ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

May 11, 2020

இன்றைய சூழ்நிலையில் நிச்சயம் உங்களால் அழியா ஒளிச் சரீரம் பெற முடியும்…!


“ஞானிகளைப் பற்றிய முழு உண்மைகளையும் நீங்கள் கேட்க வேண்டுமென்றால்” வருடக்கணக்கில் அமர்ந்திருக்க வேண்டும் உங்களுக்குப் பொறுமை பத்தாது.

உணவு உட்கொள்ளாமல் உங்களால் இருக்க முடியாது. இருந்தாலும் அதை உங்களால் ஜீரணிக்க முடியாது.
1.ஆனால் எப்படியும் சுருங்கச் சொல்லி அதை எல்லாம் பதிவு செய்ய வேண்டும்
2.மகரிஷிகள் நினைவுகள் உங்களுக்குள் வர வேண்டும் என்பதற்கே தான் இதையெல்லாம் தொடர்ந்து சொல்கின்றேன் (ஞானகுரு)

மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் எனக்குள் விண்ணின் ஆற்றலை எவ்வாறு பதிவு செய்தாரோ இது போல் உங்களிடமும் பதிவு செய்கின்றேன். அந்தப் பதிவை நீங்கள் எண்ணி மீண்டும் வளர்த்து வந்தால்
1.மனிதன் என்ற நிலைகள் முழுமை அடைந்து
2.உயிருடன் ஒன்றிய ஒளியின் சரீரம் நிச்சயம் நீங்கள் பெற முடியும்.

ஏனென்றால்…
1.அறிவு இல்லை என்ற நிலைகளை எண்ண வேண்டாம்.
2.கற்கவில்லை என்று எண்ணவும் வேண்டாம்.
3.ஞானகுரு சொல்வதை எல்லாம் நாம் எப்பொழுது பெறப் போகின்றோம்…! என்ற ஏக்க நிலையும் வேண்டாம்.
4.பெற முடியும்…! என்ற ஏக்கத்தின் நிலைகள் வரும்போது
5.நிச்சயம் ஒவ்வொரு மனிதனும் இதைப் பெற முடியும்.

அதற்கேதான் இதை உங்களிடம் மீண்டும் மீண்டும் மீண்டும் சொல்வது.

ஏனென்றால் “பௌர்ணமி போன்று” பூரண நிலைகள் நாம் பெற முடியும். இருள் சூழ்ந்த சந்திரன் இன்று ஒளி கொண்டு பௌர்ணமியாக ஒளியின் சுடராக வீசுவது போல
1.ஒரு உயிர் கொண்ட உணர்வின் தன்மை
2.புழுவாக இருந்து பரிணாம வளர்ச்சியில் மனிதனாக வரும்போது
3.உலகை அறிந்திடும் உணர்வு பெற்ற… பூர்ண பௌர்ணமியாக
4.ஒளியின் உடலாகப் பூரண நிலையை ஒவ்வொருவரும் பெற முடியும்.

இருளை மாய்த்து உயிருடன் ஒன்றிய ஒளியின் சரீரமாக என்றும் ஒளியாக நிலை கொண்டிருக்கும் ஆறாவது அறிவு கொண்டு ஏழாவது நிலை பெற்றதுதான் “எண்ணிலடங்காத சப்தரிஷிகள்…” சப்தரிஷி மண்டலமாக இன்றும் இருக்கின்றார்கள்.

அந்தச் சப்தரிஷி மண்டலங்களின் பேரருள் பேரொளியை நமக்குள் வலுக் கொண்டு எடுத்து உடலை விட்டு அகன்ற நமது குலதெய்வங்களான உயிராத்மாக்களை அங்கே அந்தச் சப்தரிஷி மண்டலங்களுடன் இணைத்து விண் செலுத்த வேண்டும்.

அவர்கள் எப்படி உடலைக் கருக்கினரோ அதைப் போன்று உடல் பெறும் உணர்வை மாய்த்துவிட்டு ஒளியின் தன்மையாக அடையச் செய்ய வேண்டும். அப்படிச் செய்தால் அவர்களும் சப்தரிஷிகள்தான்.

உயிருடன் ஒன்றச் செய்து ஒளியின் சரீரமாக நிலை கொண்டு செயல்படுத்தும் நிலைகளில் முதலில் அவர்கள் ஆனார்கள் என்றால் அவர்களைத் தோடர்ந்து நாமும் இதைப்போல் அங்கே நிலை கொள்ள முடியும்.

ஆறாவது நிலையிலிருந்து ஏழாவது நிலையாக ஒளியாகப் பெற்றதுதான் சப்தரிஷி.