடம் பார்த்து “அறிதல்” என்றெல்லாம் நம் காலத்தைச் சிதறவிட்டு விடுகின்றோம்.

சூரியனின் சக்தியிலிருந்து அந்தச் சூரியனைச் சுற்றியுள்ள பல மண்டலங்களின் நிலையை வைத்து அம்மண்டலங்களின் ஒளிக் கதிர்கள் சூரியனில் பட்டுச் சூரியனிலிருந்து நம் பூமிக்கு வந்திடும் ஒளியின் தன்மையை வைத்துப் பல நிலைகள் நடக்கின்றன.

அந்தச் சூரிய சக்தியின் பிம்பத்தில் பல மண்டலங்களின் ஒளி பட்டு “அது பூமிக்குக் கிடைக்கும் நேரத்தைத்தான்” அன்றைய சித்தர்கள் ஜாதகங்கள் என்ற நிலையில் கண்டனர்.

1.சந்திரனின் பார்வை… சூரியனின் பார்வை… என்றும்
2.கேது… இராகு… என்ற ஒவ்வொரு மண்டலங்களின் ஒளிக் கதிர்கள் சூரியன் மேல் படும் பொழுதும்
3.அந்த ஒளிக் கதிரின் தன்மை பூமியின் மேல் படும் காலத்தை வைத்துத்தான் சித்தர்கள் ஜாதகம் கணித்தார்கள்.

ஜென்ம நட்சத்திரம் என்கிறார்கள். எந்தக் குழந்தைக்கும் ஜென்ம நட்சத்திரத்தை இன்றைய ஜாதகக்காரர்களால் அறிய முடியாது. குழந்தை பிறந்த நேரத்தை வைத்து ஜென்ம நட்சத்திரம் குறிக்கின்றார்கள்.

அதுவல்ல ஜென்ம நட்சத்திரம்…!

1.அது தன் தாயின் வயிற்றில் “என்று உதயம் பெற்றதோ…” அந்த நேரம் தான் அதற்கு ஜென்ம நட்சத்திரம்.
2.அந்த நிலையைக் கணித்திட இன்றைய ஜாதகக்காரர்களால் முடியாது.

இராமர் இராம நவமி அன்று பிறந்தார்… என்றும் முருகன் பிறந்த நாளை வைகாசி விசாகம்…! என்றும் கணிக்கின்றார்கள் பாட நிலைப்படித்தான்…!

இராமர்… கிருஷ்ணர்… முருகன்… எல்லாம் பிறவி எடுக்கவில்லை. அவர்களின் குணாதிசயங்களை வைத்துத்தான் நம் சித்தர்கள் அவர்களுக்கு நாமங்கள் இட்டார்கள்.

அப்படி இருக்கும் பொழுது இராமர் பிறந்த நேரத்தையும் முருகன் பிறந்த நேரத்தையும் எப்படிக் கொண்டாடுகின்றார்கள்…? என்று நீங்கள் நினைக்கலாம்.

அன்றையச் சித்தர்கள் மற்ற மண்டலங்களின் ஒளிக்கதிர்கள் சூரியனில் பட்டு பூமியைத் தாக்கும் பொழுது…
1.என்றென்று அந்த நல்ல நிலை பெறும் நாளோ அந்த நாட்களின் குணா அம்சங்களை வைத்து
2.அந்த நாட்களை அந்த ஒளியிலிருந்து வரும் சக்தியின் நிலை கொண்டு
3.முருகருக்கும் இராமருக்கும் பிறந்த நாட்கள் என்று கணித்தார்கள்.

கணித்தார்கள் என்றால் அந்த நிலை பெறும் நேரத்தை நல்ல நேரமாக ஏற்று அந்த நிலையில் பிறக்கும் குழந்தைகளுக்கும் உகந்த நாள்…! என்று மக்களுக்கு ஏற்றுக் கொள்ளப் பல வழிகளைச் சொல்லிச் சென்றார்கள்.

ஆனால் அந்த உண்மைகளை எல்லாம் காலப்போக்கிலே சிதறடித்து விட்டார்கள்.

மற்ற மண்டலங்களின் ஒளி சூரியனில் எப்பொழுது கிடைக்கப் பெறுகிறது…? மற்ற மண்டலங்களில் உள்ள சக்தி சூரியன் மேல் பட்டு அதன் பின் அச்சூரியன் நமக்கு அளிக்கின்றது.

சந்திரனில் ஒளிக் கதிர்கள் இல்லா விட்டால் “இன்றைய வண்ணங்கள்… சுவைகள்…” இவை எவையுமே நாம் பெற்றிருக்க முடிந்திடாது.

அதைப் போல் தான் ஒவ்வொரு மண்டலத்திலிருந்தும் நமக்குப் பலவித இயற்கைத் தன்மை வாய்ந்த சக்தியெல்லாம் கிடைக்கின்றது.

பெரும் பேறு வாய்ந்த சக்தியுள்ள பூமியப்பா…! இன்று நாம் வாழ்ந்திடும் பூமி. இந்தப் பூமித் தாயின் உயிரோட்ட உண்மைகளை உணர்ந்து கொண்டு உலகினிலே உதித்த நாம் எல்லோருமே உண்மையுடன்… “உன்னதமாக வாழ்ந்திட வேண்டுமப்பா…!”

ஒவ்வொருவரும் அவரவர்கள் கடந்த காலத்தை எண்ணிக் கலங்கிடாமல் நம்முள் உள்ள பரமாத்மாவின் நிலையை அறிந்து வாழ்ந்திடுங்கள்.

1.தவறின் நிலையை எல்லாம் மறந்துவிட்டு
2.இனி தவறில்லாத வாழ்க்கையை வாழ்ந்து
3.பிறந்த பயனை இக்கலியின் கடைசியில் கல்கியில் ஒவ்வொருவரும் ஒளி நிலை அடையத்தான் இதை உணர்த்துகின்றேன்.
4.என்னுடைய (ஈஸ்வரபட்டன்) ஆசிகள் உங்களுக்கு உறுதுணையாக இருக்கும்.

May 11, 2021

நன்றாக இருப்பவர் திடீரென்று இருதயம் அடைத்து... சிறு நீரகம் செயலிழந்து மரணம் அடைவதன் காரணம் என்ன...? (HEART ATTACK KIDNEY FAILIURE)

 

வான் வீதியில் உருவானது “உயிரணு...” என்னென்ன குணங்களை நாம் எண்ணுகின்றோமோ அந்த “அணுக்களை...” நம் உடலில் சேர்த்துக் கொள்கிறோம்.

அது நம்முடன் சேர்ந்து வளர்ச்சி ஆகி அதனுடைய இனத்தைப் பெருக்கும் பொழுது அது “ஜீவ அணுவாக...” மாறுகின்றது.

வான் வீதியில் சூரியனிலிருந்து வெளி வரும் வெப்ப காந்தங்கள் கோள்களின் சத்தினை எடுத்துக் கொண்டால் அது வெறும் அணு தான்.
1.அந்த அணுவை நாம் சுவாசித்து நுகர்ந்த பின் உயிர் ஜீவ அணுவாக மாற்றுகின்றது.
2.ஜீவ அணுவாக மாறிய பின் ஜீவ ஆன்மாவாக ஆகின்றது.

ஒரு மனித உடலில் நோய்வாய்ப்பட்டது என்றால் அந்த உடலில் அது ஆன்மாவாக மாறுகின்றது. அந்த உடலில் விளைந்ததை நாம் கூர்மையாக உற்றுப் பார்த்தால் நோய்க்குக் காரணமான அணுக்களை நமக்குள் எடுத்துக் கொள்கின்றோம்… நம் உடலில் விஷத் தன்மையாக மாறுகின்றது.

அதே சமயத்தில் அண்ட நோய்வாய்ப்பட்டவர் உடலை விட்டுப் பிரிய நேர்ந்தால் அந்த உடலில் விளைந்த சக்தி நமக்குள் வந்து அந்த ஆன்மாவும் நமக்குள் வந்து விடுகின்றது.

நம் உடலுக்குள் வந்தவுடனே ஜீவ ஆன்மாவாக மாறுகின்றது. நமக்குள் வட்டமிடுகின்றது. நம் இரத்தத்தில் தான் அது சுழன்று கொண்டிருக்கும்.

ஆவி பிடித்தவர்களைப் பார்த்தோமென்றால் ஒரு வித வேகமான துடிப்புடன் இருப்பதைப் பார்க்கலாம். அந்த இரத்த ஓட்டங்களில் சுற்றிக் கொண்டு வருவதைப் பார்க்கலாம்.

1.இரத்தத்தில் சுற்றி வரும் பொழுது சிறு மூளை பாகம் வந்தால்
2.அந்த இறந்தவருடைய எண்ணங்களை வைத்து நம்மை இயக்கும்.
3.அங்கிருந்து (சிறு மூளை) விலகிச் சென்றால் மறுபடியும் சாந்தமாகி விடும்.

ஆனால் அது சிறு மூளையில் பட்டு இயக்கத் தொடங்கும் போது எண்ணங்கள் அது என்னென்ன எடுத்திருக்கின்றதோ அதை எல்லாம் பேசும். அதனுடைய உணர்வுக்குத் தகுந்த மாதிரி வேண்டாததை எல்லாம் கேட்கும்… வேண்டாததை எல்லாம் பேசும்.

ஆக இரத்த நாளங்களில் செயல்படுவது ஜீவான்மா. நமக்குள் இருந்து அதற்கு வேண்டியதை உற்பத்தி செய்து அதைச் சாப்பிட்டுக் கொண்டிருக்கும். அதனுடைய எண்ணங்கள் தோற்றுவிக்கப்படும் பொழுது தான் அதை நாம் சுவாசிக்கின்றோம்... உணர்வின் அணுக்களாக மாறுகின்றது.

ஆனால் ஜீவ அணுக்கள் என்பது நாம் சுவாசிக்கும் உணர்வின் தன்மை நம் தசைகளில் ஒரு சேர்கின்றது. அப்பொழுது ஒவ்வொன்றும் அடங்கி எந்தெந்த குணங்களை எடுத்தோமோ அந்த உணர்வை உடலில் இருந்து எடுக்கும்... வெளியிலிருந்து...!

செடிகளிலே வித்து விளைகின்றது. அதே மாதிரித் தான் மனித உடலில் அந்த எண்ணங்கள் உருவானால்... பதிவாகும் போது ஊழ்வினை என்ற வித்தாக உருவாகின்றது. பின் இந்த மனித உடலிலிருந்து அலைகளாகப் பாய்கின்றது.

நான் உபதேசிக்கிறேன் என்றால் சூரியனுடைய காந்த சக்தி கவர்ந்து அணுக்களாக மாற்றுகின்றது. அதை நீங்கள் சுவாசித்து உங்களுக்குள் வரும் பொழுது விளைந்து ஜீவ அணுக்களாகிறது.

என்னுடைய ஜீவ அணுக்கள் அதிகமான பிற்பாடு நான் இறந்து விட்டால் உடலுக்குள் வந்தால் ஜீவாத்மாவாக வருகின்றது. அது இரத்தத்தில் தான் இருக்கும். இரத்தத்தில் சில மாற்றங்கள் எடுத்துத் தன் உணர்வுகளை எடுத்துச் செயல்படுத்தும்.

இது போல் வருவதைத் தான் பேய் பிடித்தது... ஆவி பிடித்தது... ராட்சஸ உணர்வு போல் வருகிறது... என்றெல்லாம் சொல்வார்கள்.

சில கொடூரமான தெய்வங்களை உருவாக்கிப் கொடூரமான பல்லுடன் காட்டியிருப்பார்கள். அது போன்ற தெய்வத்தையே வாழ் நாள் முழுவதும் வணங்கி அந்த அந்த அலைகளைப் பதிவாக்கி அவர்கள் இறந்து விட்டார்கள் என்றால் அடுத்த உடலுக்குள் சென்றால் அதே நினைவுடன் தான் வரும்.

அடுத்த உடலை அடக்கி ஆட்சி புரியும் தன்மை வரும். வாய் பேச விட மாட்டேன் என்கிறது என்றெல்லாம் சொல்வார்கள். அது போன்று எத்தனையோ உண்டு.

ஆனால் அந்த ஆன்மா அது நம் இரத்தத்தில் தான் இருக்கும். அணுக்கள் நம் உடலோடு ஒட்டி வரும். தீமையின் உணர்வுகளுக்கு வரப்படும் பொழுது இரத்தத்தில் தான் இந்த அணுக்கள் பெருகும்.

1.இரத்தத்தில் இத்தகைய அணுக்கள் பரவும் பொழுது தான்
2.சில நேரம் இருதயத்திற்கு வரும்பொழுது இருதயத் துடிப்பு குறைகிறது... அதை அடைக்கும் (ஹார்ட் அட்டாக்)
3.அதே சமயத்தில் இரத்தத்தின் வழி அந்த அணுக்கள் கிட்னிக்கு வந்தால் விஷத் தன்மை பாய்ந்து கிட்னி பழுதாகி விடும்.

பார்க்கலாம் சிலருக்குத் திடீரென்று அட்டாக் வந்தது... சிறுநீரகம் செயலிழந்து விட்டது மரணம் அடைந்தார் என்று...! அது எல்லாம் இத்தகைய ஆன்மாக்களின் நிலைகளால் தான்.

அவரவர்கள் எண்ணத்திலிருந்து தான் ஆண்டவனின் சக்தி செயல்படுகிறது - ஈஸ்வரபட்டர்

 

இன்றைய உலகில் உள்ள பெரும்பகுதியானோர் தன் உயிரின் உண்மை நிலையையும்… கடவுளின் நிலையையும்… தான் வாழும் வாழ்க்கை நிலையையும்… புரியாத நிலையில் தான் வாழ்ந்து கொண்டுள்ளார்கள்.

ஈஸ்வர சக்தி பெற்ற… பிறப்பிலிருந்து நல்லவர்… கெட்டவர்… என்ற பாகுபாடு இல்லாமல் அச்சக்தியில் இருந்து அவர்களுக்கு அளித்த மாபெரும் சந்தர்ப்பத்தை “நலமாக வாழ்ந்திடத்தான்” ஒவ்வொருவரும் பிறக்கின்றார்கள்.

பிறவி எடுத்த நிலையில் அவரவர்கள் வளர்ந்த நிலை… மண் வாக்கு… மன நிலை… சுவாச நிலையைக் கொண்டு வாழும் பொழுது “தன் சுவாச நிலையிலே தான்” அவர்களுடைய நிலை எல்லாமே நடக்கின்றன.

1.இன்றைய காலத்தில் மக்கள் ஆண்டவனை வணங்குவது என்பதே
2.தன் கஷ்டங்களுக்கு மீட்கும் வழியை வகுத்துத் தரத்தான் பல கோவில்களுக்குச் சென்று வணங்குகிறார்கள்.
3.பல காணிக்கைகளைக் கட்டி பல வேண்டுதல்களையும் செய்து
4.ஆண்டவனையும் இவர்கள் செய்யும் வியாபாரத்தில் பாகஸ்தனாக்கி
5.இவர்கள் செய்யும் பாவத்திற்கும் ஆண்டவனின் பெயரை உபயோகித்துக் கொள்கிறார்கள்.

நான் அள்ளி அள்ளி ஆண்டவனுக்கு அளித்தேன்… எல்லா ஆண்டவனுக்கும் பல நிலையில் பூஜை செய்கிறேன்… அந்த ஆண்டவனுக்குக் கண்ணில்லையா…? என்றெல்லாம்
1.இவர்களுக்குக் கஷ்டம் வரும் பொழுது
2.அந்த ஆண்டவனையே எதிரியாகவும் ஆக்கிவிடுகின்றார்கள்.

இவர்கள் எண்ணி ஏங்கும் பொருள் கிடைக்க வேண்டும் என்ற நிலையில் எந்தக் கோவிலுக்காவது சென்று வந்தால் அந்த நிலையிலிருந்து பொருள் வந்தவுடன் ஆண்டவனை… “எல்லாம் அவன் தான்…!” என்கிறார்கள்.

(ஆனால்) இவர்கள் மன நிலையில் இருந்து தான் அவ்வாண்டவனின் சக்தியே செயல்படுகிறது.

அந்தச் சூரிய சக்தியிலிருந்து இவர்கள் ஈர்க்கும் நிலையிலிருந்து தான் அவ்வாண்டவனின் சக்தி செயல்படுகிறது என்ற உண்மையை இதைப் படிக்கும் அனைவரும் உணர்ந்து
1.அவரவர்கள் எண்ணத்திலிருந்து தான்…
2.அவ்வாண்டவனின் சக்தி செயல்படுகிறது என்ற உண்மையை உணருங்கள்.

நம் சித்தர்கள் பல வழிகளில் பல உண்மைகளைச் செய்யுள்களின் (பாடல்கள்) வடிவில் மனிதர்களின் எண்ணத்திற்குப் பதியும்படி முதலிலேயே வெளியிட்டுள்ளார்கள்.

ஆட்டை வெட்டுபவனுக்கு… ஒவ்வொரு நாளும் பல ஆடுகளை அடித்து வியாபார நிலைக்கு அவன் அதை விற்கிறான். ஆட்டை வெட்டுபவனுக்குத் தான் பாவம்… உண்ணுபவனுக்கு அல்ல…! என்று எண்ணுகின்றோம்.

அவன் எதற்காக ஆட்டை அடிக்கின்றான்…?

அவன் எண்ணமெல்லாம் அவனுக்கு வேண்டிய பொருள் கிடைத்திடத்தான்…! அதைச் செய்கிறான். பாவ புண்ணியத்தை அவன் எண்ணத்தில் கொண்டு வருவதில்லை.

பாவ புண்ணியத்தை அவன் எண்ணி விட்டால் அவன் எண்ணத்திலேயே அது ஊன்றி.. அவன் அந்தத் தொழிலை ஒரு நாளும் செய்திட முடியாது.

பல தண்டனைகள் பெற்ற கைதிகளை ஒருவன் தூக்கிலிடுகின்றான். ஒரே நாளில் அவன் பலரைத் தூக்கிலிட்டாலும்.. அவனுக்கு அந்தப் பாவம் அண்டுவதில்லை.

அவன் பொருள் வாங்க அந்தப் பணியைச் செய்கிறான். தன் மேல் தவறை எண்ணும் பொழுது தான் அவனுக்கு அந்நிலை தோன்றிடும். அவன் தொழில் அது தான்; அவன் ஊதியத்தைப் பெறுகின்றான்; அவன் எண்ணமெல்லாம் அந்த ஊதியத்தின் மேல் தான் உள்ளது.

அவன் ஆத்மாவில் அவன் நல்ல நிலைகள் பெற்றிருந்தால் அவனை எந்தப் பாவ புண்ணியங்களும் அண்டுவதில்லை. அவன் நிலையும் உயர்ந்து நிற்கிறது.

1.பல பாவங்கள் செய்துவிட்டு
2.செய்த பாவங்களைத் தன் எண்ணத்திலேயே கலக்கவிட்டு
3.தன் சுவாச நிலையை மேலும் கடினமாக்கிக் கொண்டு
4.பல இன்னல்களுக்கு ஆளாகின்றார்கள் இன்றைய மனிதர்கள்.

இந்நிலையிலிருந்தெல்லாம் விடுபட்டு நம் உயிரணுவிற்கு ஊட்டம் தந்து அவ்வுயிரணுவிற்கு அழியாச் செல்வத்தைத் தேடத்தான் இந்தப் பாட நிலையை எடுத்து இயம்புகிறோம்.

1.உயிரணுவின் உண்மை நிலையைப் புரிந்து கொள்ளுங்கள்
2.இனி வாழும் நாட்களை நல்ல நிலையில் வாழ்ந்திடுங்கள் என்பதற்கே இதை வெளியிடுகின்றோம்,

May 10, 2021

மனிதர்களான நாம் எந்தத் துன்பத்தையும் போக்க முடியும்

 

மனிதனாகத் தோன்றிய நாம் அனைவரும் பரசுராம்... சமப்படுத்தும் சக்தி பெற்றவர்கள். உதாரணமாக காய்கறிகளை நாம் வேக வைக்கின்றோம்... பல பொருள்களைச் சேர்த்துச் சுவையாக உருவாக்குகின்றோம்.

அதே போன்று பலராம்...! பலருடைய எண்ணங்களை நாம் கேட்டு நுகர்கின்றோம். ஆனாலும் அதிலே வரும் தீமைகள் விளையாது அருள் ஞானிகள் உணர்வை நமக்குள் கலக்கச் செய்ய வேண்டும்.... கலந்து விட்டால் தீமைகளை அது வேக வைத்துவிடும்.

மகரிஷிகள் என்பவர்கள் எத்தகையை நஞ்சையும் அடக்கி ஒளியாக மாற்றிடும் திறன் பெற்றவர்கள். அவர்களின் உணர்வுகளை எடுக்கப்படும் போது அந்த ஒளியான உணர்வுகள் உடலில் விளையத் தொடங்குகின்றது.

1.நம்மை அறியாது வரும் தீமைகளைத் தடைப்படுத்த இதை அவசியம் செயல்படுத்த வேண்டும்.
2.சிறிது நாள் பழகிக் கொண்டால் போதும். பிறகு நீங்கள் சொல்ல வேண்டாம்... அது தன்னாலே வரும்... சொல்ல வைக்கும்...!
3.இதற்கு முன்னாடி ஐய்யய்யோ... அம்மம்மா...! என்று சொல்வீர்கள்
4.இப்பொழுது ஈஸ்வரா... என்ற சொல் வரும். உயிரையும் நினைக்க வரும்
5.உயிரோடு ஒன்றி அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் என்று இணைத்து விட்டால்
6.உங்களுக்குள் அது சக்திவாய்ந்ததாக உருவாகிறது.

ஆனால் ஈஸ்வரா... என்று வேதனை கலந்த உணர்வை எடுக்கக் கூடாது. அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் என்று அதை இணைத்துப் பழக வேண்டும்.

1.இதன் படி செய்தால் எந்தத் துன்பத்தையும் நீக்க முடியும்.
2.உங்கள் சொல்லால் பிறருடைய துன்பத்தையும் போக்க முடியும்.
3.துன்பத்தை போக்கும் உணர்வுகள் உங்களிலே விளைகின்றது.

துன்பத்தைக் கண்டுணரும் பொழுது துன்பத்தை விளைவிக்கும் அணுக்கள் விளைகின்றது. அப்பொழுதெல்லாம் துன்பத்தை அகற்றிய அருள் மகரிஷிகளின் உணர்வை இணைத்தால் துன்பத்தை அடக்கும் சக்தியாக வருகின்றது.
1.கொஞ்சம் நாம் இதைப் பழகிக் கொள்ள வேண்டும்.
2.தியானம் என்பது இதுதான்...!

யாரோ செய்வார்... எவரோ செய்வார்... என்று எண்ணாதபடி தீமையை நீக்கிய அருள் உணர்வுகளை இப்படி வளர்த்துக் கொண்டால் நமது உயிரில் எதனை வலுப்படுத்திக் கொண்டோமோ அந்த மகரிஷிகள் வாழும் எல்லைக்கே நம்மை அழைத்துச் செல்லும்.

ஏனென்றால் கண்ணின் நினைவு கொண்டு எதனைக் கூர்மையாக எண்ணுகின்றோமோ அதன் வலிமை தான் நமக்குள் சேர்க்கின்றது.

வான மண்டலத்தை எண்ணும் பொழுது நினைவு மகரிஷிகள் பால்தான் செல்கின்றது. அந்த உணர்வின் தன்மை ஆகும் போது கூர்மை அவதாரம்.

கண்ணன் அர்ச்சுனனுக்குச் சாரதியாகச் செல்கின்றான் என்று காட்டுகின்றார்கள்.

ஒருவன் கடுமையாக வேதனைப்படுகிறான் என்று உற்றுப் பார்த்துப் பதிவாக்கினால் அந்த உணர்வுகள் சாரதியாக வருகின்றது. அந்த வேதனையான உணர்வுகளை நமக்குள் சேர்ப்பிக்கின்றது.

ஆனால் அதைத் தடுக்க அந்த அருள் ஞானிகளின் உணர்வை நாம் பெற வேண்டும் என்று எண்ணி எடுத்தால் அது அர்ச்சுனனாகி வலிமை ஆகின்றது.

1.நம் கண்கள் அங்கே அந்த மகரிஷிகள் இருக்கும் இடத்திற்கு அழைத்துச் செல்கின்றது.
2.வலுவாக எண்ணி நாம் எடுக்கும் இந்த உணர்வின் பிரகாரம்
3.உயிர் நம்மை அந்தச் சப்தரிஷி மண்டலத்திற்கு அழைத்துச் செல்லும்.

வேதனைப்பட்டே வாழ்வது நல்லதா… அல்லது அதிலிருந்து விடுபட வேண்டும் என்று எண்ணி வாழ்வது நல்லதா…? - ஈஸ்வரபட்டர்

           

எண்ணத்திலும் செயலிலும் வார்த்தையிலும் “உயர்வு… தாழ்வு…” என்ற எண்ணம் தான் மனிதர்களின் மனதிலே ஊன்றியுள்ளது.

உயர்வு எனும் பொழுது நம் உடலுக்கு… நம் உயிருக்கு.. அழியாச் செல்வம் என்ற உயர்ந்த நிலை நாம் பெற வேண்டும் என்ற உயர்ந்த எண்ணம் தான் நம் எண்ணத்தில் ஊன்றி நிலைத்திட வேண்டுமப்பா…!

1.உடல் வாழ்க்கையில் இந்த உலகிலே சேர்த்திடும் சொத்து சுகத்தைத்தான் நாம் எண்ணி வாழ்கின்றோம்.
2.அழியாச் செல்வத்தை நாம் எண்ணுவதில்லை.
3.தூல சரீரத்தைத்தான் எண்ணிக் கொண்டிருக்கின்றோம்… சூட்சம சரீரத்தை எண்ணுவதில்லை.

மனிதர்களின் எண்ணமும் செயலும் இன்னும் ஒரு நிலைப்படாமல் இந்தச் சரீர நிலையை எண்ணிக் கொண்டே தான் வாழ்ந்து கொண்டுள்ளார்கள்.

1.வாழும் நாள் எல்லாம்…
2.மனித வாழ்க்கையில் ஏற்படும் இன்னல்களுக்கு நாம் மனதைத் தந்து விட்டால்
3.நம் மன நிலையில் பல சோர்வுகளை அடைந்து பல தீய அணுக்களின் செயல்களுக்கு நாம் உட்பட்டு
4.நம்மையே… நம் சுவாச நிலையையே… கெடுத்துக் கொள்கின்றோம்.

தீய எண்ணத்தை வளரவிட்டு அதையே எண்ணிக் கொண்டிருக்கும் பொழுது அந்தத் தீய அணுக்களின் வேலை துரிதப்படுகின்றது.

அந்த நிலையில் நம் உயிரணுவிற்குப் பெரும் சோர்வைத்தான் நாம் அளிக்கின்றோம். அதையே வளர விட்டால் நம் சுவாச நிலையும் மாறுபட்டு… இன்னும் பல தீய அணுக்களைத்தான் நாம் மேலும் மேலும் பெறுகின்றோம்.

இதையெல்லாம் அறிந்து நம் உயிரணுவிற்கு நாம் பெறும் அழியாச் செல்வமான “ஆத்ம ஜோதி” என்ற நிலையைப் பெற ஈஸ்வர தியானங்கள் பெற்று அதன் மூலம் நமக்குக் கிடைக்கும் பல அரிய பொக்கிஷங்களை நம் உயிரணுவிற்குச் சேமித்து வைக்க வேண்டும்.

இந்த உடலில் உள்ள பொழுதே மனிதனாகப் பிறந்த இந்தப் பாக்கியத்தை
1.ஞானச் சரீரத்திற்கு… அந்த ஞான நிலை பெற…
2.நம் ஆத்மாவிற்கு அழியா நிலை பெற…
3.நம் எண்ணத்திலும் செயலிலும் நல்ல உணர்வுகளையே என்றும் நாம் சுவாச நிலையில் எடுத்துக் கொண்டால்
5.நம் உயிர் நிலை ஊட்டம் பெறுகின்றது,

ஓ…ம் ஈஸ்வரா குருதேவா…!

May 9, 2021

ஒரே எண்ணத்தில் இருப்பதும்… தன்னை மறந்து இருப்பதும் தான் தியானம்…! என்று எண்ணுகின்றனர் - ஈஸ்வரபட்டர்

 

தியான நிலை என்றால் என்ன…? என்று தெரியாமலே பல தியான முறைகளை நாம் எல்லோருமே கையாளுகின்றோம்.
1.தியானத்தில் எப்படி அமர்வது…?
2.சுவாச நிலையை எப்படி ஒருநிலைப்படுத்துவது…?
3.தன்னை மறந்து அமரும் நிலை தான் தியான நிலை என்றும் பலர் எண்ணிக் கொண்டிருக்கின்றார்கள்.
4.தியானத்தில் அமர்ந்த பின் எண்ணத்தில் சிதறல்கள் வரும் பொழுதெல்லாம் அந்த எண்ணத்திலேயே ஊன்றிடாமல் எப்படி இருப்பது…? என்ற எண்ணத்திலும் உள்ளார்கள் பலர்.

இப்படிப் பல நிலைகளைச் சொல்லி உள்ளதால் தனக்கு எது உகந்தது…? எதை எடுத்துக் கொள்ளலாம்…? என்ற எண்ணத்திலேயே இன்னும் பலர் இருக்கிறார்கள்.

வாழ்ந்திடும் காலம் எல்லாம்… வாழ்க்கை வாழ்ந்து விட்டு
1.தன் வயதான காலத்தில்தான் ஜெப நிலையில் இருக்க வேண்டும்…
2.என் மனம் இன்னும் ஒருநிலைப்படவில்லை…! என்றெல்லாம் இன்றையப் பெரியவர்கள் பலர் உள்ளார்கள்.

ஜெபம் என்றால் என்னப்பா…? ஜெபித்திடும் பொருள் என்னப்பா…?

என் (ஈஸ்வரபட்டர்) வழியில் ஜெபம் என்பதெல்லாம் நம் ஜெபத்துடனே கலந்து
1.நம் நினைவிலும்…
2.கனவிலும்…
3.எந்த நிலையிலும்..
4.எந்த நிலை எனும் பொழுது - நம் வாழ்க்கை நிலையிலும் நாம் செய்யும் வேலை நேரத்திலும்
5.நம்முடனே அந்த ஆண்டவன் உள்ளான் என்ற எண்ணத்தில்…
6.அதாவது அந்த எண்ணம் மட்டும் அல்ல… “இருக்கிறான்…!” என்ற எண்ணத்தில்
7.ஒரே நிலையில் நாம் எண்ணிக் கொண்டே இருந்தால் அதுதானப்பா நமக்குகந்த ஜெபம்.

பூஜை செய்வது… கோவிலுக்குச் செல்வது… இவை எல்லாம் நம் மனதை அமைதிப்படுத்த வேறு நிலையிலிருந்து நம் எண்ணத்தை அந்த ஆண்டவனையே நாம் எண்ணிக் கொண்டிருப்பதற்காகத்தான்…!

ஜெப நிலையில் நீங்கள் இருக்கும் பொழுது உங்கள் எண்ணத்தை ஈர்க்கும் நிலை அந்தச் சித்தர்களின் நிலைக்கு வருகிறதப்பா..! அந்நிலையில் அவர்களுடைய பரிபூரண ஆசிகளைப் பெறுகின்றீர்கள்.

ஜெப நிலையில் இருக்கும் பொழுது நாம் விடும் மூச்சும் நல் மூச்சாக வெளிப்படும். எண்ண அலைகள் மற்ற அணுக்களுடைய நிலைகள் உயர்ந்த அணுக்களுடைய நிலைகள் நம்முடைய மூச்சிலும் கலக்கப்படுகிறது. நல்ல அணுக்களாகக் கிடைக்கப் பெறுகின்றது.

அந்நிலையில் சிறுகச் சிறுக நாம் ஈர்க்கும் மூச்சில் நம்முடைய உயிரில் அது சேர்க்கப்படுகின்றது. அது சிறுகச் சிறுக அந்த உணர்வுகள் சேர்க்கப்பட்டவுடன் நம் உயிர் நிலை உயர்ந்த சக்திகளைப் பெறுகின்றது.

அந்நிலையில் உயர்ந்த சுவாச நிலைகள் நம் உயிரணுவிற்கு உயிருக்கு ஊட்டமாகக் கிடைக்கப் பெறுகின்றது.

இந்நிலையில் அந்த உயிருக்கு நாம் பெற்ற சக்தி அந்த ஆத்மாவிற்கு ஊட்டமளித்திருப்பதனால் எந்தத் தீய அணுக்களும் தீய சொற்களும் நம்மை வந்து அணுகாது.

1.நம் சுவாச நிலையிலேயே நம் ஜெப நிலையில் இவ்வருளைப் பெற்றிருப்பதனால்
2.ஆயிரம் அணுகுண்டுகளைப் போட்டாலும் அதலபாதாளத்தில் நம்மை அடைத்து வைத்திருந்தாலும்
3.சுவாச நிலையில் நாம் இந்நிலை பெற்றிருக்கும் பொழுது எந்தத் தீய சக்திகளும் நம்மை வந்து தாக்கிடாது.

இந்த நிலை பெறத்தான் இந்தப் பாட நிலை எல்லாமே…!

ஒவ்வொருவரும் இதில் உள்ள உண்மையை உணர்ந்து உருவமில்லா ஆண்டவனை எண்ணிக் கொண்டே பல கோடி ஜெபங்களை ஜெபித்துப் பல மந்திரங்களைச் சொல்லி கால நிலையைக் கடத்திடாமல்
1.ஓ…ம் ஈஸ்வரா… குருதேவா…! என்று புருவ மத்தியில் உயிரான ஈசனை எண்ணி
2.விண்ணிலிருந்து வரும் மகரிஷிகளின் அருள் சக்திகளைத் தியானத்தின் மூலம் பெற்றுக் கொள்ளுங்கள்.

தியானத்தில் இருக்கும் பொழுது உங்கள் ஜெபத்தில் பல நறுமணங்கள் கூடும் உங்கள் ஜெபத்திற்கு அருளை அளித்திடுவார் அவ்வீஸ்வரர்.

நாம் நம் ஆத்மாவிற்கு நல்ல மணங்களை அளித்துத்தான் ஊட்ட நிலையைப் பெற்றுக் கொள்ள முடியும்.

May 8, 2021

அருள் ஞானம் பெற வேண்டும் என்ற ஏக்கத்தில் வருவோருக்கு ஞானிகளின் உரச்சத்தை ஏற்றிக் கொடுக்கின்றேன்

 

ஆரம்பத்தில் குருநாதர் காட்டிய வழியில் பாதரசத்தையும் பச்சிலை மூலிகைகளையும் வைத்துச் சில மணிகளைத் தயார் செய்தேன் (ஞானகுரு). அதை வைத்துச் சில சக்திகளை எடுக்கும்படியும் சொல்லியிருந்தேன்.

ஏனென்றால்... அந்த அருள் சக்திகளை எடுத்து உடலிலே ஒவ்வொரு மணியாக எடுத்து இறுக்கிக் கொண்டு வரவேண்டும்.
1.அப்படி வளர்த்துக் கொண்டால் நட்சத்திரமாக முழுமையடையும்.
2.ஆண் பெண் என்ற நிலையில் (கணவன் மனைவி) அருள் உணர்வுகளைச் சேர்க்க வேண்டும்.

இதை எல்லாம் தெளிவாக அறிவதற்குத் தான் காடுகளுக்கு அழைத்துச் சென்றார் குருநாதர்.

தாவரங்களின் இலைகளைப் பார்த்தோமென்றால் ஒரே செடியாகத் தான் தெரியும். ஆனாலும் அதிலே ஆண் செடி பெண் செடி என்று இருக்கும்
1.அதிலிருந்து ரசத்தை எடுக்க வேண்டும்... அதைச் சேர்த்தால்தான் இணையும்
2.இல்லாமல் போனால் அதைச் சேர்க்க முடியாது.
3.மருந்து வகைகளை எடுத்துக் கொண்டால் ஆண் செடி பெண் செடி என்று சேர்த்தால் தான் அந்தக் கரு உருவாகும்.
4.அப்படி உருவானால் தான் அது மருந்துக்கு (மருத்துவத்திற்கு) உதவும்.

அதைத்தான் சித்தர்கள் காப்பு கட்டி வைத்திருக்கிறார்கள் என்று சொல்வார்கள்... பல பொய்களைச் சொல்லி வைத்திருப்பார்.

மூகாம்பிகையில் நான் இருக்கும் பொழுது சில மணிகளைச் செய்து அங்கே கொடுத்துவிட்டு வந்தேன். இது எல்லாம் சூட்சும நிலைகள் கொண்டு அன்று செயல்படுத்தியது.

பல இடங்களுக்கும் சென்று குருநாதர் கொடுத்த சக்தியைச் சரியா... தவறா...? என்று அவர் சொன்ன முறைப்படுத்தித்தான் செயல்படுத்தியது.
1.இந்த உண்மைகளை எல்லாம் நீ தெரிந்து கொள்ள வேண்டும்.
2.இதைத் தெரிந்து கொள்ளாதபடி எங்கேயும் வெளி விடாதே...! என்று சொல்லி விட்டார்.

அதை எடுத்து எல்லா இடங்களும் சுற்றி அறிந்த பிற்பாடு அந்த ஞானிகளின் சக்திகளை ஒவ்வொருவருக்கும் எப்படிக் கிடைக்கச் செய்ய வேண்டும்...? என்று தெரிந்து கொண்டு அதன் வழிகளிலே இப்போது கொடுத்துக் கொண்டு வருகின்றேன்.

என்னை மற்றவர்கள் போற்ற வேண்டும் என்றால் நான் எதை வேண்டுமானாலும் செய்யலாம். பார்த்தீர்கள் என்றால் அடேயப்பா… சாமி எவ்வளவு பெரியவர்…! என்று கூட்டங்கள் அதிகமாக வரும்.

ஆனால் அந்தக் கூட்டம் எதற்கு வரும்…?

இப்பொழுதும் சில கூட்டங்கள் வரத்தான் செய்கிறது அந்த கூட்டங்களை நான் கழித்துக் கொண்டுதான் இருக்கின்றேன்.
1.உண்மையான நிலைகள் ஞானத்தின் வழித்தொடரைப் பெற வேண்டும் என்ற ஏக்கத்தில் வருபவர்கள் தங்கியிருப்பார்கள்
2.இந்த உடல் இச்சைக்கு என்று கேட்டு வருபவர்கள் கொஞ்சம் குறைத்தே தான் இருக்கும்

ஆனால் இந்த அருள் ஞான வழியில் வருபவர்களுக்குக் கொஞ்சம் கொஞ்சமாக அந்த ஞானிகளின் உரச்சத்தை ஏற்றி வளர்த்துக் கொண்டே இருப்பேன்

முழுமையாக உடலுக்கு வேண்டும் என்றும் இந்த வாழ்க்கைக்குத் தான் வேண்டும் என்று வருபவர்களைக் கொஞ்சம் கொஞ்சமாக நான் கழித்து விடுவேன்.

ஆனால் உடலை வைத்துத் தான் நாம் அந்த அருள் சக்திகளை எடுக்க வேண்டும். அருள் ஞானத்தைப் பெற வேண்டும்.

நீங்கள் வளர்ந்தீர்கள் என்றால் மற்றவர்களும் அதைப் பெறக்கூடிய வாய்ப்புகள் கிடைக்கின்றது நீங்கள் வளர்ந்தால் தானே…!
1.நான் ஒருவன் வளர்ந்து என்ன செய்ய முடியும்…?
2.என் ஒருவனால் ஒன்றும் செய்ய முடியாது…!

நான் நினைக்கலாம் யானையைச் செய்வேன்... பூனையைச் செய்வேன்... என்று. அப்படி எல்லாம் சொன்னால் அது வெறும் திமிர் தான். அப்படி ஒன்றும் செய்ய முடியாது.

ஒரு நெல்லை எடுத்து விதைத்துப் பல நெல்களாக உருவாக்கி அந்த அருள் உணர்வின் தன்மையை எடுத்துச் சமப்படுத்த வேண்டும். அந்த உணர்வின் வலுவைக் கொடுத்து எல்லோரையும் பெறச் செய்ய முடியும்.
1.குரு கொடுத்து அது தான்…!
2.அதைத்தான் உங்களையும் செய்யச் சொல்கின்றேன்.

நான் அதைச் செய்தேன்… என்ற எண்ணத்திற்கு வந்துவிட்டால் பிறகு நானும் அந்த வளர்ச்சிக்குப் போக முடியாது… தீர்ந்துவிடும். ஆகையினால் நான் வளர வேண்டும் என்றால் நீங்கள் வளர வேண்டும் என்று நான் நினைக்க வேண்டும்.

மகரிஷிகளின் அருள் சக்தி நீங்கள் எல்லோரும் பெற வேண்டும்... உங்கள் பார்வை அனைவரையும் நல்லதாக்க வேண்டும்... என்ற இந்த எண்ணம் என்றைக்கு நான் கொள்கின்றேனோ
நீங்களும் வளர்கிறீர்கள்...
நானும் வளர்கின்றேன்...
உலகத்தையும் வளர்க்க முடிகின்றது...
நானும் அந்த வளர்ச்சிக்குச் செல்ல முடிகின்றது.

கவலையிலிருந்து மீள வேண்டும் என்பது போல் அதி சந்தோஷத்திலிருந்தும் மீள வேண்டும் - ஈஸ்வரபட்டர்

 

மனித உடலில்.. இந்த மனித ஜென்மத்தில்.. பல தவறுகளையும் பாவங்களையும் நடைமுறையில் நாம் எல்லோருமே செய்கின்றோம்.
1.அந்தத் தவறைத் தவறு என்று உணர்ந்து கொண்டு
2.“தவறு செய்யாதவர்கள்” யாருமே இருக்க முடியாதப்பா…!

அந்தத் தவறிலிருந்து விடுபட்டு தன் நிலை என்ன..? தான் யார்..? என்ற எண்ணத்துடன் பல நல்ல உணர்வுகளை நற்காரியங்களை எடுத்துக் கொண்டு
1.நம் எண்ணத்திலும் நம் சுவாசத்திலும் ஒரே எண்ணத்துடன் உயிரான ஈஸ்வரனை எண்ணும் பொழுது
2.நம் உயிர் நிலைக்கு.. நம் ஆத்மாவிற்கு.. அச்சக்திதான் ஒரு நிலையில் ஊட்டம் பெறுகிறது,

“அந்த நிலையிலேயே நாம் என்றும் இருந்து கொண்டிருந்தால்…” நம் வாழ்க்கை முறையில் பல இன்னல்களும் பல இன்பங்களும் வந்து மோதும் பொழுதும் நம் உயிர் நிலைக்கு… நம் ஆத்மாவிற்கு… இவை எல்லாம் ஒன்றும் செய்ய முடியாதப்பா..!

ஒரு மனிதனுக்குக் கஷ்டங்கள் கவலைகள் வந்திடும் பொழுது அவற்றிலிருந்து நாம் எப்படி மீண்டு… நம் எண்ணத்திலும் நம் சுவாசத்திலும் ஒரு நிலைப்படுத்திட வேண்டும் என்று சொல்கின்றோமோ அப்படித்தான் இன்பத்திலிருந்தும்… அதி சந்தோஷத்திலிருந்தும்… மீண்டு வர வேண்டுமப்பா…!

1.கவலையிலிருந்து மீண்டு வந்தால் எல்லாமே தீர்ந்தது…! என்று எண்ணிவிட வேண்டாமப்பா..!
2.நாம் எப்படிக் கவலையிலிருந்து மீள வேண்டும் என்று எண்ணுகின்றோமோ அதே போலத்தான்
3.அதி சந்தோஷத்தையும் நம்முள் ஏற்றுக் கொள்ளாமல் மீள வேண்டுமப்பா…!

இன்றைய மனிதர்கள் எல்லோருமே மனித வாழ்க்கையில் உள்ள கஷ்ட நஷ்டங்களில் கவலையிலிருந்து மீண்டு சந்தோஷ நிலைக்குச் செல்ல வேண்டும்…! என்று தான் விரும்புகின்றார்கள்.

1.இதிலிருந்து மீண்டு அதற்குச் செல்லும் பொழுது
2.அவ்வெண்ணமும் அந்தச் சுவாச நிலையும் மாறுபட்டு
3.நம் ஆத்ம நிலைக்கே அது பெரும் தீங்காகிறதப்பா…!

இந்த நிலையிலிருந்து மக்கள் மீண்டு ஒரு வழிக்குக் கொண்டு வரத்தான் அன்றைய ஞானிகளும் ரிஷிகளும் ஆண்டவனின் ரூபத்தை வைத்துப் பல நூல்களை வடித்தார்கள் “மனிதர்கள் மனதில் பதியும்படி…!”

மனிதர்கள் எண்ணத்தில் சுவாசத்தில் என்றுமே ஒருநிலைப்படுத்தி அவ்வுயிரணுவிற்கு ஊட்டம் சேர்த்துக் கொண்டால் அவர்கள் இருக்கும் ஜெப நிலையிலிருந்து பல உன்னத நிலைகளை அடையலாம்.
1.எண்ணத்திலும் சுவாசத்திலும் தானப்பா நம் ஆத்மாவிற்கு நாம் சேர்த்திடும் சொத்தெல்லாம் உள்ளதப்பா…!
2.பல ரிஷிகளும் ஞானிகளும் பெற்ற நிலையெல்லாம் அது தானப்பா…!

மனித வாழ்க்கையில் வந்திடும் பல இன்னல்கள் இன்பங்கள் எல்லாவற்றையும்
1.மனிதன் தன் எண்ணத்திலும் செயலிலும் எற்றுக் கொள்ளாமல்
2.பிறரின் புகழ்ச்சிக்கும் இகழ்ச்சிக்கும் தன் மனதைக் கலங்கவிடாமல் என்றும் ஒரே நிலையில் இருந்து
3.தன் எண்ணத்தில் வந்து மோதிடும் பல அபிலாஷைகளுக்கு அடிமையாகாமல் அதிலிருந்து மீண்டு
4.தன் சுவாச நிலையில் “ஒரு நிலை எய்தி வாழ்ந்திட வேண்டுமப்பா…!”

அது தான் நம் ஆத்மாவிற்கு நாம் சேமிக்கும் சொத்து...!

புள்ளி விபரம் வைத்துப் பல கணக்குகள் போட்டு நட்சத்திர மண்டலக் கணக்குகளை எல்லாம் மனிதர்களுக்குப் புகட்டிட விஞ்ஞானிகள் பல நாட்கள் தன் அறிவையும் நேரத்தையும் செலவழித்து மக்களுக்குப் புகட்டுகிறார்கள்.

இதிலெல்லாம் பெறும் இலாபம் என்னப்பா…! அதனால் மனித ஆத்மாவிற்குப் பயன் என்னப்பா…?

ஆத்மாவிற்கு எந்த நிலையை நாம் தேடிக் கொள்ள வேண்டும்…? என்ற எண்ணம் மனிதனுக்கு வந்துவிட்டால்
1.அவன் ஆத்ம நிலையில் இருந்து கொண்டே அறிந்திடலாம்
2.அகண்ட அண்டத்தில் உள்ள பல கோடி உண்மைகளை…!

May 7, 2021

கதைகளிலும் காவியங்களிலும் வடித்த உருவம் தான் கடவுள்..! என்று எண்ணிக் கொண்டிருக்கின்றார்கள் - ஈஸ்வரபட்டர்

 

இன்றைய மக்களுக்கு… நன்மை தீமைகளை வழி வகுத்துச் சென்றிட… புரியாத நிலைகளில் தான் இன்றைய மதங்களும் மக்களும் உள்ளார்கள்.

ஆதியில் இருந்து…
1.இம் மனித ஆரம்ப காலத்திலிருந்தே... உதயத்திலிருந்தே வந்த பல சித்தர்கள் கொடுத்த உண்மை நிலைகளை எல்லாம்
2.அவரவர்கள் நிலைக்குத் தகுந்தபடி பிரித்தும் சேர்த்தும் சிதற விட்டுவிட்டார்கள்.

பல உண்மை நிலைகளை மதம் என்ற அடிப்படையில் உலகில் பல பாகங்களில் பல சித்தர்களால் வெளியிட்டதை
1.அந்தந்த நிலையில் உள்ள மக்களுக்குப் புரியும்படியாக வெளியிட்டதை
2.காலத்தின் செயலால் ஒரே அடிப்படையில் ஒவ்வொருவரும் தன் நிலைக்குச் சாதகமாக்கிக் கொண்டார்கள்.

ஆனால் எல்லோரும் சொல்லும் அடிப்படைக் கருத்து நம் ஆத்மாவிற்கு நாம் சேமித்து வைத்திடும் நிலை என்ன…? என்ற ஒன்றே தான்.

அதை வைத்துத்தான் பலர் பல வழிகளில் பல கதைகளைக் கட்டி… உண்மை இரகசியத்தை எல்லாமே மக்களுக்கு உண்மையாகப் போதிக்காமல் கதை வடிவில் அதை வடித்து
1.கதையையே கடவுளாகக் காட்டி…
2.மக்களுக்குக் கடவுள் என்றாலே “கதையில் வடித்த உருவம் தான்…!” என்ற எண்ணம் வரும்படிச் செய்துவிட்டார்கள்.

எல்லா மக்களுமே தான் உயர வேண்டும்… உயர்ந்த வாழ்க்கை வாழ வேண்டும்… என்ற எண்ணத்தைக் கொண்டு தான் வாழ்கின்றார்கள். ஆனாலும் அவ்வாழ்க்கையில் வரும் பேராசை நிலையில் தான் பல பாவங்களுக்கு உட்படுகின்றார்கள்.

நல்வழியில் நடத்திச் சென்றிடத்தான் அன்றையச் சித்தர்கள் பல அரும்பாடுபட்டுத் தவமிருந்து தான் பெற்ற சக்தி நிலைகளை மக்களுக்கு உணர்த்தினார்கள்.

இராமாவதாரத்தில் வந்த வான்மீகி முனிவரால் எழுதப்பட்ட இராமாயணக் காவியத்தையே அதில் உள்ள உண்மைத் தத்துவத்தைப் புரிந்து கொள்ளாமல் விட்டுவிட்டார்கள்.

அதில் உள்ள குணா அம்சங்களை ஒவ்வொரு நிலையிலும் ஒவ்வொரு மனிதனுக்கும் எப்படிக் குணா அம்சங்கள் அமைகிறது…? என்ற தத்துவ உண்மைகளை உணர்த்திடாமல்
1.அந்தக் கதையையே தன் தன் நிலைக்கு உகந்தபடி மாற்றியும் மறுத்தும்
2.இது தான் உண்மை… இது எல்லாம் தவறு…! என்று சுட்டிக் காட்டும் நிலையில் அன்றே சிலர் திருத்திவிட்டார்கள்.

அன்று எழுதிய இராமரின் கதை தான் இன்றும் பல கோணங்களில் திரித்துச் சிதறடித்தாலும் அந்த இராமரின் கதையே தான் உலவிக் கொண்டுள்ளது.

இராமாயணத்தின் மகத்துவத்தை அதிலுள்ள உண்மை நிலைகளை உலகிலுள்ள மக்கள் எல்லோரும் புரிந்து கொண்டால் இன்று உலகில் நடந்திடும் இக்குழப்ப நிலைகளும்… மனிதனை மனிதன் ஏமாற்றி வாழும் நிலையும் இருந்திடாதப்பா…!

எல்லோரும் என்னும் பொழுது ஒரு நற்செயலைச் செய்பவரும் நல்ல காரியத்தைச் செய்பவர்களும் பல நல்ல நிலைகளை எல்லாம் இப்பொழுது மதங்களின் வழியில் தன் தன் மதத்திற்கு உகந்தபடி சிதறடித்து விட்டார்கள்.

1.ஒருவனே தேவன் ஒன்றே குலம்…
2.அத்தேவனில் இருந்து பிரிந்து வந்த பிம்பங்கள் தான்… நாம் எல்லோருமே…
3.எந்த மதத்திற்கும் யாரும் அடிமையில்லை…! என்ற சொல்லெல்லாம் இந்த மனிதனின் மனதிலும் ஏறவில்லை.

ஏட்டிற்கும் எழுத்திற்கும் தான் அது எல்லாம் இப்பொழுது உகந்ததாக உள்ளது.

ஆண்டவனையே… “தனக்கு மட்டும் தான் சொந்தம்…!” என்ற எண்ணத்தில் கோவில்களுக்குச் செல்பவர் தான் பலர் உள்ளனர் இன்றும்.

நல்ல குணங்களை வேட்டையாட நினைக்கும் தீமைகளை மகரிஷிகளின் அருள் ஒளி கொண்டு நாம் வேட்டையாட வேண்டும்

 

இந்த உடலில் இருக்கப்படும் பொழுதே மெய் ஒளியின் அருள் அந்த மகரிஷிகள் பெற்ற அருள் ஒளிகளைப் பெற வேண்டும் என்று எண்ணுங்கள்.

சாமியிடம் (ஞானகுரு) போனோம்... சாமி கொடுக்கவில்லை...! என்று குறையை எண்ணாதீர்கள். அந்த அருள் ஒளியை வளர்ப்போம்... அந்த அருள் ஒளியினுடைய நிலைகளில் ஒளி நிலை பெறுவோம். நாம் வாழ்க்கையில் வரக்கூடிய தீமையின் நிலைகளை நம் மூச்சாலே நம்மை அணுகாது பாதுகாப்போம் என்று உறுதி கொள்ளுங்கள்.

அந்த மெய் ஒளியின் நிலைகள் பெறப்படும் போது இருள் விலகும், அந்தப் பொருள் தெரியும். இருள் விலகிப் பொருள் காணும் போது வாழ்க்கையிலும் நீங்கள் பொருள் காணலாம்.

உடலில் எவ்வளவு வேதனைகள் துன்புறுத்தினாலும் அந்த இருளை மாய்க்க உங்களுக்கு யாம் கொடுப்பது ஆத்ம சுத்தி என்ற ஆயுதம்.

புலி நம்மைத் தாக்க வரும்போது அதை வேட்டையாடுவதற்கு அம்பைக் கொண்டு எவ்வாறு எய்கின்றோமோ அதே போன்று
1.உங்கள் உடலுக்குள் நின்று உங்களை வேட்டையாட நினைக்கும்
2.அந்தத் தீய விஷ உணர்வுகளையும் வேதனைப்படச் செய்யும் அந்த உணர்வின் தன்மைகளையும்
3.வேட்டையாடுவதற்குத்தான் இந்த ஆத்ம சுத்தி என்ற ஆயுதம்.

ஓ...ம் ஈஸ்வரா...” என்று அந்த உயிரை எண்ணி மகரிஷிகளின் அருள் சக்திகளை எடுத்து உங்கள் உடலுக்குள் செலுத்தி ஆத்ம சுத்தி செய்து
1.உங்களை வேட்டையாடிக் கொண்டிருக்கும் வேதனைப்படுத்திக் கொண்டிருக்கும்
2.அந்த உணர்வின் தன்மைகளை அந்த மகரிஷியின் அருள் ஒளியாலே அடக்கச் செய்யுங்கள்.

அப்போதுதான் அவைகள் அடங்கும்.

வேதனையாக இருக்கின்றது என்ற நிலையை மறந்துவிட்டு அந்த மகரிஷிகளின் அருள் ஒளியாலே எனக்குள் இருக்கக் கூடிய துன்பங்கள் நீங்கும் என்ற உணர்வைச் சுவாசியுங்கள்.

அந்த உணர்வின் தன்மை மெய் ஞானியின் அருள் உணர்வு உங்களுக்குக் கிடைக்கும்போது, மெய் ஞானிகள் அவர்கள் உடலிலே எப்படித் தீமையை மாய்த்து மெய் ஒளியின் தன்மையைப் பெற்றார்களோ அந்தத் தீமையான உணர்வை மாய்க்க அருள் ஒளியின் தன்மையிலே சென்றால்தான் முடியும்.

நிறையப் பேர் சாமியிடம் சென்று வந்தோம்... தலை வலி போகவில்லை. சாமியிடம் சென்றால் என்ன கிடைக்கின்றது...? என்று எண்ணுவார்கள்.

அருள் வழியில் நன்றாக ஆகிவிட்டதென்றால் மீண்டும் வருவார்கள். அடுத்த முறை வந்து “சாமி...” என்று கேட்பார்கள். மூன்றாம் முறை வரும் போது என்ன செய்கிறார்கள்...?

நம் வாழ்க்கையில் அடிக்கடி அசுத்தங்கள் வந்து கொண்டே இருக்கும். அப்போது என்ன செய்கின்றோம்...?

அன்று நல்லதாக நடந்தது, இன்று யாம் சொன்ன வழிகளிலே தீமை நீக்கும் செயலாக நடந்தீர்களா...? என்று யாம் அவர்களிடம் கேட்டால், நேரம் இல்லைங்கே...! என்று சொல்கிறார்கள்.

இது போன்று நேரமில்லை என்ற நிலைக்கு வந்துவிட்டார்கள் என்றால் அவர்கள்... ஒன்றும் கிடைக்கவில்லை என்ற நிலைக்குப் போய்க் கொண்டிருப்பார்கள்.

அந்த மாதிரியாக, நமது வாழ்க்கையினுடைய நிலைகள் பயனற்றதாகப் போய் விடாதபடி நாம் மெய் வழி காண்போம்.

வாழ்க்கையில் வரக்கூடிய துன்பத்தைப் போக்குவதற்குத்தான் இப்பொழுது யாம் உபதேசிப்பது. அந்த ஆத்ம சுத்தி என்ற ஆயுதத்திற்குள் பல இரகசியங்கள் இருக்கின்றது.

இந்தத் தியானத்தின் நிலைகள் கொண்டு நமக்குள் ஆற்றல் பெற்றபின் யார் துன்பப்பட்டு வந்தாலும நாம் ஆத்ம சுத்தி செய்து கொண்டு அவர்கள் உடலில் இருக்கக் கூடிய தீமைகளை நீக்க அவர்களையும் அந்த ஆத்ம சுத்தி செய்யப் பழக்குங்கள்.

1.யாம் எப்படி உங்களை நல்லதாக்க வேண்டுமென்று விரும்பி
2.இந்த ஞானத்தின் வழி முறை கொண்டு உங்களுக்குள் சேர்க்கச் செய்கின்றோமோ
3.இதைப் போன்று நீங்களும் செயல்படுத்துங்கள்.

உங்கள் மூச்சாலும் பேச்சாலும் மற்றவர்களுடைய துன்பத்தைப் போக்கச் செய்யுங்கள். இதை உங்கள் அனுபவத்திலே நீங்கள் பார்க்கலாம். நீங்கள் உங்களை நம்புங்கள். நாம் எடுக்கும் தியானத்தின் மூலமாக ஆற்றல் மிக்க சக்தியைப் பெறமுடியும்.

யாரோ செய்து கொடுப்பார்... எவரோ செய்து கொடுப்பார்... என்று எண்ணாதபடி
1.நாம் இதைப் பெற முடியும் இந்த ஆற்றல் மிக்க சக்தி நம் உடலில் உண்டு
2.அந்த ஆற்றல் மிக்க சக்தியை நாம் பெற முடியும் என்ற நிலைக்கு நாம் வர வேண்டும்.

உயிருடன் தொடர் கொண்டு அந்த அலையின் வரிசையில் இங்கே பாய்ச்சப்படும் போது, ஒவ்வொன்றும் நல்லதாகும்.

1.நம்மால் முடியுமா...? என்ற பலவீனத்தை மட்டும் விட்டு விடுங்கள்.
2.எண்ணியதைப் படைக்கும் சக்தி உங்களை இயக்கிக் கொண்டிருக்கும்
3.உங்களை ஆண்டு கொண்டிருக்கும் இந்த உயிருக்கு உண்டு.

உயிரின் துணை கொண்டு அது எப்படி நம்மை ஒளியாக உருவாக்குகின்றதோ நம் உணர்வின் செயலை உருவாக்குகின்றதோ அதைப் போன்று நம் உணர்வுகள் அனைத்தும் அந்த ஈசனின் உணர்வின் ஒளி அலைகளாக மாறி அந்த உணர்வுகள் செயல்படும்.

ஆகவே... உயிர் நம்மை ஒளியாக இயக்கிக் கொண்டிருக்கும் அந்த உணர்வாக நாம் மாற்ற வேண்டும்... மாற வேண்டும்.

ஒன்றை ஒன்று விழுங்கித்தான் ஒன்றுக்குள் மறைந்து வருகின்றது. ஆனால் எல்லாவற்றிருக்கும் ஞானம் உண்டு. இன்றைக்குக் காற்றாக வருகிறதென்றால் இந்தக் காற்றும், போர் முறைகளிலேதான் வருகின்றது.

பல அணுக்களின் நிலைகள் கொண்டு நம் பூமிக்குள் விளைந்த நிலைகள் கொண்டு எதிர் நிலையான அலைகள் பட்டவுடன் ஒன்றுக்கொன்று போர் செய்துதான் சுழிக் காற்றும் வருகின்றது.

இவையெல்லாம் ஒன்றையொன்று வெல்லும் போது ஏற்படக் கூடிய மூச்சின் அலைகள்தான்.

ஆகையினாலே எல்லாமே இயற்கையின் செயல்தான். அனைத்தையுமே அறிந்துணரக்கூடிய ஆற்றல் மனிதனுக்கு உண்டு. மனிதனாக இருக்கக் கூடிய நாம் எதைக் கொண்டு எதை வெல்ல வேண்டும்...?

நாம் இருளை வென்று ஒளியாக்க வேண்டும். இது தான் கடைசி நிலை.

இருளை வென்று ஒளியாக உருவாக்கும் தன்மையை வளர்க்கச் செய்வதற்குத்தான் குருநாதர் எமக்குக் காட்டிய ஆற்றலை நான் பெற்றாலும் அதே ஆற்றலின் தன்மையை உங்களுக்குள்ளும் பாய்ச்சுகின்றேன் (ஞானகுரு).

ஆத்ம சுத்தியைச் சீராகக் கடைப்பிடித்து அந்த அருள் ஆற்றலை நீங்களும் பெறலாம். நீங்கள் பெறும் போது உங்கள் மூச்சலைகளால் உங்களைச் சந்திப்போரும் அந்த ஆற்றலைப் பெறுவார்கள்.

May 6, 2021

சாமியையே (ஞானகுரு) எண்ணிக் கொண்டிருப்பதைக் காட்டிலும் துருவ நட்சத்திரத்தின் சக்தியை எடுத்து உடலுக்குள் விளைய வைக்க வேண்டும்

 

இந்த மனித வாழ்க்கையில் நாம் எதிர்பார்த்தது கிடைக்கவில்லை என்றால் சோர்வு வந்து விடுகின்றது. அதனால் சிந்திக்கும் தன்மை இழக்கப்படுகின்றது… மாற்றங்கள் ஆகின்றது.

சிந்திக்கும் தன்மை குறைந்தால் அடுத்து நாம் எண்ணியபடி எதுவும் நடக்கவில்லை என்றால் விஷமாகின்றது. சோர்வு… சிந்தனை குறைவு… வேதனை என்ற இது மூன்றும் சேர்த்து ஒரு கருவின் தன்மையாகிறது. உயிர் அந்த அணுவாக உடலுக்குள் உருவாக்குகின்றது.

நான் நினைத்தேன் வரவில்லையே… என்ற எண்ணத்தில்
1.“சாமி (ஞானகுரு) சொன்னாரே…
2.கிடைக்கவில்லையே… கிடைக்கவில்லையே…! என்ற உணர்வைத் தான் மீண்டும் வளர்க்க முடியும்.
3.ஆக.. கீழான நிலைக்குத் தான் போக முடியும்.
3.வலு கொண்ட நிலையிலே சாமியை எண்ணுவீர்கள்
4.ஆனால் சாமி சொன்னதை (உபதேசம்) விட்டு விடுவீர்கள்.

வயலில் விவசாயம் செய்யும்போது களைகளைப் பிடுங்க வேண்டும் என்று சொன்னால் களையைப் பிடுங்குவதற்குப் பதில் முளைத்த நல்ல செடிகளைத் தட்டி விட்டால் என்ன செய்யும்…!

விவசாயத் துறையில் நல்ல வித்தைத் தான் கொடுக்கின்றார்கள்… பயிரிடுகின்றோம். ஆனாலும் வளர்ந்த பின் களைகளை எடுப்பதற்குப் பதில் களையுடன் சேர்த்து பயிரையும் பிடுங்கி விட்டால் பலனற்றுப் போகும்.

அதைப் போன்று தான்
1.நான் (ஞானகுரு) கொடுத்த அருள் ஞான வித்தை விளையை வைத்துத் தீமைகளை (களைகளை) நீக்குவதற்குப் பதில்
2.நான் கொடுத்த சக்தியையே வீழ்த்தி விடுகின்றார்கள்.

கொடுத்த சக்தியை இழக்கப்படும் பொழுது ஒரு காரியத்தை எண்ணிச் செய்தால் சோர்வடைந்து வேதனை என்ற நிலை உருவாகின்றது.

ஆனால் இதற்கு முன்… பல பிறவிகளிலும் புழுவிலிருந்து மனிதனாகத் தோன்றும் வரையிலும் எப்படி வளர்ச்சியடைந்தோமோ தன்னைக் காட்டிலும் வலு கொண்ட உணர்வு கொண்டு மீள வேண்டும்… மீள வேண்டும்… என்ற உணர்வுகளைச் சேர்த்துத் தான் வளர்ந்து வந்துள்ளோம்.

பரிணாம வளர்ச்சியில் வளர்ந்து அதன் வழி இத்தனையும் கடந்து வந்த மனிதன் நாம்
1.மீண்டும் தன் இச்சையின் உணர்வு உண்டு நிறைவேறவில்லை என்றால்
2.சோர்வும் வேதனையும் அடைந்து அத்தகைய அணுவின் தன்மையாக வரப்படும் பொழுது
3.நம் நல்ல குணங்களை அடக்கிவிடுகிறது… அதர்வண…!

நல்ல குணங்களை அடக்கியபின் தீமை செய்யும் உணர்வின் அணுக்கள் விளைந்து (யஜூர்) விட்டால் மீண்டும் சாம…!

அதே தீமையான எண்ணம் இயக்கத் தொடங்குகிறது. அதை மாற்றுவதற்குத் தான் குருநாதர் காட்டிய அருள் வழியில் அரும் பெரும் சக்தியை உங்களுக்குக் கொடுத்திருக்கின்றேன்.

தீமைளைளச் சந்திக்கும் சந்தர்ப்பங்கள் ஏற்பட்டால் ஈஸ்வரா…! என்று உயிரை எண்ணி மகரிஷிகளின் அருள் சக்திகளை ஒரு இரண்டு நிமிடம் எண்ணி எடுத்துக் கொள்ளுங்கள்

அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று உங்கள் உயிரிடமே வேண்டுங்கள். அது எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும் எங்கள் ஜீவாத்மா ஜீவ அணுக்கள் பெற வேண்டும் என்று உடலுக்குள் இணைத்துக் கொள்ளுங்கள்.

இப்படிச் செய்து வாழ்க்கையில் வந்த வேதனைகளை அடக்கப்படும் பொழுது அதர்வண. தீமைகள் செயலற்றதாகின்றது.
1.துருவ நட்சத்திரத்தை எண்ணி அந்த அருள் ஒளியின் அணுக்களைப் பெருக்கினால் அப்பொழுது யஜுர்…
2.ஒளியான அணுக்களாக நமக்குள் ஒவ்வொரு நாளும் வளர்க்க வேண்டும்.

ஆயுளை நிர்ணையிப்பது யார்…? என்பது பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது

 

1.எந்த ஆண்டவனும்… எந்தக் கடவுளும்… நம் ஆயுளை நிர்ணயிக்கவில்லை.
2.அவனவன் எண்ணத்தில் வருவது தான் எல்லாமே…!

அவனவன் சுவாச நிலையைக் கொண்டு அவனவனுக்கு வரும் வியாதிக்கும் பிணிக்கும் வித்திட்டவன் ஆண்டவனா…?

இவன் உண்ணும் உணவிலும் சுவாச நிலையிலும் உடல் என்னும் கூட்டிற்கு “இவனே தேடிக் கொள்கின்றான் பல வினைகளை…!”

இவன் உடலில் வரும் வியாதியில் இவன் உடல் படும் அல்லலைக் கண்டு இந்த உடலிலிருந்து பிரிந்து செல்கிறது அந்த ஆத்மா.

எந்த நிலையிலும் இவன் அந்த ஆத்மாவை ஆண்டவனாக எண்ணி இந்த உடலில் தங்கி இருக்க வேண்டும் என்ற அவா வைத்து “ஆண்டவனே தான் இவ்வாத்மா…!” என்ற எண்ணம் தோன்றி வேண்டிக் கொண்டால் இந்த உடலை விட்டு இவ்வாத்மா எந்தக் காலத்திலும் பிரிந்து செல்லாது.

1.ஆத்மா என்னும் ஜோதி தான் எல்லா உயிரினத்திலும் உள்ளதப்பா..!
2.பெரும் சித்தர்களும் ரிஷிகளும் அவர்கள் உடலில் உள்ள ஆத்ம சக்தியைப் புரிந்து கொண்டு தானப்பா
3.அவர்கள் அந்த உன்னத நிலையைப் பெற்றார்கள்.

மனித உடலில் தான் அந்த உன்னத நிலையைப் பெற்றுக் கொள்ளும் சந்தர்ப்பம் உள்ளது. மனித உடலை மாற்றிக் கொண்டால் இன்னும் பல கோடி ஆண்டுகளாகுமப்பா அந்த ஆத்மா ஜோதியுடன் ஜோதியாகக் கலப்பதற்கு…!

ஒவ்வொரு மனிதனும் “தன்னுள் ஆண்டவன் இருக்கின்றான்…!” என்ற எண்ணமுடன் வாழ்ந்திட்டால் இன்றையக் கலியில் நடக்கும் கூத்துக்கள் எல்லாம் இருக்காதப்பா…!

ஆண்டவனின் சக்தியைக் கல்லிலும் மண்ணிலும் பார்த்துத்தான் வணங்குகிறார்கள்.
1.இவர்கள் வேண்டுவதெல்லாம்…
2.அக்கல்லின் உருவத்தில் இவர்களுக்கு ஆண்டவன் வந்து அருள் செய்ய வேண்டும்…! என்ற எண்ணம் தான்
3.இன்றும் அப்படித்தான் உள்ளது.

நம் ஆத்மாவில் உள்ள அருளை நாம் தெரிந்து கொள்ள வேண்டுமப்பா…! நம் ஆத்மாவின் மூலமாக நாம் ஜெப நிலையில் இருக்கும் பொழுது எல்லா நிலையையும் அறிந்து கொள்ளலாம்.

1.நாம் யார்…?
2.நம் ஆத்மாவின் நிலை என்ன…?
3.நம்முள் இருக்கும் ஈசனின் சக்தி என்ன…? என்ற எல்லா உண்மையுமே அறிந்து கொள்ளலாம்.

நாம் பாவம் செய்து விட்டோம்…! அதனால் நமக்கு இனி இந்த ஜென்மத்தில் என்ன பேறு கிடைக்கப் போகிறது…? என்ற எண்ணம் என்றுமே எண்ணிடலாகாதப்பா…!
1.தவறை எண்ணி வருந்தும் பொழுதே
2.நம் ஆத்மா நம் தவறுக்கு மன்னிப்பு அளிக்கின்றதப்பா…!

நம் ஆத்மாவின் நிலையேதான் ஆண்டவன் என்ற ஒரே எண்ணம் மக்களுக்கு வந்து தன் நிலையை உயர்த்திக் கொள்ள வேண்டுமப்பா..! அழியும் யுகத்தில் அழியாச் செல்வம்… ஒரே செல்வம்… இவ்வாத்மா தானப்பா…!

கலியின் கடைசியில் கல்கியின் ஆரம்பமான நாளில் “கடைசிச் சந்தர்ப்பத்தை…” ஒவ்வொரு மனிதனும் பயன்படுத்திக் கொண்டு தன் ஆத்ம ஜோதியை அவ்வாண்டவனுடன் கலக்க விட்டு ஆண்டவனுடன் ஆண்டவனாக அச்சூட்சம உலகத்திற்கு அழைத்துச் செல்லத்தான் இந்தப் பாடங்கள் எல்லாமே…!

இதைப் படிக்கும் ஒவ்வொருவரும் இவ்வாத்மா என்னும் ஆண்டவனின் சக்தியைப் புரிந்து கொண்டு
1.ஆத்ம ஜோதியாகக் கலந்திட வேண்டும் என்பது தான்
2.இவ் ஈஸ்வரபட்டனாகிய உங்கள் குருவின் குருநாதனாகிய நான் அளித்திடும் “பொக்கிஷம்…!”

May 5, 2021

சீராக ஆத்ம சுத்தி செய்வோருக்குக் கிடைக்கும் பலன்கள்

 

அந்த மகரிஷிகளின் சக்திகளை எடுத்து நமக்குள் வலுவாக வளர்த்துக் கொண்டே வந்தோம் என்றால் அந்த உயர்ந்த சக்திகளின் இயக்கங்களை “அனுபவபூர்வமாக நமக்குள் பார்க்கலாம்...”

தீமை செய்யக் கூடியவர்கள் யாராவது... நமக்கு இடைஞ்சல் செய்ய வேண்டும் என்று எண்ணினாலும் கூட...
1.அது அவர்கள் உடலில்தான் வளரும். அவர்கள் உணர்வுகள் நம்மைப் பாதிக்காது.
2.எப்படி வேண்டுமானாலும் இருக்கட்டும்... தீமை செய்ய வேண்டும் என்று நினைத்தார்கள் என்றால்
3.அந்த எண்ணம் அவர்களைப் பாதிக்கும்... பாதிக்கும் போது தான் நினைப்பார்கள்.

இந்த மனிதனை நாம் என்னவெல்லாம் பேசினோம்... என்று நினைப்பார்கள். இதை நிச்சயம் அங்கே உணர்த்தும்...!

ஏனென்றால் இந்த உணர்வுகள் போனவுடன் நினைவலைகள் முன்னுக்குப் போகும்... நம்மைப் பற்றிய நினைவுகள் வரும்.
1.இந்த மனிதனை நாம் தொந்திரவு செய்து விட்டோம் என்ற எண்ணம் வரும்.
2.நிச்சயம் இந்தத் திருப்பம் வரும்.

இதே போன்று குடும்பங்களில் அடிக்கடி சில குறைபாடுகள் வந்தால் அந்தக் குறைகளுக்குக் காரணம் நாம் அல்ல. அந்த உணர்வுகள் தான் நம்மை இயக்குகின்றது.

அந்த நேரங்களில் எல்லாம் உடனடியாக ஆத்ம சுத்தி செய்து கொள்ள வேண்டும். துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் நாங்கள் பெற வேண்டும்... அது எங்கள் குடும்பம் முழுவதும் படர வேண்டும் என்று எண்ணி எடுத்துப் பழக வேண்டும்.

காரணம் இன்றைக்கு மட்டும் வந்ததல்ல இது. தாய் கருவில் இருக்கும் போதே இந்த வினைகள் தொடர்ந்து வந்தது.

அதே போல் ரோட்டிலே சாதாரணமாகச் சென்றாலும் கூட அங்கே இரண்டு பேர் சண்டையிடுவார்கள்.. ஒருவருக்கொருவர் சாபமிட்டுப் பேசியிருப்பார்கள். சும்மா வேடிக்கையாக நாம் காதிலே கேட்டாலும் கூட அதுவும் நமக்குள் அந்தச் சாபம் பதிவாகி விடுகிறது.

ஆனால் நாம் தவறு செய்து அது நமக்குள் வரவில்லை.
1.இந்த மாதிரிச் சாப அலைகள் நம் உடலில் எத்தனையோ விதமாக எத்தனையோ வகைகளில் பதிவாகியிருக்கும்.
2.அது எல்லாம் மிக சக்தி வாய்ந்தது.

எப்படி இருந்தாலும் உதாரணமாக ஒரு கேமராவில் படம் பிடிக்கிறோம் என்றால் குறுக்கே யாராவது வந்தால் படத்தில் அதுவும் அதில் சேர்ந்து பதிவாகத் தான் செய்யும். எடுத்த படமும் ஆடி இருக்கும் (BLURRED).

கேசட்டில் ஒரு இசையைப் பதிவு செய்கிறோம் என்றாலும் இடையில் யாராவது சத்தம் போட்டால் அதுவும் சேர்ந்து பதிவாகத் தான் செய்யும்.

இதே மாதிரித் தான் நம் உடலில் ஊழ்வினை என்ற நிலைகள் கொண்டு எத்தனையோ எண்ணங்கள் அதனுடன் சேர்ந்து சேர்ந்து பதிவாகிக் கொண்டே தான் இருக்கிறது.

அந்த நேரத்தில் நாம் எண்ணும் பொழுது குறுக்கே பதிவான எண்ணங்களும் ஊடுருவி நமக்குத் தெரிய வரும். அதே சமயத்தில் அது நம் காரியங்களைத் தடைபடுத்தும் உணர்வாகவும் வந்து சேரும்.

ஒரு நல்ல காரியத்திற்காகச் சென்று கொண்டிருக்கின்றோம் என்று வைத்துக் கொண்டால் அவர்கள் சாபமிட்டுப் பேசியதும் இதிலே சேர்த்து (JOINED) இரண்டும் இணைந்து விடும்.

எப்படி எல்லாம் கெட்டுப் போக வேண்டும் நினைத்துச் சாபமிட்டார்களோ அந்த வேலையெல்லாம் நமக்குள்ளும் நடக்கும்.

1.இது எல்லாம் ஒரு உணர்வின் ஒலி அலைகள் நமக்குள் வரும் பொழுது
2.அந்த மணம் வந்து உயிரில் பட்டு அதற்குத் தக்க மணமாகி “நமக்கே எதிரியாக வரும்...!”

இதை எல்லாம் துடைப்பது யார்...?

காரணம் இயற்கையின் நிலைகள் வளர்ச்சி அடைந்தது பலராம். பலருடைய எண்ணங்களை அறியும் சக்தியாக அந்த எண்ணங்கள் இயக்குவதை நமக்கு உணர்த்துகின்றது.

அதிலே வரும் தீமைகளைத் தடுக்க வேண்டும் என்றால் நரசிம்மா...! எப்பொழுது தீமை என்று அங்கே உணர்கிறோமோ... அது நம்து உடலுக்குள் போகாதபடி அங்கேயே பிளக்க வேண்டும்.

பிளக்க வேண்டுமென்றால் உயிர் வழி அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற வேண்டும் என்று உடலுக்குள் செலுத்த வேண்டும். தீமையான உணர்வுகள் புகாதபடி பிளந்து தள்ளிக் கொண்டே இருக்க வேண்டும்.

இதைத்தான் ஆத்ம சுத்தி என்று சொல்வது.

காவியத் தொகுப்புகள் இதை எல்லாம் தெளிவாக்குகின்றது. அதன் வழி நாம் செய்து பழக வேண்டும். சிறிது நாளைக்குச் செய்தாலே போதும். பின் தன்னிச்சையாக வேலை செய்யும்.

முந்திய பழக்கத்தில் எல்லாம்... யாராவது சொன்னால் அதிலேயே தான் நம் எண்ணத்தைச் செலுத்துவோம். ஆனால் இப்பொழுது
1.ஆத்ம சுத்தி செய்து வலுவாக்கிக் கொண்ட பின்
2.ஏதாவது இடைவெளியில் வந்து தடை செய்தாலும் கூட அதைக் கவனித்து மாற்ற முடியும்.

தீமை செய்யும் உணர்வுகள் குறுக்கிட்டால்...
1.உடனே அந்தத் தீமைகளைப் பிளக்க வேண்டும்
2.ஆத்ம சுத்தி செய்ய வேண்டும் என்ற இந்த உணர்வுகள் எல்லாம்
3.நமக்குள் தன்னிச்சையாகத் தோன்றும்.

ஒரு அழுக்குத் தண்ணீரில் சுத்தமான தண்ணீரை ஊற்ற ஊற்ற... அழுக்குத் தண்ணீர் எப்படிக் குறையுமோ அதைப் போன்று தான் ஆத்ம சுத்தி செய்யச் செய்ய... தூய்மைப்படுத்தும் சக்தியாக அந்த மகரிஷிகளின் அருள் சக்தி நமக்குள் பெருகுவதைக் காணலாம்.

ஆண்டவனிலிருந்து வந்த பிம்பங்கள் தான் அனைத்துமே என்று எண்ணினால்… “தான்” என்ற தனித்த அகங்காரம் வராது - ஈஸ்வரபட்டர்

 

உலகம் தோன்றியது முதலே வாழ்ந்திடும் ஜீவ அணுக்கள் எல்லாமே இந்த உலகம் என்று தோன்றியதோ… அன்றே ஆண்டவன் சக்தியில் அருளப் பெற்ற… அவ்வாண்டவன் சக்தியில் இருந்து உதித்த உயிரணுக்கள் தானப்பா…!

எறும்பிலிருந்து புழு பூச்சி மற்ற மிருகங்கள் பறவைகள் மரம் செடி கொடிகள் மனிதர்கள் யானை திமிங்கலம் நீரில் வாழ்பவை நிலத்தில் வாழ்பவை எல்லாமே எண்ணிலடங்கா வருடங்கள் முதல் கொண்டே அந்த ஆண்டவன் சக்தியில் ஆண்டவன் பிம்பத்தில் இருந்து உதித்த உயிரணுக்கள் தானப்பா…!

இந்த உயிர் அணுக்கள் எல்லாமே ஆண்டவன் தானப்பா…
1.எல்லா ஜீவராசிகளும் ஆண்டவன் தான்… ஆண்டவனிலிருந்து வந்த பிம்பங்கள் தான் என்று ஒருவரை ஒருவர் நினைத்துக் கொண்டால்
2.“தான்…!” என்ற அகங்காரமே தனித்து நில்லாதப்பா..!

ஜென்மங்களின் முறையைத்தான் பாட நிலையிலேயே அளித்துள்ளேன்.
1.நானும் ஆண்டவன் தான்… தன்னுள்ளும் ஆண்டவன் உள்ளான்.
2.தனக்கு எந்நிலை உள்ளதோ அந்நிலை தான் எல்லா ஜீவராசிகளிடமும் உள்ளது என்ற எண்ணம்
3.எல்லா மனிதர்களிடமும் தோன்றிவிட்டால் ஆண்டவனின் சக்தி என்ன…? என்று தெரிந்து கொள்ளலாம்
4.நம் ஆத்மாவிற்கு நாம் சேர்த்து வைக்க வேண்டிய சொத்து எது…? என்று புரிந்துவிடும்.

நம் மனித ஜென்மத்தில் நமக்கு அளிக்கப்பட்ட சந்தர்ப்பங்களிலிருந்து தான் நாம் நம் ஆத்மாவிற்கு அழியா நிலையைத் தேடி வைத்துக் கொள்ள முடியும்.

இந்த நிலையை நழுவ விட்டால்… நம் ஆத்மாவிற்கு இனி ஒரு சந்தர்ப்பம் “பல கோடி ஆண்டுகளானாலும்” கிடைப்பது அரிதிலும் அரிது என்பது புரிந்ததா…?

சந்தர்ப்பம் என்று சொன்னது… கல்கியில் ஆரம்பித்துக் கலியில் முடியும் காலத்திற்குப் பல கோடி ஆண்டுகள் ஆகின்றது. அந்தச் சந்தர்ப்பத்தில் மனித உடல் ஏழு ஜென்மங்கள் எடுக்கிறது.

இந்தச் சந்தர்ப்பத்தை நழுவ விட்டால் அடுத்து கல்கி பிறந்து பல அவதாரங்கள் எடுத்துப் பிறிதொரு கலி வரும் வரை நம் ஆத்மா அல்லல்பட்டுக் கொண்டு பல உடல்களை எடுத்து மனித ஜென்மம் எடுத்துச் சுற்றிக் கொண்டே இருக்க வேண்டும்.

1.மனிதனுக்குத் தன் உடலில் உள்ள ஒரு உறுப்பு தான் இந்த உயிரும்…
2.தன் ஆயுள் உள்ளவரை தான் இந்த உயிர் இவ்வுடலில் இருக்கும்… என்ற எண்ணம் தான் எல்லோருக்குமே உள்ளது.

ஆனால் இந்த உடல் என்ற கூட்டில் அந்த ஆத்மா என்னும் ஆண்டவனின் சக்தி வந்து தான் இயக்குகிறது.
1.உயிர் எனும் ஆத்ம சக்தியே… ஆண்டவனின் சக்தியாக நமக்குள் இயங்குகிறது என்ற எண்ணம்… என்ற இந்த உண்மை…
2.ஒவ்வொரு மனிதனும் தெரிந்து கொள்ள வேண்டியது மிகவும் அவசியம்.

உங்களுக்குக் கொடுத்த சக்திகளை ஒவ்வொருவரும் விரயம் ஆக்காது பயன்படுத்துங்கள்

 

டி.வி. ரேடியோ அலைகளை ஒலி/ஒளிபரப்பு செய்யப்படும் பொழுது அந்தந்த ஸ்டேஷன்களிலிருந்து வருவதைத் திருப்பி வைத்து நாம் கேட்கின்றோம்.

அதே போல் தான் ஒரு வியாபாரமே செய்கின்றோம் என்றால் அதிலே நிறையப் பேரின் உணர்வுகளை நமக்குள் பதிவாக்கி வைத்திருக்கின்றோம்

1.அந்த ஸ்டேஷனைத் திறந்தால் நமக்குப் பணம் கொடுத்தவர்களைப் பற்றி நினைப்பு வராது
2.கொடுக்காமல் இழுத்தடிப்பவர்களின் நினைவு தான் அதிகமாக வரும்.
3.பாவிப் பயல்... இந்த மாதிரிச் செய்தான்... அதைச் செய்தான்... இதைச் செய்தான் என்ற ஸ்டேஷனைத் தான் நாம் அடிக்கடி திறந்து வைப்போம்.

அதற்குத் தகுந்தாற்போல் பக்கத்து வீட்டுக்காரர் ஏதாவது செய்திருந்தால் அவர்கள் மீது அந்த நினைவுகள் வரும்.

அடுத்து நம் சொந்த பந்தங்களில் யாராவது ஒரு வித்தியாசமாகச் செயல்பட்டிருந்தால்... குறைபாடுகள் இருந்தால் “நல்லது செய்தாலும் நமக்கு இடைஞ்சல் செய்கிறார்கள்...” என்று அதைப் பற்றிய சிந்தனைகள் வரும்.

இப்படிக் குறைகளைப் பேச ஆரம்பித்தால் அந்தக் குறை... இந்தக் குறை... என்று எல்லாக் குறைகளும் வரிசையில் வந்து கொண்டே இருக்கும். நல்லதை நினைக்கவே வராது...!

கடைசியில் குறையைப் பேசிப் பேசி... என்ன உலகம்... போ...! என்ற இந்த எண்ணம்தான் வரும். இந்த உணர்வின் இயக்க ஓட்டங்கள் இருந்தால் நன்றாகப் பேசிக் கொண்டிருக்கும்போதே
1.பாருங்கள்... இந்தப் பையன் மோசமானவன்...! என்று சொல்வோம்.
2.நாம் சொன்னதும் அடுத்து இன்னொருவர் ஆரம்பிப்பார்.
3.கடைசி எல்லாவற்றையும் மோசம்... மோசம்... என்ற சொல்லாக வரிசையில் வரும்.

ஏனென்றால் இந்த உணவின் தொடர் வரிசை இப்படித்தான் வரும்.

நம் வாழ்க்கையில் இது போன்று வர ஆரம்பிக்கும் போதே அடுத்த கணம்... துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் நாங்கள் பெற வேண்டும் ஈஸ்வரா... என்று உயிரிடம் சொல்லி அவனிடம் வேண்டி அந்தழ் சக்திகளை எடுத்துப் பழக வேண்டும்.

ஏனென்றால் நம்மை உருவாக்கியது நமது உயிர் தான்.

1.தவறு செய்கிறார்கள் என்றால் நம் கண் அதை எடுத்துக் கொடுக்கின்றது
2.கண்ணின் கருவிழி ருக்மணி பதிவாக்குகின்றது.
3.கண்ணுடன் சேர்ந்த காந்தப் புலன் அந்த மனித உடலில் விளைந்த உணர்வினை இழுத்து நம்மிடம் கொடுக்கின்றது.
4..உயிரிலே பட்ட பின் தவறு செய்கின்றான் என்பதை உணர்த்துகின்றது.

உயிரான காந்தம் என்ன செய்கின்றது...?

ஒரு நாடாவில் விஞ்ஞான அறிவு கொண்டு இன்று பதிவு செய்கிறோம். பின் அந்த ஊசியின் பக்கம் சென்ற பின் அதை இழுத்துப் பேசுகின்றது.

முன்பெல்லாம் ஊசியில் உராய்ந்து கொண்டிருந்தது. இப்பொழுது லேசரை வைத்து முன்னாடி ஓட ஓட அதில் இருக்கும் உணர்வுகளை எடுத்து வெளிப்படுத்துகின்றது. உராய்வதில்லை... நாடாக்கள் தேய்வதில்லை. அந்த லேசர் தான் அந்த ஒலி/ஒளி அலைகளை எடுத்துக் கொடுக்கிறது.

இதைப் போன்றுதான் நாம் சுவாசித்த பின்...
1.நம் உயிர் லேசரைப் போன்று இயக்கி அந்த அலைகள் பாய்ந்த பின் உணர்வின் ஒலிகளை எழுப்புகின்றது.
2.உடல் முழுவதும் சர்க்குலேஷன் ஆகின்றது,

அப்பொழுது அதனதன் குணத்திற்கொப்ப உணர்வின் தன்மை வீரியம் அடைகின்றது. அது அது அந்த உணர்வுகளை எடுத்துத் தீமையான அணுக்கள் சாப்பிடுகிறது. அந்த வழிகளில் (உடலில்) அது தெம்பாகின்றது.

சொல்வது அர்த்தமாகிறதா...?

அந்த நேரத்தில் எந்த நல்லதை எடுத்தாலும் கிடைப்பதில்லை. நல்லது மடங்கப்படும் போது இங்கிருந்து ஈர்க்கும் சக்தி குறைந்து விடுகின்றது.

உடலுக்குள் நல்ல அணுக்கள் இருக்கின்றது. இது அடைபட்ட பின் நல்லது இழுக்கும் சக்தியோ பேசும் சக்தியோ இழந்து விடுகின்றது. இப்படி இருந்தால் அதற்குச் சாப்பாடு எப்படிக் கொடுப்பது...?

ஆகவே தான் அதைப் பிளந்து உங்களுக்கு உயர்ந்த சக்தியாகக் கொடுப்பதற்காக ஞானிகள் உணர்வை உங்களுக்குள் இந்த உபதேச வாயிலாகப் பதிவாக்குகின்றேன் (ஞானகுரு). சதா அந்த அலைகள் பாய்கிறது.

கொஞ்சம் உங்கள் நினைவுகளைக் கொடுத்தால்...
1.டக்... என்று அந்த அலைகளைப் பிளந்து ஞானிகள் உணர்வுகளை எடுக்க ஆரம்பிக்கும் (OPEN).
2.அப்பொழுது அந்த ஞானிகள் உணர்வுகள் ஊடுருவி உங்களுக்குள் சர்க்குலேஷன் வரப்படும்போது தீமைகளைத் துடைத்துவிடும்.
3.நல்ல சிந்தனைகளும் நல்ல நினைவாற்றலும் வரும்.

செய்து பாருங்கள்.

May 4, 2021

நல்லவர்களையும் நல்லவர்களாக வாழ விடுவதில்லை இன்றைய உலகம்… இதிலிருந்து மீள வேண்டும் - ஈஸ்வரபட்டர்

 

நாம் உண்ணும் உணவை எல்லாம் நம் உடல்… உடலுக்கு ஏற்ற சத்தை மட்டும் ஏற்றுக் கொண்டு மற்றவற்றை எல்லாம் கழிவுப் பொருளாக ஆக்கிவிடுகின்றது.

1.நம் உடல் அமைப்பையே ஆண்டவன் இந்நிலையில் அளித்திருக்கும் பொழுது
2.நம் ஆத்மாவிற்கு நாம் இன்னும் எத்தனை பெரும் தெய்வீக நிலையை ஏற்றுத் தர வேண்டுமப்பா..!

நம்மைச் சுற்றிப் பல பல காரியங்களும்… நல்லெண்ணம் உடையவர்களும்… தீய எண்ணம் உடையவர்களும்… எல்லாம் தான் கலந்துள்ளன.

நம்முள் இருக்கும் பல கோடி அணுக்களின் உந்துதலுக்கு நாம் ஆளாகாமல் நம் சுவாச நிலையில் நம் ஆத்மாவுக்கு வேண்டிய நல்ல நிலையைத்தான் நாம் பெற வேண்டுமப்பா…!

நம் உடல் அமைப்பை ஆண்டவன் இந்நிலையில் அளித்திருக்கும் பொழுது நம் ஆத்மாவிற்கு நாம் தானப்பா பெரும் பொக்கிஷத்தைத் தேடி வைக்க வேண்டும்.

இன்றைய பெரும் பகுதி மனிதர்கள் உள்ளோன்று வைத்து வெளியிலே ஒன்று பேசுபவர்களாகவும்… பிறருக்காக… பிறர் மெச்சத் தான் வாழ வேண்டும்… என்ற எண்ணம் உடையவர்களாகவும் தான் நாம் பார்க்கின்றோமப்பா..!
1.பிறருக்காக வாழ்பவரும்
2.பிறர் பார்த்துப் புகழ வேண்டும் என்ற எண்ணத்தில் வாழ்பவரும்
3.பிறரைத் துவேஷிப்பவரும்
4.பிறரைப் புகழ்பவரும் எல்லோருமே
5.தன் ஆத்மாவை மறந்து விடுகின்றார்களப்பா…!

இன்றைய உலகில் உள்ள நற்காரியங்கள் செய்பவர்களும் புகழ்ச்சிக்கு ஏங்கித்தான் செய்கிறார்களப்பா…!
1.புகழ்ச்சிக்கு ஏங்கிச் செய்யும் நற்காரியங்களும்
2.ஆத்மாவிற்கு ஒரு நன்மையும் செய்வதில்லையப்பா…!

பசித்து வருபவனுக்குப் பசி அறிந்து அன்னமிட்டாலும் இந்தக் காலத்தில் அதையும் ஏமாற்றிப் பிழைக்கத்தான் பார்க்கின்றார்களப்பா…! நல்லவர்களையும் நல்லவர்களாக வாழவிடுவதில்லையப்பா இன்றைய உலகம்.

இன்றைய உலகிலிருந்து மீண்டு வருவதுவே நம் ஆத்மாவிற்குத் தேடித் தரும் பொக்கிஷமப்பா…!

May 3, 2021

மகரிஷிகளின் உணர்வலைகளைக் கவர்ந்து நம் உடலுக்குள் சக்கரம் போல் சுழலச் செய்ய வேண்டும்

 

துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் சப்தரிஷி மண்டலங்களின் பேரருளும் பேரொளியும் நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று உயிரை எண்ணி ஏங்கித் தியானியுங்கள்.

புருவ மத்தி வழியாகத் தியானித்து நினைவுகள் அனைத்தையும் துருவ நட்சத்திரத்தின் பாலும் சப்தரிஷி மண்டலங்களின் பாலும் செலுத்தினால் அதனின்று வெளிப்படும் பேரருள் பேரொளியை நுகர்ந்து அறிய இது உதவும்.

இவ்வாறு செய்யும் பொழுது உங்கள் நினைவுகள் எல்லாம் வான மண்டலம் சென்றிருக்கும்.
1.ஒரு மத்தாப்பைக் கொளுத்திய பின் அதிலே பொறிகள் எப்படிக் கிளம்புகின்றதோ
2.இதே போல வான மண்டலத்தில் பல நிறங்கள் கொண்ட உணர்வலைகள் பரவிக் கொண்டிருப்பது
3.உங்கள் உணர்வுகளில் தோற்றமடைந்திருக்கும்... இந்த உணர்வுகள் அனைத்தும் உங்கள் உடலுக்குள் படர்கிறது.

துருவ நட்சத்திரத்தில் இருந்து வெளிப்படுவது அனைத்தும் வைரத்தைப் போல இளம் நீல நிறமாக இருக்கும். சப்தரிஷி மண்டலங்களில் இருந்து வருவது அனைத்தும் பல வித வர்ணங்களில் இருக்கும்.

ஏனென்றால் ஒவ்வொரு மகரிஷியும் அவர்கள் எடுத்துக் கொண்ட உணர்வுகள் பல வண்ணங்களில் இருக்கும். அந்த மத்தாப்பூ போல சப்தரிஷி மண்டலங்களிலிருந்து வரும் உணர்வுகள் உங்களுக்குள் தெரிந்திருக்கும்.

தெரியவில்லை என்றாலும் கூட...
1.அந்த உணர்வின் அலைகள் சுழன்று கொண்டு வந்து உடலுக்குள் பாய்ந்து
2.உடலில் ஒரு சக்கரம் போல சுழன்று கொண்டு வந்திருப்பதையும் உணர்ந்திருக்கலாம்
3.ஏனென்றால் சுவாசித்தது உடல் முழுவதும் ஒரு ரவுண்டு அப்படி வரும்.

இந்த உணர்வுகள் அனைத்தும் உங்கள் உடலில் உள்ள அணுக்கள் அனைத்திற்கும் உரம் போட்டது போல் ஆகிறது.

உதாரணமாக நாம் செடிகளுக்கு எப்படி உரம் போட்டு அதைச் செழித்து வளரச் செய்கிறோமோ அதே போல்
1.அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வுகள்
2.உடலில் உள்ள அணுக்களின் முகப்புகளில் பூராவும் போய்ச் சேரும்.

நமது வாழ்க்கையில் எத்தனை வகையான குணங்களை எடுத்துக் கொண்டோமோ அத்தனை வகையான அணுக்களும் உண்டு.

அதிலே நல்ல குணங்கள் கொண்ட அணுக்கள் இருப்பினும் பிறருடைய தீமைகளை உற்றுப் பார்த்து அதைக் கேள்விப்பட்டு என்ன... ஏது...? என்று அதை நுகர்ந்திருந்தோம் என்றால்
1.அந்த நல்ல குணங்களின் முகப்பில் இது அடைபட்டிருக்கும்
2.அப்பொழுது அந்த நல்ல குணங்கள் சீராகச் செயல்படாது.
3.அந்த நல்ல அணுக்கள் நலிந்து கொண்டே இருக்கும்.
4.அதே சமயத்தில் நல்ல குணங்கள் வளர்வதற்குண்டான அந்த ஈர்ப்பு சக்தியும் குறைந்தே இருக்கும்.

நல்ல அணுக்களின் வளர்ச்சி குன்றும் பொழுது நல்ல குணங்களால் வளர்க்கப்பட்ட நம் உடலில் சோர்வுத் தன்மை உண்டாகும்.

ஏனென்றால் அன்றாட வாழ்க்கையில் நாம் நல்லதை எண்ணி அதைச் செய்ய முற்படும் பொழுது பிறருடைய தீமைகளைக் கேட்டு அறிகின்றோம்.

நம் உயிரில் பட்ட பின் தீமை என்று அதை உணர்ந்தாலும் அந்த உணர்வுகள் உடலுக்குள் பரவப்படும் பொழுது எந்த நல்ல குணங்கள் கொண்டோமோ அதிலே முன்னோட்டமாக அடைபட்டு விடும். பின் அது நமக்குத் தீமை என்று அறிவித்தாலும் நல்லதை அடைத்துக் கொள்கிறது.

உதாரணமாக நாம் சமையல் செய்யும் போது மாவை எடுத்துப் பிசைகின்றோம். அது சுவை உள்ளது தான்.

இருந்தாலும் அதிலே மற்ற ஒரு பொருளைப் போட்டால்... காரமோ இனிப்போ அதில் எதைக் கலக்கின்றோமோ அதன் சுவை தான் முன்னணியில் இருக்கும்.

அதைப் போலத் தான் நம்முடைய நல்ல குணங்கள் கொண்ட அணுக்களில் தீமை செய்யும் உணர்வுகள் இணைந்து விட்டால் அது செயலற்றதாகிறது... நல்லதை எண்ண முடிவதில்லை.

அவ்வாறு ஆகாதபடி மாற்றுவதற்குத்தான்...
1.தீமைகளை அகற்றிய அருள் ஞானியின் உணர்வை
2.உங்கள் உடலுக்குள் சுழலச் செய்ய வேண்டும் என்று பயிற்சியாகக் கொடுக்கின்றோம்.

அந்த மெய் ஞானிகள் உணர்வுகள் சுழன்று வரப்படும் பொழுது செடிகளுக்கு உரம் போடுவது போன்று இந்த உணர்வின் தன்மை ஊடுருவிப் பாயும் தன்மை கொண்டு உடலில் ஊடுருவுகின்றது.

நல்ல குணங்களுக்குள் அருள் ஞானிகள் உணர்வுகள் ஊடுருவி அதனின் வலு பெறும் பொழுது நாம் கேட்டறிந்த தீமையின் நிலைகளைச் செயலிழக்கச் செய்து விடுகின்றது.

தியானிக்க வேண்டிய முறையை நீங்கள் அறிந்து கொள்ள வேண்டும் என்பதற்கே இதை உணர்த்துகின்றோம்.

தன் ஆத்மாவைக் காக்கும் சொத்தை நாம் இன்று தேடுகின்றோமா…? ஈஸ்வரபட்டர்

 

மனிதனாகப் பிறந்து வளர்ந்து சகல சம்பத்தும் பெற்று சௌபாக்கியமுடன் வாழ வேண்டும்… சகல சுகங்களையும் அனுபவிக்க வேண்டும்…! என்ற எண்ணத்தில் தான் ஒவ்வொரு மனிதனும் வளரும் நிலையிலேயே எண்ணுகின்றான்.

1.அந்நிலையிலேயே பேராசை கொண்டும் எண்ணிவிடுகின்றான்.
2.அந்தப் பேராசையினால் வருவது தான் சகல கஷ்டங்களும் பிணிகளும் பீடைகளும்.
3.அவன் எண்ணத்திலேயே தான் அவனுக்கு எல்லாமே வருகிறது.

தான் வாழ வேண்டும்… தன் உடல் நலம் நன்றாக இருக்க வேண்டும்… வறுமை இல்லாத வாழ்க்கை வேண்டும்… தன்னை ஒட்டியுள்ள தன் சந்ததிகள் என்றும் இன்பமுடன் வாழ வேண்டும்…! என்ற எண்ணத்தில் தான் பல கஷ்டங்கள் பட்டு பல செல்வங்கள் சம்பாதித்து தான் இறந்த பிறகும் தான் குடும்பத்தார் நல்ல நிலையில் வாழ வேண்டும்…! என்று சொத்து சுகத்தைச் சேர்த்து விட்டுச் செல்கின்றான் மனிதன்,

1.ஆனால் தான் பிறந்து தன் ஆத்மாவிற்கு என்ன நிலையைத் தேடிக் கொள்கிறான்…?
2.தான் வேறு… தன் ஆத்மா வேறு…! என்ற எண்ணமே மனிதனுக்கு எழுவதில்லை.

தன் ஆத்மாவிற்கு நல்ல நிலை ஏற்படுத்திவிட்டால்… நல்ல நிலை என்பது இன்று தான் வாழும் வாழ்க்கையில் பல ஜெப நிலைகளைப் பெற்று இந்த உடல் வேறு ஆத்மா வேறு என்ற நிலை தெரிந்து இந்த உடலிலேயே தன் ஆத்மாவுக்குண்டான சகல சக்தியையும் தன் ஜெப நிலையில் ஏற்றச் செய்தால்
1.உடலை விட்டு ஆன்மா பிரிந்து சென்றாலும்
2.ஆவி நிலையில் அல்லல்படாமல் பெரும் “தெய்வீக நிலையை” அந்த ஆத்மா பெற்றுவிடும்.

இந்த உடலுடன் உள்ள பொழுதே அந்த ஆத்மாவிற்கு அந்தச் சக்தி நிலையை நாம் பெற்றுக் கொள்ள வேண்டுமப்பா…!

1.நம் எண்ணத்திலும் சொல்லிலும் செயலிலும் தானப்பா
2.நம் ஆத்மாவிற்கு நாம் வழங்கும் ஜெப நிலையை ஏற்றுக் கொள்ளும் தன்மை பெற முடிகின்றதப்பா..!

உடலுடன் உள்ள பொழுது எந்தக் கெட்ட அணுவும் அணுகாதபடி எந்தத் தீய சக்திகளும் அணுகாமல் எந்தத் தீய சக்திகளுக்கும் அடிபணிந்து அடிமையாகாமல்
1.தன் எண்ணத்தில் எவன் ஒருவன் உயர்ந்து நிற்கின்றானோ
2.அவனை எந்தத் தீய சக்திகளும் தீமையான அணுக்களும் வந்து அணுகிடாதப்பா…!

ஏனென்றால்..
1.நலிந்தோன் இதயத்திற்கு மேலும் மேலும் நலிந்த நிலை தான் வந்து அண்டிடும்.
2.நல்லோன் இதயத்திற்கு நல்ல நல்ல நிலைகள் தான் வந்து அணுகிடும் அப்பா…!

ஒருவன் எண்ணத்தில் எந்த நிலையில் இருக்கின்றானோ அந்த நிலையில் உள்ள அணுக்கள் தான் அவனை வந்து தாக்கிடும். (பூவின் வாசனை கருவாடு வாசனை கதை போல் தான்…!)

மனித உடலில் உள்ள பொழுதே இப்பொழுது நாம் உண்ணும் உணவும்.. உடுக்கும் உடையும்… வாழும் வாழ்க்கையும்… அன்றன்று மறைவது தான்..! என்ற எண்ணம் மக்களுக்குத் தோன்றி நாம் சேமிக்கும் சொத்தெல்லாம் நம் ஆத்மாவுக்கு எந்த நிலை…? என்று புரிந்து சேமித்து வைக்க வேண்டுமப்பா…!

1.நாம் வேறு நம் ஆத்மா வேறு.
2.அந்த ஆத்மாவில் ஆண்டவன் தான் கலந்துள்ளான்.
3.நம் உடலில் அந்த ஆத்மாவுடன் அவ்வாண்டவன் கலந்து குடியிருக்கின்றான் என்ற எண்ணம் மட்டும் ஒவ்வொருவர் மனதிலும் நிலைத்திருக்க வேண்டுமப்பா..!

காலம் அழிந்தாலும் நம் ஆன்மா அழிவதில்லை. இந்த உடலில் நாம் அந்த ஆத்மாவிற்கு எந்த நற்காரியத்தைச் சேர்த்து வைக்க முடியுமோ அந்த நற்பயனை நாம் சேமித்து வைத்திட வேண்டுமப்பா…!

May 2, 2021

சித்தர்கள் கண்ட அரிய பொக்கிஷங்களை நாம் அறிய வேண்டியது மிகவும் அவசியம் - ஈஸ்வரபட்டர்

 

காலம் செல்லச் செல்ல இன்றைய விஞ்ஞானிகள் அறிவு வளர்ந்து பல வகை அற்புதச் செயல்களைக் கண்டுபிடித்து மக்களுக்குச் சொல்கின்றார்கள்... செயல்படுத்துகிறார்கள்.

ஆனாலும் இன்றைய உலகில் இக்கலியில் அறிவு வளர்ச்சி வர வர விஞ்ஞானக் கண்டுபிடிப்புகளால் “சோம்பேறி வாழ்க்கை வாழும் நிலையை உண்டாக்கி...” மனித மூளையையே மங்கச் செய்கிறார்கள் சில விஞ்ஞானிகள் எனும் பேர் பெற்ற விஞ்ஞானிகள்.

ஆதியில் சித்தர்கள் கண்டுபிடித்த ஞான நிலையிலிருந்து இந்த மண்ணில் விளையும் பொருள்களை வைத்துப் பல பல பொக்கிஷங்களைக் கண்டு உணர்த்தியுள்ளார்கள்.
1.அவற்றினால் மக்களுக்கு என்ன நன்மை…?
2.வைரம் அணிந்தால் என்ன நன்மை…?
3.தங்கத்தினால் என்ன நன்மை…?
4.நாம் பிறந்ததின் மகிமை என்ன…?
5.மண்பாண்டத்தில் சமைத்து உண்பதின் ஆரோக்கிய நிலை என்ன..? என்ற
6.பல வகை உண்மைகள் எல்லாம் ஆதியில் வந்த நிலை தானப்பா இன்றும் உள்ளது.

முதலிலேயே சொல்லியுள்ளேன் இந்தப் பூமித் தாயின் பொக்கிஷமெல்லாம் அந்தச் சூரிய சந்திர ஒளிக்கதிரிலிருந்து எப்படி வருகிறது என்பதை…!

அந்நிலை எல்லாம் ஆதியில் உள்ள சித்தர்கள் அறிந்து எடுத்துத்தான் மனிதர்களின் நன்மைக்காகச் வெளியிட்டார்கள்.

மக்களின் செயலுக்கு அந்த உண்மை நிலையை உணர்த்தி அவர்களாகவே அதை எடுத்துப் பக்குவ நிலை செய்து பயன்படுத்தப் பல உண்மை நிலையைப் பரவவிட்டார்கள் மக்களிடத்தில் அன்றையச் சித்தர்கள்.

வைரம் வைடூரியம் என்ற இன்னும் பல வகை நிறம் கொண்ட பல கோடிக்கணக்கான கற்களையும் அவை மனித உடலில் பட்டால்
1.எந்தெந்த உடலுக்கு அந்நிலையெல்லாம் அந்த உடல் ஏற்கின்றது என்ற நிலை எல்லாம்
2.அன்றையச் சித்தர்கள் கண்டுபிடித்து வெளியிட்ட உண்மையிலேதான் இன்றும் உள்ளார்கள் மக்கள்.

மனிதன் வளர்ச்சி அடைந்து உயர் நிலைக்காகக் கொடுக்கப்பட்ட அந்நிலையை
1.இப்பொழுது இன்றையச் செல்வத்திற்காகவும்
2.தம்முடைய டாம்பீக வாழ்க்கைக்காகவும் பயன்படுத்திப் பாழ் செய்து விட்டார்கள்.

இந்நிலையை அறிந்து தான் பல கோடிச் சித்தர்கள் பல உண்மைகளை மறைத்து விட்டார்கள் இன்றைய கலியின் பேராசை கொண்ட மக்களுக்கு.
1.பல வகை மூலிகைகளை வைத்து அன்றையச் சித்தர்கள் பயன்படுத்தியதையும்
2.அந்த மூலிகைகளை உபயோகிக்கும் நிலையை உணர்த்தாமலே மறைத்து விட்டார்கள்.

May 1, 2021

துருவ நட்சத்திர தியானத்தின் முக்கியத்துவம்

 

நம் குருநாதர் ஈஸ்வரபட்டர் காட்டிய அருள் வழியில் அந்தத் துருவ நட்சத்திரத்தின் சக்தியை நீங்கள் அனைவரும் பெறக்கூடிய சக்திக்குத்தான் திரும்பத் திரும்ப உபதேசிக்கின்றேன் (ஞானகுரு).

அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வுகளை உங்களுக்குள் ஆழமாகப் பதிவாக்குகின்றேன். பதிவாக்கினாலும் அதை மீண்டும் பெறுவதற்கு நினைவுபடுத்துகிறேன், ஏனென்றால் பல நிலைகள் உங்களை மூடி மறைக்கின்றது.

இப்பொழுது இந்த உபதேசத்தின் உணர்வுகளைப் படிக்கும் பொழுது உடனே அது வீரியம் பெறும். இங்கே நல்லதைச் சொல்லிக் கொண்டிருந்தாலும் அடுத்தாற்போல் ஒரு இரண்டு பேர் சண்டை போட்டுக் கொண்டிருந்தால் என்ன சொல்வீர்கள்…!

1.பார்…! சாமி (ஞானகுரு) என்ன சொல்கிறார்…?
2.இங்கே இப்படிச் சண்டை போடுகிறார்கள்..! என்று நான் சொல்வதை உடனே விட்டுவிடுவீர்கள்…!
3.சண்டையிடுபவர்களின் உணர்வுகளை எடுத்துக் கொள்வீர்கள்.
4.அப்பொழுது அந்தத் தீய அணுக்களுக்குச் சாப்பாடு நிறையக் கொடுக்கின்றோம்.

ஏனென்றால் அதற்கு ஏற்கனவே வீரியம் அதிகம். ஆகவே அந்த அணுக்கள் நமக்குள் அதிகமாக இருக்கும் பொழுது அதை மாற்றும் சக்தியை எடுத்து… அதை வலுவாக எண்ணி… சண்டையிடுபவர்களின் உணர்வுகளை அடக்கச் செய்ய வேண்டும்.

அப்படி என்றால் அந்த இடத்தில் என்ன செய்ய வேண்டும்…?

ஒவ்வொரு நாளும் அதிகாலையில் அந்தத் துருவ நட்சத்திரத்தின் சக்தியை எடுத்து அவசியம் வளர்த்துக் கொள்ள வேண்டும் (துருவ தியானம்). அதை வைத்துத் தான் தீமைகளை அடக்க வேண்டும்.

சண்டை செய்கிறார்கள் என்றால் நாம் கண்ணில் பார்க்கின்றோம். அந்த மனிதர்களைப் பதிவாக்கிவிடுகின்றோம். தவ்று செய்கிறார்கள் என்று பார்க்கிறோம்… அந்த உணர்வை நுகர்கின்றோம்… அதே அணுவாக நம் உடலில் மாற்றிவிடுகின்றது.

இங்கே உபதேசத்தைக் கேட்கின்றீர்கள்.
1.ஆனால் நான் ஒருவன் தானே இங்கே சொல்கிறேன்.
2.அந்தப் பக்கம் நீங்கள் பார்த்தால் ஆயிரம் பேர் ஆயிரம் விதமான உணர்வுகளை வெளிப்படுத்துகின்றார்கள் அல்லவா..!
3.அதைப் பார்த்ததும் அது தான் உங்களுகுள் பெருகுகின்றது. (நான் சொல்வது சிறுத்துவிடுகின்றது.

கோவிலுக்குப் போய்ச் சாமி கும்பிடுகின்றோம். அங்கே மற்றொருவரும் வந்து கும்பிடுகின்றார்.

நாம் கும்பிடும் பொழுது அவரைப் பார்த்தவுடன் அவர் பல தவறுகள் செய்பவர் என்று தெரிகிறது. அர்ச்சனை செய்து… அந்தப் பரிவட்டம் கட்டி… அபிஷேகம்… ஆராதனை…! என்று பல நிலைகள் அவருக்கு நடக்கின்றது.

1.எத்தனையோ கொலை செய்கின்றான்
2.அவனுக்குச் சாமி எல்லாம் கொடுக்கின்றது… உதவி செய்கின்றது பார்..!
3.கோவிலையே அந்த நேரத்தில் வெறுக்கின்றீர்கள்… இல்லையா…?

ஆக கோவிலுக்குப் போன இடத்தில் ஒரு தவறு செய்பவன் அபிஷேக ஆராதனை செய்து அவனுக்கு இவ்வளவு மரியாதை கிடைத்தவுடன் உங்களுடைய எண்ணம் எப்படி வருகிறது…?

மற்றவர்கள் செய்யும் தவறைப் பார்த்தவுடன் “என்றைக்குத் தான் இது நல்லதாகப் போகிறதோ…? தெரியவில்லையே…! என்று எண்ணுகின்றீர்கள். அப்பொழுது அந்த எண்ணத்திற்குத்தான் சக்தி கொடுக்கின்றீர்கள்.

அந்த நேரத்தில் நான் சொன்னதை நினைவுக்குக் கொண்டு வந்து அதை மாற்ற முடிகின்றதா…? என்றால் இல்லை..! அந்த உணர்வுகளே வருவதில்லை.

அதை எல்லாம் மாற்றுவதற்காக வேண்டித்தான் இந்தக் காலைத் துருவ தியானத்தை முக்கியமாக உங்களைச் செய்யச் சொல்கிறோம்.

1.ஈஸ்வரா…! புருவ மத்தியில் உங்கள் உயிரை எண்ணி
2.அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் நாங்கள் பெறவேண்டும்…
3.அது எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும்…! என்று எண்ணி
4.சந்தர்ப்பத்தால் நுகர்ந்த கோபம் வெறுப்பு வேதனை போன்றவைகளை உடனே துடைத்துப் பழக வேண்டும்.

அந்த மகரிஷிகளின் அருள் சக்தி இந்த ஆலயம் முழுவதும் படர வேண்டும், இங்கே வருவோர் வாழ்க்கையில் அறியாது சேர்ந்த இருள்கள் நீங்க வேண்டும். அந்த மெய்ப் பொருள் காணும் சக்தி இந்த ஆலயம் முழுவதும் படர வேண்டும் என்று நாம் எண்ணுதல் வேண்டும்.

இப்படி எண்ணினால் நமக்குள் அந்தச் சோர்வு வராது. மன பலம் கிடைக்கும். தீமைகளிலிருந்து விலகிச் செல்லும் ஆற்றலும் கிடைக்கும்.

எல்லாம் அவன் செயல்...! என்பதன் பொருள் - ஈஸ்வரபட்டர்

 

சூட்சம உலகத்திற்கு வருபவர்கள் எல்லாம் தியானத்தின் மூலம் அருளைப் பெற்று தியானத்தில் இருந்தால் மட்டும் தான் வருவார்கள் என்பதல்ல.

இந்த மானிட உலகில் பிறந்தவர்கள் தியான நிலையை அறியாமல்
1.தன் எண்ணத்திலும் செயலிலும் ஆண்டவன் அருளைப் பெற்று
2.அந்த ஆண்டவனுக்காக அஞ்சி தன் வாழ்க்கை முறையில் பல நற்காரியங்கள் செய்து
3.தன்னையே “தான்...” என்ற கர்வமில்லாமல் தன்னால் இந்த உலகிற்கு என்ன பயன்...? என்று புரிந்து கொண்டு வாழ்பவனும்
4.தன் நிலை என்ன...? என்றே, தனக்கே தெரியாமல் பல வகை இன்னல்பட்டு மக்களுக்காகப் பல நன்மைகளைச் செய்பவர்களும் உள்ளார்கள்.

அதே போல் பல புதிய கண்டுபிடிப்புகளைக் கண்டுபிடிக்கும் விஞ்ஞானிகள் உள்ளார்கள். அந்த விஞ்ஞானிகள் எல்லாம் என்ன எண்ணுகிறார்கள்...?
1.தான் ஆண்டவனை நினைத்துத் தன் அறிவை உபயோகப்படுத்துவதாகவும்
2.அப்படிப்பட்ட தன் முயற்சியினால் தான் பல புதிய வார்ப்புகளையும் படைப்புகளையும் கண்டுபிடிப்பதாக...!

ஆனால் அதுவல்லப்பா அவர்கள் நிலை...!

இந்த மனித உடலில் உள்ள எல்லோருமே விஞ்ஞானியாகலாம்... மெய் ஞானியாகலாம்.. மகரிஷியாகவும் ஆகலாம்... பல கீழான நிலைக்கும் செல்லலாம்....!

அவனவன் ஆண்டவனை எண்ணும் நிலையில் அவன் அறிவை உபயோகப்படுத்தும் பொழுது அவன் நிலையில் சூட்சம உலகத்திற்குச் சென்ற ஆவி நிலையோ அல்லது அவன் நிலையில் விட்டுச் சென்ற விஞ்ஞானியோ அவன் உடலுக்குள் புகுந்து விடுகிறது.

அது புகுந்த பின் தான் ஒவ்வொரு விஞ்ஞானிக்கும் அவர்கள் பல வழிகளைக் காட்டுகின்றார்கள். ஆனால் அந்த விஞ்ஞானி என்பவன் தான் பெற்ற அருளைச் சிதறவிடாமல்
1.எந்த நிலையில் ஆண்டவனை எண்ணி ஒரு நிலையை ஆரம்பித்தானோ
2.அந்நிலை வரை அவன் நிலைக்கு அவன் உடலில் உள்ள அந்தச் சூட்சம அருள் பெற்ற அச்சித்தனின் அருள் செயல்படுகிறது.

என்றைக்கு அவன்... “தான்...!” என்ற எண்ணத்திற்கு வருகிறானோ அன்றே அவன் செயலும் அவன் எடுத்த முயற்சியும் வீணாகிறது.

“எல்லாமே அவன் செயல்...” என்று எண்ணுபவனுக்கு என்றுமே அவன் அருள் உண்டு. இந்த நிலையில் உள்ளவர்களும் உயர் நிலைக்கு வருகின்றார்கள் சூட்சம நிலைக்கு.

பல பாடகர்களைப் பார்த்திருப்பாய். அவர்கள் பாடலில் இனிமை எங்கிருந்து வருகிறது...? பல கை தேர்ந்த மருத்துவர்களைப் பார்த்திருப்பாய். அந்த மருத்துவர்களின் திறன் எங்கிருந்து வருகிறது..?

1.இந்த உலகில் உள்ள பல கோடானு கோடி நல்லோர்களின் உயிரான்மாக்கள்
2.மறு பிறவி எய்தாத நிலையில் பூமியிலே சுழன்று கொண்டுள்ளார்கள்.

இந்த உலகில் ஜீவித்த காலத்தில் உடலுடன் இருக்கும் காலத்தில் நடத்திச் சென்ற பாதையை அவ்வுலகுக்குச் சென்றும் சூட்சம உலகத்திலிருந்து தன் எண்ணத்திற்கு உகந்தபடி உதவியும் செய்கிறார்கள்.

எந்த நிலை கொண்டு...?

இந்த மானிட உலகில் உள்ள மனிதர்கள்த ஆண்டவனை நினைக்கும் பொழுது... எந்த வழிக்கு ஆண்டவனை நினைக்கின்றானோ... வேண்டுகின்றானோ... அந்த வழிக்கு அச்சூட்சம உலகத்தில் உள்ள பலரின் நிலைகள் செயல்பட்டுப் பல உதவிகளைச் செய்கின்றனர்.

இப்படிப்பட்ட அருள் பெற்றவர்கள் எல்லோருக்குமே
1.என்று அவர்களுக்குத் “தான்...” என்ற கர்வம் வருகின்றதோ
2.அன்றுடன் அதுவரை அவர்கள் பெற்ற பேறுகளும் மடிந்து விடுகின்றது.
3.அவர்களின் நிலைக்கு (மறைமுகமாக) உதவி செய்த அந்தச் சித்தர்களின் நிலையும் மறைகிறது.

ஆகவே சூட்சம உலகத்திற்குச் செல்பவர்கள் எல்லாம் தியனாத்திலிருந்து... தியான அருளினால் மட்டும் தான்... விண் செல்ல வேண்டும் என்பதல்ல.

இந்தப் பாட நிலையைப் புரிந்து கொண்டால் தியான நிலையில் இருப்பவருக்கு
1.இவ்வுலக நிலையில் உள்ள பொழுதே தான் யார்...? நான் என்பது யார்...? என்று புரியும் நிலை வந்துவிடும்.
2.தான் பிறவி எடுத்த பயனும் தன் நிலைக்குத் தன் உயிர் நிலைக்கு ஒரு நிலைப்படுத்த எடுக்கும் இந்த தியான நிலை அருள் புரிகின்றது.

நம்முடைய சுவாச நிலையும் தியான நிலையும் ஒன்றுபட்டால் இந்த உலக நிலையையும் பல கோடிச் சித்தர்களின் நிலையையும் அறிந்து பல மண்டலங்களின் நிலையும் அறிந்து கொள்ள முடியும்.

1.உயிர் அழியாத நிலைகள் கொண்டது...!
2.அதன் துணை கொண்டு தான் பிறவி எடுத்த பயனை அடைந்து
3.என்றுமே அதை இந்த உலக மக்களுக்காக உபயோகப்படுத்தலாம்.