ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

April 13, 2023

நமது வாழ்க்கையில் அருள் ஞானியின் உணர்வை எதிலேயும் இணைத்தே செயல்படுத்த வேண்டும்

நெருப்பு பற்றி எரிகிறது என்றால் அந்த வெட்கையின் தன்மை கொண்டு அதன் அருகே நாம் செல்ல முடியாது. ஒரு கரண்டியை அந்த நெருப்பிலே வைத்துச் சூடுபடுத்துகிறோம் என்றால் ஒரு துணியை வைத்து அதை நாம் பாதுகாப்பாகப் பிடிக்கின்றோம்.

அது போன்று தான் வாழ்க்கையில் வரக்கூடிய தீமைகள் எதுவும் நம்மைப் (பற்றிவிடாதபடி) பாதிக்காதபடி அருள் ஒளி என்ற உணர்வின் தன்மை கொண்டு நாம் பாதுகாத்துக் கொள்ள கொள்ள வேண்டும்.

இதை ஏன் சொல்கிறோம் என்றால் “இல்லற வாழ்க்கை என்பது ஒரு பெரும் மலையைக் கடந்தது போன்று தான்…!” அதிலே சகோதர உணர்வும் பற்றும் பாசமும் பரிவும் வளர வேண்டுமென்றால் இன்னலையும் ஒருவரை ஒருவர் போற்றித் துதிப்பதும் இகழ்ந்துரைப்பதும் இது போன்ற நிலைகளிலிருந்து நாம் விடுபடுதல் வேண்டும்.

அருள் ஒளி பெறுதல் வேண்டும் அருள் ஞானத்தைப் பெருக்குதல் வேண்டும். இந்த வாழ்க்கையில் தெளிந்த மனம் பெற வேண்டும் தெளிவான வாழ்க்கை வாழ வேண்டும்.

தெளிவான வாழ்க்கை வாழ வேண்டும் என்றால்
1.அருள் ஞானிகளின் உணர்வை நாம் நுகர்ந்தே ஆக வேண்டும்
2.அருள் ஞானியின் உணர்வுகளை நம் உடலுக்குள் உருவாக்குதல் வேண்டும்.
3.அப்போது பொருளறிந்து செயல்படும் திறனாக வரும்.

இந்த வாழ்க்கையில் நாம் எண்ணிய உணர்வுகளே நம்மை வழி நடத்தும். ஏனென்றால் வெறுப்பு வேதனை சலிப்பு இவைகளை நாம் அடைந்தால் இந்த (நம்) எண்ணத்தால் உருவான நிலைகள் அதன் செயலாக்கமே நம்மை இயக்கிவிடும்.

நம் வாழ்க்கையில் இது போன்று வரும் நிலைகளிய மாற்ற
1.அருள் ஞானிகள் உணர்வுகள் பெற வேண்டும்… அனைவரும் நலம் பெற வேண்டும் என்ற
2.இந்த உணர்வை நாம் வளர்த்துக் கொண்டால் அந்த உணர்வின் எண்ணமே நல்வழிப்படுத்தும்
3.நமக்கு நல்வழி காட்டும்.

வாழ்க்கையை உயர்த்தவும்… நல்வாழ்க்கையாக வாழவும் மகிழ்ந்து வாழவும்… மகிழச் செய்யும் உணர்வுகளை நமக்குள் பெருக்கவும்… நம் வாழ்க்கை பிறரை மகிழச் செய்யும் நிலையாகவும்… நம் சொல் பிறரைப் பேரானந்தப்பட செய்யக்கூடிய நிலையகவும் வரும்.

அதே சமயத்தில் அன்பு கொண்டு அரவணைக்கும் செயல்கள் நடக்க வேண்டும் என்றா;
1.அருள் ஞானிகளுடன் தொடர்பு கொண்டு நாம் இயக்கினால் தான்
2.அந்த அன்பையும் காக்க முடியும் பண்பையும் காக்க முடியும்.

அருள் ஞானிகளின் உணர்வுகள் அன்புடன் கலக்கவில்லை என்றால் அது வலுவிழந்த நிலையாக ஆகிவிடும். வெறும் அன்பு என்ற நிலையில் நாம் நுகரப்படும் பொழுது பிறருடைய தீமைகள் நமக்குள் எளிதில் ஊடுருவிவிடும்.

1.அன்பை நாம் வலுப்பெறச் செய்ய வேண்டும் என்றால்
2.அருள் ஞானிகள் உணர்வை நம்முடன் இணைத்தே அன்பைப் பரப்புதல் வேண்டும்.

அதே போல் நாம் மற்றவர்களைப் பண்புடன் செயல்படுத்தும் நிலை வர வேண்டுமென்றால் “அருள் ஒளியையும் அதனுடன் இணைத்துப் பண்பினை நாம் பரப்பினால்… பண்பு கொண்டவர்களாக ஆக்கலாம்…” பண்பினை நமக்குள் வளர்க்கலாம்.