ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

May 9, 2016

கணவன் மனைவி இருவரும் இரு உயிரும் ஒன்றி இரு உணர்வும் ஒன்றி என்றுமே இணைந்து வாழுங்கள்

அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வை எடுத்து தீமை என்ற நிலையை மாற்றி மாற்றி நம் உணர்வின் தன்மையை ஒளியாக மாற்றி மாற்றி நாம் இதைப் பெறச் செய்யப்படும் பொழுது நாம் உடலை விட்டுச் சென்ற பின் தனுசு கோடி. அது அங்கே சேர்கின்றது.

நம் உடலிலே விளைந்த உணர்வுகள் நோய் என்ற உணர்வு வரும் பொழுது நோயாளியைக் கேட்கும் பொழுது சிவ தனுசு. உடலிலிருந்து விளைந்தது இன்னொரு மனிதனை வீழ்த்துகின்றது.

இருளை நீக்கிய ஒளி என்ற உயிரென்ற விஷ்ணு தனுசை நாம் எடுத்தால் உயிருடன் ஒன்றிய உணர்ச்சிகளை நாம் பாய்ச்சுவோம் என்றால் இந்தத் தீமை என்ற உணர்வை மாற்றிவிடலாம்.

நம் வாழ்க்கையில் ஒவ்வொரு நொடியிலும் தீமை என்று கண்டபின் அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வை நமக்குள் சேர்த்துத் தீமைகளை மாற்றி மாற்றி இந்த உடலுக்குள் எல்லா உணர்வுகளும் இருந்தாலும் அந்த உணர்வுகளை ஒன்றெனச் சேர்த்துத் தனுசுகோடி என்ற நிலைகளில் எல்லா உணர்வும் உயிருடன் ஒன்றி ஒளியின் சரீரம் பெறும் தன்மை பெறவேண்டும்.

ஆகவே, நாம் செய்ய வேண்டிய முறைகள் எது?

ஒவ்வொரு குடும்பத்திலும் கணவனும் மனைவியும் வசிஷ்டரும் அருந்ததியும் போல வாழ்ந்து காட்ட வேண்டும். முந்தைய காலங்களில் வாழ்ந்த பெரியவர்களைப் பார்க்கலாம்.

கணவன் இறந்துவிட்டார் என்றால் உடனே மனைவியும் சேர்த்து இறந்துவிடும். மனைவி இறந்துவிட்டால் அதே போன்று கணவனும் ஒரே மூச்சில் இரண்டு பேரும் இறந்துவிடுவார்கள்.

இப்பொழுது அந்த மாதிரி எங்கே இருக்கின்றார்கள்?

ஏனென்றால், ஒன்றிய உணர்வுகள். அவர்கள் உணர்வின் தன்மை ஒளியான பின் அவர்கள் சொல்வர்கள். நான் இத்தனை நாளில் போகின்றேன். என்னைப் பற்றி யாரும் கவலைப்படாதீர்கள். நீங்கள் எல்லோரும் நன்றாக இருங்கள் என்று சாகிறதற்கு இரண்டு நாள் முன்னாடி சொல்வார்கள்.

இப்பொழுது ஒன்று இரண்டு பேர் தப்பி அவ்வாறு செல்கிறார்கள்.

காரணம் இதெல்லாம் அவர்கள் எடுத்துக் கொண்ட உணர்வுகளின் தன்மை அவர்கள் உடலை விட்டுப் பிரியும் நேரம் எதன் உணர்வைப் பெற்றனரோ அதை அறியும் தன்மை அவர்களுக்கு வருகின்றது.

ஆக, பண்டைய காலங்களில் தெரிந்தோ தெரியாமலோ அவர்கள் காலையில் அந்தத் துருவ தியானங்களைச் செய்து பழகியவர்கள். அது காலத்தால் மறைந்து விட்டது.

அன்று வாழ்ந்த அகஸ்தியனும் அவர் மனைவியும் இரு மனமும் ஒரு மனமாகி இரு உணர்வும் ஒன்றெனெ இணைந்து இரு உயிரும் ஒன்றி இல்லற வாழ்க்கையில் இருளை அகற்றி ஒளியின் சரீரம் பெற்று துருவ நட்சத்திரமாக இணைந்த நிலையில் வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள்.

தான் பெற்ற சக்தி தன் மனைவி பெறவேண்டும் என்றும் தன் கணவன் பெறவேண்டும் என்று ஒன்றி வாழ்வோம். இந்த வாழ்க்கையில் வசிஷ்டரும் அருந்ததியும் போன்று ஒன்றுபட்டு வாழ்வோம். நளாயினி போன்று ஒருவரை ஒருவர் மதித்து நடப்போம். சாவித்திரியைப் போன்று ஒன்றியே வாழ்வோம்.

அகஸ்தியமாமகரிஷி பெற்ற நிலைகளை நாமும் பெறுவோம். அவர் சென்ற அருள் வழியினைக் கடைப்பிடிப்போம். மகிழ்ந்து வாழ்ந்திடும் அருள் சக்தியைப் பெறுவோம்.

குருநாதர் ஒளியான உணர்வு இங்கே பரவியுள்ளது...! அதை நாம் பெறுதல் வேண்டும்

நாம் இந்த வாழ்க்கையில் அறியாமல் வரும் தீமைகளைப் பிளத்தல் வேண்டும்.

நமது குருநாதர் மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வை எனக்குள் ஆழமாகப் பதிவு செய்தார். அதை நினைவு கொள் அதிலிருந்து அருள் ஒளி வந்து கொண்டிருக்கின்றது.

அதை நீ எப்பொழுதெல்லாம் நினைக்கின்றாயோ தீமைகளை நீக்கும் சக்தி பெறுகின்றாய், உனக்குள் அது பேரருள் பேரொளியாகப் பெருகுகின்றது. இதை நீ பழகிக் கொள் என்றார்.
1.உன்னுடைய தீமைகளை நான் துடைக்க முடியாது, 
2.நீ தான் துடைத்துக் கொள்ள வேண்டும்.
3.நான் இன்று தீமைகளைத் துடைத்து விட்டுப் போகின்றேன். 
4.நாளைக்கு வரக்கூடிய தீமைகளை யார் துடைப்பது?

இன்று உடலில் இருக்கின்றேன்... போய்விடுகின்றேன்...! சிறிது நாள் உடலில் வாழ்கிறேன், பிறகு போய்விடுகின்றேன். இந்த உடல் சதமில்லையே என்று சொல்கிறார் குருநாதர் (உடலுடன் குரு இருக்கும் போது).

1.அவனோடு (உயிருடன்) சதமாயிருப்பதற்காக வேண்டி நான் போய்விடுகின்றேன். 
2.நீ என்ன செய்யப் போகிறாய்...? என்று இப்படி வினா எழுப்புகின்றார்.
3.நான் அங்கிருந்து (சப்தரிஷி மண்டலத்திலிருந்து) இங்கே வந்து உன் தீமைகளைத் துடைப்பேனா?

எனக்குள் விளைந்த உணர்வுகள் நான் அழிவதில்லை. இருளை ஒளியாக்கினேன். ஒளியின் உணர்வு இங்கே பரவுகின்றது. அதை நீ எடுத்துப் பழகிக் கொள் என்றார் குருநாதர்.

உன் தீமைகளை அகற்ற முடியும், உணர்வினை ஒளியாக்க முடியும் என்றார். குரு அருள் எமக்குள் திரு அருளாக நின்று வழி காட்டியது.

நம் குரு காட்டிய அருள் வழியில் நாம் சென்றால் எளிதில் விண் செல்லலாம். பேரின்ப பெருவாழ்வு என்ற வாழ்க்கை வாழ முடியும்.

May 7, 2016

சொத்தையும் சுகத்தையும் தேடி அதிக நாள் வாழ்ந்தேன் என்பதைவிட அருள் ஒளியைத் தேடி என்றும் பதினாறாக பேரின்ப வாழ்க்கை வாழவேண்டும்

இந்த உடலில் 100 வயது 120 வயது வரை கூட நாம் வாழலாம். அதற்குப் பின் என்ன செய்கிறது? தேடிய செல்வம் இருக்கின்றதா?

120 வயதானால் கொள்ளுப் பேரன் கொள்ளுப் பேத்தி எல்லாம் நீ யார்? நான் யார் என்று கேட்கும்? யாரும் கவனிக்க முடியாத நிலையில் அனாதையாகத் தான் வாழ முடியும்.

எம்மை குருநாதர் ஒரு இடத்திற்குப் போகச் சொன்னார். அந்த இடத்தில் ஒரு அம்மாவிற்கு வயது 108 வயது. அது அனாதையாகப் பிச்சை எடுத்து வாழ்கின்றது.

அந்த அம்மாவினால் நடக்க முடியவில்லை உட்கார்ந்து அப்படியே தரையைத் தேய்த்துக் கொண்டு தான் போகின்றது.

கேட்கும் போது இந்தக் இந்தக் காலத்தில் நான் யுத்தங்களைப் பார்த்தேன். முஸ்லிம் யுத்தங்களையும் வட இந்தியாவில் நடந்த யுத்தங்களையும் பார்த்தேன்.

இன்று எனக்குச் சோறு போட ஆள் இல்லை. நான் பிச்சை எடுத்துத்தான் சாப்பிட வேண்டியதுள்ளது.

கொள்ளுப் பேரன், கொள்ளுப் பேத்தி என்று நிறையப் பேர் இருக்கின்றார்கள். ஆனால், என்னைக் கவனிப்பதற்கு ஆள் இல்லை.

என் பிள்ளைகள் அனைத்தும் இறந்துவிட்டது. என் பேரப்பிள்ளைகளும் இறந்துவிட்டார்கள். அதற்கப்புறம் உள்ள பேரப்பிள்ளைகள் தான் இருக்கின்றனர். “என்னை யார்..,?” என்று கேட்கின்றார்கள்.

உணவு கொடுப்பதற்கு ஆள் இல்லை. நான் இவ்வளவு வயது வாழ்ந்துவிட்டேன். எனக்கு யாரும் இல்லை.

இப்படி இத்தனை வயது வாழ்ந்தாலும் கூட “சொத்தைத் தேடினேன்” என்று செல்வம் இருக்கும் குடும்பங்களில் பார்த்தால் தெரியும். தேடிய செல்வங்கள் வந்த பிற்பாடு இந்த உடலுக்குப் பின் பேரன் பேத்தி காப்பாற்றுவார் என்றால் இல்லை.

“சீ.., போ வெளியே” என்று சொல்லும். சில குடும்பங்களில் பார்த்தால் தெரியும்.

அப்பொழுது நீங்கள் எதைத் தேடுகின்றீர்கள்? ஆகவே, அந்த அருள் ஒளியைத் தேட வேண்டும்.

சில பேர் உடலை விட்டுப் பிரியும் நிலைகளைச் சொல்வார்கள். நான் போகப் போகிறேன் என்ற அந்த ஞாபகம் வரும். எதன் உணர்வு கொண்டு வலு பெற்றோமோ அந்த உணர்வு கொண்டு அங்கே செல்லலாம்.

இல்லையென்றால் பாசம் பற்று கொண்டவர்கள் கடைசி நிமிடத்தில் யார் மேல் அந்த நினைவு வருகின்றதோ “நான் உடலை விட்டுப் போகிறேன்” என்ற நிலையில் அவர்கள் நினைவு வரும், பின் அந்த உடலுக்குள் தான் போகும்.

இதைப் போன்ற நிலைகள் புவியின் ஈர்ப்பில் சிக்காதபடி ஒவ்வொரு நொடியிலும் துருவ நட்சத்திரத்தின் உணர்வைச் சுவாசியுங்கள். எத்தனையோ சுகம் அமைத்த இந்த உடலும் முழுமையாக இருந்ததில்லை.

முழுமையான உணர்வின் தன்மை இந்த வாழ்க்கையில் நாம் பெறுதல் வேண்டும். ஆக, அந்த அருள் ஒளி பெற இந்த வாழ்க்கையில் இருளை அகற்றுங்கள்.

உங்களை அறியாது வந்த இருளைப் போக்கச் செய்யுங்கள். இனி மெய் வழி வாழ வேண்டும். இந்த உடலுக்குப் பின் நாம் பிறவியில்லாத நிலை அடைதல் வேண்டும்.

ஏனென்றால், இப்படி மூன்றரை இலட்சம் பேரைச் சந்திக்க செய்து அனுபவத்தைக் கொடுத்தார் குருநாதர். குரு கொடுத்த ஆற்றல் மிக்க சக்திகளை அரும் பெரும் சக்தியான அருள் ஞான வித்தை உங்களுக்குள் பதிவாக்குகின்றேன்.

அந்த வித்திற்கு அதிகாலை அந்த துருவ தியானத்தில் நீங்கள் சிறிது நேரம் எடுத்து சாப்பாடு கொடுத்து வளர்த்துக் கொள்ளுங்கள். அதிலே வளரும் நல்ல ஞானங்கள் உங்கள் வாழ்க்கையில் வரும் இருளைப் போக்க உதவும். அரும் பெரும் சக்தியாக உங்களுக்குள் வளரும்.

நிலையற்ற இந்த உடலுக்குள் நீங்கள் அடிக்கடி துருவ நட்சத்திரத்தின் பால் அந்தச் சிந்தனையைச் செலுத்தினால் நிலையான அந்த உணர்வின் தன்மை வரும் போது இந்த நிலையற்ற உடலில் மகிழ்ச்சி என்ற நிலையை ஊட்டவும் இது உதவும். மகிழ்ச்சியுடன் நாம் செல்ல முடியும்.

துயர் என்ற உணர்வு நமக்குள் வராதபடி தடுத்துக் கொள்ள இது உதவும். பேரின்பப் பெருவாழ்வு என்ற நிலையைப் பெற முடியும்.

அதற்காக வேண்டி நாம் முன்னேற்பாடாக நம் முன்னோர்களின் உடலை விட்டுப் பிரிந்து சென்ற ஆன்மாக்களை விண் செலுத்த வேண்டும். ஏனென்றால், நாம் எதை எடுக்கின்றோமோ அதுதான் வரும்

சிவன் ஆலயங்களில் நந்தீஸ்வரன் சிவனுக்குக் கணக்குப் பிள்ளை என்று காட்டியிருப்பார்கள். இந்த வாழ்க்கையில் அந்தத் துருவ நட்சத்திரத்தின் கணக்கானால் நாம் அதன் ஈர்ப்பு வட்டத்தில் செல்கின்றோம். 

May 6, 2016

மூன்றாம் பிறை - "இருளை நீக்கி நீ ஒளியாகு"

அன்று நபிகள் நாயகம் தீமைகளின் நிலையை தேய்பிறையாக நம்மை ஆக்கும் தன்மைகளிலிருந்து மீண்டிடும் நிலைகள் கொண்டு உன்னுடைய வளர்ச்சியில் இருளைப் போக்கி நீ ஒளியாகு என்று சொன்னார்.

அவர் அதனின் நிலைகள் கொண்டு தான் மேற்கே பார்க்க வைத்தார்.

ஏனென்றால், சூரியனின் ஒளிக் கதிர்கள் சந்திரனுக்குக் கிடைக்காது மற்ற கோள்கள் தடைப்படுத்தினாலும் அதை விரிவாக்கி அது ஒளியின் சிக்ரமாக அது ஓங்கி வளரும் நிலைகள் போல மனிதனின் வாழ்க்கையில் இருளைப் போக்கி ஒளியின் தன்மையாக உன் உயிருடன் ஒன்றி ஒளியாக நீ மாறு என்பதுதான் அவருடைய தத்துவங்களில் ஒன்று.

அன்றைய நிலைகள் கிழக்கே பார்த்து வணங்கினாலும் மேற்கே பார்த்து இந்த உணர்வின் தன்மை கொண்டு பிறைச் சந்திரன் வளர்வது போல உன் வாழ்க்கையில் இருளைப் போக்கி ஒளியின் சரீரமாக நீ வாழ வேண்டும் என்று நபிகள் நாயகம் இத்தகைய நிலைகளைச் சொன்னார்.

அவர் சொன்ன நிலைகளை உணராமால் மூன்றாம் பிறையைப் பார்த்து விட்டால் எனக்குத் தொழில் வளரும் என் குடும்பம் வளரும் என் கஷ்டம் போகும் என்ற இந்த நிலையில் தான் எண்ணுகின்றார்கள்.

மூன்றாம் பிறையைப் பார்த்தால் மோட்சம், மூன்றாம் பிறையைப் பார்த்தால் என் கஷ்டம் எல்லாம் போகும் என்ற எண்ணத்தில் தான் பார்க்கின்றார்கள்.

மூன்றாம் பிறையைப் பார்த்த பின் நோன்பை விடுகின்றார்கள். ஆனால், அந்த விரத்தத்தின் தன்மை என்ன?

தனக்குள் தீமையே இல்லாது தீமைகள் உட் புகாது நாம் இருக்க வேண்டும் என்ற இந்த நோன்பினை வளர வைக்கின்றார்.

நோன்பு என்றால் எதையும் விழுங்கக் கூடாது என்று உமிழ் நீரைத் துப்புகின்றனரே தவிர எவ்வாறு இதை விழுங்கக் கூடாது என்ற நிலைகளை நபிகள் நாயகம் தெளிவாகச் சொல்லியுள்ளார்.

ஒவ்வொரு நோடியும் உயர்ந்த நிலைகள் கொண்டு மக்களின் நிலைகளைத் தெளிவாக்க வேண்டும் என்று இந்த உமிழ்நீரைச் சுரக்கச் செய்ய வேண்டும். தீமைகளை நீ துப்பிவிட வேண்டும்.

தீமைகள் தனக்குள் வராதபடி அந்த உயர்ந்த நினைவினைத் தனக்குள் நுகர வேண்டும் என்று தான் அவர் சொன்னாரே தவிர உமிழ் நீர் சுரப்பதைத் துப்பிவிட்டு அதனின் நோன்பின் தன்மை வரும் போது இருள் சூழ்ந்த நிலைகளை உணவாக உட்கொள்ளச் சொல்லவில்லை.

தீங்கான உணர்வுகள் நுகரப்படும் பொழுது உனக்குள் இருளின் தன்மையே வரும்.

உயர்ந்த உணர்வின் தன்மையைத் தனக்குள் உட் கொள்ளு. தீமையை நுகராதே. தீமைகள் எங்கே இருந்தாலும் அதை நுகராதே. அனைவரும் நன்மைகள் பெறவேண்டும் என்ற நிலைகளைத் தான் அன்று நோன்பாக எடுக்கச் சொன்னார்.

ஆகவே, பிறைச் சந்திரனாக இருப்பது கதிரவனின் ஒளி கொண்டு எப்படி பூரண நிலவாக மாறுகின்றதோ இதைப் போல அனைவரும் மகிழ வேண்டும் என்ற உணர்வு கொண்டு உன் வாழ்க்கையில் வளரும் தன்மையே நீ பெறவேண்டும் என்பதுதான் அவருடைய சாஸ்திரங்களில் கூறப்பட்ட பேருண்மை.

அவர் சொன்ன மூலக் கூறை நீங்கள் அறிந்து கொண்டால் போதும்.

பணச் செல்வம் இருந்தாலும் இல்லையென்றாலும் அருள் செல்வத்தைக் கூட்டினால் தான் துன்பத்திலிருந்து மீள முடியும்

மனிதனானபின் பார்க்கின்றோம். இன்று எத்தனையோ பேரிடம் செல்வம் இருக்கின்றது. அப்படிச் செல்வத்துடன் இருப்போர் எத்தனை பேர் மகிழ்ச்சியாக இருக்கின்றார்கள்?

செல்வச் செழிப்புடன் இருக்கும் குடும்பங்களில் நீங்கள் பார்க்கலாம். ஒவ்வொரு குடும்பங்களிலும் எடுத்துக் கொண்டால் பல துயரங்கள், பல வேதனைகள் பல சலிப்புகள், பல சங்கடங்கள் இவை அனைத்தும் உண்டு.

இதற்கெல்லாம் காரணம் மனிதனுடன் ஒன்றி வாழும்போது சில சந்தர்ப்பங்களில் “எனக்கு இப்படித் தீங்கு செய்தான்” என்ற நிலைகளில் உருவாக்கப்படும் பொழுது இறக்கப்படும் பொழுது சாபமிட்டுச் செல்லும் நிலை ஆகின்றது.

“இந்தக் குடும்பம் நாசமாகப் போகவேண்டும், அதன் தொடர் கொண்ட உணர்வுகளில் பதிவாக்கிவிட்டால் இவர் இறந்தபின் இதே உணர்வின் தன்மை அவர் உடலிலிருந்து வெளி வந்தபின் உணர்வுகள் சாப அலைகளாகப் படரப்பட்டுவிடுகின்றது.

அந்தச் சாப அலைகள் இவருக்குள்ளும் தொடர்ந்து அந்தக் குடும்பத்தைச் சார்ந்தோர் அனைவரும் நல்ல குணங்கள் எது இருப்பினும் அதைச் செயலற்றதாக மாற்றிவிடுகின்றது.

ஆக, செல்வம் நிறைய இருக்கும். செல்வத்தை வளர்த்துக் கொண்டாலும் மன நிம்மதி இருக்காது. மன நிம்மதியற்ற நிலைகளில் வேதனையும் வெறுப்பும் சலிப்பும் சங்கடத்தையும் வளர்த்துக் கொள்வார்கள்.

இந்த உணர்வின் தன்மை அதிகரித்தால் கடைசியில் உடல் நலிந்து இதன் உணர்வுக்கொப்ப செல்வத்தைப் பாதுகாக்கும் செயலையே இழந்துவிடுகின்றோம்.

ஆனால், இந்த உடலை விட்டுச் சென்றபின் செல்வம் கூட வருவதில்லை.

இவர் எடுத்துக் கொண்ட வேதனை இவர் கூட வந்து எதன் உணர்வை நுகர்ந்தனரோ அதற்குத்தக்கவாறு வேதனை என்ற உணர்வுகள் அதிகரித்தால் விஷப் பாம்பாகவும், சிந்தனையில்லாது தாக்கி உணவாக எடுக்கும் புலியாகவும் நரியாகவும் நாயாகவும் உயிர் மாற்றிவிடுகின்றது.

இதன் கணக்கின் பிரகாரம் மாற்றிவிடுகின்றது.

ஆனால், செல்வம் இருப்பினும் செல்வம் இல்லாது இருப்பினும் அருள் ஞானச் செல்வத்தை நமக்குள் கூட்டி துன்பம் வரும் பொழுது அருள் உணர்வின் தன்மையைக் கூட்டி நம்மைப் பாதுகாத்தல் வேண்டும்.

செல்வத்தைப் பாதுகாக்க வேண்டும் என்றாலும் ஞானம் வேண்டும். ஞானம் இல்லையென்றால் வேதனை வெறுப்பு என்று வளர்ந்து தேடிய செல்வத்தைப் பாதுகாக்கும் நிலையும் இழந்துவிடும்.

இதைப் போன்ற நிலைகளிலிருந்து மனிதன் நாம் மீள வேண்டும் என்றால் அருள் ஞானத்தைப் பெறவேண்டும். அருள் ஞானத்தைப் பெருக்கச் செய்யும் நிலையாக அருள் ஞான உணர்வுகள் உங்களுக்குள் பதிவு செய்யப்படுகின்றது.

அருள் மகரிஷிகளின் உணர்வுகளை செவி வழி உந்தி கண் வழி ஈர்த்து மூக்கு வழி நுகரச் செய்து உயிரிலே மோதச் செய்து உணர்வின் ஒளி அலைகளைப் பெறச் செய்து நுகர்ந்த உணர்வுகளை இரத்தத்தில் கலக்கச் செய்து அந்த உணர்வின் தன்மையை அணுவாக மாற்றச் செய்யும் நிலைக்கே இப்பொழுது யாம் உபதேசிக்கும் நிலைகள்.

உங்கள் உடலுக்குள் பல பகைமை உணர்வை நுகர்ந்தாலும் நல்ல குணங்களை மறைத்திடும் சித்திரைகளை, சிறு திரைகளை நீக்கிடல் வேண்டும். பூரண நிலா எப்படி இருக்கின்றதோ உங்கள் நல்ல மனதைத் தெளிவாக்கிக் கொள்ள வேண்டும்.

ஒவ்வொரு நிமிடமும் இந்த மனிதனின் வாழ்க்கையில் நமக்குள் குறைகளையோ, சலிப்போ, வெறுப்போ, வேதனைகளோ சங்கடமோ, பயமோ, ஆத்திரமோ கொதித்தெழும் உணர்வுகளையோ நுகர்ந்தால் இவை நம் நல்ல குணங்களை மறைத்துவிடுகின்றது.

இந்தத் திரைகளை நாம் நீக்கிப் பழகுதல் வேண்டும். அப்படி நீக்கினால் நம் நல்ல குணங்களின் தன்மை தெளிவாகின்றது. ஒவ்வொரு குணங்களும் தூய்மையாக்கப்படுகின்றது.

உயிரின் உணர்வு கொண்டு எந்த ஞானியின் உணர்வை நமக்குள் சேர்க்கின்றோமோ இந்த ஒளியின் சரீரமாக என்றுமே அழியாச் சரீரமாக அனைவரும் பெற முடியும்.  

பூரண நிலாவக இருந்த நாம் அது தேய்பிறையாக ஆகின்றதோ இதைப் போல மனிதனான பின் பிறருடைய தீமைகளைக் கேட்டறிந்து கேட்டறிந்து நமக்குள் அறிந்திடும் அறிவின் தன்மை மங்கி மங்கி நமக்குள் அது குறைந்து குறைந்து அடுத்து மனிதப் பிறவியில்லாத நிலைகள் கொண்டு தேய்பிறையான நிலைகளை மனித உருவையே மாற்றிவிடும் நம் உயிர்.

முழுமையடைந்த அந்த மகரிஷிகளின் அருள் சக்தியை நாம் பெற்றோம் என்றால் நிச்சயம் நாம் என்றும் ஒளியின் சுடராக நிலைத்திருக்க முடியும்.

May 5, 2016

துருவன் இளம் வயதில் எப்படி “மகா சித்து பெற்றான்...”

நமது காவியங்களைப் படித்துப் பார்த்தால் முன்பு புலஸ்தியர் சொன்னார் (புலையர் என்பது மருவி புலஸ்தியர் ஆனது) என்று தான் காட்டியிருப்பார்கள்.

ஓர் அரசனுக்கு இரண்டு மனைவி, அவரவர்களுக்குக் குழந்தை உண்டு. அரசனுடன் பழகியிருக்கும் குழந்தையைத் தன் மடி மீது வைத்து அந்தத் தாய் கொஞ்சுகின்றது.

அந்த நேரத்தில் இன்னொரு தாயின் மகன் தன் தந்தையிடம் வந்து அமர்ந்து கொஞ்ச வேண்டும் என்ற உணர்வுகள் வரப்படும் பொழுது இந்தத் தாய் அவனைக் கொஞ்சவிடாது தடுத்தது.

அதனால் அவன் வெறுத்துக் கொண்டு காட்டுக்குள் சென்றான். அங்கே தவமிருந்தான் என்று இப்படி நாம் உண்மையின் இயக்கங்களை நாம் அறியாதபடி தவறின் முறைகளைக் காட்டி துருவனின் இயக்கத்தை நாம் அறிந்திடாது செய்துவிட்டனர்.

அரசர்களுக்குகந்த நிலைகள் கொண்டு இப்படிப் பல நிலைகளைச் சொல்லி காவியங்களிப் படைக்கச் செய்து அசுர உணர்வுகளும் மற்ற குணங்களும் என்று பல பல காவியங்களாக மாற்றி மகாபாரதம், இராமயாணம் போன்ற நிலைகளைக் காட்டுகின்றனர்.

கந்த புராணம் சிவ புராணம் வந்தாலும் விநாயகர் என்ற நிலைகளில் இந்த அகஸ்தியன் கணபதியை வணங்கினான். அவனுக்கு சக்தி ஏற்பட்டது. ஆகவே, அவனிடம் எதையும் எதிர்த்துச் செய்ய முடியாது என்ற நிலைகளில் இப்படி கதைகளைக் காட்டி முழுமையும் காட்டாதபடி செய்துவிட்டனர்.

ஆக, காவியத் தொகுப்புகளை ஒவ்வொருவரும் அவரவருக்குத் தக்கவாறு வெளிப்படுத்தி இன்று நூல்களைப் படித்தவர்கள் உண்மையின் நிலைகளை அறியாது தான் படித்ததை தனக்குத் தெரிந்ததை அதையே பெரிது என்று வாதித்துக் கொண்டு இருக்கின்றனர்.

நமது குருநாதர் மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் அகஸ்தியன் உருவான நிலையும், ஐந்து வயதில் துருவனாகும் போது பெற்ற ஆற்றல்மிக்க நிலைகளையும் எமக்குக் காட்டினார், உணர்த்தினார். 

அதாவது, காட்டிற்குள் சில தாவர இனங்களின் மணத்தைக் கண்டபின் பாம்பினங்களோ, மற்ற மிருகங்களோ அவைகளின் விஷத் தன்மை ஒடுங்கி பதுங்கி இருக்கின்றது. பச்சிலைகள் மணம் பட்ட பின் வலிமையான யானையும் தன் மூர்க்கத்தனத்தை இழந்துவிடுகிறது.

மூர்க்கத்தனமாகத் தாக்கித் தன் உணவாக எடுக்கும் யானையின் விஷத்தன்மைகள் இத்தகைய பச்சிலை மணங்கள் பட்டபின் ஒடுங்குகின்றது.

பல இலட்சம் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த காட்டுவாசிகள் காடுகளில் வாழ்ந்த புலையர்கள் இன்று அகஸ்தியன் என்று சொல்லும் அவனுடைய தாய் தந்தையர்கள் இதையெல்லாம் கண்டுணர்கின்றார்கள்.

காட்டு விலங்குகளிலிருந்து தப்பிக்க இந்தப் புலையர்கள் இத்தகைய பச்சிலைகளை அரைத்து முலாமாகப் பூசிக் குகைகளில் படுத்துக் கொள்கின்றார்கள்.

விலங்குகள் இரை தேடி வந்தாலும் அவர்கள் உடலிலிருந்து வரக்கூடிய மணத்தைக் கண்டபின் இதை நுகர்ந்த பின் மயக்கமடைந்து இவர்கள் பக்கம் வராது வேறு பக்கம் சென்று விடுகின்றது.

இவர்கள் முலாமாகப் பூசிய நிலைகளில் சந்தர்ப்பத்தால் கருவுறும் பொழுது கருவில் உருவாகும் அந்தக் குழந்தைக்கு தாய் தந்தையர் நுகர்ந்த மணங்கள் இணைந்து, நஞ்சினை வென்றிடும் அணுக்களாகப் பெருகுகின்றது.

இப்படிப் பத்து மாதங்கள் கழித்துப் பிறந்த குழந்தை அது பிறந்தபின் சூரியனை உற்றுப் பார்க்கின்றது. நாம் சூரியனை உற்றுப் பார்த்தால் கண்கள் கூசுகின்றது.

ஆனால், மோதலில் ஒளிப் பிழம்புகள் வருவதை அந்த உணர்வின் தன்மையை இந்தக் குழந்தை உற்றுப் பார்த்து சிரிக்கின்றான், மகிழ்கின்றான்.

பிரபஞ்சத்தின் உணர்வை அதன் தொடர் அலை வரிசையை அது எங்கே செல்கின்றதோ இந்தப் பிரபஞ்சத்தையும் அந்த இளம் பிஞ்சு உள்ளத்தில் அவன் உணர்கின்றான், மகிழ்கின்றான். ஆனால், வெளிப்படுத்தும் உணர்வு இல்லை.

நட்சத்திரங்கள் பிற மண்டலங்களிலிருந்து கவர்வதும் அதன் உணர்வுகள் ஒரு நட்சத்திரத்திற்கு ஒரு நட்சத்திரம் மோதும் போது மத்தாப்பூ போல பொறி அலைகள் மாறுவதும் ஒரு உணர்வுக்கு ஒரு உணர்வு மாறுபட்டு மின் அணுக்களாக மாறுவதும் இதைப் போன்ற நிலைகளை வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கின்றான்.

விஷத்தை அடக்கி, உணர்வின் இயக்கத்தை அவன் நுகரும் உணர்வுகளை அவன் உயிர் அந்த ஞானத்தின் வழித் தொடராக ஒளியின் சிகரமாக எதையும் அறியும் அறிவாக அந்தப் பிஞ்சு உள்ளத்தில் அவனுக்குள் விளைகின்றது.

வெளிப்படுத்தும் உணர்வு இல்லை. ஆனால், நுகர்ந்த உணர்வு அவனுக்குள் விளைகின்றது.

இப்படி அவன் வளர்ந்து வரும் நிலைகளில் அந்தக் குழந்தையை எடுத்துக் கொண்டு காட்டுக்குள் சென்றால் மற்ற மிருகங்கள் எல்லாம் யானையோ, புலியோ, பாம்போ மற்ற விஷ வண்டுகளோ இவர்கள் அருகில் வருவதில்லை

ஐந்தாவது வயது வரப்படும் பொழுது தனித்து இவன் காட்டுக்குள் சென்றால் மிருகங்கள் அனைத்தும் இவனைக் கண்டு பதுங்கி வருவதும் இவனுக்குப் பின் வருவதும் ஆக, இவன் ஒரு அரசனாகின்றான்.

அதே சமயத்தில் இவனைப் பின் தொடர்ந்து சென்றால் அங்கே உள்ள மக்கள் அனைவரும் மற்ற கொடூர மிருகங்களிடமிருந்து காக்கும் பண்பும் வருகின்றது.

இப்படித்தான் துருவனை அரசனாக பிற்காலங்களில் வைத்தார்கள். அதற்குப் பின் வராது. அவன் கடும் ஜெபம் எடுத்தான் என்ற நிலைகள் இருக்கும்.

ஆனால் அரசன் என்ற நிலைகளில் தான் காட்டினார்களே தவிர அந்தத் துருவன் எவ்வழியில் விண்ணுலகம் சென்றான் என்ற நிலை இல்லை.

நம் குரு காட்டிய நிலைகள், அகஸ்தியன் தாய் தந்தையர் தங்கள் உடல்களில் பூசிய நஞ்சினை வென்றிடும் பச்சிலை, மூலிகை மணங்கள் அவன் உடலுக்குள் நஞ்சினை வென்றிடும் அணுக்களாக விளைந்தது. அதன் வழியில் தான் பேராற்றல் மிக்க சக்திகளையும் அகஸ்தியன் பெற முடிந்தது.

அகஸ்தியன் தன் ஐந்தாவது வயதில் துருவத்தின் ஆற்றலை நுகர்ந்து, துருவத்தின் ஆற்றலைப் பெற்றான். விண்ணுலக ஆற்றலை அறிந்தான், 27 நட்சத்திரங்களின் ஆற்றலையும் பெற்றான். அகண்ட அண்டத்தையும் அறிந்தான்.

அணுவின் ஆற்றலையும் அறிந்தான், தாவரவியல், புவியியல், உயிரியல் என்று அனைத்தையும் அறிந்தான். 16 வயதில் திருமணமாகி தான் பெற்ற சக்தியை மனைவிக்குப் பாய்ச்சி இரு உயிரும் ஒன்றெனெ இணைந்து ஒளியின் சுடராக மாற்றி துருவ நட்சத்திரமானான்.

நம் பூமியிலிருந்து விண்ணுலகம் சென்ற முதல் மனிதன் அகஸ்தியன். 

அவன் தான் இன்றும் துருவ நட்சத்திரமாக நின்று அதனின்று வெளிப்பட்ட உணர்வுகள் மற்ற மனிதர்களுக்குள் சென்று அவர்கள் சப்தரிஷி மண்டலங்களாக அவனின் ஈர்ப்பு வட்டத்தில் சுழன்று கொண்டுள்ளார்கள்.

அவர்கள் அனைவரும் மரணமில்லா பெருவாழ்வு எனும் அழியா ஒளிச் சரீரமாக வாழ்ந்து வளர்ந்து கொண்டுள்ளார்கள். 

May 4, 2016

குளத்தில் மூழ்கிப் பாவங்களை நீக்க நாம் முற்படுகிறோம் - பாவம் போகின்றதா...!

யாம் யாரையும் குறை கூறவில்லை.

அரசுகள் தான் வாழ வேதங்களின் நிலைகள் உருவாக்கப்பட்டு மறைமுக பாஷைகளை விட்டு மற்ற நிலைகள் உபநிஷத்துக்கள் என்று பிரிக்கப்பட்டு அதிலே பல நிலைகளை மாற்றி அவர்கள் மட்டும் அறிந்திடும் நிலைக்கு உருவாக்கியுள்ளார்கள்.

மனிதர்கள் உண்மைகளை அறிய முடியாதபடி சில உணர்வின் தன்மைகளை மறைத்து உபநிஷத்து என்று மாற்றப்பட்டு ஞானிகள் காட்டிய நிலைகளைப் பெறாதபடி செய்துவிட்டனர்.

அவர்கள் கண்டுணர்ந்தவர்கள் கோவில்களில் சிலைகளாக்கி இன்றைக்கு உருவமாக்கி ஸ்தல புராணமாக்கி விட்டார்கள்.

ஸ்தல புராணத்தின்படி நீ இங்கே இந்தக் குளத்தில் மூழ்கினால் உன் பாவங்கள் எல்லாம் போய்விடும் என்ற காவியத் தொகுப்புகளை எழுதியிருப்பார்கள்.

நளச் சக்கரவர்த்தி இந்தெந்த நிலைகளில் இங்கே வந்தான். சனி பகவான் அவனைத் துரத்திக் கொண்டு வந்தான். சனிப் பெயர்ச்சி என்று வரப்படும் பொழுது காரைக்காலில் அந்தக் குளத்தில் மூழ்கி பாவத்தைப் போக்கியுள்ளான் என்று சொல்வார்கள்.

குளத்தில் மூழ்கிவிட்டு வந்து சனி பகவானுக்கு அர்ச்சனை செய்தால் சனி நீக்கமாகி அடுத்து குரு பெயர்ச்சி வந்து அவனுக்குள் நல்லது வரும் என்று காவியத் தொகுப்புகளைக் காட்டியுள்ளார்கள்.

இந்தத் தொகுப்புகளில் சொல்லியபடிதான் இன்றைய நிலைகளில் மக்கள் பின்பற்றிச் செல்கின்றார்கள்.

ஆனால், நள சக்கரவர்த்தி மூழ்கிய குளத்திற்குள் சென்றால் அதற்குள் பல கசடுகளும் பல அழுக்குகளும் எண்ணெய் தேய்த்துக் குளித்த நிலைகள் அங்கே உள்ளது. அதைத்தான் அங்கே ஒட்ட வைத்துக் கொண்டு வர முடியும்.

பாவ நிலைகளைத் தொலைப்பதற்கு சனிப் பெயர்ச்சிக்கு, “நீ அங்கே செல் சந்தோஷம் கிடைக்கும்” என்று கடனெல்லாம் வாங்கி இங்கிருந்து பஸ்ஸில் ஏறிச் சென்று செல்லும் போது எத்தனையோ தொல்லைகள்.

அப்புறம் சனி பின்னாடி துரத்திக் கொண்டுதானே வரும்.

கடனை வாங்கித் தப்பிக்க வேண்டுமென்று அங்கே எண்ணினால் அங்கே உள்ள வியாபாரிகள் தட்டிப் பிரிக்கும் நிலையில் குங்குமம் அது ஒன்றுக்கும் ஆகாது அதிலே எதையாவது ஒன்றைப் போட்டு வைத்திருப்பார்கள்.

சாந்தி கழிப்பதற்காக வேண்டி வியாபாரிகள் தன் பிழைப்புக்காக இதைச் செய்கின்றனர். மற்றவர்கள் பிழைப்புத் தேடிச் செல்ல முடியும். ஆனால், பாவத்தை மூட்டை கட்டிக் கொண்டு தான் வர முடியும்.

ஆக, பாவத்தைப் போக்கும் நிலை அங்கில்லை.

நான் இதைச் செய்தேன், அதைச் செய்தேன், இந்தத் தெய்வத்தை வணங்கினேன், இந்தத் தெய்வத்திற்கு யாகத்தைச் செய்தேன் என்ற இந்த மந்திர ஒலியைக் கேட்டபின் சோர்வடைந்து இதனின் உணர்வு முதிர்வான பின் இறந்தால் என்ன நடக்கின்றது?

இதே மந்திரத்தைச் சொன்னால் மற்றவரைக் கெடுப்பதற்கு இந்த உணர்வின் ஆவியை வைத்து ஒலிகளை எழுப்பி முதலில் கைவல்யம், பின் ஏவல் என்ற நிலைகளுக்கு வரும்.

இதைப் போன்ற நிலைகள் தான் மனிதனுக்குள் விளையும் தன்மையைத்தான் இன்று ஒருவருக்கொருவர் எடுத்துக் கொள்கின்றோம்.

யார் எவரை எந்த மந்திரத்தைச் சொல்லி நான் தெய்வத்திற்கு சக்தி ஊட்டுகிறேன் என்று சொன்னால் அதே மந்திரத்தை அவர் மடிந்த பிற்பாடு சொன்னால் எந்த மந்திரத்தைச் சொல்கிறானோ இங்கே கைவல்யம் வந்தேதான் தீர வேண்டும்.

ஆக, மோட்சம் போவதோ ஞானத்தைப் பெறுவதோ இல்லை.

இதைப் போல காவியத் தொகுப்புகள் மெய் ஞானிகள் காட்டியது அனைத்தும் தவறான பாதையில் செல்லப்பட்டு நாம் தவறாக அழைத்துச் சென்றுள்ளார்கள்.

யாம் யாரையும் குறை கூறவில்லை. அரசர்கள் தான் வாழ ஞானிகள் காட்டிய பேருண்மைகளை மறைத்தனர். அந்த மறைப்பட்ட நிலைகளை நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக இதைச் சொல்கிறோம்.

ஞானப் பசியைப் போக்கும் மெய் ஞானிகளாக, மகரிஷிகளாக நீங்கள் உருவாகுங்கள்

தீய அணுக்களின் உணர்வுகள் நமக்குள் மறைத்திருக்கும் நிலையில் முழு நிலா போல நமக்குள் இருக்கும் ஒவ்வொரு அணுக்களையும் நாம் ஒளியாக மாற்றியமைத்தல் வேண்டும்.

இது தானாக மாறுவதில்லை. தானாகச் சேர்தெல்லாம் இருளின் தன்மைதான்.

வேதனைப்படுபவர் உணர்வை நுகர்ந்தால் தனக்குள் தன்னையறியாமலே புகுந்து நல்ல உணர்வை மறைக்கின்றது.

அந்த அருள் ஒளியின் உணர்வு கொண்டு மனிதனான நாம் இந்த இருளைத் துடைத்துப் பழகவேண்டும்.

அருள் வழி செல்வோம். அருள் ஞானத்தைப் பெருக்குவோம். இந்த உலகில் இந்தக் குறைந்த காலத்தில் வாழும் நிலையில் உலக மக்களை இருளிலிருந்து மீட்டிடுவோம்.

அருள் ஒளி பெறவேண்டும் என்று நாம் தவமிருப்போம். அருள் ஒளியின் உணர்வை நமக்குள் தியானிப்போம், அதை வளர்ப்போம். அனவரும் பெறவேண்டும் என்ற நாம் எண்ணங்களைப் பரவச் செய்வோம்.

அனைவரையும் நலம் பெறச் செய்யும் உணர்வை நமக்குள் வளர்ப்போம். தியானம் செய்யும் ஒவ்வொரு குடும்பத்திலேயும் ஒற்றுமையும் பற்றும் ஏற்பட்டு குடும்பத்தில் வாழும் மக்களையும் ஞானிகளாக மாற்றுதல் வேண்டும்.

நாம் அனைவரும் ஞானிகள் அன்று கண்டுணர்ந்தார்கள் என்றால் குரு காட்டிய அருள் வழியில் நாம் அனைவருமே மகரிஷிகளாக வேண்டும். அருள் ஒளியை உருவாக்கும் பெரும் தத்துவ ஞானிகளாக மாறுதல் வேண்டும்.

ஒவ்வொரு மக்களையும் மனிதனென்ற நிலையில் தன்னை அவர்களுக்குள் அறியும் அருள் ஞானத்தை உருவாக்கும் ஞானிகளாக நீங்கள் உருவாக வேண்டும்.

நீங்கள் சிறிது பேராவது நாங்கள் பார்த்தோம் நோய் நீங்கியது, நாங்கள் பார்த்தோம் அவர்கள் திருந்தினார்கள் ங்கள் பார்வையால் நாங்கள் பாக்கும் குடும்பங்களில் ஒற்றுமை ஏற்பட்டது என்ற மகிழ்ச்சியான செய்திகள் தொடர்ச்சியாகக் கொண்டு இங்கே வருதல் வேண்டும்.

அந்தத் தகுதிகளை நீங்கள் உங்களுக்குள் வளர்த்துக் கொள்ள வேண்டும்.

ஒரு வித்தை வைத்து நல்ல ஞானத்தின் நிலை அடைந்தால் அதே வித்து தான் பல வித்துகளாகப் பெருகுகின்றது. ஒரு வித்தை வைத்துத்தான் பல வித்துகளாக ஆகின்றது.

ஞானத்தின் உணர்வு எமக்குள் வளர்த்தால் வளர்த்த வித்தினை உங்களுக்குள் விளைய வைத்து அருள் வித்தாக அருள் ஞானத்தை உங்களுக்குள் பெருக்கி அனைவருடைய ஞானத்தின் நிலைகளை ஞானப் பசியைப் போக்கும் நிலைகளாக நீங்கள் உருப்பெறவேண்டும்.

ஒவ்வொருவரும் ஞானியாக வேண்டும். அதன் வழி மகரிஷிகளாக வேண்டும். சிருஷ்டிக்கும் உணர்வின் தன்மை பெறவேண்டும்.

May 2, 2016

தனக்குள் மோதும் நஞ்சினை துருவ நட்சத்திரம் ஒளியாக்குவது போல நம் மீது மோதும் நஞ்சினை “ஒளியின் சுடராக, ஒளியின் சிகரமாக” மாற்றுவோம்

அகத்திற்குள் அறிந்த உணர்வை முதலில் பெற்றவன் அகஸ்தியன். அவன் அறிந்திட்ட அறிவு அவனில் விளைந்த உணர்வுகள் இன்றும் இங்கே பரவிக் கொண்டுள்ளது.

அந்த அகஸ்தியனின் அருள் உணர்வுகளை நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று தியானியுங்கள்.

நம் குருநாதர் காட்டிய அருள் வழியில் அந்த அருளை ஏங்கிச் சுவாசித்து நம் உயிருடன் இணைத்து அந்த உணர்வின் உணர்ச்சிகளை உடலுக்குள் பரவச் செய்ய வேண்டும்.

அகஸ்தியன் பெற்ற அருள் சக்திகளை நம் உடலில் உள்ள அணுக்களில் இணைக்கப்படும் பொழுது அவனறிந்த உணர்வும் அவன் ஒளியாக மாற்றிய உணர்வும் நாம் பெறமுடியும்.

இவ்வாறு நம் உடலில் உள்ள அணுக்களை மாற்றினால் அவை அதனுடைய வேலைகளை அதைச் செய்யும்.

கணவன் மனைவி இரு உயிருன் ஒன்றென இணைந்து ஒளியாக மாற்றி விண்ணின் உணர்வின் உணர்வினைத் தனக்குள் ஒளியாக்கி எந்த விண்ணின் நிலை அகஸ்தியன் பெற்றானோ அவன் துருவ நட்சத்திரமாக ஒளியின் சுடராக வாழ்ந்து வளர்ந்து கொண்டுள்ளான்.

இன்று நட்சத்திரங்கள் பல வகை செய்தாலும் இந்தப் பிரபஞ்சத்தில் வரும் நஞ்சினை ஒளியாக மாற்றிடும் நிலை பெற்றது துருவ நட்சத்திரம்.

அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வுகளை அவர்கள் பெற்ற அருள் ஒளியின் உணர்வுகளைப் பெறவேண்டும் என்று உயிரான ஈசனிடம் வேண்டித் தியானிக்க வேண்டும்.

உங்கள் நினைவு துருவத்தை நோக்கிச் செல்லட்டும். துருவ நட்சத்திரத்துடன் உங்கள் நினைவாற்றல் இணையட்டும்.

சூரியனின் கதிரியக்கங்கள் கவர்ந்து பரப்பும் துருவ நட்சத்திரத்திலிருந்து வெளிப்படும் உணர்வுகளை நீங்கள் நுகர்ந்து உங்கள் உயிருடன் இணைத்து உங்கள் உடலிலே பரவச் செய்யுங்கள்.

உங்கள் இரத்த நாளங்களிலே கலக்கச் செய்யுங்கள். உங்கள் உடலிலுள்ள அணுக்களை அவ்வழியில் பெறும்படிச் செய்யுங்கள். துருவ நட்சத்திரத்திலிருந்து வெளிப்படும் உணர்வை உங்கள் உடலுக்குள் ஒன்றிடச் செய்யுங்கள். ஒவ்வொரு அணுக்களிலும் ஒன்றிடச் செய்யுங்கள்.


துருவ நட்சத்திரத்துடன் ஒன்றிட வேண்டும் என்று உயிரான ஈசனிடம் உணர்வைச் செலுத்தி ஏங்கிப் பெறச் செய்யுங்கள்.

உங்கள் உடல் அணுக்கள் அனைத்தும் ஏகாந்த நிலை என்னும் உணர்வின் தன்மை கொண்டு மகிழ்ந்திடும் உணர்வுகள் பெற்று பேரின்பப் பெரு நிலை என்ற உணர்வின் உணர்ச்சிகளை ஊட்டும்.

இப்பொழுது உங்கள் உடலில் மகிழ்ச்சியும் “மகதம்” என்ற அருள் மகத்தான அருள் அணுக்களாக அருள் சுவையின் உணர்வை ஒளியாக மாற்றிடும் நிலை பெறும்.

நஞ்சு மோதி ஈர்க்கும் சக்தி பெற்றது. இதைப் போன்று நமது துருவப் பகுதி வழியாக பூமிக்குள் வரும் உணர்வினை துருவ நட்சத்திரம் அந்த நஞ்சுடன் மோதி அதை ஒளியாக்குகின்றது.

தனக்குள் மோதும் நஞ்சினை துருவ நட்சத்திரம் ஒளியாக்குவது போன்று உங்கள் உணர்வின் தன்மையும் இன்று உங்களில் மோதும் நஞ்சினை ஒளியின் உணர்வாக ஒளியின் சிகரமாக மாற்றும் நிலைக்கு வரும்.

அந்த உணர்வினை உங்களுக்குள் பிரம்மமாக்குங்கள். உங்கள் உயிரான ஈசனிடம் வேண்டுங்கள். ஒளியாக மாற்றும் அந்த உணர்வுகள் உருப்பெற வேண்டும் என்று ஏங்குங்கள்.

நஞ்சின் மோதலில் ஒளியின் உணர்வாக உருவாக்கிய உணர்வினை உங்கள் உடலில் உள்ள அணுக்களை அவ்வழியில் அதனை பிரம்மத்தை உருவாக்குங்கள்.

May 1, 2016

விஷத்தைப் பாய்ச்சி புழுவைக் குளவியாக மாற்றியது போல் துருவ நட்சத்திரத்தை வைத்து நம் அணுக்களைத் தீண்டி ஒளியின் சிகரமாக மாற்றுங்கள்

ஒரு குளவி புழுவைக் கொட்டித் தன் விஷத்தைப் பாய்ச்சி குளவியாக மாற்றுகின்றது.

இதைப் போல் துருவனின் உணர்வுகளை துருவ நட்சத்திரத்தின் உணர்வுகளை வைத்து உங்கள் உடலிலுள்ள அணுக்களைத் தீண்டி அந்த உணர்வின் தன்மையை ஒளியின் சிகரமாக மாற்றும் உணர்வினைப் பாய்ச்சுங்கள்.

உங்கள் உயிரான ஈசன் வழியில் உங்கள் உடலில் பரவச் செய்து உங்கள் நினைவின் ஆற்றலை உள் செலுத்தி உடலிலுள்ள அணுக்கள் அனைத்தையும் தீண்டச் செய்யுங்கள்.

நஞ்சினை ஒடுக்கிடும், உணர்வினை ஒளியாக மாற்றிடும் அணுவாக மாற்றுங்கள்.

துருவ நட்சத்திரத்தின் உணர்வைப் பெற்றவர்கள் அந்த அகஸ்தியன் வழியில் கணவனும் மனைவியும் இரு உணர்வும் ஒன்றாக ஒளியாகி அவன் ஈர்ப்பு வட்டத்தில் இன்று ஆறாவது அறிவை மனைவியின் உணர்வுடன் ஒன்றி ஏழாவது அறிவாக மாற்றிச் சென்ற நிலைகளிலிருந்து சிருஷ்டிக்கும் ஒளியின் சிகரமாகப் பெற்றவர்கள் சப்தரிஷி மண்டலம்.

அந்தச் சப்தரிஷி மண்டலத்தை எண்ணி ஏங்குங்கள்.

முப்பத்து முக்கோடி தேவாதி தேவர்கள் என்று சொல்லும் அக்காலத்தில் சென்ற அனைவரது அருள் உணர்வுகள் வெளிப்படுவதை சூரியன் கவர்ந்து நம் பூமிக்குள் கொண்டு வருகிறது.

அவர்களது அருளும் உங்களுக்குள் இருக்கும் முப்பத்து முக்கோடி உணர்வின் அணுக்களும் அதனுடைய முழுமைகளை அதனதன் இயக்கமாக இருக்கும் நிலைகளை அருள் ஒளியின் சுடராக மாற்றிய அருள் ஒளியின் தன்மையை முப்பத்து முக்கோடி அணுக்களின் திறன்களையும் ஒளியின் உணர்வாக மாற்றிட்ட அந்த அருள் ஒளியும் உங்களுக்குள் இருக்கும் அருளுடன் அருள் ஒளி பெறும் அணுக்களாக மாற்றிடும் நிலையும் அதனுடன் உங்களை ஒன்றிடச் செய்யுங்கள்
.
சப்தரிஷி மண்டலங்களின் பேரருள் பேரொளி எங்கள் இரத்த நாளங்களில் கலந்து எங்கள் உடலிலுள்ள சர்வ அணுக்களும் அருள் ஒளியைச் சிருஷ்டிக்கும் அருள் ஞானம் பெற்றிடும் அருள் உணர்வுகள் ஒளியின் உணர்வாக உருவாக்கும் அணுக்களாக மாற்றிடல் வேண்டும் என்று நாம் தியானிக்க வேண்டும்.

துருவ நட்சத்திரத்துடன் இணைந்து வாழ்ந்திடும் அருள் ஒளியின் சுடராக எங்கள் அணுக்கள் அனைத்தும் ஒளியின் உணர்வாக அனைத்தும் உருப்பெற வேண்டும் என்று நாம் ஏங்கித் தியானிக்க வேண்டும்.

ஆகவே, துருவ நட்சத்திரத்தின் ஈர்ப்பு வட்டத்தில் வாழ்ந்திட ஓர் இருப்பிடமாக அதனை நாம் செயல்படுத்துவோம்.