ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

April 27, 2023

குருநாதர் எம்மை அரவணைத்துச் செய்த நிகழ்ச்சி

ஒரு சமயம் நான் (ஞானகுரு) பழனியில் இருக்கின்றேன்… கல்கத்தா செல்வதற்கு டிக்கெட் எடுடா…! என்று குருநாதர் சொல்கின்றார்.

எதற்கு சாமி…? என்று கேட்டேன்.

டிக்கெட் எடுடா…! என்றார்.

குருநாதர் பணத்தையும் கொடுக்கின்றார். ரயில்வே ஸ்டேஷனுக்கு சென்று டிக்கெட்டை எடுத்துக் கொண்டு வந்தேன்.

ஒரு குதிரை வண்டியைப் பிடிடா… என்று சொன்னார். வண்டி வந்தது.

ஆனால் கொடைக்கானல் பக்கம் காட்டுப் பக்கமாக வண்டியைப் போகச் சொல்கிறார்.

சாமி… நாம் இந்தப் பக்கம் செல்ல வேண்டும்…! என்று சொன்னேன்.

கல்கத்தா செல்ல டிக்கெட் எடுத்து விட்டாய் அல்லவா…! குதிரை வண்டியில் ஏறு… வண்டியைப் போகச் சொல்…! என்று சொல்கின்றார்.

வண்டியில் ஏறிய பின்… கல்கத்தாவில் குருநாதர் அங்கே சுற்றி வந்த பல நிகழ்ச்சிகளைச் சொல்கிறார். கல்கத்தா காளி எவ்வாறு இருக்கின்றது…? எப்படி எப்படி உருவானது…? எந்தெந்த நிலை…! என்று சொல்லிக் கொண்டு வருகின்றார்.

அதை எல்லாம் சொன்ன பின்… இப்பொழுது எதற்காக உன்னை அங்கே அழைத்துப் போகின்றேன் தெரியுமா…! என்று கேட்டார்.

அவர் இடுப்பில் இருந்த கத்தியை எடுத்து நன்றாகப் பதம் பார்த்துவிட்டு என் கழுத்தைப் பிடிக்கின்றார்.
1.இங்கே குத்தி இந்த இரத்தத்தை அங்கே கொண்டு போய்க் காளிக்கு கொடுத்துவிட்டு
2.“நான் மந்திரத்தைக் கற்றுக் கொள்ளப் போகின்றேன்…!”
3.அதற்குத்தான் கல்கத்தாவிற்கு உன்னை அழைத்துப் போகின்றேன் என்றார்.

எனக்கு எப்படி இருக்கும்…? காட்டிற்குள் அழைத்துச் சென்ற பின் இப்படிச் சொல்கிறார்.

நான் என்ன சொன்னேன்…?

என் மனைவியை நோயிலிருந்து காப்பாற்றி எழுப்பிக் கொடுத்தீர்கள். நீங்கள் என்ன சொல்கின்றீர்களோ அதன்படி…
1.என்னைக் கொன்றாலும் சரி… அல்லது மற்ற எப்படி வேண்டுமானாலும்
2.எதை வேண்டுமானாலும் நீங்கள் செய்து கொள்ளுங்கள்…! என்று சொன்னேன்.

குருநாதர் “கெக்கெக்க….கெக்க….” என்று பலமாகச் சிரிக்க ஆரம்பித்து விட்டார். ஆனால் மறுபடியும் என் கழுத்தைப் பிடித்துக் கத்தியை எடுத்துக் குத்த வருகின்றனர்.

மீண்டும் என்னை மிரட்டுகின்றார்…! பார்க்க வேண்டிய எல்லா பரீட்சைகளையும் செய்து பார்க்கின்றார்.

சிறிது நேரம் கழித்து
1.”என்னை அரவணைத்து…” கல்கத்தாவிற்கு அழைத்துச் செல்கின்றனர்.
2.நானும் இப்படித்தான் அங்கே சென்று வந்தேன் என்று சொல்கின்றார்

உன்னை அங்கே பலி கொடுத்து நான் சக்தி பெற போகின்றேன்... நான் உலகத்திலேயே மிகச் சக்தி வாய்ந்தவனாக மாறப் போகின்றேன் என்று சொல்கின்றார்.

அரசர்கள் காளில் கோவிலை எப்படி உருவாக்கி வைத்திருக்கின்றார்கள்…? பலி பீடங்களை அமைத்து எதிரிகளை வீழ்த்துவதற்கு என்ன செய்கின்றார்கள்…? அதே சமயத்தில் எந்தெந்தக் காலங்களில் எதைச் செய்கின்றார்கள்…?

ஆடு மாடு அனைத்தையும் பலி கொடுத்துவிட்டுக் கடைசியில் மனிதனையும் பலி கொடுக்கின்றார்கள். படிப்படியாக அசுவமேதை யாகம் செய்வது போன்று கடைசியில் மனிதனை நரபலி கொடுக்கின்றார்கள்.

ஒவ்வொரு ஆலயத்திலும் ஒவ்வொரு விதமான சக்திகளை0ப் பெறுவதற்காக மனிதனுக்குள் விளைந்த உணவு உணர்வுகளை எடுத்து இந்த உடலைப் பலி கொடுத்து எப்படிச் சக்தி பெறுகின்றார்…? என்று காட்டுகின்றார்.

முருகன் ஆலயத்தில் பாலாபிஷேகம் தேனாஅபிஷேகம் செய்கின்றார்கள். கருப்பணசாமி மாடசாமி கோவில்களில் கோழியோ ஆட்டையோ அறுத்து இரத்தத்தை அங்கே அபிஷேகம் செய்கின்றார்கள்.

இதே போன்று மனிதனுடைய இரத்தத்தையே காளிக்குக் கொண்டு போய்க் கொடுக்கின்றார்கள். மந்திர ஒலி கொண்டு அங்கே என்ன செய்கின்றனர்…? என்று நேரடியாகக் காண்பிக்கின்றார்.

என்னை அங்கு அழைத்துக் கொண்டு சென்று இந்த உண்மைகளை எல்லாம் காட்டுகின்றார்.

இங்கே வருவதற்கு முதலில்… உடல்களைச் சரியான இடத்திலே கொண்டு போய் மறைத்து வைக்கின்றார்.

ஏனென்றால் நாம் இருவரும் இங்கே வந்து விட்டோம் அங்கே மனிதர்கள் இந்த உடலைப் பார்த்தார்கள் என்றால் “எல்லாம் தீர்ந்து போகும்டா…” என்கிறார்.

நாம் வருவதற்கு நேரமாகி விட்டது என்றால்
1.“செத்து விட்டோம் என்று என்று சொல்லி உடலை எரித்துப் பொசுக்கி விடுவார்கள்…
2.கடைசியில் நாம் இருவரும் ரோட்டிலே தான் அலைய வேண்டியிருக்கும்…! என்று அதையும் சொல்கின்றார்.

கல்கத்தா காளி கோவில் நடக்கக்கூடிய பல உண்மைகளை இப்படித்தான் குருநாதர் எம்மை அறியும்படி செய்தார்.