ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

April 10, 2023

குருநாதர் சொல்லும் “கோடி… கோடி… கோடி…” என்ற பதத்தின் உள் அர்த்தம்

மகரிஷிகளின் உணர்வுகளை நாம் நுகர்ந்து பொருளறிந்து செயல்படும் திறனாக நாம் பெற வேண்டும். அதே சமயத்தில் அகத்தினைச் சீராக்கும் நிலையாக
1.தீமையான அகங்கள் நமக்குள் இயக்கி விடாது
2.அகத்தின் உணர்வு “ஓங்காரம்…” அதாவது தீமையின் விளைவாக விளையாது
3.அதை நாம் சாந்த உணர்வு கொண்டு (சாந்தப்படுத்தி) தன்னுடன் இனிமை கொண்ட
4.மகிழ்ச்சி பெறும் உணர்வாகச் செயல்படுத்த வேண்டும்.

சூரியனிலிருந்து வெளிப்படும் ஒளிக் கதிர்கள் வேகமாக வீசினாலும் அதனைச் சந்திரன் குளிர்ச்சியின் நிலைகள் கொண்டு மகிழ்ச்சி பெறும் உணர்வாக ஊட்டுவது போல
1.அருள் ஒளியின் உணர்வை நமக்குள் பெருக்கி
2.தீமையான உணர்வுகளை நமக்குள் மகிழ்ந்திடும் செயலாக உருவாக்க
3.நாம் கற்றுக் கொள்ளுதல் வேண்டும்.

எத்தனையோ கோடிச் செல்வங்கள் தேடி வைத்திருந்தாலும் நம்முடன் அவை வருவதில்லை. கோடி…கோடி…கோடி…! என்ற நிலைகள் அகண்ட அண்டத்திலும் பல கோடி உணர்வுகள் மாற்றமடைந்து கொண்டே உள்ளது.

அத்தகைய பல கோடி கோடி உணர்வுகளையும் தன்னில் ஒளியாக மாற்றிடும் சக்தி பெற்றது துருவ நட்சத்திரம். இதுவே நமது குரு காட்டிய நிலைகள்.

குருநாதர் ஒரு சமயம் கூறுவார்… “கோடி கோடி கோடி…” என்று.
1.காரத்தின் தன்மை கொண்டு கோடி கோடி என்றும்
2.நஞ்சின் தன்மைகள் பல கோடி கோடி கோடி என்றும்
3.விஷத்தின் ஆற்றலின் தன்மை கொண்டு பல கோடி கோடி உணர்வின் தன்மை உருவாக்கியது என்றும்
4.இது போன்ற உணர்வுகள் எதனுடன் எது கலக்கின்றதோ பல கோடி உணர்வுகளாக மாறினும்
5.அவை அனைத்தும் மனிதனின் உணர்வுக்குள் உண்டு.

மனிதனின் உணர்வுக்குள் வந்து “கோடி கோடி” என்றாலும் இதனின் தன்மை கொண்டு பல கோடி உணர்வுகளையும் தனக்குள் ஒளியாக மாற்றினான் துருவன்.

அகஸ்தியன் வழியினைப் பின்பற்றி… அவனைப் போன்றே பல கோடி உணர்வுகளை ஒளியாக மாற்றிடும் திறன் நாமும் பெற வேண்டும்.

அத்தகைய நிலை பெற்றால்
1.அகண்ட அண்டத்தில் எத்தகைய நிலை வந்தாலும் அந்த அகண்ட அண்டத்தையே நாம் அகண்டு
2.அகண்ட வெளிகளில் நாம் என்றும் ஏகாந்த நிலை என்ற “பேரானந்த நிலை…” பெறும் தகுதி பெறுகின்றோம்.