ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

April 25, 2023

எது உயர்ந்த எண்ணம்...?

நம் எண்ணத்தின் உயர்வினால் பெற்ற ஆத்ம பலம் கொண்டு நாம் செலுத்துவது எல்லாமே… நாம் எடுத்த ஜெப உணர்வின் நற்குண எண்ண அலை வெளிப்படும் பொழுது…
1.எவ்வளவு கொடிய எண்ணம் கொண்ட குரோதம் கொண்டவனாக ஒருவன் நம்மைச் சந்தித்து எதிர்பட்டாலும்
2.அந்தக் கொடிய எண்ணத்தைக் கொண்டவனின் குரோத நிலை
3.நாம் வெளிப்படுத்தும் சாந்தத் தன்மையினால் அண்ட முடியாது.

பதட்டம் சோர்வு சங்கடம் சலிப்பு போன்ற உணர்வு நிலைக்கே இடம் தரா ஆத்மாவாக நம் ஆத்மா வலுப் பெற்ற தன்மையாக இருந்தால் எதிர் நிலை கொண்ட எந்த உணர்வு எண்ணமும் நம்மைப் பாதிக்காது.

குரோதத்தாலும் வஞ்சனையினாலும் பதட்டம் கொண்ட சோம்பல் கொண்ட எச்சுழற்சி வட்ட ஈர்ப்பில் உள்ளவராக இருப்பினும் அவைகளும் நம்மைப் பாதிக்காது.

நாம் பெற்ற அந்த நற்குண வலுத் தன்மையினால்
1.எந்த ஆத்மாவின் மேல் எண்ணத்தின் பார்வையின் ஒளியை
2.எதை எண்ணிச் செலுத்துகின்றோமோ அந்நிலை அங்கே நடக்கும்.

ஆனால் அதே சமயத்தில் கொடிய குரோத எண்ணம் கொண்டவனாக இருந்தாலும்… தெய்வ சக்தியின் உயர்வு ஆத்ம சித்துவை நாம் பெற்றிருந்தாலும்… நாம் செலுத்தும் சக்தி அங்கு நடக்கும்…! என்ற உண்மை தெரிந்தாலும்…
1.தீய சக்தியை… அந்தத் தீயதை அழிக்க வேண்டும்…! என்று நம்மை உயர்த்தி எண்ணத்தைச் செலுத்தினோம் என்றால்
2.அவன் பெற்ற தீய அலைத் தொடர்பின் ஈர்ப்பில் நாமும் மீண்டும் சிக்கி
3.அவன் பால் செலுத்தும் எண்ணத்திலேயே மனிதனுக்கு மனிதன் விடும் சுவாசத்தின் மோதலினால்
3.காந்த நுண் அலையின் தொடர்பு ஈர்ப்பு அணு வளர்ப்பின் செயலுக்கு நம் உடலும் உட்படுகின்றது.

ஆகவே எண்ணத்தை உயர்த்தி நாம் சந்திக்கும் ஒவ்வொரு ஆத்மாவையுமே தெய்வ சக்தி கொண்டதாக எண்ணத்தில் கொண்ட ஆத்மத் தொடர்பினால் தான் நம் ஆத்மா வலுக் கொள்ள முடியும்.

அதாவது…
1.நாம் செலுத்தும் எதிர் அலையின் உணர்வலை தான்
2.நாமும் திரும்பப் பெற முடியும்.

எந்நிலை எக்குண வழித் தொடரில் இருந்தாலும் அவ் ஈர்ப்புப் பிடியில் நாம் சிக்காமல் எண்ணத்தின் உயர்வைக் கொண்டு உயர்ந்த ஒலி அலைகளையே பிறர்பால் செலுத்தி எண்ணத்தில் ஒவ்வொரு ஆத்மாவையும் நாம் உயர்த்தி நமக்கு வேண்டிய நல் சத்தை நாம் பெறலாம்.

1.தீயது… நல்லது…! என்ற பாகுபாட்டுடன் நம் உணர்வின் எண்ணத்தைச் செலுத்தாமல்
2.நம் உயர்வின் உயர்விற்கு உயர்ந்த எண்ணத்தால் சக்தி பெறலாம்.