
அருள் ஞானக் கருத்துக்களைத் துணிவுடன் வெளிப்படுத்த வேண்டும்
எம்முடைய உபதேசத்தைக் கேட்டீர்கள். ஆனாலும் அடுத்தவர்களுக்கு இந்த
உண்மையை எடுத்துச் சொல்ல அச்சம் ஏற்படுகின்றது. அச்சம் ஏற்படும்
போது சொல்ல வேண்டும் என்ற துணிவும் இருக்கின்றது… சொல்ல முடியாமல் போகும் நிலையும் ஏற்படுகிறது.
காரணம்…
1.நம்மைக் கேவலமாக எண்ணுவார்களோ…?
2.அவருடைய பார்வையைப்
பார்த்தாலே வித்தியாசமாக இருக்கிறது என்று விலகிச் சென்று விடுவோம்.
3.இந்த உண்மைகள் சொல்லாக வெளி
வராது.
நம்முடன் சகோதரர்களாக இணைந்து வாழ்ந்து கொண்டிருப்பவர்கள் அவர்கள் குறைகளைக் காணும் பொழுது அந்தக் குறையை நிவர்த்திக்கும் உணர்வின்
சத்துக்களை நாம் ஊட்ட வேண்டும்.
இதில் அச்சம் என்பது கூடாது… அச்சமென்று வந்து விட்டாலே “உண்மையை மறைக்கிறோம்…” என்று தான் பொருள்.
1.ஞானிகள் காட்டிய
உண்மைகள் இவ்வாறு தான் வேறு வேறு நிலைகளுக்கு மாற்றப்பட்டு
2.உண்மைகள் அறிய முடியாதபடி போய்விட்டது காலம் காலமாக…!
இன்று விஞ்ஞான அறிவில் மனிதனின் குணங்கள்
அனைத்தும் அழியும் பருவம் பெற்று விட்டது. அசுரனின் நிலைகளுக்குச் செயலாக்கும் உணர்வுகள் வளர்ந்து
கொண்டு வருகின்றது.
இதைப் போன்ற நிலைகளில்
துணிவுடன்… உபதேசத்தைக் கேட்பதோடு மட்டுமல்லாதபடி
1.தன் குடும்பங்களில் குறைகள் ஏற்பட்டால்
அவர்களுக்குத் தெளிவாக ஞானத்தை எடுத்துரைத்து
2.நாம் எப்படி வாழ வேண்டும்…? என்ற உண்மையினைத் துணிவுடன் எடுத்துச் சொல்ல வேண்டும்.
குடும்பம் எப்படி ஒன்று சேர்ந்து வாழ வேண்டும்…? குறைகள் நம்மை எவ்வாறு
சாடுகின்றது…? அதிலிருந்து எப்படி மீள வேண்டும்…? என்ற உபாயங்களைச்
சொல்லித்தான் அதை மாற்றுதல் வேண்டும்.
நீ தியானம் செய்து கொண்டே தான் இருக்கின்றாய். ஆனால் நீ தவறு செய்யாமல்
இருக்கின்றாயா…? என்று அவர்கள் நம்மைக் கேட்கும் நிலை வந்து விடுகின்றது.
1.அதாவது… தியானம் செய்து கொண்டிருப்பவர்களிடம் சிறிது குறைகள் வந்தாலும்…
2.பார்…! இவன் எனக்கு அன்றைக்கு உபதேசித்தான் ஆனால் இப்போது இவன் என்ன செய்கிறான்…? என்று சொல்லக்கூடிய நிலை வந்து விடுகின்றது.
உயர்ந்த குணங்கள் இங்கே மறைக்கப்படுகின்றது.
நாம் செய்து வைத்திருக்கும் உணவுப் பொருள்களிலே ஒரு துளி விஷம் பட்டு விட்டால் அந்த உணவையே இது கெடுத்து விடும்… செயலற்றதாக மாற்றி விடுகிறது.
நாம் எடுத்துக் கொண்ட உணர்வுகளில்
1.நமக்குள் அறியாது வரும்
பிழை உடனே அந்த உணர்ச்சிகளைத் தூண்டும்.
2.அப்பொழுது நமக்கே புரியும்… நம்மை அறியாமல் இந்த சொல் வந்து விட்டது என்று…!
3.இந்தக் குற்றத்தை
ஏற்றுக் கொண்டு அவர்கள் மனதைப் புண்படுத்தும் என்ற நிலையில்
தன்னைத்தான் உணர்தல் வேண்டும்.
4.இதை உணர்ந்த பின் மகரிஷிகளின் அருள் ஒளியைப் பெற்று அதை நமக்குள் அடக்கிடல்
வேண்டும்.
பின்…
1.என்னை அறியாது இயக்கும் இருள்கள் அகல வேண்டும் மெய்ப் பொருள் காணும் திறன் என்னிலே அது வளர
வேண்டும் ஈஸ்வரா…!
2.என் பார்வை அனைவரையும் நலமாக்கும் சக்தி பெற
வேண்டும்
3.என் சொல் அனைவரையும் மகிழ்ச்சி பெறச் செய்யும் செயலாக வர வேண்டும் என்று இவ்வாறு நாம்
மாற்றிக் கொள்ள வேண்டும்.